நூறு வீதம் தமிழ் மொழி மூல கல்முனை பிரதேச செயலகத்தை இரண்டாக பிரித்து கல்முனையில் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகளை கைவிடும்படி உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் ஊடகங்களுக்கு குறிப்பிட்டதாவது,
கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்காக பாராளுமன்றத்தில் பேசப்போவதாக தமிழ் கூட்டமைப்பின் சாணக்கியன் எம் பி தனது பதிவில் போட்டுள்ளார்.
கல்முனை பிரதேச செயலகம் என்பது எப்போதோ தரமுயர்த்தப்பட்டு தனியான செயலகமாகவே செயல்படுகின்றது என்பது கூட தெரியாத ஒருவராக சாணக்கியன் உள்ளார்.
அத்துடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இது பற்றி கூட்டம் நடத்தியதாகவும் கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்ற ஒன்று கல்முனையில் இல்லை. இங்கு இருப்பது இன்னமும் கல்முனை உப செயலகம் - வடக்கு மட்டும்தான் என்பது தெரியாத சாணக்கியன் எம் பி கல்முனை பற்றி அரை குறை அறிவுள்ளவராகவே உள்ளார் என்பது தெரிகிறது.
ஆகவே நாம் சாணக்கியனுக்கு சொல்கிறோம். ஒற்றுமையாய் இருக்கும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். நீங்கள் தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை உண்மையாகவே விரும்புபவராக இருந்தால் கல்முனை உப செயலகத்தை ரத்து செய்துவிட்டு, கல்முனையை தமிழ், முஸ்லிம் என பிரிக்காமல் கல்முனைக்கென இப்போது இருக்கும் ஒரே செயலகத்தை அப்படியே இருக்க விட்டு கல்முனை நீதிமன்ற எல்லையிலிருந்து பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு பிரதேசங்களை இணைத்து பாண்டிருப்பு பிரதேச செயலகம் எனும் இன்னுமொரு செயலகம் உருவாக்க முயற்சி செய்யுங்கள். அதற்கான முழு ஒத்துழைப்பையும் நாம் தருவோம்.
- உலமா கட்சி
Post a Comment