வை.எம்.எம்.ஏ. பேரவையின் ரமழான் மாத விசேட வேலைத்திட்டங்களில் ஒன்றான குடிநீர் வழங்கும் திட்டம்,

 


வை.எம்.எம்.ஏ. பேரவையின் ரமழான் மாத விசேட வேலைத்திட்டங்களில் ஒன்றான குடிநீர் வழங்கும் திட்டம், முதற்கட்டமாக புத்தளத்தில் ஆரம்பம்


( மினுவாங்கொடை நிருபர் ) 

   அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.  பேரவையின் அனுசரணையில், நாடளாவிய ரீதியில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்  சபையின் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக  புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
   இத்திட்டம்,  அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.  பேரவையின் ரமழான் மாதத்தின் விசேட வேலைத்திட்டங்களில் ஒன்றாக,  தேசிய நீர் வழங்கல் சபைக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்த முடியாத வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
   இதன்பிரகாரம், புத்தளம், பாலாவி ஹுஸைனியாபுரம், இல்மியாபுரம், உலுக்கப்பள்ளம்,  கரம்பை ஆகிய  பிரதேசங்களைச்  சேர்ந்த  இருப்பத்தைந்து பயனாளிகளுக்கு முதற் கட்டமாக அண்மையில் (20.04.2021),  புத்தளம் உலுக்கப்பள்ளம் பள்ளிவாசல் மண்டபத்தில்,  புத்தளம் மாவட்ட வை.எம்.எம்.ஏ.  பணிப்பாளர் முஜாஹித் நிஸாரினால் நீர் வழங்கல் சபையின் மதிப்பீட்டுக் கட்டணத் தொகைப் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன. 
   குறித்த  நிகழ்வில்,  பாடசாலை அதிபர் எஸ்.ஆர்.எம்.எம்.  முஹ்சி, வை.எம்.எம்.ஏ.  கற்பிட்டிக் கிளைத் தலைவர் இர்பான் ரிஸ்வான், பள்ளிவாசல்  பரிபாலன சபைத் தலைவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜின்னாஹ் அஸ்மியா மற்றும் பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர்கள் உள்ளிட்ட நலன்விரும்பிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
   கற்பிட்டி பிரதேச செயலக செயலாளரினால் பரிந்துரைக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரிகளின்  இல்லங்களைப் பார்வையிட வை.எம்.எம்.ஏ.  தெரிவுக்குழு, 
 நேரடியாக களத்தில் இறங்கியது. 
 அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.  பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி தலைமையிலான இக்குழுவில், பேரவையின் தேசிய விவகார தவிசாளர் கே.என். டீன்  புத்தளத்திற்கு  விஜயம் மேற்கொண்டு,  முறையான  பயனாளிகளை இனங்கண்டு தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்