ர‌ணில், மைத்திரி, ச‌ஜித், ஹ‌க்கீம், ரிசாத் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சம்பவங்கள்

 


*ஏப்ரல் 21 குண்டு தாக்குதலுக்கு பின் ர‌ணில், மைத்திரி, ச‌ஜித், ஹ‌க்கீம், ரிசாத் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சம்பவங்கள்*

1. 05.05.2019 அவிசாவளை, புவக்பிட்டி தமிழ் பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு சாரி அணிந்து வருமாறு நிர்ப்பந்துக்கப்பட்டனர். http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_538.html 

2. 05.05.2019 நீர்கொழும்பு நகரில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. இந்த அசம்பாவிதங்களின்போது வீடுகள் பல தாக்கப்பட்டதுடன் உடைமைகளும் சேதமாக்கப்பட்டன.

3. 05.05.2019  பள்ளிவாசல் ஒன்றும் தாக்குதலுக்கு இலக்கானது.

4. 05.05.2019  சில வீடுகளில் நகைகள் , பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டது.

5. 05.05.2019 வாகனங்கள்  தீக்கிரையாக்கப்பட்டதுடன் சேதமாக்கப்பட்டன. 

6. 05.05.2019  பெரியமுல்லை, லாசரஸ் வீதி, பெரிய¬முல்லை செல்ல கந்த வீதி, தளுபத்தை, கல்கட்டுவை வீதியில் சமகி மாவத்தையில் அமைந்துள்ள வீடுகள் பலவற்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

7. 05.05.2019 முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியன தாக்கி சேதமாக்கப்பட்டன. 

8. 05.05.2019 பெரியமுல்லை லாசரஸ் வீதியில் தெனியவத்த பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசலின் யன்னல் கண்ணாடிகள்  உடைக்கப்பட்டன.

9. 05.05.2019  நீர்கொழும்பில் தெனியாவத்த அசனார் தக்கியா பள்ளிவாசல் இடம் பெற்றவன் முறைகளின்போது தாக்கப்பட்டு 8 கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பள்ளிவாசலின் குர்ஆன்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டியும் உடைக்கப்பட்டது.

10. 05.05.2019 பெரிய முல்லை கல்கட்டுவ, செல்லக்கந்த பகுதிகளில் 50 வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. ஒரு வீட்டில் நகைகளும், பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளன. பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. 10 முச்சக்கர வண்டிகள், 6 மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. வீடுகளின் கதவுகள் கோடரியினால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளன.

11. 05.05.2019  பலகத்துறையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 7 கடைகள் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளனhttp://www.jaffnamuslim.com/2019/05/blog-post_172.html

12. 10.05.2019  அதிகாலையில்  குளியாப்பிட்டி குருநாகல் பிரதான வீதியில் அமைந்துள்ள  ஹொரம்பாவ என்ற ஊரில் அமைந்துள்ள  பள்ளிவாயல்  மற்றும் 2 கடைகளுக்கு இனம்தெரியாதோரால் தாக்குதல்  இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_622.html

13. குளியாப்பிட்டியவில் அமைந்துள்ள முஸ்லிம் கடைகள் மீது இன்று 12, ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_494.html

14. 13.05.2019 வன்முறையாளர்கள் , குருநாகல் மாவட்டத்தில் மேற்கொண்ட கொடிய தாக்குதல்களில், புனித அல்குர்ஆனுக்கு தீ  வைக்கப்பட்டது. http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_668.html


15. நாத்தாண்டிய கொட்டாரமுல்ல பகுதிகளிலும் முஸ்லிம் வீடுகள் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_205.html

16. 13.05.2019 மினுவாங்ககொடையில் உள்ள முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_962.html

17. 13.05.2019  குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள, கொட்டாம்பிட்டியவில் அப்பாவி முஸ்லிம்களின் வீடுகள் மீது இனவாதிகள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_344.html

18. 13.05.2019    ஹெட்டிபொலயில் முஸ்லிம்களுக்கு எதிராக,  மிக மோசமான நிலைமை ஏற்படுத்தப்பட்டது.. http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_960.html

19. 13.05.2019    நீர்கொழும்பு அரச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கலர் அபாயா அணிந்து கொண்டு சென்ற பெண்மணியொருவரை அபாயாவும் முந்தானையும் கழற்றப்பட்டு சொப்பிங் பேக்கில் போடப்பட்டு வழங்கப்பட்டுள்ளதுடன் அதன் பின்பு சிகிச்சைக்கு செல்லுமாறு வைத்தியசாலை பெண் பாதுகாப்பு ஊழியரால் தெரிவிக்கப்பட்டது. http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_883.html

20. 13.05.2019     ஊரடங்குச் சட்டம்  அமுலில் உள்ள வேளையில், குளியாப்பிட்டியில் அமைந்துள்ள முஸ்லிம் கிராமங்களை சுற்றிவளைத்து, தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_669.html

21. 13.05.2019 சிங்கள் இனவாதிகளின் வெறியாட்டம் - குளியாப்பிட்டிய மஸ்ஜிதுல் ஆயிஷாவின் தற்போதைய நிலை (வீடியோ) http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_521.html

22. 11.05.2019 இரத்தினபுரி நகரிலுள்ள ஒரு சிங்களப் பாடசாலை உட்பட மற்றொரு பாடசாலையில் இஸ்லாமியக் கலாச்சார சீருடையில் வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு தமது முந்தானை உட்பட காற்சட்டைகளை கழற்றி விட்டு பாடசாலைக்குள் வருமாறு பாடசாலை நிர்வாகத்தினரால் முஸ்லீம் மாணவிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது", http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_662.html


23. 15.05.2019 பதியத்தலாவையில் முஸ்லிம் கடைக்குள் புகுந்து, பௌத்தபிக்கு அட்டகாசம் - பொருட்கள் வாங்க வருபவர்களை திருப்பியனுப்பினார். http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_891.html


24. 27.05.2019 குருநாகல் மாவட்டத்தில் தாக்கப்பட்ட பள்ளிவாசல்கள்


25. 27.05.2019 மஸ்ஜிதுல் ஹுதா– கொட்டாம்பிட்டிய


26. 27.05.2019 மஸ்ஜிதுல் லுஹ்லு– மல்வத்த வீதி, கொட்டாம்பிட்டிய


26.05.2019 மஸ்ஜிதுல் தாருஸ்ஸலாம்– நிக்கபிட்டிய


27. 27.05.2019 மஸ்ஜிதுல் அப்ரார்– மடிகே, அனுக்கென


28. 27.05.2019 மஸ்ஜிதுல் ஆலியா– பூவெல்ல


29. மஸ்ஜிதுல் நூர் –போகொல்ல பாதை, ஹெடிபொல


30. 27.05.2019 மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல்– இஹல கினியம – வீரபொக்குன


31. 27.05.2019 அப்ரார் தக்கியா –இஹல கினியம


32. 27.05.2019 ஆயிஷா தக்கியா– இஹல கினியம


33. 27.05.2019 மஸ்ஜிதுல் ஜாமிஆ– ஹொரம்பாவ


34. 27.05.2019 மஸ்ஜிதுல் அக்ஸா தக்கியா– கரன்திபொல


35. 27.05.2019 ஹம்மாலியா தக்கியா–பொன்கொல்ல –பண்டார கொஸ்வத்த


36. 27.05.2019 பிர்ருல் வாலிதைன் தக்கியா– செம்பேவ சுனந்தபுர


37. 27.05.2019 மஸ்ஜிதுல் இஸ்லாம் –வீதியவெல –நாகொல்லாகொட


38. 27.05.2019 ஜமாலியா அரபுக் கல்லூரி– கொட்டம்பிட்டிய


39. 27.05.2019 தோரகொட்டுவ ஜும்ஆ பள்ளிவாசல்– கொன்னாவ– தோரகொட்டுவ


40. 27.05.2019 சுவைக் தக்கியா– கொன்னாவ


41. 27.05.2019 தக்கியா –   பென்னலி கடவெர –மொரகோன்ன


42. 27.05.2019 கைராத் ஜும்ஆ பள்ளிவாசல்– யாயவத்த –கிரிந்தவெவ


43. 27.05.2019 ஹசனாத் தக்கியா –கலபிட்டியகம– நிக்கவரட்டிய


44. 27.05.2019 நிக்கவரட்டிய ஜும்ஆ பள்ளிவாசல் –நிக்கவரட்டிய


45. 27.05.2019 பெனடிக்வத்த தக்கியா– எஹத்தமுல்ல– நாகொல்லாகொட


46. 27.05.2019 மாபாகம தக்கியா –பரம்பொல– ஹல்மில்லாவெவ


47. 27.05.2019 மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல் –அசனகொட்டுவ –குறத்திஹேன48. 27.05.2019 புத்தளம் மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல்கள்


49. 27.05.2019 மஸ்ஜிதுன் நூர் –மைகுளம், சிலாபம்


50. 27.05.2019 நூர்வீதி ஜும்ஆ மஸ்ஜித்– புத்தளம் வீதி, சிலாபம்


51. 27.05.2019 மலாய் பள்ளிவாசல்– தர்காமாவத்தை, சிலாபம்52. 27.05.2019 மினுவங்கொட ஜும்ஆ பள்ளிவாசல்

53. http://www.jaffnamuslim.com/2019/05/27_16.html


54. 12.05.2019  குருநாகல் - கின்னியம பள்ளிவாசல் மீது  அதிகாலை வன்முறையாளர்கள் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டனர். இதனால் பள்ளிவாசலின் பெரும் பகுதிக்கு சேதம் ஏற்பட்டது. http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_815.html


55. 14.05.2019 தும்மந்துற பள்ளிவாசல் தாக்கப்பட்டது. http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_512.html56. 13.05.2019 குருநாகல் மற்றும் குளியாப்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம் பகுதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை இராணுவமும், பொலிசாரும் வேடிக்கை பார்த்ததாக கவலை வெளியிடப்பட்டது. http://www.jaffnamuslim.com/2019/05/1000.html


57. 13.05.2019 மினுவாங்கொட தாக்குதலில், சகோதரர் பவ்ஸுல் ஹமீது கொல்லப்பட்டார்.

58. http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_791.html59. 13.05.2019 நாத்தான்டியாவில் முஸ்லிம் கடை, தாக்கப்பட்டது. http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_736.html


60. 13.05.2019 மினுவான்கொட நியூ பவாஸ் ஹோட்டல் தாக்கப்பட்டது. www.jaffnamuslim.com/2019/05/blog-post_117.html

61. 14.05.2019 குருவிகொட்டுவ, கொரம்பாவ, தம்பதெனிய, வெல்லாவ பகுதிகளில் சிறுசிறு சம்பவங்களும் நிகழ்ந்துள்ள அதேவேளை சில இடங்களில் பதற்ற நிலையும் ஏற்பட்டது. www.jaffnamuslim.com/2019/05/blog-post_390.html

62. 13.05.2019 கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 30 கடைகள் தாக்கப்பட்டது, அவற்றில் 20 கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. www.jaffnamuslim.com/2019/05/30-20.html

63. 14.05.2019 மாத்தறை மாவட்ட தெலிஜ்ஜவில ஹொரகொட முஸ்லிம் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இரவு பத்து மணியளவில் கடையொன்றை இலக்காகக் கொண்டு பெற்றோல் குண்டுத்தாக்குதல் இனந்தெரியாத பயங்கரவாத குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டது. http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_593.html

64. 13.05.2019 நாத்தாண்டிய துன்மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவத்தின் போது இராணுவ சீருடையுடன் வன்முறையாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட நபர் தொடர்பில் இலங்கை இராணும் தகவல் கேட்டது. www.jaffnamuslim.com/2019/05/blog-post_924.html

65. 14.05.2019 மினுவாங்கொட பகுதியில் அமைந்திருந்த, இலங்கையின் மிகப்பெரும்  பாஸ்தா உற்பத்தி தொழிற்சாலை குண்டர்களினால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. . நிறுவனத்தின் மதிப்பீட்டின் அளவு ரூ. 700 மில்லியன், இயந்திரங்கள், கட்டிடங்கள், மற்றும் பங்குகள் உட்பட நாசமடைந்துள்ளன. http://www.jaffnamuslim.com/2019/05/70.html


66. 12.05.2019 வடமேல் மாகாணம், குருநாகல் மாவட்டம், பிங்கிரிய தேர்தல் தொகுதி, பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, இஹல கினியமை எனும் கிராமத்தில் இரவு காடையர்களினால் மஸ்ஜிதுத் தக்வா (ஜும்ஆ மஸ்ஜித்), மஸ்ஜிதுல் அப்ரார் (தக்கியா), மஸ்ஜிதுல் ஆயிஷா (தக்கியா) ஆகியவற்றின்மீது மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. http://www.jaffnamuslim.com/2019/05/300-3.html

67. 15.05.2019 வன்முறையாளர்களால் தாக்கப்பட்ட முஸ்லிம் கடையொன்றின் உரிமையாளர் நிக்கரவெட்டிய அப்துல் என்பவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த தருணத்தில் அவர்களுக்குப் பின்னால் திரண்டு வருகின்ற வன்முறையாளர்கள் எந்த வாகனத்திலும் அவரை ஏற்றுவதனைத்தடுத்து வாகன சாரதிகளை அச்சுறுத்தினர். http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_682.html

68. 15.05.2019 பதியத்தலாவையில் முஸ்லிம் கடைக்குள் புகுந்து, பௌத்தபிக்கு அட்டகாசம் - பொருட்கள் வாங்க வருபவர்களை திருப்பியனுப்பினார். http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_891.html


69. 14.05.2019 மாத்தறை மாவட்ட தெலிஜ்ஜவில ஹொரகொட முஸ்லிம் பிரிவிற்குற்பட்ட பகுதியில் கடையொன்றை இலக்காகக் கொண்டு பெற்றோல் குண்டுத்தாக்குதல் இனந்தெரியாத பயங்கரவாத குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_593.html

70. 16.05.2019 காத்தான்குடியை  அண்மித்த  ஆரையம்பதி  பிரதேசத்திலுள்ள  முஸ்லிம்களின் வியாபார நிலையங்களை  மூடி விடுமாறு  நகரசபை அறிவித்தது .

71. 16.05.2019 காலி நாவின்ன, கஹதுவத்த சந்தியில் உள்ள முஸ்லீம்களுக்கு சொந்தமான Communication மற்றும் Chicken shop ஆகியவற்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. http://www.jaffnamuslim.com/2019/05/2_17.html

72. 16.05.2019 கொட்டாம்பபிட்டிய மத்ரஸதுல் அல்ஜமாலியா அரபுக்கல்லூரி எரிக்கப்பட்டு மாணவர்களின் விடுதிகளிலிருந்த அத்தனை பொருட்களும் இழுத்து வரப்பட்டு எரிக்கப்பட்டன. http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_454.html

73. 16.05.2019 மினுவாங்கொடயிலுள்ள முஸ்லிம் ஒருவரின் கடையொன்றுக்கு தீ வைக்கப்பட்டது. http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_865.html

74. 17.05.2019 மாவனெல்லை கனேதன்ன ஜும்மா பள்ளி மற்றும் வெலேகட  ஜும்மா பள்ளி ( உயன்வத்த ) மாலை மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த நபர்களால், கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இந்த தாக்குதல்களால் பள்ளிவாயலின் கண்ணாடிகள் உடைந்தது. http://www.jaffnamuslim.com/2019/05/2_44.html

75. 19.05.2019 பௌத்த சின்னம் அடங்கிய ஆடை அணிந்ததாக ஹசலக பொலிசாரால் அப்துல் ரஹீம் மஸாஹினா, வயது 47, என்ற முஸ்லிம் பெண்மணியை கைது செய்து இம்மாதம் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். உண்மையில் இது கப்பலில் பொருத்தப்பட்டிருக்கும் திசைமாற்றி சக்கரம் (Steering Wheel),  http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_525.html

76. 22.05.2019 கண்டி புனித அந்¬தோ¬னியார் கல்¬லூ¬ரியில் கட¬மை-யாற்றும் முஸ்லிம் ஆசி¬ரி¬யைகள் கடந்த இரு வாரங்¬க¬ளாக அபாயா அணிந்து சென்¬றதால் அவர்கள் கல்¬லூரி பாது¬காப்பு உத்-தி¬யோ¬கத்¬தர்கள், பழைய மாண¬விகள், பெற்¬றோர்¬களால் தடுத்து நிறுத்தப் பட்¬டார்கள். http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_902.html


77. 22.05.2019  பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் பாடசாலைக்கு பர்தா அணிந்து வரக்கூடாது என பெற்றோரும் பழைய மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_666.html


78. 23.05.2019 அம்பலாந்தோட்டை - மல்பெத்தாவ மஹா வித்தியாலயத்தில் பணியாற்றிவரும் முஸ்லிம் ஆசிரியரை இடமாற்றுமாறு கோரி, அந்தப் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_250.html


79. 24.05.2019 திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை  ஜின்னா புரம் கடலில்  இனந்தெரியாத நபர்களினால்  கடலுக்கு கொண்டு செல்லும்  போட் மற்றும் 40கோஸ் engine 03ம்  முற்றாக  தீ மூட்டி எரிக்கப்பட்டது. http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_300.html


80. 26.05.2019 புனித ரமழான் மாதத்தில்விமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வைத்து விசாரணை நடாத்தினர். http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_453.html


81. 29.05.2019 புதன்கிழமை,  காலை மு.ப. 9.45 மணியளவில், கம்பஹா வைத்தியசாலை, 8வது வாட்டுக்கு பொறுப்பான விஷேட வைத்தியர்  அவரது வாட்டினுல் வைத்து அனைவர் முன்னிலையிலும்   (தலையில் அணிந்திருப்பதை கழற்றி விட்டு வாருங்கள். இது இவ்வாட்டினுல் என்னுடைய சட்டம்) என சத்தமிட்டு முஸ்லிம் பெண்ணை ஏசியுள்ளார். http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_615.html


82. 2019.05.29 அரச ஊழியர்களின் உடை தொடர்பாக பொதுநிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால்  முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவை தடைவிதிக்கும் வகையில் சுற்றறிக்கை  வெளியிடப்பட்டது. http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_3553.html

83. 04.06.2019 கெக்கிராவ பகுதியில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_8.html

84. 10.06.2019 சில பிரதேசங்களில் உள்ள அரபு மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக நீக்குவதற்கான சுற்று நிருபம்  வெளியிடப்பட்டிருப்பதாகத் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_557.html


85. 10.06.2019  கல்முனை அல்மிஸ்பா மகா வித்தியாலய முஸ்லிம் பெண்  உப அதிபருக்கு இராணுவ கெடட் அதிகாரியினால்  அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_147.html

86. 10.06.2019   சலால்தீன் ஹாஜி  அவர்களின் மருமகனான குரீகொடுவ சாபி  அவர்களின் (கொள்முதல் ) கடை  தீ பற்றி எரிந்தது. http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_552.html


87. 10.06.2016 காலி கராப்பிட்டிய அரச வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமை புரிந்து வந்த ஒருவர் வைத்தியசாலைக்கு வருகை தரும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாபைக் கூட கழற்றி விட்டு வருமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.  http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_689.html

88. 10.06.2016  குரு¬நாகல், சியம்¬ப¬லா¬கஸ்¬கொட்¬டுவ, கட்¬டு¬பொத்த நகரில் முஸ்லிம் ஒரு¬வ¬ருக்குச் சொந்¬த¬மான இரண்டு கடைகள்  இரவு இனம் தெரி¬யா¬தோரால் தீயிட்டு எரிக்¬கப்¬பட்¬டது. கட்¬ட¬டத்¬துக்கும், பொருட்¬க¬ளுக்கும் ஏற்¬பட்ட சேதம் சுமார் 75 இலட்சம் ரூபா என கடை¬களின் உரி¬மை¬யாளர் ஏ.எச்.எம்.சிபாய்  தெரி¬வித்தார். http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_369.html 


89. 14.06.2019 பன்னலை பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_699.html


90. 14.06.2019 ஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்றுமாறு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_211.html

91. 16.06.2019 மிரிஹம்பிடியவில் பகல் வேளை  பள்ளிவாயலுக்கு வந்த பெரும்பான்மை வாலிபர்கள் சிலர் பள்ளிவாயல் மேல் மாடிக்கு சென்று, ஹிப்ல் மதரஸா நடக்கும் இடத்தை நோட்டமிட்டுள்ள அதேவேளை அடிப்படைவாதம் போதிக்கப்படும் இடம் என கூறி சென்றுள்ளனர். http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_257.html


92. 16.06.2019 முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான கோழி இறைச்சி கடை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ள அதேவேளை அங்கிருந்த ஒருவர் காயமடைந்து வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டார். http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_257.html


93. 16.06.2019  பேருவளைப் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான துவேச சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_950.html


94. கொழும்பு - மட்டக்குளிய, பகுதியில் மத்ரஸா ஒன்று விடுவிடுமுறைக்குப் மீண்டும் திறக்கப்பட்டமையை அடுத்து அங்கு இயல்பற்ற சூழல் ஏற்பட்டது. http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_694.html


95. 21.06.2019 நான்கு முஸ்லிம் பெண்கள் கண்டி பாததும்பர பிரதேச செயலகத்தில்  பணியாற்றும் நிலையில் அவர்கள் பணிக்கு வந்தபோது சக ஊழியர்கள் இவர்களுக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் அலுவலகத்திற்கு வெளியே சென்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_765.html


96. 25.06.2019 வென்னப்புவ பிரதேச சபையினால் நடாத்தப்படும் தங்கொடுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_826.html

97. 24.06.2019 கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வீதியில் உள்ள ஜெயலங்கா காட்வெயா உரிமையாளா் அப்துல் அசீஸ் வயது 60 கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டார். http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_997.html


98. 26.06.2016 முஸ்லிம் கடைகளை புறக்கணிக்குமாறு மஹாநாயக்க தேரர் குறிப்பிட்டார் www.jaffnamuslim.com/2019/06/blog-post_110.html

99. 25.07.2019 கலமெட்டிய மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 படகுகள் தீயினால் முற்றாக எரிந்தது. www.jaffnamuslim.com/2019/06/27-500.html

100. 27.06.2019 ஜா – எல, ஏக்கல, கம்பஹா வீதியில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாசலை உடன் அங்கிருந்து அகற்றுமாறு கோரி மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. www.jaffnamuslim.com/2019/06/blog-post_823.html


101. 02.07.2019 சிலாபம் – மாதம்பை நகரில் உள்ள பழைய இரும்பு உருக்கும் தொழிற்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. www.jaffnamuslim.com/2019/07/blog-post_20.html


102. 24.07.2019  கொழும்பு அப்பல்வத்தையை சேர்ந்த ஒரு தாய் கல்லொழுவையில் வசிக்கும் தனது மகள் வீட்டிலிருந்து காலை கொழும்புக்கு செல்வதற்காக நடந்து சென்றுகொண்டிரந்த வேளை மினுங்கொடை பிரதான வீதியிலிருந்து வந்த ஒரு ஆட்டோ தன்னருகிலே மிகவும் மெதுவாக நெறுங்கி முன்னே சென்று மீண்டும் பின்னோக்கி வந்த ஆட்டோவில் இருந்து இரு சிங்கள காடையர்கள் அந்தத் தாயுடைய  முந்தாணையை இழுத்தப்பறித்து அந்த தாயின் கழுத்தி்ல் கட்டிவிட்டு கீழே தரையோடு போட்டு அப்படியே ஆட்டோவை ஓட்டிக் காெண்டு சற்று தூரம் வரை அந்தத் தாய் கதறியபடி உடல் தரையிலே உரசியபடி இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_515.html


103. 25.07.2019 வென்னப்புவ பிரதேச சபையினால் நடாத்தப்படும் தங்கொடுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. www.jaffnamuslim.com/2019/06/blog-post_826.html


104. 08.07.2019 கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்கும் நபர் ஒருவர் முஸ்லிம் ஒருவரை அதனை தொட்டு பார்க்க கூட அனுமதிக்க வில்லையாம். "நீங்கள் 'வத பெஹேத்' (கருத்தடை மருந்து) தடவி விடுவீர்கள்" என்று கூறினாராம்.  http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_860.html 


105. 11.07.2019 பஸ்¬யால – எல்¬ல¬ர¬முல்¬லயில் இயங்¬கி¬வரும் சபீலுர் ரசாத் அர¬புக்¬கல்¬லூ¬ரிக்கே இரண்டு பெளத்த குரு¬மார்கள் மற்றும் சுமார் 20 பிர¬தே¬ச¬வா¬சிகள் அடங்¬கிய குழு விஜயம் செய்து அரபுக் கல்¬லூரி நிர்¬வா¬கத்தை கேள்¬விக்¬குட்¬ப¬டுத்¬தி¬யது. http://www.jaffnamuslim.com/2019/07/blog-post_937.html


106. 11.07.2019 கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள மகளிர் அரபுக் கல்லூரிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. www.jaffnamuslim.com/2019/07/blog-post_625.html 


107. 11.07.2019 ராகமை போதனா வைத்தியாசாலையின் தொளுகையறை மூடப்பட்டது.


108. 10.07.2019 கம்பஹா மாவட்டம், பண்டாரவத்த பராக்கிரம மகா வித்தியாலய மாணவர் ஒருவர் அப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவரினால் முஸ்லிம் தயாரிப்பு பொருட்கள் கொண்டு வரக்கூடாது என அச்சுறுத்தப் பட்டார்.  https://www.madawalaenews.com/2019/07/pp.html


109. 18.07.2019 கல்கிஸ்ஸை பகுதி பாடசாலை ஒன்றில், ஆசிரியர் ஒருவர்  முஸ்லிம் மாணவிகளின் முகத்திற்கு நேரே இருந்து பன்றி இறைச்சி உண்ணுமாறு சக மாணவர்களுக்கு கட்டளையிட்டார். https://www.madawalaenews.com/2019/07/pp.html


110. 18.07.2019 குருநாகல், அலவ்வ பிரதேச பாடசாலை அதிபர் ஒருவர், முஸ்லிம்களுக்கு சொந்தமான எந்தக் கடையிலும் ஒரு டொபியைக்கூட வாங்க வேண்டாம் என மாணவர்களை எச்சரித்தார். https://www.madawalaenews.com/2019/07/pp.html


111. 18.07.2019 கடவத்தை பிரதேச, பாடசாலை வளாகத்தினுள் பெண் பிள்ளைகளுக்கு ஸ்கார்ப் அணிவதற்கு தடைவிதித்தமையால், தாயொருவர் தனது 3 பிள்ளைகளையும் பாடசாலையை விட்டு விலக்கினார். https://www.madawalaenews.com/2019/07/pp.html


112. 18.07.2019 குருநாகல், பாடசாலையொன்றில் ஊதியமின்றி காவல் வழங்கிக்கொண்டிருந்த முஸ்லிம் பெற்றார் ஒருவரை நோக்கி, ‘ஸஹ்ரானின் ஆட்கள் பாடசாலையில் என்ன செய்கிறார்கள்’ என ஒரு ஆசிரியர் கடிந்திருக்கிறார். https://www.madawalaenews.com/2019/07/pp.html


113. சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு, புனித ரமலான் மாதத்தில் ஒரு சில போலீசிலும், சிறைச்சாலைகளிலும் சித்திரவை செய்யப்பட்டு  பன்றி இறைச்சி உணவாக வழங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்