அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

 அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும்.[1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது.[2][3][4][5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சிலர், எதிர்மறையாக நோக்குவதைப் போல, எதிர்மறை விளைவுகளைத் தருகிறது.[7][8] குறிப்பாக விளக்க, அடிப்படைவாதம் என்பது, ஒரு நம்பிக்கை மீது ஆழமானதும், முழுமையானதுமான ஈடுபாடு கொண்டிருத்தல், சில அடிப்படைக் கொள்கைகளைக் கடுமையாகக் கடைப்பிடித்தல், தற்கால சமூக, அரசியல் வாழ்க்கை முறைகளுக்காக கொள்கைகளுக்காக விட்டுக்கொடுப்பதற்கு எதிரான துலங்கல் போன்றவற்றைக் குறிக்கும்.

அடிப்படைவாதம் என்பது முதலில் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஐக்கிய அமெரிக்காவில்புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ மதப் பிரிவினரில் ஒரு பகுதியினரிடையே உருவான ஒரு தொகுதி நம்பிக்கைகளைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. இதன் மூலத்தை அக்காலத்தில் எழுந்த அடிப்படைவாதம், நவீனம் தொடர்பான சர்ச்சைகளிலே காணமுடியும். அடிப்படைவாத வழிமுறைகளைக் கைக்கொள்ளும் ஒருவர் அடிப்படைவாதி எனப்பட்டார்.

பிற்காலத்தில் இச் சொல் பொதுமைப்படுத்தப்பட்டு எந்த ஒரு தொகுதி நம்பிக்கைகளையும் இறுக்கமாகப் பின்பற்றுபவர்களைக் குறித்தது. எனினும், மதம் தொடர்பான நம்பிக்கைகள் தொடர்பிலேயே இதன் பயன்பாடு இருந்தது. இச் சொல்லைக் கிறிஸ்தவம் தொடர்பில் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென விரும்பிய கிறிஸ்தவர்கள் சிலர் பிற மதத்தினரையும் இச் சொல்லால் பொதுவாகக் குறிப்பதை விரும்பவில்லை.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்