வெள்ளவத்தையில் குர்ஆன் பிரதிகள் குறித்து , தவறான தகவல் வழங்கி , காட்டிக்கொடுப்பு ... ?
உயர்மட்ட இணக்கத்துடன் தீர்வு
வெள்ளவத்தை பகுதியில் 15.000 புனித அல்குர்ஆன் பிரதிகள் கண்டு பிடிக்கப்பட்டு , அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டதாக வெள்ளிக்கிழமை ( 02 ) ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன . எனினும் இவ்விவகாரம் முஸ்லிமள் சிலரின் காட்டிக் கொடுப்பு என்று இதனுடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரங்கள் சுட்டிக்காட்டின . தவறான தகவலின் அடிப்படையில் இதற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது . எனினும் உரிய தரப்பினரின் , சட்ட ரீதியான அனுமதி பெற்றே , குர்ஆன் பிரதிகள் இறக்குதி செய்யப்பட்டுள்ளன .
இதுதொடர்பில் சிங்கப்புரில் உள்ள , முக்கிய சர்வதேச பிரமுகர் ஒருவர் , இலங்கையின் முக்கிய அமைச்சர் ஒருவரை தொடர்பு கொண்டு இதனை எடுத்துக் கூறியுள்ளார் .
இதையடுத்து குறித்த விவகாரத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது . எதிர்வரும் திங்கட்கிழமை குர்ஆன் பிரதிகள் விடுவிக்கப்படுமெனவும் இதனுடன் தொடர்புடைய வட்டாரங்கள் குறிப்பிட்டன .
Jaffna Muslim
Comments
Post a comment