முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் அடங்கிய பரிந்துரை நீதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது . அதனை உடனடியாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . அதேபோன்று ஏனைய தனியார் சட்டங்களில் இருக்கும் குறைபாடுகள் தொடர்பாகவும் ஆராய வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று அத்துரலிய ரத்ன தேரரினால் முன்வைக்கப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான கருத்துக்கு தனது நிலைப்பாட்டை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார் . முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கையில் , தனியார் சட்டங்கள் பல எமது நாட்டில் செயற்பட்டு வருகின்றன . குறிப்பாக முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் , அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக தொடர்பாக எனது காலத்தில் குழுவொன்று நியமிக்கப்பட்டு , குழுவின் பரிந்துரை நீதி அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது . அது தற்போது பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்க ஏற்பாடாகி இருப்பது யாரும் அறிந்த விடயம் . அத்துடன் முஸ்லிம் தனியார் சட்டத்தில் பெண்களுக்கு அநீதி ஏற்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அது தொடர்பாக ஆராய்ந்து , நாட்டின் பொதுவான சட்டத்துக்கு திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் இணக்கம் தெரிவித்திருக்கின்றோம் . அதனால் நீதி அமைச்சுக்கு நாங்கள் சமர்ப்பித்திருக்கும் திருத்தங்கள் அடங்கிய பரிந்துரைகளை உடனடியாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார் ஹக்கீம்.
இதே வேளை முஸ்லிம் திருமண சட்டத்தில் உலமா சபையின் முடிவு இன்றி எத்தகைய திருத்தமும் கொண்டு வர அனுமதிக்க முடியாது என ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே உலமா கட்சி சொல்லி வருகிறது. அத்துடன் திருத்தத்துக்கு முயற்சிப்பது அதனை இல்லாதொழிக்க வழி செய்யும் என்றும் எச்சரிக்கை செய்து வந்துள்ளது.
Comments
Post a comment