கல்முனைக்கான எல்லையிலும் எந்த பிரச்சினையும் இல்லை. 1987ம் ஆண்டு இருந்தது போல் கல்முனையை பிரிக்க வேண்டும் என்று சொன்னால் அங்கு எல்லை பிரச்சினை என்பதே இல்லை.
இதனை விடுத்து எல்லையில் பிரச்சினை என்பது புதிதாக ஒவ்வொருவரும் தமக்கு அந்த எல்லை வேண்டும் இந்த எல்லை வேண்டும் என சொல்வதுதான். அப்படி பார்த்தால் சாய்ந்தமருதிலும் தமக்கு வேறு எல்லை வேண்டும் என்று குரல் எழுப்புவோரும் உண்டு. அதற்காக சாய்ந்தமருதிலும் எல்லை பிரச்சினை உண்டு என கூறி சபை வழங்கலுக்கு கொமிசன் போடப்படுமா? இல்லை.
உண்மையில் ஜனாதிபதி தேர்தலின் போது சாய்ந்தமருதுக்கு வந்த மஹிந்த ராஜபக்ச மிகத்தெளிவாக சொன்னார். அதாவது கல்முனையை நான்கு சபைகளாக முன்பிருந்தது போல் பிரித்து சாய்ந்தமருதுக்கும் சபை கிடைக்கும் என.
மஹிந்தவின் இந்த நிலைப்பாட்டை அவசரப்பட்டு கெடுத்தவர்கள் யார் என்று தெரியவில்லை.
கல்முனையில் எல்லை பிரச்சினை உண்டு என்பதால் கொமிசன் போட வேண்டும் என மஹிந்த சொல்லவில்லை. அவரை சந்திக்க சென்றவர்கள் கல்முனையில் எல்லை பிரச்சினை உண்டு என்றும் சாய்ந்தமருதில் எல்லை பிரச்சினை இல்லை என்பதால் அதற்கு சபை கொடுக்கலாம் என்று சொன்னதன் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷ்வால் கல்முனைக்கு கொமிசன் போடப்பட்டது.
1987ம் ஆண்டு இருந்தது போல் நான்கு சபைகளும் செயற்படும் என வர்த்தமாணி வந்திருந்தால் இது மீண்டும் அமைச்சரவை மூலம் ரத்தாகும் நிலை வந்திருக்காது.
இந்த நிலைக்கு காரணம் கல்முனை சார்பாக சென்ற கல்முனை எம் பி ஹரீசும் சரியாக இது விடயத்தை இடித்துரைக்கவில்லை என்பதும்தான். தான் சஜித்துக்கு ஆதரவாக நின்றவன் என்ற குற்ற உணர்வு அவரை இடித்துரைக்கும் தைரியத்தை இல்லாமலாக்கியிருக்கலாம். இதனால்த்தான் நாம் சொல்வது கல்முனை தலைமை கொண்ட மஹிந்த சார்பு முஸ்லிம் கட்சியை கல்முனை மக்கள் தம் பிரதிநிதியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று. அவ்வாறு பிரகடனப்படுத்தப்படுவதன் மூலம் அக்கட்சி எதிர் காலத்திலாவது இது விடயத்தை சாதிக்க முடியும். மக்கள் அதிகாரம் இல்லாத கட்சியால் பெரிதாக சாதிக்க முடியாது.
ஆகவே சாய்ந்தமருதுக்கு சபை, கல்முனைக்கு கொமிசன் என்ற வர்த்தமாணி அறிக்கை அமைச்சரவையால் ரத்து செய்யப்பட்டு விட்டதால் இனி கொமிசன் என்ற பேச்சுக்கு இடமில்லை. அந்த வகையில் இனி பிரதமருடனோ ஜனாதிபதியுடனோ சாய்ந்தமருது கல்முனை பற்றி பேச செல்பவர்கள் ஒரேயொரு வார்த்தைதான் சொல்ல வேண்டும். அதுதான் 1987ம் ஆண்டைய வர்த்தமாணியை ரத்து செய்து 1987ம் ஆண்டுக்கு முன் இருந்த எல்லைகளின் படி கல்முனையை நான்காக பிரியுங்கள் என்பதுதான். அந்த எல்லைகளின்படியே செயலகங்களும் சபைகளும் இருக்க வேண்டும் என்பதை மட்டுமே வலியுறுத்த வேண்டும்.
அவ்வாறு பிரிந்தபின் கல்முனையுடன் சேர விரும்பும் சபைகள் மீண்டும் சேர முடியும்.
- முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சி
23.2.2020
Post a Comment