எமக்கு உரிய கவனிப்பு இல்லையென மைத்திரி வேதனை
- ஜனாதிபதி, பிரதமரிடம் இருந்து பிரச்சினை இல்லையாம்
January 29, 2021
ஆளுங்கூட்டணியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உரிய கவனிப்பு இல்லையென முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதேவேளை கடந்த காலத்தில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் பொதுஜன முன்னணி செயற்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜெயசேகரவால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அவர்,
ஆம், அப்படியான பிரச்சினை இருக்கிறது. எமக்கான கவனிப்பில் குறை இருக்கிறது. ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் எதுவும் நடைபெறுவதில்லை.
உரிய வகையில் செயற்பட்டிருந்தால் இப்படியாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
எது எப்படி இருந்தாலும், தற்போதைய நெருக்கடியான சூழலில் இருந்து நாட்டை மீட்பதிலேயே கவனம் செலுத்த வேண்டும்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தரப்புகளில் இருந்து எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.
மற்றுமொரு தரப்பாலேயே பிரச்சினைகள் எழுந்துள்ளன என்றார்.
Post a Comment