இந்திய BJPக்கு, இலங்கையில் கட்சி ஆரம்பிக்க முடியுமா?

 


இந்திய BJPக்கு, இலங்கையில் கட்சி ஆரம்பிக்க முடியுமா? – தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதில்


வேறொரு நாடொன்றிலுள்ள கட்சியொன்றை இலங்கையில் பதிவு செய்யவோ அல்லது தேர்தலில் போட்டியிடவோ இயலுமை கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிக்கின்றார்.


இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியை (BJP) இலங்கையில் ஸ்தாபிக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட கருத்து குறித்து பதில் வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


”இலங்கையில் அவர்களின் கிளையொன்றை ஸ்தாபித்து, தேர்தலில் போட்டியிடுவதற்கான இயலுமை கிடையாது. இலங்கையிலுள்ள கட்சியொன்று என்றால், இலங்கையிலுள்ள பிரஜையொருவரினால் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டு, 4 அல்லது 5 வருடங்கள் தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டும். அந்த பின்னர் தேர்தலில் போட்டியிட வேண்டும். அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்த கட்சிகளை மாத்திரமே பதிவு செய்ய முடியும். அவ்வாறான கட்சியை மாத்திரமே ஏற்றுக்கொள்ள முடியும். அவ்வாறின்றி, எவ்வாறான அதிகாரத்தை கொண்ட கட்சியாக இருந்தாலும், அதன் கிளையை இலங்கையில் ஆரம்பிக்க முடியாது” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதிலளித்துள்ளார்.


அதேபோன்று, பாரதீய ஜனதா கட்சி, இலங்கையிலுள்ள கட்சியொன்றுடனோ அல்லது கூட்டமைப்பொன்றுடனோ இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதா என வினவிய கேள்விக்கும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.


இலங்கை சட்டத்திற்கு அமைய, அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான இயலுமை கிடையாது என அவர் கூறியுள்ளார்.


..............


ஆனாலும் யாராவ‌து இல‌ங்கைய‌ர் பார‌தீய‌ ஜ‌ன‌தா க‌ட்சி என்ற‌ பெய‌ரில் க‌ட்சி ஆர‌ம்பிப்ப‌தை ச‌ட்ட‌ம் த‌டை செய்யாது. ஆக‌வே இது விட‌ய‌த்தில் முஸ்லிம்க‌ள் முந்திக்கொண்டு இப்பெய‌ரில் க‌ட்சி ஆர‌ம்பிப்ப‌து ந‌ல்ல‌து.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்