BREAKING NEWS

இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!!

 


முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர

குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!!


( ஏ.எச்.எம்.பூமுதீன்)


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது..


 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது.


இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.


இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது.


ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம் - பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் - ஜனாஸா எரிப்பு விவகாரம் - இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சனைக்குரிய விடயமே இல்லை என்பதை - இம்ரான் கான் ஊடாக , முஸ்லிம் நாடுகளுக்கு எடுத்துக் கூறியுள்ளனர்.


முஸ்லிம்களின் அதிக பட்ச ஆதரவைப் பெற்ற முஸ்லிம் கட்சி ஒன்றின் தலைவராக தன்னை கூறிக்கொள்ளும் ரவூப் ஹக்கீம் - எதிர்த்தரப்பில் இருந்தாலும் அரசின் ஆதரவாளர் என்பதைக் காட்டும் பிரதமரின் இராஜதந்திர வலைக்குள்/ குழிக்குள் அவராகவே சென்று வீழ்ந்துள்ளார் மட்டுமன்றி சமுகத்தையும் காட்டிக் கொடுத்து விட்டார்.


பகலில் - மஹிந்தவையும் கோட்டாபயவையும் தூற்றுவது - இரவில் , அவர்களோடு உறவு வைத்துக் கொள்வது என்ற - ஹக்கீம் குறித்து சமூகத்தின் மத்தியில் இருந்து வந்த சந்தேகம் தற்போது உண்மைப்படுத்தப்பட்டுள்ளது. 


இதுபோன்று தான் - 20வது திருத்த விடயத்தில் பசில் மற்றும் ஜனாதிபதியை சந்தித்து - எனது 4 எம்பீக்கள் வாக்களிப்பார்கள் என்று உறுதியளித்து - தமது எம்பீக்களையும் வாக்களிக்குமாறு கூறிவிட்டு - இப்போது சமுகத்தின் மத்தியில் இரட்டை வேடத்தை காட்டித் திரிகின்றார். 


முகா தலைவரின் இரட்டை வேடத்தை இன்னும் எதிர்பார்க்கிறோம்..

க‌ல்முனைக்கான‌ எல்லையிலும் எந்த‌ பிர‌ச்சினையும் இல்லை.

 


க‌ல்முனைக்கான‌ எல்லையிலும் எந்த‌ பிர‌ச்சினையும் இல்லை. 1987ம் ஆண்டு இருந்த‌து போல் க‌ல்முனையை பிரிக்க‌ வேண்டும் என்று சொன்னால் அங்கு எல்லை பிர‌ச்சினை என்ப‌தே இல்லை.

இத‌னை விடுத்து எல்லையில் பிர‌ச்சினை என்ப‌து புதிதாக‌ ஒவ்வொருவ‌ரும் த‌ம‌க்கு அந்த‌ எல்லை வேண்டும் இந்த‌ எல்லை வேண்டும் என‌ சொல்வ‌துதான். அப்ப‌டி பார்த்தால் சாய்ந்த‌ம‌ருதிலும் த‌ம‌க்கு வேறு எல்லை வேண்டும் என்று குர‌ல் எழுப்புவோரும் உண்டு. அத‌ற்காக‌ சாய்ந்த‌ம‌ருதிலும் எல்லை பிர‌ச்சினை உண்டு என‌ கூறி ச‌பை வ‌ழ‌ங்க‌லுக்கு கொமிச‌ன் போட‌ப்ப‌டுமா? இல்லை. 

உண்மையில் ஜ‌னாதிப‌தி தேர்த‌லின் போது சாய்ந்த‌ம‌ருதுக்கு வ‌ந்த‌ ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ச‌ மிக‌த்தெளிவாக‌ சொன்னார். அதாவ‌து க‌ல்முனையை நான்கு ச‌பைக‌ளாக‌ முன்பிருந்த‌து போல் பிரித்து சாய்ந்த‌ம‌ருதுக்கும் ச‌பை கிடைக்கும் என‌.


ம‌ஹிந்த‌வின் இந்த‌ நிலைப்பாட்டை அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு கெடுத்த‌வ‌ர்க‌ள் யார் என்று தெரிய‌வில்லை.


க‌ல்முனையில் எல்லை பிர‌ச்சினை உண்டு என்ப‌தால் கொமிச‌ன் போட‌ வேண்டும் என‌ ம‌ஹிந்த‌ சொல்ல‌வில்லை. அவ‌ரை ச‌ந்திக்க‌ சென்ற‌வ‌ர்க‌ள் க‌ல்முனையில் எல்லை பிர‌ச்சினை உண்டு என்றும் சாய்ந்த‌ம‌ருதில் எல்லை பிர‌ச்சினை இல்லை என்ப‌தால் அத‌ற்கு ச‌பை கொடுக்க‌லாம் என்று சொன்ன‌த‌ன் கார‌ண‌மாக‌வே ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ்வால் க‌ல்முனைக்கு கொமிச‌ன் போட‌ப்ப‌ட்ட‌து.

1987ம் ஆண்டு இருந்த‌து போல் நான்கு ச‌பைக‌ளும் செய‌ற்ப‌டும் என‌ வ‌ர்த்த‌மாணி வ‌ந்திருந்தால் இது மீண்டும் அமைச்ச‌ர‌வை மூல‌ம் ர‌த்தாகும் நிலை வ‌ந்திருக்காது.


இந்த‌ நிலைக்கு கார‌ண‌ம் க‌ல்முனை சார்பாக‌ சென்ற‌ க‌ல்முனை எம் பி ஹ‌ரீசும் ச‌ரியாக‌ இது விட‌ய‌த்தை இடித்துரைக்க‌வில்லை என்ப‌தும்தான். தான் ச‌ஜித்துக்கு ஆத‌ர‌வாக‌ நின்ற‌வ‌ன் என்ற‌ குற்ற‌ உண‌ர்வு அவ‌ரை இடித்துரைக்கும் தைரிய‌த்தை இல்லாம‌லாக்கியிருக்க‌லாம்.  இத‌னால்த்தான் நாம் சொல்வ‌து க‌ல்முனை த‌லைமை கொண்ட‌ ம‌ஹிந்த‌ சார்பு முஸ்லிம் க‌ட்சியை க‌ல்முனை ம‌க்க‌ள் த‌ம் பிர‌திநிதியாக‌ பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்த‌ வேண்டும் என்று. அவ்வாறு பிர‌க‌டன‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌த‌ன் மூல‌ம் அக்க‌ட்சி எதிர் கால‌த்திலாவ‌து இது விட‌ய‌த்தை சாதிக்க‌ முடியும். ம‌க்க‌ள் அதிகார‌ம் இல்லாத‌ க‌ட்சியால் பெரிதாக‌ சாதிக்க‌ முடியாது.


ஆக‌வே சாய்ந்த‌ம‌ருதுக்கு ச‌பை, க‌ல்முனைக்கு கொமிச‌ன் என்ற‌ வ‌ர்த்த‌மாணி அறிக்கை அமைச்ச‌ர‌வையால் ர‌த்து செய்ய‌ப்ப‌ட்டு விட்ட‌தால் இனி கொமிச‌ன் என்ற‌ பேச்சுக்கு இட‌மில்லை. அந்த‌ வ‌கையில் இனி பிர‌த‌ம‌ருட‌னோ ஜ‌னாதிப‌தியுட‌னோ சாய்ந்த‌ம‌ருது க‌ல்முனை ப‌ற்றி பேச‌ செல்ப‌வ‌ர்க‌ள் ஒரேயொரு வார்த்தைதான் சொல்ல‌ வேண்டும். அதுதான் 1987ம் ஆண்டைய‌ வ‌ர்த்த‌மாணியை ர‌த்து செய்து 1987ம் ஆண்டுக்கு முன் இருந்த‌ எல்லைக‌ளின் ப‌டி க‌ல்முனையை நான்காக‌ பிரியுங்க‌ள் என்ப‌துதான்.  அந்த‌ எல்லைக‌ளின்ப‌டியே செய‌ல‌க‌ங்க‌ளும் ச‌பைக‌ளும் இருக்க‌ வேண்டும் என்ப‌தை ம‌ட்டுமே வ‌லியுறுத்த‌ வேண்டும்.


அவ்வாறு பிரிந்த‌பின் க‌ல்முனையுட‌ன் சேர‌ விரும்பும் ச‌பைக‌ள் மீண்டும் சேர முடியும்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

உலமா க‌ட்சி

23.2.2020

கொங்கோ

 


கொங்கோ:


அமெரிக்க,ஐரோப்பிய மற்றும் சீனாவின் வேட்டைக்காடாகிய கொங்கோ என்ற கனிவளமிக்க இந்த ஆபிரிக்கத் தேசத்தில் இதுவரை 35 இலட்சம்(இலங்கைத் தமிழர்களின் மொத்தச் சனத்தொகை.)மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்!சிறு இனக் குழுக்களுக்குள் பற்பல போராட்டங்கள். ஒவ்வொரு பகுதிகளையும் ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா, என்று கூறுபோட்டு ஆளுகின்றன. கண்துடைப்புத் தேர்தல், ஐ.நா.துருப்புகள்... என்னவொரு வேட்டைக்காடு இந்தக் கொங்கோ! 


கேக்கைப் பங்கிட்டதுபோன்று ,ஒவ்வொரு ஐரோப்பியத் தொழிற்கழகங்களும் அந்தத் தேசத்தைப் பங்கிட்டுவிட்டென.இதற்கு ஐ.நா.ஒரு சடங்கு நிகழ்த்தி ஐ.நா.துருப்புகள் என்ற போர்வையில் ஒவ்வொரு நாடும் தத்தமது தேவைக்கேற்ற கனிவளங்களைத் தோண்டியெடுத்துத் தமது நாடுகளுக்குப் பத்திரமாக அனுப்பியபடி.தொடர்ந்து கனிவளம் மிக்க பகுதிகளைத் தத்தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நாய் அடிபாடு.


இந்தத் தேசத்துக்கு எல்லையும் இல்லை.மக்கள் தொகை பற்றிய சரியான தகவலும் இல்லை.கிட்டத்தட்ட ஐந்து கோடிப் பேர்கள் வாழ்வதாகக் கொள்ளலாம்.உகண்டா,ருவண்டா என்று வேறு இத்தேசத்தில் கனிவளங்களைத் திருடித் தமது அமெரிக்க எஜமான்களுக்குத் தள்ளியபடி. கேமா((Hema)லெண்டு(Lendu) இனக் குழுக்கள் கிழக்குக் கொங்கோவில் ஒருவரையொருவர் விழுங்கியபடி... பேய்கமேன்( Mambuti-Pygmaen) என்ற இனக்குழு மனிதர்களைப் பிடித்து உண்பதும் இந்தத்தேசத்து மனிதர்களிடம் இடம்பெறுவதுண்டு.இந்த மம்புட்டி-பேய்மேன்களின் இருதயம் இற்றுறிப்(Ituri-Region) பகுதியிலுள்ள காடுகளைப்பற்றிச் சிந்தித்து துடிப்பதுமட்மல்ல.மாறாக பெரும் சக்தியையும் மற்ற மனிதர்களுக்கு வழங்குவதாக நம்பப்பட்டு,இந்த இனக்குழுவை வேட்டையாடி,அவர்களின் இதயத்தை உண்டு உருசிப்பதும் நிகழ்கிறது.இத்தகைய மூட நம்பிக்கையோடு கொங்கோ.


அவ்வளவு பின் தங்கிய மனிதக் குழுக்கள் இங்கேதாம் வாழ்கிறார்கள்!


"...Der Osten Kongo ist wahrscheinlich der schlimmste Platz auf Erden fuer Fraun."-bedrohte Voelker.seite:15.


"கொங்கோவின் கிழக்குப் பகுதியானது பெரும்பாலும் பெண்களுக்கு ஆபத்தான பகுதியாகும் இப்புவிப்பரப்பில்."அச்சுறுத்தப்படும் மக்கள்.பக்கம்:15.


அதாவது கொங்கோவின் கிழக்கு மாகணத்தில் எண்பது வீதமான பெண்கள் பாலியற் பலாத்தகாரத்துக்குட்படுத்தப்பட்டு,பால்வினை நோய்களினால் சாகும் நிலையிலுள்ளார்கள். உதாரணத்துக்கு: பெம்பாசின்;"Mouvement de la Libe´ration du Congo" போராளிகள் கடந்த 29.10.2002 ஆம் ஆண்டு 65 பெண்களையும், சிறுமிகளையும் வல்லுறுக்குட்படுத்தினார்கள்.117 மனிதர்களைக் கொன்றார்கள்.(அதே நூல்.)இது தொடர்கதை.


இந்த நிலையில் மக்கள் பெரும் அவலத்துள் வாழ,ஐரோப்பிய-அமெரிக்க வல்லூறுகள் வளத்தைத் திருடியபடி.


கொங்கோவின் கனிவளம்தாம் இந்தத் தேசத்தின் அழிவுக்கும் காரணமாகிறது.


யுரேனியம்,


தங்கம்,


வைரம்,


கொல்ரன் எனும் கைத் தொலைபேசி உருவாகத்துக்குரிய மூலப்பொருள்.


பெற்றோலுக்கான மசகு எண்ணை.


கடந்த  காலத்துள் ஜேர்மனி 560 துருப்புகளை ஐ.நா.துருப்பெனும் போர்வையில் கொங்கோவுக்கு அனுப்பித் தனது கம்பனி(Bayer-Tochter H.C) நிலைகொண்டிருக்கும் கனிவளப்பகுதியைக் காத்து வருகிறது.பெயரென்வோ தேர்தலைக் கண்காணிக்க-பாதுகாப்பு வழங்க,என்றபடி...

20வ‌து திருத்த‌மும் முஸ்லிம் க‌ட்சிக‌ளின் குழ‌ப்ப‌ நிலையும்.

 


தொடரும் ஏமாற்றம்.......

**************************

-சஹாப்தீன் -

'தீர்மானங்களை மேற்கொள்ளக் கூடிய சக்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ' என்ற முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கணிப்பு பிழைத்துள்ளது. பெரும்பாலும் முஸ்லிம் கட்சிகளின் முடிவுகள் பிழையாகவே இருந்து வருகின்றன. அதற்கு சமூக சிந்தனையில்லாது முடிவுகளை எடுப்பதே காரணமாகும். 


ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் போது தீர்மானமிக்கும் சக்தியாக மஹிந்த ராஜபக்ஷவும், பசில் ராஜபக்ஷவும் விளங்கினார்கள். ஆனால், அத்தேர்தல்களின் பின்னர் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியலில் அதிகாரம் மாறும் போது அது பல மாற்றங்களை ஏற்படுத்தும். இதனைப் புரிந்து கொள்ளாது அரசியலை மேற்கொள்ள முடியாது. 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடமே அதிகாரம் மையம் உள்ளது. ஆனால், அவருக்கு கட்சி கிடையாது. பொதுஜன பெரமுனவில் அவருக்கு எந்தப் பதவியும் கிடையாது. அவரிடம் 'வியத்மக' 'எலிய' ஆகிய அமைப்புக்கள் மட்டுமே உள்ளன. அதிலும் வியத்மகவே இயங்கு நிலையில் உள்ளது. இந்த அமைப்புத்தான் ஜனாதிபதியின் அரசியல் நடவடிக்கைகளை தீர்மானிக்கும் சக்தியாகவும் உள்ளது. ஆகவே, தீர்மானமிக்க சக்தியாக ஜனாதிபதி கோத்தாயவே உள்ளார். இதற்கு நிறைவேற்று அதிகாரமே பிரதான காரணமாகும். 


பிழையான இடம்

-----------------------

அதிகார மாற்றங்களை கவனத்தில் கொள்ளாது முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் தான் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியை பெறுவதற்கு இவர்கள் கவனம் செலுத்தினாலும், அது இரண்டாம் நிலை தெரிவாகவே இருந்தது. முதல் தெரிவு அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதே காணப்பட்டுள்ளது.

இதனால், 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு கையுயர்த்துவதற்கு முன்னதாக கொரோனா தொற்றால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வதற்குரிய அனுமதியை முதலில் பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் விளைந்திருக்கவில்லை. அரசாங்கத்தினருடன் நெருக்கத்தை பேணிக் கொள்ள வேண்டுமென்பதற்காக இவர்கள் தெரிவு செய்த வழியில் தீர்மானமிக்க அதிகாரம் இருக்கவில்லை. இந்நிலையை உருவாக்கியவர்களும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தான். 

ஏனென்றால் 19ஆவது திருத்தச் சட்ட மூலம் ஜனாதிபதிக்கு இருந்த நிறைவேற்று அதிகாரத்திற்கு மூக்கனாங்கயிறு கட்டியிருந்தது. அக்கயிற்றை அவிழ்த்து விட்டு முழுமையான அதிகாரங்களை கொண்ட ஜனாதிபதியொருவரை ஆசனத்தில் அமரவைப்பதற்காக கொண்டவரப்பட்டது தான் 20 ஆவது திருத்தச் சட்டமூலம். 


அதன் ஊடாக, பிரதமருக்கும், பாராளுமன்றத்திற்கும் இருந்த அதிகாரங்களை மீண்டும் ஜனாதிபதிக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. இதற்கு முஸ்லிம் பிரதிநிதிகள் கையுயர்த்திவிட்டு, தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று பிரதமரையே நம்பியிருந்திருக்கின்றார்கள்.  20ஆவது திருத்தச் சட்ட மூலம் எத்தகைய அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்கப் போகின்றது. பிரதமரின் அதிகார கொம்மை எந்தளவுக்கு முறிக்கும் என்றெல்லாம் தெளிவாக புரிந்து கொள்ளாது. முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பிரதமருடன் பேசியுள்ளோம். ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி கிடைக்குமென்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஈற்றில் ஏமாற்றமே எஞ்சியிருக்கின்றது. 


கடந்த 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்தராஜபக்ஷ ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதிக்கப்படும் என்ற போது, அன்றைய தினம் பாராளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக பிரதமருடன் ஜனாஸா அடக்கம் குறித்து பேசியதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பகிரங்கமாக கூறினார்.  

11ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பை ஆளுந்தரப்பைச் சேர்ந்த இரண்டு பெண் பிரதிநிதிகள் கேள்விக்குட்படுத்தினார்கள். 


பாராளுமன்ற உறுப்பினர்கள் கோகிலா குணவர்த்தன, 'பிரதமர்  ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கவில்லை' என்றார். கொரோனா தடுப்புக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, 'பிரதமர் அதனை தீர்மானிக்க முடியாது. சுகாதார அமைச்சின் நிபுணர் குழுதான் தீர்மானிக்க வேண்டும். சுகாதார அமைச்சரே இறுதி முடிவு எடுப்பார்'  என்றார்.


ஆகவே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பையே செல்லுபடியாகாது என்று ஆளுந் தரப்பினரே மறுக்கின்றார்கள் என்றால், அவர்களின் பின்னணியில் பிரதமரை விடவும் சக்தி வாய்ந்த 'அதிகார மையம்' இல்லாமல் இருக்க முடியாது. அதனால் தான், பிரதமரின் அறிவிப்பையே கேள்விக்குட்படுத்தும் தைரியம் ஆளும் தரப்புக்குள்ளேயே ஏற்பட்டுள்ளது. இந்தப் சம்பவத்தின் மூலமாக முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிழையான இடத்தில் நின்று கொண்டு நல்லது நடக்கும் என்றும், 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கியதன் நோக்கம் நிறைவேறியுள்ளதென்றும் அறிக்கைவிட்டு ஏமாந்த சோணகிரிகளாகியுள்ளனர். 


இதனால் ஏமாந்து போவதனையே ஒரு கொள்கையாக முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற கேள்வி தான் இங்கு எழுகின்றது. மக்கள் பிரதிநிதிகளிடம் பொதுநலம் குறைந்து சுயநலம் மிகையாகும் போது ஏமாந்து போதல் தவிர்க்க முடியாத விடயமாகின்றது. சமூகத்தை ஏமாற்றப் பழகியவர்களுக்கு 'அறம்' தன் கடமையைச் செய்கின்றது என்ற கொள்ள வேண்டியும் இருக்கின்றது.


சுட்டி சுட்டதடா கைவிட்ட தடா

----------------------------------------

ஜனாஸா அடக்கம் முதல் முஸ்லிம்களின் பிரச்சினைகளைக்குரிய தீர்வுகள் குறித்தான உடன்பாடுகளை கண்டதன் பின்னரே 20ஆவது சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கினோம். ஆனால், அரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டது என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

ஆயினும், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஆளுந்தரப்பினர் தமது தேவைக்கேற்றவாறு பயன்படுத்திவிட்டார்கள். பசில் ராஜபக்ஷவை பொறுத்தவரை தான் பாராளுமன்றம் செல்வதற்கு தடையாகவுள்ள சரத்தை நீக்கி இரட்டை பிரஜா உரிமை நபருக்கு சபை செல்வதற்கு அனுமதி வேண்டும். கோத்தாபய ராஜபக்ஷவுக்கு நிறைவேற்று அதிகாரம் வேண்டும். அத்தோடு, பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பு அணியினருக்கு மீண்டும் நிறைவேற்று அதிகாரம் தமது தலைமைக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. 


அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆளுந் தரப்பிலுள்ள சிலர் எதிர்ப்புக் காட்டினார்கள். இதனால்தான், தங்களின் இலக்கை அடைந்து கொள்வதற்காக முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெறப்பட்டது. இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீடக் கூட்டம் 13ஆம் திகதி சனிக்கிழமை அதன் தலைமயகத்தில் நடைபெற்றது. இதன்போது 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு அளித்தமை பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் 'ஜனாஸா எரிப்பு விவகாரத்திற்குரிய கோரிக்கையை முன்னிருத்தித்தான் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்ததாகவும், இருந்தும் தாங்கள் அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும், அது குறித்து தாங்கள் உயர்பீடத்திலும், மக்களிடத்திலும் மன்னிப்புக் கோர விரும்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உச்சபீடத்தில் தெரிவித்தார்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, 'சமூகத்தின் தேவைக்காகவே அரசாங்கத்தின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கியதாக இருந்தால், கட்சியின் தலைமையையும், கட்சியின் முடிவையும் புறக்கணித்தது ஏன்? 'என்ற கேள்வி இங்கு எழுகின்றது. கட்சியும், தலைமையும் சமூகத்தின் பிரச்சினைகளில் அக்கறை கொள்வதில்லை. அதனால்தான் புறக்கணித்து செயற்பட்டோம் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது சுயநலத்திற்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டதென்று எடுத்துக் கொள்வதா என்ற குழப்பம் நீடித்துக்கொண்டே செல்கின்றது. 

இப்போது ஜனாஸா எரிப்பு விவகாரத்திற்கு தீர்வு இல்லாததால், இனியும் சமூகத்தை ஏமாற்ற முடியாதென்பதால் சட்டி சுட்டதடா கைவிட்டதடா என்ற நிலையில் பதறவும், மன்னிப்புக் கோரும் நிலைமையை அடைய வேண்டி ஏற்பட்டுள்ளது. இவர்களின் மன்னிப்பு கதையில் இன்னுமொரு விடயமும் உள்ளது. 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் பின்னர், தலைவர் ரவூப் ஹக்கீமின் சம்மதத்தின் பேரிலேயே ஆதரவு வழங்கினோம் என்று தெரிவித்திருந்தார்கள். இது உண்மை என்றால் ரவூப் ஹக்கீமும் மன்னிப்புக் கோரவேண்டும். பொய்யாயின் தலைவர் அவ்வாறு தெரிவிக்கவில்லை என்று உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

 

இதனைச் செய்யாது விட்டால், தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களை திட்டமிட்டு ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டியிருக்கும். இந்த விடயத்தில் கையறு நிலை ஏற்பட்டதனால் தான் பொது மக்களின் ஏச்சுப் பேச்சுக்களிலிருந்து தப்புவதற்காக அரசாங்கம் ஏமாற்றி விட்டதென்ற நாடகத்தை தற்போது அரங்கேற்றியுள்ளார்கள். அவர்கள் கட்சியுடன் தொடர்ந்து பயணிக்காது போனால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமது நாடகத்தில் இன்னுமொரு அங்கத்தினையும் ஹக்கீம் தரப்பினர் இணைத்துள்ளார்கள். 


முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடனான தமது பின்கதவு உறவை ஜனாதிபதியையும் இணைத்ததாக வைத்திருக்க வேண்டும். அதனை தவிர்த்து, அரசாங்கம் என்றால் யார் என்றே புரியாமல் அரங்கம் தங்களை ஏமாற்றிவிட்டதென்று சொல்லுவதில் அர்த்தமில்லை. 

நிறைவேற்று ஜனாதிபதி முறையில் அரசாங்கம் என்பது ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டமைப்பாகும். ஏறக்குறைய ஜனாதிபதியே எல்லாம் என்ற நிலைமை தான் அங்குள்ளது. ஆதலால், மிகப் பெரிய தவறை இழைத்துவிட்டு மன்னிப்பு கேட்பது என்பது புத்திசாலிகளின் பேச்சாக இருக்காது. 

சிங்கள மக்களின் வாக்குகளினால் மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக தம்மை பிரகடனம் செய்தவர் கோத்தாபய. மட்டுமல்லாது பௌத்த கடும்போக்குவாத அமைப்புக்களினதும், தேரர்களினதும் பூரண ஆதரவைப் பெற்ற ஒருவராகவும் அவர் விளங்குகின்றார். 


மேலும் 73ஆவது சுதந்திர தின விழாவில் 'நான் ஒரு சிங்கள பௌத்த தலைவர். அதை வெளிப்படுத்த நான் ஒருபோதும் தயங்க மாட்டேன். பௌத்த போதனைகளின் படியே நாட்டை நிர்வகிக்கிறேன்' என்று தெரிவித்திருந்தார். ஆதலால், தன்னை 'மூவின மக்களினதும் தலைவன்' என்று சொல்லாது 'சிங்கள பௌத்த தலைவன்' என்றே அடையாளப்படுத்துகின்றார்.

இத்தகைய கொள்கையையுடைய ஜனாதிபதியின் கரங்களுக்கு நிறைவேற்று அதிகாரத்தை கொடுத்து பலப்படுத்திவிட்டு, அரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டதென்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறித்திரிவது வேடிக்கையிலும் வேடிக்கையே.


வெறுக்கப்படும் நிலை

------------------------------

முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். எந்த சட்ட மூலமாக இருந்தாலும் கையுயர்த்துவதற்கும், பின்னர் கை நீட்டுவதற்கும் பழகிவிட்டார்கள். அத்தகையதொரு கைநீட்டலை 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கும் செய்தமையால் முஸ்லிம்களின் அதிகபட்ச வெறுப்புக்காளாகியுள்ளார்கள். 


அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியூதீன் பாகிஸ்தானின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமீர்அலி, கட்சியின் செயலாளர் சுபைதீன் உள்ளிட்டவர்களுடன் சந்தித்தார். ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட்டை தனியாக சந்தித்தார். 


இவர்கள் தங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துச் செல்லாமல் விட்டமை, தங்களின் மீதும் சமூகம் வெறுப்புக் கொண்டுவிடும் என்ற காரணத்தினாலாகும். ஆயினும், இவர்கள் தங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இறுக்கமான உறவைக் கொண்டுள்ளார்கள் என்பதனை அவர்களின் நடவடிக்கைகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. இதனால், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்களின் மீதும் முஸ்லிம்கள் வெறுப்படையும் நிலை தோற்றம் பெற்றுள்ளது.


முஸ்லிம் காங்கிரஸினது உயர்பீடக் கூட்டமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகார சபையின் கூட்டமும் 13ஆம் திகதி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதன் போது முஸ்லிம் காங்கிரஸ் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும். ஆகக் குறைந்தது கட்சியிலிருந்து இடைக்கால தடை விதிக்கப்படலாமென்று அக்கட்சியின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்த போதிலும், வழக்கம் போன்று மன்னிப்பே அளிக்கப்பட்டுள்ளது.


ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸின் தலைவராகியதன் பின்னர் சமூகத்திற்கும், கட்சிக்கும் துரோகம் இழைத்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பதே இக்கட்சியின் ஆரம்ப காலத் தொண்டர்களின் கருத்தாகும். தலைவருக்கு எதிராக விரல் நீட்டியவர்களுக்கு எதிராகவே ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். அல்லது அவர்களாகவே விலகிச் செல்லும் சூழல்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதே இதுகால வரையான நிலைமையாக இருக்கின்றது.


முஸ்லிம் சமூகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான பல நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் கட்சிகளின் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக செயற்பட்டுள்ளார்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. ஒருவர் எத்தனை தடவையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்ற மஹிந்த ராஜபக்ஷவின் ஆசைக்காக 18ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள் முஸ்லிம் பிரதிநிதிகள்.


2015இல் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்கரமசிங்க பிரதமராகவும் இருந்த போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகாரங்கள் செல்ல வேண்டுமென்பதற்காகவும், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைப்பதற்காகவும், 18ஆவது திருத்தச் சட்ட மூலத்தை வலுவிழக்கச் செய்வதற்காகவும் 19ஆவது திருத்தச் சட்ட மூலத்தினை அமுலாக்குவதற்காகவும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினார்கள். 


அத்துடன் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றத்திற்கும் ஆதரவு வழங்கினார்கள். அதன் தொடர்ச்சியாகவே 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இதில்  தலைவர்கள் எதிராக வாக்களித்தார்கள் என்பது மட்டுமே மாற்றம். ஆகையால், அரசாங்கத்தினால் கொண்டு வரப்படும் சட்ட மூலங்களுக்கு ஆதரவு வழங்குவதென்பது முஸ்லிம் கட்சிகளின் எழுதப்படாத கொள்கையாக கொள்ளுதல் என்பதே பொருத்தமான கூற்றாக உள்ளது. அதனால் தான், 20ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

அது மட்டுமன்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் 20இற்கு ஆதரவாக செயற்பட்டாலும், தலைவருக்கு எதிராக விரல் நீட்டவில்லை. அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்து தங்களுக்கு எதிராக விரல் நீட்டும் நிலையை ஏற்படுத்தக் கூடாதென்பதில் ரவூப் ஹக்கீமும், ரிஷாத் பதியூதீனும் முனைப்பாகவுள்ளார்கள்.  


முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்த வரை கட்சிக்கும், சமூகத்திற்கும் துரோகம் செய்தால் மன்னித்துக் கொள்ளும். ஆனால், தலைவரிடம் நியாயமான கேள்வியைக் கூட கேட்கக் கூடாது. அவ்வாறு கேட்பது மன்னிக்க முடியாத குற்றம். அதற்கு தண்டனை கட்சியை விட்டு விலக்கிவிடுவது. இவ்வாறு முஸ்லிம் கட்சிகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளமையால், அவற்றை முஸ்லிம் சமூகத்திற்குரிய கட்சிகள் என்று அழைக்க முடியாது. முஸ்லிம்களுக்கு மாற்றுக் அரசியல் கட்சிகள் அவசியமென்பதை உணரத் தொடங்கியுள்ளார்கள். முஸ்லிம்கள் தமது கட்சிகளினால் தொடர்ந்தும் ஏமாறுவதற்கு தயாரில்லை என்ற கோசம் எல்லா முஸ்லிம் பிரதேசங்களிலும் எழுந்து கொண்டிருக்கின்றது. இது தற்போதுள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்குரிய எச்சரிக்கை ஒலியாகும்.

Thanks: Virakesari 21.02.2021

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

 முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர்

கல்முனை சந்தியில் பாரிய மேடை அமைத்து 

பகிரங்கமாக மக்களிடம்

 மன்னிப்பு கேட்க வேண்டும்

முஜிபுர் ரஹ்மான் எம்பி

கல்முனையில் தெரிவிப்பு

--------------------------------------------

முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்கள் கல்முனை சந்தியில் பாரிய மேடை அமைத்து பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட கல்முனை தொகுதி ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை(16) இரவு தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற போது அங்கு மேற்கண்டவாறு அவர் கூறினார்.


முஜிபுர் ரஹ்மான் எம்.பி தொடர்ந்து பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது,


 ஐக்கிய தேசிய கட்சி காலத்தில் நாங்கள் இருக்கின்ற போது நடைபெற்ற விடயங்கள் எங்களுக்கு தெரியும். நாங்கள் கொழும்பில் இருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியினால் கிழக்கிற்கு இடம்பெற்ற அநியாயங்கள் வாதப்பிரதிவாதங்கள் அனைத்தும் எமக்கு தெரியும்.ரணில் விக்ரமசிங்கவிற்கு நாங்கள் கூட பல விடயங்களை இதற்காக முன்வைத்திருந்தோம். ஆனால் அவர் அதை ஊதாசீனம் செய்தமையினால் கிழக்கு மாகாணத்தில் கட்சிக்கு செல்வாக்கு இழந்துள்ளதை அவரே உருவாக்கினார். 


ஆனால் இன்று சஜீத் பிரேமதாச  ரணில் விக்ரமசிங்க நடந்து கொண்டதை போன்று சிந்திக்கவில்லை. வித்தியாசம் ஒன்று இருக்கின்றது.இதனால் தான் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக எமது தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்காமல் உங்களுக்கான தலைமைகளை உருவாக்குவதற்காக வந்துள்ளோம். கட்சி மற்றும் சஜீத் பிரேமதாசவின் கருத்துக்கமையவே உங்களை சந்திக்க வந்துள்ளேன். இதனூடாக ஐக்கிய மக்கள் சக்தியை நாம் உருவாக்க வேண்டும்.


நாட்டில் பல முஸ்லிம் கட்சிகள் இருந்தாலும் நாங்கள் ஏன் தேசிய கட்சியில் இருக்கின்றோம். காரணம் நாட்டில் சமாதானம் இனநல்லுறவினை இலகுவாக இதனூடாக கட்டி எழுப்ப முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. சகலவற்றையும் தேசிய கட்சி ஊடாகவே உருவாக்க முடியும். இதனால் தான் நாம் இதனை உருவாக்க முஸ்லிம் மக்களை தேசிய கட்சியில் இருக்க வேண்டும் என கூறி வருகின்றோம். 


இது சஜீத் பிரேமதாசவிற்கு தெரியும். கட்சியின் கொள்கையும் கூட. இதனால் கட்சி முஸ்லிம்களுக்கு முக்கியத்தவம் வழங்கும் நிலையில் உள்ளது. எங்களது பொறுப்பானது எதிர்வரும் காலங்களில் சிறுகட்சிகளுடன் பயணம் மேற்கொள்ளாது ஐக்கிய மக்கள் சக்தியை முன்னெடுத்த செல்வதாகும். இம்ரான் மஹ்ரூப் கூறியது போல் 2015 ஆண்டு உருவாக்கப்பட்ட அரசாங்கத்தில் அவரை விட மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே ரணில் விக்ரமசிங்க முக்கியத்துவம் கொடுத்தார்.


இதன் போது நாங்கள் கூட ரணில் விக்ரமசிங்கவுடன் வாக்குவாதப்பட்டுள்ளோம். ஏன் இம்ரான் மஹ்ரூப்பிற்கு முக்கியத்தவம் வழங்குவதில்லை என கேட்டுள்ளோம். இவ்வாறான விடயங்கள் எதிர்காலத்தில் இடம்பெற கூடாது என்பது தான் எமதும் உங்களதும் எதிர்பார்ப்பாகும். வீணாக நாம் வாக்குவாதங்களை செய்யாமல் படிப்பினைகளை நாம் படிக்க வேண்டும். ஏன் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு இல்லாமல் போனது என்பதை சஜீத் பிரேமதாசவும் படித்துள்ளார். இவ்விடயங்களை பற்றி இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் மற்றும் கபீர் காசீம் போன்றவர்கள் தொடர்ந்தும் தலைமைத்துவத்துடன் இணைந்து உரையாடிக்கொண்டு தான் இருக்கின்றனர். முன்னர் ரணில் விக்ரமசிங்கவுடன் எவரும் கதைக்க முடியாது.ரணில் விக்ரமசிங்க முடிவெடுக்கும் பாணி வேறு. அவரது ஒரு முடிவெடுக்கும் பாணி இருக்கின்றது. அது யாருக்கும் தெரியாது. ஆனால் சஜித் பிரேதமதாச வடக்கு கிழக்கில் கட்சியை பலப்படுத்தும் விடயத்தில் உறுதியாக உள்ளார்.


இதனூடாக மாவட்ட அமைப்பாளர்களை உருவாக்கி அவர்களுக்கு அதிகாரங்களை வழங்கும் முயற்சியும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டமை எல்லோருக்கும் தெரியும். அதில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அவர்கள் தேர்தல் கேட்டதனால் 3 ஆசனங்களை பெற முடிந்தது. இப்போது அவர்கள் அதனை மறந்து விட்டு வேறு வேறு விடயங்களை கதைத்துக்கொண்டு இருக்கின்றனர். 20 திருத்த சட்டம் பற்றி மன்னிப்பு கேட்டுள்ளதாக கூறி இருக்கின்றனர். 20 ஆவது திருத்த சட்டத்திற்கும் ஜனாஸாவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர்கள் மன்னிப்பு கோரினாலும் அது வீண்.காரணம் வாக்குறுதி கொடுத்தால் மீள எடுக்க முடியாது. மன்னிப்பு கேட்பது எங்களிடம் அல்ல. கோட்டபாய ராஜபக்சவின் காலடியில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.


அவர்கள் 20 ஆவது சீர்த்திருத்தம் ஊடாக இந்த நாட்டில் உள்ள சுதந்திரமாக உள்ள அதிகாரத்தை வலுவிழக்க செய்துள்ளனர்.சுயாதீனமாக இயங்கிய ஆணைக்குழு மற்றும் நீதிமன்ற செயற்பாடகள் உள்ளிட்ட அதிகாரங்களை இல்லாமல் செய்துள்ளனர். ஜனநாயக ரீதியாக இயங்கக்கூடிய சூழ்நிலைகளை இயங்காமல் செய்துள்ளார்கள். இதனால் 20 ஆவது சீர்திருத்தத்திற்கு வாக்களித்தமைக்கு மன்னிப்பு கொடுக்க முடியாது.அவர்களது கட்சியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மன்னிப்பு கொடுத்தார்களோ கொடுக்கவில்லையோ என்பது எமக்கு தெரியாது. எதிர்கால தேர்தல்களில் மக்கள் அவர்களை மன்னிப்பார்களா? என்பது தான் தற்போது இருக்கின்ற பிரச்சினையாகும். கட்சி காரியாலயங்களில் அவர்கள் கூடி மன்னிப்பு கேட்பதை விட கல்முனை சந்தியில் அவர்கள் பாரிய மேடை அமைத்து பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இது இயலுமா அப்படி கேட்க இயலாதுதான். எனவே இதுவெல்லாம் அரசியல் ரீதியாக செய்கின்ற நாடகங்களாகும். இந்த நாடகங்களை ஒழிப்பதற்கு தான் இந்த பகுதியில் இருந்து தலைமைகள் உருவாக வேண்டும்.


நேர்மையாக மக்களின் தேவைகளை அறிந்த தெளிவான தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும். அது வடகிழக்கு மற்றும் தெற்கிலாவது இது இடம்பெற வேண்டும். கடந்த 6 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக 2015 ஆண்டில் இருந்து நான் இருக்கின்றேன். அங்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை கண்களால் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.


20 சரத்திற்கு வாக்களிக்கும் நேரத்திற்கு முன்னர் எனக்கு பக்கத்தில் உள்ள இருவரை கேட்டேன். வாக்களிப்பீர்களா? என்று மச்சான் வாக்களிக்க மாட்டேன் என்றனர். அப்படி கதைத்துக்கொண்டு இருக்கின்ற போது பச்சை பட்டனை அழுத்தி விட்டார். ஒரு நிமிடம் கூட உரையாடி முடியவில்லை. அவ்வாறு தான் எனக்கு முன்னால் உள்ளவரும் அப்படி செய்தார். இந்த மாவட்டத்தில் 15 வருடம் பாராளுமன்றத்தில் இருக்கின்றவர். நான் அவரிடம் தட்டி கேட்டேன். வாக்களிக்கமாட்டீங்கள் தானே?என்று.இல்லவே இல்லை. அப்படி சொல்லி வாக்களித்தார்.இன்னுமொருவர் தற்போது பெரிதான பேசி திரிகின்றவர்(ஹாபீஸ் நசீர்) நான் இருக்கின்ற நிரலில் இருந்து நான்கு எம்பிகளுக்கு அருகில் தான் இருக்கின்றார். அவரிடம் வாக்களிக்கும் முடிவு நெருங்கும் பெல் அடிக்கின்ற சந்தர்ப்பத்தில் அவரிடம் சென்று கேட்டேன். ஹாபீஸ் என்ன நிலைமை. வாக்கு போட போறீங்களா என கேட்டேன். ஹரீஸ் இன்னும் வந்திருக்கின்றாரா? இல்லை தானே. அப்படி என்றால் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்றார்.


இதில் நான் கூறுவது உண்மையான விடயம்.ஹாபீஸ் நஸீர் அகமட்டிடம் கேட்டேன். ஏனெனில் அப்போது ஒரு பேச்சு எழுந்தது. அரசாங்கத்திற்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸின் 4 பேர் வாக்களிப்பதாக வெளிவந்திருந்தது. இதனால் தான் 20 ஆவது சீர்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பீர்களா என நான் கேட்டேன். அவர் அவருக்கு முன்னால் உள்ள சிரேஸ்ட உறுப்பினர் ஹரீஸ் இருக்கின்றாரா என எழுந்து பார்க்கின்றார். முஜிபுர் ரஹ்மான் இன்னும் ஹரீஸ் வருகை தரவில்லை. எனவே அவர் வரவில்லையாயின் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்றார். இறுதியில் ஹரீஸும் ஹாபீஸும் வாக்களித்தார்கள். அது மாத்திரமன்றி திருகோணமலையிலுள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக கையில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்த தௌபீக்கும் வாக்களித்தார்கள். இது தான் உண்மையான நிலைமை. இந்த மாதிரியான அரசியல் வாதிகளால் முஸ்லிம் சமூகத்தினை வழிநடத்த முடியாது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


முஸ்லிம் சமூகம் ஒரு மாற்றத்தை அரசியல் ரீதியாக உருவாக்க வேண்டும். புதிய தலைமைத்துவங்களை உருவாக்க வேண்டும். இளைஞர்களை அதில் இணைத்து கொள்ள வேண்டும் இவ்வாறு முஜிபுர் ரஹ்மான் எம்பி தெரிவித்தார்.

பகிரங்க மன்னிப்பு கோரப்போவதில்லை – மு .கா எம்பிக்கள் திட்டவட்டம் !

 


இலங்கை


பகிரங்க மன்னிப்பு கோரப்போவதில்லை – மு .கா எம்பிக்கள் திட்டவட்டம் !
20 ஆவது திருத்த நிறைவேற்றத்திற்காக அரசுக்கு ஆதரவளித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களிடம் பொதுமன்னிப்பை கோரவேண்டுமென அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை கட்சியின் எம் பிக்கள் நிராகரித்திருப்பதாக அறியமுடிந்தது.


கடந்த சனிக்கிழமை கட்சியின் உயர்பீட கூட்டம் கொழும்பில் நடந்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துவெளியிட்டஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ,இருபதாம் திருத்தத்திற்கு ஆதரவளித்த தவறை உணர்ந்த தனது கட்சி எம் பிக்கள் கட்சியின் உயர்பீடத்திலும் ,மக்களிடமும் மன்னிப்பை கேட்கவேண்டுமென தெரிவித்திருந்தார்.


ஆனால் கட்சித்தலைவரின் இந்த கோரிக்கையை அரசுக்கு ஆதரவளித்த மு.கா எம் பிக்கள் நிராகரித்துள்ளதாக நம்பகரமாக அறியமுடிந்தது.


” இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் கட்சிக்குள் பேச்சு நடந்தபோது அவரவர் தீர்மானப்படி வாக்களிக்கலாமென கட்சியின் தலைவர் தெரிவித்தார் .அதன்படி நாங்கள் நடந்து கொண்டோம்.20 ஆவது திருத்தம் நிறைவேறிய இறுதி நாளன்று ,கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசும்போது  எம் பிக்கள் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட்டு செயற்பட  கட்சித்தலைவர் அனுமதியளித்துள்ளதால் அதன்படியே செயற்படுவதாக குறிப்பிட்டார்.இது ஹன்ஸார்ட்டிலும் பதிவாகியுள்ளது.அது தொடர்பில் கட்சித்தலைவர் நாடாளுமன்றில் மறுக்கவில்லை.அப்படியிருக்கையில் எங்களை மன்னிப்பு கோரச் சொல்வதில் நியாயமில்லை.அப்படியென்றால் கட்சித் தலைவர்முதல் எல்லோரும் சேர்ந்து மன்னிப்புக் கேட்கவேண்டும்.மக்களின் பிரச்சினைகள் தீர அரசுக்கு ஆதரவளிப்போமென எல்லோரும் தீர்மானித்துவிட்டு இப்போது தனியே எம் பிக்கள் மீது பழி போடுவதில் அர்த்தமில்லை. ”


என்று முஸ்லிம் காங்கிரஸின்  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்  ‘தமிழன்’ செய்திகளிடம் தெரிவித்தார்.


முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ,தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபீஸ் நஸீர் எம் பி நாடாளுமன்றத்தில் அப்போது குறிப்பிட்ட விடயத்தின் ஹன்சார்ட் பிரதியும் இத்துடன்  இணைக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ் இவர்களின் அரசியலை நாசமாக்க வேண்டும்

 (ஜெமீல் அகமட் )


20 வது அரசியல் சட்ட திருத்தத்தின் போது அரசுக்கு  ஆதரவு  வழங்கிய எழ  (07)பேரும்  நாங்கள் அரசுக்கு வேண்டிய நேரம் ஆதரவு தருகிறோம்  ஜனாசாக்களை எரிக்காமல்  எதோ ஒரு வழியில் நல்லடக்கம் செய்ய  அனுமதியை தாருங்கள் என்று   பிடிவாதமாக பேசி இருந்தால் ஜனாசா எரிப்புக்கு ஒரு முடிவை பெற்று இருக்கலாம் அப்படி இவர்கள் பேசவில்லை  பேசி இருந்தால்  தற்போது முடிவு  கிடைத்து இருக்கும் 


தேர்தல் கடனை எப்படி கொடுப்பது அதற்கு என்ன  வழி என்ற  கவலையில்  இருந்தவர்களுக்கு தொழில் வாய்ப்பு  ரோட்டு சுகபோகமும் கிடைத்தவுடன்  ஜனாசா எரிப்பு மறந்து விட்டது அதனால்  சொந்த ஊரில்  ஒரு 10 பேரை சேர்த்து  ஜனாசா எரிப்புக்கு எதிராக பேச முடியாமல்  போய்விட்டது  இப்படியானவர்களை சமூகம் இனிமேல்   எப்படி நம்புவது 


வீட்டை எரித்து அந்த நெருப்பில்  பிடியை எரித்து சுவை கண்ட கதை போன்று ஜனாசா எரியும்  பேது  அதற்கு எதிராக  மக்கள் மத்தியில் பேச வக்கில்லாதவர்களை அரசியல்வாதி என்று பேசுவதே பாவம்


பிரதமர் ஜனாசா அடக்கலாம் என்று பாராளுமன்றத்தில் பேசியதும்  போட்டிபோட்டு  நன்றி தெரிவித்தனர்  அதுமட்டுமல்ல காலையில் பேசினோம்  மாலையில் நல்ல முடிவு சமூகத்துக்காக அமானிதமாக நடந்தோம் என்றெல்லாம் அறிக்கை விட்டனர் இறுதியில் எல்லா அறிக்கையும் காற்றில் பரந்து போய்விட்டது  ஜனாச அடக்க பிரதமர்  கூறவில்லை  என்று கதை வந்ததும் இந்த கூட்டத்தின்  பொய் அறிக்கை  போலி நாடகமெல்லம் அம்பலமாகிவிட்டது அதனால்  மூக்குடைந்து  மக்கள் மத்தியில் பேச முடியாமல்  தற்போது இருக்கின்றனர்


 ஜனாசாவை அடக்கம்  செய்யலாம் என்று விஷேட குழு அறிக்கை கொடுத்த பின்னும் ஜனாசா  எரிகின்றது என்றால்  அதற்குள் அரசியல்  இருக்கிறது  என்பது வெளிப்படையாக  தெரின்கிற நிலையில்  அந்த அரசியலில் நுழைந்தவர்களுக்கு  ஜனாசா பிரச்சினையை தீர்ப்பது கடினமான காரியம் அல்ல  ஆனால்  அவர்கள்  இனவாதிகளுக்கு அடிமையானதால் அவர்களால்  பேச முடியாமல் போய்விட்டது  


பிரதமரின் திசைமாறிய பேச்சு மூலம் அவமானம் அடைந்தவர்கள் அதை மறைக்க மன்னிப்பு  என்ற முடிவுக்கு  வந்து மக்களை ஏமாற்ற நினைத்தாலும் அல்லாஹ்வை ஏமாற்ற முடியாது  இவர்கள் இனிமேல்  மக்கள் மத்தியில் மேடை போட்டு பேசவும் முடியாத  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் 


முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர்  நிஸாம் காரியப்பர்  அவர்கள் சொன்னது போல் அரசாங்கத்துக்கு ஆதரவாக  சென்றவர்கள் தான் ஜனாசா எரிப்பு பாவத்தை சுமக்கவேண்டுமே தவிர அரசாங்கம்  இல்லை  அல்லாஹ் இவர்களின் அரசியலை நாசமாக்க  வேண்டும்  என ஒவ்வொரு முஸ்லிமும் துஆ செய்யுங்கள்

முஸ்லிம் காங்கிர‌ஸ் எப்ப‌டியான‌ க‌ட்சி என்று தெரிந்தும் முட்டாளாகி போன‌ ம‌ரிக்கார்.

 


முஸ்லிம் காங்கிர‌ஸ் எப்ப‌டியான‌ க‌ட்சி என்று தெரிந்தும் முட்டாளாகி போன‌ ம‌ரிக்கார்.


 அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் என்பது கொள்கை ரீதியில் தீர்மானமெடுக்க வேண்டிய விடயமாகும் . எனவே அந்த விடயத்தையும் கொரோனா சடலங்கள் தொடர்பான விடயத்தையும் இணைக்க வேண்டாம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கு கூறிக்கொள்ள விரும்புகிறோம் என்று ஐக்கிய மக்கள் சத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் . மரிக்கார் தெரிவித்தார் . ஜனநாயகத்தை ஒழித்து சர்வாதிகார தலைவர் உருவாகுவதற்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மக்களிடமோ ஐக்கிய மக்கள் சக்தியிடமோ மன்னிப்பே கிடைக்காது எனவும் அவர் கூறினார் . கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார் . மேலும் கூறுகையில் ;


 “ கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு அமைய , பிரதமரின் அறிவிப்பை செயற்படுத்த முடியும் . அதன் மூலம் முஸ்லிம் மக்கள் மாத்திரமின்றி ஏனைய மதத்தை பின்பற்றும் மக்களும் பயனடைய முடியும் . பிரதமர் பாராளுமன்றத்தில் கூறிய விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது . ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொருவர் கூறிக் கொண்டிருக்கும் கருத்துக்கள் இங்கு முக்கியமானவையல்ல . வைத்திய நிபுணர்கள் வழங்கிய பரிந்துரைகளை துரிதமாக செயற்படுத்துமாறு நாம் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கின்றோம் . கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாகக் கூறியமையினாலேயே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர் . கொரோனா சடலங்களை அடக்கம் செய்தல் மற்றும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்பன முற்றிலும் வேறுபட்ட விடயங்களாகும் . எனவே இவை இரண்டையும் இணைக்க முயற்சிக்க வேண்டாம் என்று முஸ்லிம் காங்கிஸுக்கு கூற விரும்புகின்றோம் . அரசியலமைப்பு திருத்தம் என்பது கொள்கை அடிப்படையில் தீர்மானம் எடுக்க வேண்டிய விடயமாகும் . நாட்டை சர்வாதிகார போக்குக்கு கொண்டு செல்வதே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தமாகும் . அதன் காரணமாகவே கொள்கை ரீதியில் அதனை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்த்தது . எனவே தற்போது வெவ்வேறு கருத்துக்களை கூறிக் கொண்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதால் பிரயோசனமில்லை . மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கி தற்போதும் எதிர்காலத்திலும் சர்வாதிகார தலைவரை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தாயிற்று . அதேவேளை 19 ஆவது திருத்தத்தின் மூலம் கிடைத்த ஜனநாயகத்தையும் அழித்து விட்டாயிற்று . எனவே இவர்களுக்கு மீண்டும் மன்னிப்பு கிடையாது . ஐக்கிய மக்கள் சக்தியிடமும் இவர்களுக்கு மன்னிப்பு கிடையாது . நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கிடையாது . எனவே இவ்வாறு பொய் கூறி அனைத்தையும் குழப்ப வேண்டாம் என்று கூறிக் கொள்கின்றோம் ” என்றார் . 

இந்திய BJPக்கு, இலங்கையில் கட்சி ஆரம்பிக்க முடியுமா?

 


இந்திய BJPக்கு, இலங்கையில் கட்சி ஆரம்பிக்க முடியுமா? – தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதில்


வேறொரு நாடொன்றிலுள்ள கட்சியொன்றை இலங்கையில் பதிவு செய்யவோ அல்லது தேர்தலில் போட்டியிடவோ இயலுமை கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிக்கின்றார்.


இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியை (BJP) இலங்கையில் ஸ்தாபிக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட கருத்து குறித்து பதில் வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


”இலங்கையில் அவர்களின் கிளையொன்றை ஸ்தாபித்து, தேர்தலில் போட்டியிடுவதற்கான இயலுமை கிடையாது. இலங்கையிலுள்ள கட்சியொன்று என்றால், இலங்கையிலுள்ள பிரஜையொருவரினால் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டு, 4 அல்லது 5 வருடங்கள் தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டும். அந்த பின்னர் தேர்தலில் போட்டியிட வேண்டும். அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்த கட்சிகளை மாத்திரமே பதிவு செய்ய முடியும். அவ்வாறான கட்சியை மாத்திரமே ஏற்றுக்கொள்ள முடியும். அவ்வாறின்றி, எவ்வாறான அதிகாரத்தை கொண்ட கட்சியாக இருந்தாலும், அதன் கிளையை இலங்கையில் ஆரம்பிக்க முடியாது” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதிலளித்துள்ளார்.


அதேபோன்று, பாரதீய ஜனதா கட்சி, இலங்கையிலுள்ள கட்சியொன்றுடனோ அல்லது கூட்டமைப்பொன்றுடனோ இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதா என வினவிய கேள்விக்கும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.


இலங்கை சட்டத்திற்கு அமைய, அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான இயலுமை கிடையாது என அவர் கூறியுள்ளார்.


..............


ஆனாலும் யாராவ‌து இல‌ங்கைய‌ர் பார‌தீய‌ ஜ‌ன‌தா க‌ட்சி என்ற‌ பெய‌ரில் க‌ட்சி ஆர‌ம்பிப்ப‌தை ச‌ட்ட‌ம் த‌டை செய்யாது. ஆக‌வே இது விட‌ய‌த்தில் முஸ்லிம்க‌ள் முந்திக்கொண்டு இப்பெய‌ரில் க‌ட்சி ஆர‌ம்பிப்ப‌து ந‌ல்ல‌து.

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசாங்கங்கள் தவறு விட்டிருக்கின்றன

 


#ஸ்ரீல.மு.கா தலைவர் அதியுயர் பீட கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் கூறியவை.

 

எங்களுடைய கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்திற்கு வாக்களித்தது சம்பந்தமாக உயர்பீடக் கூட்ட த்தில் விளக்கமளிப்பதற்காக குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் அழைத்திருந்தோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் சனிக்கிழமை (13) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

 

மேலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் கூறியதாவது,

 

பிரஸ்தாப  பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் தங்களது சுய விளக்கங்களை அளித்தார்கள். தங்களது பிரதேசங்களிலும் அதேநேரம் தங்களுக்கு வாக்களித்த மக்கள் சார்பாகவும் சில விடயங்களை அரசங்கத்தினூடாகச் செய்து கொள்வதற்கான தேவைப்பாடு இருக்கின்ற விவகாரங்களைச் சாதித்துக் கொள்ளவே அவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவர்கள் கூறினர். அதேநேரம், கடந்த காலங்களிலும் மாறி மாறி அரசாங்கங்களுக்கு ஆதரவளித்திருந்த போதிலும்  வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்  அரசாங்கங்கள் தவறு விட்டிருக்கின்றன அந்த வகையில் தாங்கள் செய்தது தவறல்ல என்ற தோரணையிலும் பதிலளித்திருந்தார்கள்.

 

இருந்த போதிலும் குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தில் முழு நாட்டிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களுடைய மன உணர்வுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலைமையில், இந்த ஜனாஸா எரிப்பு விவகாரத்திற்கு முடிவுகாணாமல் இருக்கின்ற விவகாரத்திலும் தாங்கள் அந்தக் கோரிக்கையை முன்னிருத்தித்தான் இந்த 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு வாக்களித்ததாகவும், இருந்தும் தாங்கள் அரசாங்கத்தினால்  ஏமாற்றப்பட்டு விட்டதாகவும், அது குறித்து தாங்கள் உயர்பீடத்திலும், மக்களிடத்திலும் மன்னிப்புக் கோர விரும்புவதாகவும்  உறுதிபடக் கூறினர்.

 

அந்த அடிப்படையில் அதை அவர்கள் பகிரங்கமாக   செய்தியாளர் மத்தியில் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொண்டு எடுக்கப்படுவதில்லை என்றும், தொடர்ந்தும் அவர்கள் அவ்வாறான சுய விளக்கத்தை மக்களிடத்தில் தாங்கள் விட்ட இந்த தவறுக்கான அந்த மன்னிப்பை கோருகின்ற சந்தர்ப்பத்தில், தொடர்ந்தும் கட்சியின் உறுப்பினர்களாக பயணிப்பதற்கான ஏற்பாட்டையும் ஒரே குழுவாக இருந்து இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுவதற்கான அந்த உறுதியையும் அவர்களிடத்திலிருந்து நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

 

கேள்வி: எதிர்காலத்தில் இந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எப்படியிருக்கும்,

 

பதில்: அவர்கள் எவ்வாறு எதிர்காத்தில் கட்சியோடு சேர்ந்து பயணிக்கப் போகின்றார்களா இல்லையா என்பதைப் பொறுத்துத்தான் அந்த நடவடிக்கைகள் இனி தீர்மானிக்கப்படும்.

 

கேள்வி: திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இராஜினாமா கடிதம் கையளித்ததாக அறியக்கிடைத்திருக்கின்றது அது சம்பந்தமாக உங்களது பதில்?

 

பதில்: இது சம்பந்தமாக தனது சுய விளக்கத்தை கொடுக்கின்ற போது கட்சிக்கு, தலைமைக்கு இது அபகீர்த்தியான விடயமாக வந்திருக்கின்றது என்பதை முன்னிட்டு தன்னுடைய உயர்பீடப் பதவியிலிருந்து சுயமாக விலகிக் கொள்கின்றேன் என்ற கடிதத்தை ஏற்கனவே என்னிடத்தில் தந்திருந்தார்.

 

கேள்வி: அந்த இராஜினாமா கடிதத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா?

 

பதில்: இந்த கூட்டத்தின் பிற்பாடு அது குறித்த தீர்மானத்தை நாங்கள் எடுக்கவில்லை. எல்லா உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து தலைமையோடு பயணிப்பது அவசியம் என்ற வலியுறுத்தலை உச்சபீட உறுப்பினர்கள் எல்லோரும் மிகத் தெளிவாக செய்திருக்கின்றார்கள். அதை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

எங்களை நாங்கள் பணயம் வைத்து 20 க்கு ஆதரவாக வாக்களித்தோம்.

 


பல பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய நிபந்தனைகளை முன்வைத்தே அரசுக்கு ஆதரவளித்தோம் : ஹரீஸ் எம்.பி


மாளிகைக்காடு நிருபர் நூருள் ஹுதா உமர். 


மக்களின் உணர்வுகளை அறிந்தே எங்களை நாங்கள் பணயம் வைத்து 20 க்கு ஆதரவாக வாக்களித்தோம். பாராளுமன்றதிற்கு உள்ளும், வெளியிலும் கடுமையான முறையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதேநேரம் இவ் அரசின் சலுகை, பதவி, பட்டங்களுக்கு எப்போதும் சோரம் போகவில்லை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதுடன் நாங்கள் அரசின் அங்கத்தவர்களாக ஒருபோதும் மாறவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமன எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். 


மு.கா தலைமையகமான தாருஷலாமில் நேற்று இரவு நடைபெற்ற உயர்பீட கூட்டத்தை தொடர்ந்து  ஊடகவியலாளர்களுக்கு    பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 


அரசின் முக்கிய தலைவர்கள் 20 ம் திருத்த சட்டமூல வாக்கெடுப்புக்கு முன்னர் எங்களை அணுகி எங்களிடன் ஆதரவு கேட்டபோது ஜனாஸா நல்லடக்க விடயம் முதல் நாட்டில் உள்ள முஸ்லிங்களின் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளையும் அரசின் முக்கியஸ்தர்களுடன் நன்றாக விளக்கி அவர்களிடமிருந்து உறுதியான வாக்குறுதியை பெற்ற பின்னரே 20 க்கு ஆதரவாக நாங்கள் வாக்களித்தோம். ஜனாஸா விவகாரம், தனியார் சட்டங்கள், பிராந்திய ரீதியான பிரச்சினைகள் அடங்கலாக பல பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய நிபந்தனைகளை முன்வைத்தே அரசுக்கு ஆதரவளித்தோம். அவர்களும் எங்களுக்கு நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதியளித்தனர். இவற்றை ஊடக வெளிச்சத்தின் முன்னிலையில் கொண்டுவந்தால் கடும்போக்குவாத சக்திகள் குழப்பிவிடுவார்கள் என்பதனாலையே நாங்கள் மௌனமாக இருந்தோம். 


நாங்கள் 20 ம் திருத்தத்தை ஆதரித்து இரு வாரங்களின் பின்னர் ஜனாதிபதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை எமது ஜனாஸாக்களை உலர் பிரதேசமான மன்னாரில் அடக்கம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த விடயம் ஊடகங்களின் வாயிலாக வெளிவந்தவுடன் பௌத்த பிக்குகளும், சில இனவாதிகளும் அரசை எதிர்த்து முரண்பட்டதால் அவ்விடயம் நிறுத்தப்பட்டது. அதன் பின்பும் முஸ்லிம் எம்.பிக்காளான நாங்கள் சளைக்காமல் இரண்டு மாதங்களாக முயற்சித்து பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் வைத்தியர் ஜெனிபர் பெரேராவின் தலைமையில் நிபுணர் குழு நியமிக்கப்பட்டது. அந்த குழு நியமிக்கப்பட்டு இரு வாரங்களின் பின்னர் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பரிந்துரையையே சிபாரிசு செய்தது. இந்த குழுவின் அறிக்கையையும் அமுல்படுத்த விடாமல் சில சக்திகள் தடுத்தது எங்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றமாக இருந்தது. 


எங்களின் முயற்சியை கைவிடாது தொடர்ந்தும் பிரதமரை சந்தித்து இன்னும் காலத்தை இழுத்தடிக்காது உடனடியாக ஜனாஸா விடயத்தில் தீர்வைப் பெற்றுத்தருமாறு கேட்டோம். அதைத்தொடந்து வந்த கடந்த வார பாராளுமன்ற அமர்விலும் கூட பகிரங்கமாக பிரதமர் சபையில் வைத்தே அனுமதிக்க ப்படும் என்று அறிவித்தார். அப்போது சபையில் இருந்த நான் அவருக்கு நன்றி தெரிவித்த போது அதை அவர் அமோதித்தார். இருந்தும் சில மொட்டு சார்ந்த எம்.பிக்கள் ஜனாஸா அடக்க அனுமதிக்கபடமாட்டது  என்று மக்களை குழப்பி வருகின்றனர். இதுவும் எங்களுக்கு பலத்த ஏமாற்றம் அளிக்கிறது.


அரசாங்கம் தந்த வாக்குறுதியினை நிறைவேற்றாமல் தொடர்ந்தும் ஏமாற்றுகிறது என்பதை இங்கு வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

இன்னும் காலமேடுத்து எங்களை ஏமாற்றாமல் ஜனாஸா அடக்க உடனடியாக  அனுமதிக்குமாறு அரசை கேட்டுக்கொள்வதுடன். மக்களின் உணர்வுகளை அறிந்தே எங்களை நாங்கள் பணயம் வைத்து 20 க்கு ஆதரவாக வாக்களித்தோம். இருந்தும் இவ் விடயம் நிறைவேறா சூழ் நிலையில் இவ்விடயத்துக்காக பாராளுமன்றதிற்கு உள்ளும், வெளியிலும் கடுமையான முறையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதேநேரம் இவ் அரசின் சலுகை, பதவி, பட்டங்களுக்கு எப்போதும் சோரம் போகவில்லை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதுடன் நாங்கள் அரசின் அங்கத்தவர்களாக ஒருபோதும் மாறவில்லை என்பதுடன் எதிரணியில் இருந்து கொண்டு தொடர்ந்தும் சமூக அடக்கு முறைக்கு எதிராக போராடுவோம் என்றார்.

முஸ்லிம் திருமண‌ சட்டத்தை மாத்திரம் நீக்குவதன்றி , அனைத்து தனியார் சட்டங்களும் நீக்கப்பட வேண்டும்.

'ஒரே நாடு ஒரே சட்டம் ' என்ற கோட்பாடு செயல்படுத்தப்பட வேண்டுமாயின் , முஸ்லிம் சட்டத்தை மாத்திரம் நீக்குவதன்றி , அனைத்து தனியார் சட்டங்களும் நீக்கப்படுவதன் மூலமே மேற்கொள்ள முடியமென , நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார் . 


பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரால் முன்வைக்கப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு நேற்று ( 12 ) பாராளுமன்றத்தில் பதிலளித்த அவர் இதனைத் கூறினார் . அவர் இதன் போது பதிலளிக்கையில் , இலங்கையில் ' ஒரே நாடு ஒரே சட்டம் ' என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதா என , ரத்தன தேரர் கேள்வியெழுப்பியுள்ளார் . அதாவது ஒரே நாடு ஒரே சட்டம் என்பதன் பொருளானது "சட்டம் அனைவருக்கும் சமமானதாகும் . அனைத்து இடங்களிலும் அது ஒரே வகையில் செயற்படுத்தப்பட வேண்டும்," என்பதாகும் . 


அவர் மற்றுமொரு கேள்வியை எழுப்பியிருந்தார் , இலங்கையில் தனியார் சட்டங்கள் நடைமுறையில் உள்ளது பற்றி நீங்கள் அறிவீர்களா என்று , இலங்கையில் ப‌ல‌ தனியார் சட்டங்கள் செயற்பாட்டிலுள்ளன . உதாரணமாக , கண்டி திருமண - விவாகரத்து சட்டம் , யாழ்ப்பாண விவாக விவாகரத்து சட்டம் மற்றும் தேச வழமை சட்டம் , முஸ்லிம் விவாகச் சட்டம் , பௌத்த கிராமங்கள் , விகாரைகள் சட்டம் , இந்து கலாசார சட்டம் , முஸ்லிம் வக்ஃப் சட்டம் , சேர்ச் ஒப் சிலோன் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் இலங்கையில் தனியார் சட்டங்களாக அமுலிலுள்ளன . இலங்கையில் மாத்திரமல்ல இந்தியா , பிலிப்பைன்ஸ் , இஸ்ரேல் , சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் முஸ்லிம் பிரஜைகளுக்கு முஸ்லிம் சட்டம் அமுலில் உள்ளன .


 எதிர்வரும் காலத்தில் இதனை மாற்றி , பொதுவாக ' ஒரே நாடு ஒரே சட்டம் ' என்பதற்கு அமைய அனைவருக்கும் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் , முஸ்லிம் சட்டத்தை மாத்திரம் நீக்குவதன் மூலம் மேற்கொள்ள முடியாது . அவ்வாறாயின் அனைத்து தனியார் சட்டங்களும் நீக்கப்பட வேண்டும் . அவ்வாறில்லாமல் இதனை பிரச்சினையாக மாற்றி , அங்கும் இங்கும் பேசிக்கொண்டு , இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவது பொருத்தமானதல்ல.


 அத்துடன் முஸ்லிம் தனியார் சட்டம் குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றதா என‌ அவர் கேள்வி எழுப்பியிருந்தார் .  அவ்வாறு இல்லை சபாநாயகர் அவர்களே .


1806ஆம் ஆண்டில் , ' மொஹமட் அன் கோர்ட் ' எனும் பெயரில் ஆங்கிலேயர்களால் , முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்லிம்களுக்கும் , யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டம் , கண்டியில் கண்டி தனியார் விவாக விவாகரத்து சட்டம் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டன . காலப்போக்கில் ஒரு சில திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன . அவை முஸ்லிம் சட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் இளம் சிறுவர்கள் பலவந்தமாக திருமணம் முடித்துவைப்பதாக அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார் . அது தவறான கருத்தாகும் . அது பிரயோக ரீதியில் மேற்கொள்ளப்படுவதில்லை . பெண்ணின் விருப்பத்தை பெற்று , தந்தை கையொப்பமிடுகிறார் . அதில் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் செய்யலாம் . அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க முடியும் .


 பல்வேறு நாடுகளில் பெண்களின் , சிறுவர்களின் திருமண வயது தொடர்பில் பல்வேறு வயது வேறுபாடுகள் காணப்படுகின்றன . அமெரிக்காவின் ஒரு சில பிராந்தியங்களில் தற்போது வரை 13 வயதாக காணப்படுகின்றது . ஜப்பானின் ஒரு சில பிராந்தியங்களில் 15 வயதாக அது காணப்படுகின்றது . இலங்கையில் 1995 ஆம் ஆண்டு வரை கண்டி சட்டத்தில் பெண்களின் திருமண வயது 16 ஆக காணப்பட்டது . முஸ்லிம் சட்டத்தின் பிரகாரம் 12 வயதை நிறைவடைந்த ஒரு பெண் , பருவ வயதை அடைந்த பின்னர் , அவரது விருப்பத்தின் பிரகாரம் திருணம் செய்து வைக்க முடியும் . ஆயினும் அதனை மாற்றுவதற்கான காலம் எழுந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம் . அதற்கமைய நாம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் . ஆயினும் கண்டி விவாக விவாகரத்து ஆயினும் கண்டி விவாக விவாகரத்து சட்டத்தின் 8 முதல் 15 வரையான பிரிவு மற்றும் வழமையான திருமண சட்டத்தின் 22 ஆம் பிரிவு ஆகியவற்றை வாசிப்பதன் மூலம் பெற்றோரின் சம்மதத்துடன் வயதுக்கு குறைந்தவர்களையும் திருமணம் செய்து வைக்க முடியும். எனவே முஸ்லிம் சட்டத்தின் மாத்திரமன்றி இது இங்கும் இவ்வாறு காணப்படுகின்றது . 


ஆயினும் கண்டி தனியார் சட்டம் 1997 ஆம் ஆண்டு 18 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்னரே இது மாற்றியமைக்கப்பட்டது . ஆயினும் சட்டப்படி கண்டி தனியார் சட்டம் மாற்றி அமைக்கப்படவில்லை என்பதுட‌ன் பொதுவான திருமண சட்டமும் சட்டமும் மாற்றி அமைக்கப்படவில்லை என்பதோடு , திருமண பதிவு சட்டம் மாத்திரமே திருத்தி அமைக்கப்பட்டிருந்தது . இதன் காரணமாக , 2002 ஆம் ஆண்டில் நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு ஒன்றை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது . அதாவது திருமண வயதெல்லை 18 ஏற்பட்டது . அதாவது திருமண வயதெல்லை 18 வயதாக பொதுவான சட்டத்தின் கீழ் காணப்படுகின்றமையால் , பெற்றோரின் சம்மதத்திற்கு உட்பட்டதாக இருந்தபோதிலும் 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என அத்தீர்ப்பு வழங்கப்பட்டது .  தற்போது சவுதி அரேபியாவிலும் திருமணத்திற்கான வயதெல்லை 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது . எனவே அது தொடர்பில் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்பதனை நான் இந்த அவைக்கு கூற விரும்புகின்றேன் . 


இந்த அனைத்து சட்டங்களும் ஒரேயடியாக உருவாகவில்லை என்பதோடு , காலத்துக்கு காலம் தேவைக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளன .


 1938 வரை , ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யும் முறையும்  காணப்பட்டிருந்தது . அது காலத்துடன் மாற்றியமைக்கப்பட்டது .   எனவே இவ்வாறு ஒரு குறிப்பிட்ட மதத்தையோ இனத்தையோ குறி வைத்து அதன் தலைவர்களை குறி வைத்து சாடுவது தொடர்பாக எமக்கு உடன்பாடு இல்லை . அதற்கமையவே 2020 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி நான் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தேன் . அதில் நாட்டின் ஏனைய இன பெண்களைப் போன்று முஸ்லிம் பெண்களுக்கும் திருமணம் செய்வதற்கான மிகக்குறைந்த வயது 18 ஆக இருக்க வேண்டும் என நாம் யோசனை முன் வைத்துள்ளோம் . அது மாத்திரமன்றி பெண்கள் காதி நீதிபதிகளாக செயற்படுதல் , திருமணத்தின் போது பெண்களும் கையொப்பம் இடுதல் உள்ளிட்ட யோசனைகளையும் முன் வைத்த‌தோடு இது தொடர்பில்  குழுவொன்றை நியமித்துள்ளோம் . 


நாம் இது தொடர்பில் படிப்படியாக செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளோம் . நிச்சயமாக அது தொடர்பில் திருத்தங்களை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுப்போம் . இவ்விடயம் தொடர்பில் தனியான ஆலோசனைக் குழு ஒன்றையும் நான் நியமித்துள்ளேன் . அவர்களின் தகவல்களின் படி , சமூகத்தின் மீது இதனை திணிக்காமல் அவர்களது அனுமதியைப் பெற்று செயற்பட வேண்டும் என்று , நான் அதனை மேற்கொள்ள முடியும் என்று மிக உறுதியுடன் நம்புகிறேன் . 


அவர் அதற்கு அடுத்தபடியாக , குறைந்த வயதில் திருமணம் முடிப்பதன் மூலம் பிரச்சினைகள் இருக்கின்றது என்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா ? என்று அவர் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார் . ஆம் . நான் அதனை ஏற்றுக் கொள்கிறேன் .   சிறு வயதில் திருமணம் முடிப்பது சிறந்ததல்ல . 18 வயதுக்குப் பின்னர்தான் அவர்களால் அதனை சமாளிக்க முடியும் . 18 வயதுக்கு குறைந்தவர்கள் திருமணம் முடிக்க கூடாது எனும் நிலைப்பாட்டை , நான் ஒரு கொள்கையாக கொண்டுள்ளேன் . 


ஆயினும் இலங்கையில் குறைந்த வயதில் திருமணம் முடிப்பது எவ்வாறாக இருந்த போதிலும் , குறைந்த வயதில் பெண்கள் தாய்மை அடைகின்றனர் . அதில் 80 வீதத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம் சமூகத்திற்கு வெளியிலேயே காணப்படுகின்றனர் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் . திருமண பதிவு மேற்கொள்ளாத போதிலும் அச்சிறுவர்கள் தாயாகியுள்ளனர் . எனவே நாம் அது தொடர்பிலும் அவதானம் செலுத்தி நடவடிக்கைகளை எடுத்து அதனை தீர்க்கவுள்ளோம் என‌ அறிவிக்க விரும்புகின்றேன் . 


 எனவே , முஸ்லிம் சட்டத்தை மறுசீரமைக்க  வேண்டுமென அரசாங்கம் நினைக்குமாயின் , அது தொடர்பில் செயற்பட்டு , அதனை புதிய அரசியலமைப்பின் மூலம் அதனை எம்மால் மேற்கொள்ள முடியுமென நான் நம்புகிறேன் . எனவே சபாநாயகர் அவர்களே , இது தொடர்பில் ஏற்கனவே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு , எதிர்காலத்தில் அதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்பதனை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் . 

12.2.2021

Wimal out?

 


அரசிலிருந்து வெளியேறுகிறாரா விமல் ? அவரது இல்லத்தில் அவசர கூட்டம்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமைத்துவம் தொடர்பில் கருத்து வெளியிட்டு சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துவிட்டு அரசை விட்டு வெளியேற தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.


சற்றுமுன் அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த கலந்துரையாடலில் 12 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற விமல் வீரவன்சவின் வீட்டிற்கு செல்லும் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் உதய கம்மன்பில, நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கே இன்று கட்சித் தலைவர்கள் கூடியுள்ளதாகவும் இந்த அரசு ஆட்சிக்கு வர விமலின் பங்களிப்பு இருந்ததை செய்ந்நன்றி உடைய எவரும் மறந்துவிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் தனியார் சட்டத்தை ஒழிக்க‌ முற்ப‌டும் ர‌த‌ன‌ தேர‌ரின் முய‌ற்சிக்கு ர‌வூப் ஹ‌க்கீம் ஆத‌ர‌வு.


முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் அடங்கிய பரிந்துரை நீதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது . அதனை உடனடியாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் . அதேபோன்று ஏனைய தனியார் சட்டங்களில் இருக்கும் குறைபாடுகள் தொடர்பாகவும் ஆராய வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர், முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ரவூப் ஹக்கீம்  தெரிவித்தார்.   பாராளுமன்றத்தில் இன்று அத்துரலிய ரத்ன தேரரினால் முன்வைக்கப்பட்ட முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான கருத்துக்கு தன‌து நிலைப்பாட்டை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார் . முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கையில் , தனியார் சட்டங்கள் பல எமது நாட்டில் செயற்பட்டு வருகின்றன . குறிப்பாக முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் , அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக தொடர்பாக என‌து கால‌த்தில் குழுவொன்று நியமிக்கப்பட்டு , குழுவின் பரிந்துரை நீதி அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது . அது தற்போது பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்க ஏற்பாடாகி இருப்பது யாரும் அறிந்த விடயம் . அத்துடன் முஸ்லிம் தனியார் சட்டத்தில் பெண்களுக்கு அநீதி ஏற்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அது தொடர்பாக ஆராய்ந்து , நாட்டின் பொதுவான சட்டத்துக்கு திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் இணக்கம் தெரிவித்திருக்கின்றோம் .  அதனால் நீதி அமைச்சுக்கு நாங்கள் சமர்ப்பித்திருக்கும் திருத்தங்கள் அடங்கிய பரிந்துரைகளை உடனடியாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார் ஹ‌க்கீம்.


இதே வேளை முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் உல‌மா ச‌பையின் முடிவு இன்றி எத்த‌கைய‌ திருத்த‌மும் கொண்டு வ‌ர‌ அனும‌திக்க‌ முடியாது என‌ ர‌வூப் ஹ‌க்கீம் நீதி அமைச்ச‌ராக‌ இருந்த‌ கால‌த்தில் இருந்தே உல‌மா க‌ட்சி சொல்லி வ‌ருகிற‌து. அத்துட‌ன் திருத்த‌த்துக்கு முய‌ற்சிப்ப‌து அத‌னை இல்லாதொழிக்க‌ வ‌ழி செய்யும் என்றும் எச்ச‌ரிக்கை செய்து வ‌ந்துள்ள‌து. 


 

ஷுக்ரா போன்ற பிள்ளைகளையே முஸ்லிம் சமூகத்திடம் இந்நாடு கேட்கிறது - ஞானசார தேரர்ஷுக்ரா போன்ற பிள்ளைகளையே முஸ்லிம் சமூகத்திடம் இந்நாடு கேட்கிறது
 - ஞானசார தேரர்

( மினுவாங்கொடை நிருபர் )

   தனியார் தொலைக்காட்சி சேவையான "சிரச" தொலைக்காட்சியில்,  இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 20 இலட்சங்களை வென்ற, காலி - கட்டுகொட  பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவி ஷுக்ரா முனவ்வரை, பலரும் சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். 
   இந்நிலையில், (06) சனிக்கிழமையன்று, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ஷுக்ராவின் வீடு தேடிச் சென்று தனது  வாழ்த்துக்களைத்  தெரிவித்திருக்கிறார்.
   அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கும்போது, 
   "ஷுக்ரா போன்ற பிள்ளைகளை இந்த நாடு, முஸ்லிம் சமூகத்திடம் கேட்கிறது.
   அத்துடன், தீவிரவாத குழுக்களின் தீவிரவாத கருத்துக்கள், இப்பகுதியில் பரவாமல் தடுப்பதற்கு, பாரம்பரிய முஸ்லிம்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தாம் என்றென்றும்  ஒத்துழைப்பு நல்குவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
   இதன்போது  ஞானசார தேரர்,  ஷுக்ரா முனவ்வருக்கு, சில அன்பளிப்புப் பொருட்களையும்  வழங்கி, அவரை மகிழ வைத்தார்.

( ஐ. ஏ. காதிர் கான் )


சம்பிக்க எழுதிய புத்தகத்தில் இருந்து

  


இலங்கை 2090 இல் முஸ்லிம் நாடாகும் – தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஜிஹாதிய தொட்டில்


 


இலங்கை 2090 இல் முஸ்லிம் நாடாகும் - தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஜிஹாதிய தொட்டில்புலிகளும் முஸ்லிம் பயங்கரவாதிகளும் –


* 2090 இல் இலங்கை முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட நாடாக மாறும்.


* தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முஸ்லிம் அடிப்படைவாதத்தின் தொட்டிலாகும்.


* முஹம்மத் பின் காஸிம் இந்தியா வந்தவேளை, நாளாந்தா பௌத்த பல்கலைக் கழகத்தை தீயிட்டுக் கொழுத்தி, 5,000பிக்குகளை கொன்றான்.


* மலேசியா, இந்தோனேஷியாவில் வாழ்ந்த பௌத்தர்கள் இஸ்லாத்தை தழுவ பண ஆசையும் காமவெறியுமே காரணம்.


* புலிகளுக்கும் சர்வதேச முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.


* எம்.எச்.முஹம்மத், ஹாபிஸ் நஸீர் அஹ்மத், பாகீர் மாகார், ஏ.ஸீ.எஸ் ஹமீட், ஹகீம், அஷ்ரப் ஆகியோர் முஸ்லிம் அடிப்படைவாதிகளாவர்.


* இஸ்ரேல் நலன் காக்கும் பிரிவை இலங்கையிலிருந்து துரத்திய பிரேமதாச முஸ்லிம் அடிப்படைவாதிகளது சதியில்சிக்கியவராவார்.


* வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம் அகதிகள் புத்தளத்திலும் கல்பிட்டியிலுமுள்ள சிங்களவர்களது சொத்துக்களைப் பிடித்துக் கொண்டார்கள்.


* இலங்கையிலுள்ள மத்ரஸாக்களில் முஸ்லிம் அடிப்படைவாதம் போதிக்கப்படுகிறது.


மேற்குறிப்பிடப்பட்டவை சம்பிக ரணவகவின் கருத்துக்களாகும்.


423461_220155898083115_1665092443_n


ஜாதிக ஹெல உருமயவின் சிரேஷ்ட உறுப்பினரும் தற்போதைய பொதுஜன ஐக்கிய முன்னணியின் அமைச்சருமான பாடலீ சம்பிக ரணவக்க எழுதியுள்ள “அல்கைதா அல்ஜிஹாத்’ என்ற தனது நூலில் மேலுள்ள கருத்துக்களை வெளியிட்டுள்ளார். (அல்ஜிஹாத் அல்கைதா இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கடந்த காலம், தற்காலம், எதிர்காலம் பாட்டலி சம்பிக ரணவக) மேற்படி நூலிலிருந்து பெறப்பட்ட முக்கிய கருத்துக்களை பக்கங்களுடன் அவரது வார்த்தைகளிலேயே வரிக்கு வரி அப்படியே மொழிபெயர்த்துத் தருகிறோம். அவர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றி எவ்வளவு மோசமான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார் என்பதை இதிலிருந்து புரியலாம். அவர் துவேஷம், பொறாமை, வைராக்கியம் , வெறி என்பனவற்றை கக்குகிறார்.


அல்கைதா அல்ஜிஹாத் என்ற நூலின் பிரதானமான கருத்துக்கள் வருமாறு;


சர்வதேச முஸ்லிம் அடிப்படைவாதம்


உலகில் பல பௌத்த நாடுகளின் வரலாறு அழிந்து போனதற்கு முஸ்லிம் அடிப்படைவாதத்தின் ஆக்கிரமிப்பு தான் காரணமாகும். ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வரையிலும் இதுதான் பகிரங்க உண்மையாகும். இப்போதுள்ள ஈரான், ஈராக்,மக்கா மற்றும் அதனைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஒரு காலத்தில் பௌத்த வழிபாடுகள் நடந்துள்ளன. (முகவுரையில்)


தற்போது முழு உலகத்திலும் இஸ்லாத்தின் பரவலுக்கும் அடிப்படைவாதத்துக்கும் பணம் கொடுக்கும் நாடாக சவூதி அரேபியா மாறியிருக்கிறது. இஸ்லாமிய அடிப்படை வாதம் உலகம் பூராவும் பரவுவதற்கும், ஷரீஆ சட்டத்தை பரப்புவதற்கும் ஈரானும் அடிப்படையாக அமைந்திருக்கிறது. இலங்கையின் அடிப்படைவாதக் குழுக்க ளுக்கு பண மற்றும் யுத்த உதவிகளைச் செய்யும் நாடாக ஈரானைக் காணலாம். அல்ஜீரியா, மொரோக்கோ, சிரியா, ஜோர்தான், லெபனான் மற்றும் வளைகுடா நாடுகளிலும் அடிப்படைவாதம் பரவியிருக்கிறது. (பக்:78)


கடாபி இலங்கை வந்தவேளை முஸ்லிம்கள் அவருக்காக ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும் போது தனது பேரப்பிள்ளை இலங்கைக்கு வரும் போது இலங்கையை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கு சகலரும் திடசங்கற்பம் பூணவேண்டும் என்று கூறினார். கடாபி மனதால் இஸ்லாமிய அடிப்படைவாதிதான். இலங்கையிலுள்ள சில முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் அமெரிக்காவை போலியாக எதிர்ப்ப வர் களுக்கும் அவர் அடிப்படையான பல உதவிகளைச் செய்வது இரகசியமல்ல. சதாம் ஹுஸைன் மேற்குலக எதிரிகளுக்கும் இலங்கையிலுள்ள முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத கட்சிகளுக்கும் பண ரீதியான மற்றும் ஆயுத ரீதியான பல உதவிகளைச் செய்திருக்கிறார். (பக்:111, 116)


“இஹ்வானுல் முஸ்லிமூன்’ இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் சவூதி அரேபியாவின் ஸலபீக்களும் அடிப்படைவாதிகளாவர். இவர்கள் தான் உஸாமா பின்லாடினை உருவாக்கினார்கள். சவுதி அரேபியாவுக்குள் அல்காயிதாவுக்கு பெருமளவு பணம் திரட்டப்படுகிறது. இதற்காக IIRO, ISCAG, IWWWM போன்ற நிறுவனங்கள் பயன்படுத் தப்படுகின்றன. உலகெங்கும் பள்ளிவாசல் களை, மத்ரஸாக்களை, பாடசாலைகளைக் கட்டுவதற்கும் சேமநலத் திட்டங்களை மேற்கொள்வதற்கும் சவூதி அதிக பணத்தை வழங்குகின்றது. இலங்கையிலும் இது இப்படித்தான் நடக்கின்றது. அந்தவகையில், பயங்கரவாதத்தின் ஆணி வேராக சவூதியின் ரியால்தான் இருக்கிறது. (பக்:228)


இந்தியாவுக்கு வந்த முஹம்மத் பின் காஸிம், காஷ்மீரின் பௌத்த அரசை தாக்கினான். உலகின் மிகப் பெரிய பௌத்த பல்கலைக்கழகமாக இருந்த நாலந்தாவுக்கு தீயிட்டுக் கொழுத்தி 5000 பிக்குகளைக் கொன்று குவித்தான். பிக்குகள் உணவருந்திக் கொண்டிருந்த வேளையில் தான் காஸிம் நாலந்தாவுக்குள் நுழைந்தான். அந்தப் பிக்குகள் எந்த எதிர்நடவடிக்கையிலும் ஈடுபடாததினால் இந்தக் கொலையையும் தீயிடலையும் அவனால் செய்ய முடிந்தது. தெய்வத்தில்,வாழ்க்கைக்கோர் குறிக்கோளில் நம்பிக்கை வைக்காத பௌத்தர்கள் பிசாசுகளைப் போன்று அவனுக்குத் தென்பட் டார்கள். பௌத்தர்கள் தமது அரசை ஆயுத பலத்தால் ஆளவில்லை. எனவே, பௌத்த சாம்ராஜ்யத்தின் வடமேல் பகுதி சரிந்து விழுந்தது. பௌத்த ராஜ்யத்தின் சிதைவுகளின் மீது கட்டி யெழுப்பப்பட்ட இஸ்லாமிய அரசு கி.பி 808 வரை இந்தியா வின் சிந்துப் பிரதேசத்தில் நிலைத்தது. (பக்:52)


மலேசியா மிகவேகமாக முஸ்லிம் அடிப் படைவாதத்துக்கு உள்ளாகிவருகிறது. இந்தோனேசியாவிலிருந்த கோத்திரங்களது தலைவர்களுக்கு அரேபிய வியாபாரிகள் பணம் (சந்தோஷம்) கொடுத்துத்தான். இஸ்லாத்தைப் பரப்பியிருக்கிறார்கள். தற்காலத்தில் அங்கு அதிதீவிரவாதிகளது கட்சியானது ஷரீஆ சட்டத்தை நடைமுறைப் படுத்தும்படி ஆர்ப்பாட்டம் செய்து தேர்தல்களில் கூட முன்னணி வகிக்கிறது. உலகி லேயே அதிக எண்ணிக்கையிலான அங்கத்தவர்களைக் கொண்ட முஸ்லிம் அடிப்படை வாதக் கட்சி இந்தோனேசியாவிலேயே உள்ளது. (பக்:120)


மலாயா, சுமாத்தரா, ஜாவா ஆகிய தீவுக ளும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளும் ஏற்கனவே பௌத்த இராஜ்யங்களாக இருந்தன. அப்பகுதிகளுக்கு அரபு வர்த்தகர்கள் வந்தார்கள். அப்பிரதேசங்களி லிருந்த கோத்திரத் தலைவர்கள், பிராந்திய ஆட்சியா ளர்கள், இராஜாக்கள், இளவரசர்கள் ஆகி யோருடன் வியாபார தொடர்புகளை வைத்து வியாபாரப் பண்டங்க ளைக் கொடுத்து அவர்களை வசீகரித்தார்கள். சிலருக்கு அரபிகளது வியாபார மற்றும் காம கலாசாரத்துள் இணை வதற்கு பாரம்பரிய பௌத்த மதம் தடையாக இருந்தது. உதாரணமாக மலாயாவின் அரசன் (1400ஆம் வருடம்) பல மனைவியரை வைத்துக் கொண்டு காம சுகம்பெற பௌத்த மதம் தடையாக இருந்ததால் அவன் இஸ்லாத்திற்குச் சென்றான். இஸ்லாம் அப்பகுதிகளில் அப்படித்தான் பரவியது. (பக்:55)


முஸ்லிம்கள் தமக்கிடையிலுள்ள பிரிவுகளை மறந்து ஐக்கியப்பட்டு ஒரே சர்வதேச சமூகமாக மாற வேண்டும் என ஆப்கானி விரும்பினார். அவருக்கு 100 வருடங்க ளுக்குப் பிறகு அவரது கருத்தை உஸாமா பின் லாதின் நடைமுறைப்படுத்துகிறார். ஆப்கானியைப் போலவே முஹம்மத் அப்துஹவும் முக்கியமானவராக இருக் கிறார். ஸெய்யித் குத்ப், முஹம்மத் குத்ப் போன்றவர்களும் எகிப்திலே மேற்குலகுக்கெதிரான அடிப்படைவாதத்தை போதித்திருக் கிறார்கள். (பக்:65)


புலிகளும் முஸ்லிம் பயங்கரவாதிகளும்


தமிழ் பிரிவினை வாதத்தை தோற்க டிக்க முஸ்லிம் அடிப்ப டைவாதிகள் சிங்களவர்களுடன் ஒத்துழைக்கவில்லை. இது அவர்களது தந்திரமாகும். சிதைந்துபோன நாட்டில் கிழக்கு மாகாணத்தில் நஸரிஸ்தானையும் சபிஸ்தானையும் (கிழக்கில் தனியான முஸ்லிம் ஆட்சியை) உருவாக்குவதே இவர்களது நோக்கமாகும். (முகவுரையில்)


அல்கைதாவுக்கும் புலிகளுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. புலிகளுக்கு பிலிப்பைன்ஸிலுள்ள மேரோ முஸ்லிம் விடுதலை இராணுவத்துடன் தொடர்பிருக் கிறது. புலிகள் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று அல்காயிதாவிடம் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பிலிப்பைன்ஸின் முஸ்லிம் கெரில்லாக் களுக்கும் தமிழ் நாட்டிலுள்ள அல்உம்மா எனப்படும் குழுவினருக்கும் புலிகள் ஆயுதப் பயிற்சியளித் திருக்கிறார்கள். புலிகள் அல்கைதாவின் ஆயுதங்களை கடல் மார்க்க மாக இடத்துக்கிடம் நகர்த்துவதற்கு உதவி செய்திருக்கிறார்கள். கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தை தாக்க வந்த புலிகள் அல் கைதாவிடம் பயிற்சி எடுத்தவர்கள் தான். (பக்:248,249)


அஷ்ரப், சேகு இஸ்ஸதீன், ஒஸ்மான் ஆகியோர் உருவாக்கிய முஸ்லிம் அடிப் படைவாதத்துக் கெதிராக நான் போர் தொடுக்க முனைந்த மைக்கு அவர்கள் தீகவாபியை திட்ட மிட்டு அழித்ததுதான் காரணமாகும். (முகவுரையில்)


2003ஆம் ஆண்டு முஸ்லிம்கள் “அல் லாஹு அக்பர்’ என கோஷமிட்டு ஒலுவில் பிரகடனத்தை செய்தார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் நெருப்புப் பந்தமாக மாறியிருக்கும் தென் கிழக்குப் பல்கலைக் கழகம் தான் அதற்குத் தலைமை வகித்தது. அதன் மூலம் முஸ்லிம் கள் இந்நாட்டின் தனியான சாதியினர் என்றும் அவர்களுக்கு வரலாற்று ரீதியான பூர்வீக பூமியிருப்பதாகவும் அங்கு அவர்களுக்கு சுயாதிபத்தியமிக்க அதிகாரம் வேண்டுமென்றும் பிரகடனம் செய்யப்பட்டது. இது எத்தனை உயிர்களது அழிவில் முடியுமோ தெரியாது. (பக்:252)


1976இல் வட்டுக்கோட்டையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஒரு கருத்தரங்கை நடாத்தி சுதந்திரமான தமிழீழத்தைப் பிரகடனம் செய்தார்கள். அதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கோசமெழுப்பி ஆசீர்வதித் தார்கள். இதன் பின்னர் தான் 46000 பேரின் மரணத்திற்குக் காரணமான புலிகளது பிரிவி னைவாத யுத்தம் வெடித்தது. இதுபோன்று தான் ஒலுவில் பிரகடனத்தையும் நாம் பார்க்கிறோம். (பக்:253)


வரலாறு இல்லாத முஸ்லிம்கள்


இலங்கை அரசின் பணத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் கலாசார திணைக்களத் தினால் நடாத்தப்படும் மீலாத் விழாக்களில் வெளியிடப்படும் நூற்களில் இலங்கை முஸ்லிம்களது வரலாறு கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென நிறுவப்பார்க்கி றார்கள். இது பொய்யான கருத்தாகும். ஆனால், முஸ்லிம் வியாபாரிகளுக்கும் இலங்கைக்குமான தொடர்பு 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தான் ஓரளவு ஏற்பட்டது. அதற்கு முன்னரான முஸ்லிம் களது வரலாறு பற்றிக்கூறப்படும் கதைகள் மத அடிப்படைவாதிகளது வதந்திகளாகும். அதற்கு மார்க்கத்திலுள்ள குருட்டு நம்பிக்கை தான் காரணமாகும். இதற்கு புதைபொருளா ராய்ச்சி ஆதாரங்கள் எதுவும் இல்லை. கி.பி.


16ஆம் நூற்றாண்டிலிருந்து தான் இலங்கை யில் இஸ்லாம் பரவியிருக்கின்றது. அது 19ஆம் நூற்றாண்டில்தான் ஸ்திரமாகப் பரவியதென முடிவு செய்ய முடியும். (பக்:256)


முஸ்லிம்களின் சுயநலமும் துரோகமும்


இலங்கையில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபடும் 21 பேரில் 17 பேர் இலங்கை முஸ்லிம்களாவர். (பக்:92)


போர்த்துக்கேயரது காலத்தில் முஸ்லிம்களுக்கும் போர்த்துக்கேய ருக்கும் இடையே 1517ல் மோதல் ஏற்பட்டது. இங்கு சமாதானம் செய்யச் சென்ற கோட்டை அரசன் தர்மபராக்கிரமபாகுவிற்கும் போர்த்துக்கேயருக்கும் இடையில் யுத்தம் மூண்டது. முஸ்லிம்கள் கோள் சொன்னதனால் தான் சிங்கள அரசன் தம்மை எதிர்த்தான் என இதற்கு போர்த்துக்கேயர் காரணம் கூறினார்கள். (பக்:263)


போர்த்துக்கேயரால் கொழும்பிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு சிங்கள அரசர்கள் தான் புகலிடம் கொடுத்தார்கள். ஆனால், முஸ்லிம்களது நாட்டுப்பற்று ஆரம்பத்திலிருந்தே சந்தேகத்திற்கிடமாகவே இருந்தது. முஸ்லிம்களை போர்த்துக்கேய தாக்குதல்களிலிருந்து பாதுகாத்த செனரத் அரசன் அந்த போர்த்துக்கேயர்களுக்கு எதிராக யுத்தம் புரிவதற்கு முஸ்லிம்களை அழைத்தான். 4000 பேரில் 1500 பேர் மட்டுமே முன்வந்தார்கள். அந்தவகையில், முஸ்லிம்கள் தமது இருப்பைப் பற்றி மட்டுமே யோசித்தார்களே தவிர நன்றிக் கடன் தெரிவிக்கவில்லை. கண்டி இராச்சியம் பற்றிய இரகசியத் தகவல்களை ஆங்கிலேயருக்குக் கொடுத்தவர்களும் முஸ்லிம்கள் தான். முஸ்லிம்களுடன் இணைந்து ஆங்கிலேயர் கண்டி அரசுக்கெதிராக 1802ல் யுத்தம் தொடுத்தார்கள். அந்த யுத்தத்தில் மலே, ஜாவா, முஸ்லிம் படைவீரர்களும் இருந்தார் கள். ஊவாவெல்லஸ்ஸ கிளர்ச்சியும் இதுபோன்ற காரணத்தால் ஏற்பட்டதாகும். சிங்களவருக்கெதிரான பல யுத்தங்களுக்கு முஸ்லிம்கள் காரணகர்த்தாக்களாவர். 1915ம் ஆண்டு முஸ்லிம் சிங்கள மோதல் சிங்கள எழுச்சிக்கு வித்திட்டது. பெரும்பான்மை சிங்களவரை ஆத்திரமூட்டச் செய்வது முஸ்லிம்க ளுக்கு பெரும் பாதிப்பை உண்டுபண்ணும் எனும் பாடத்தை முஸ்லிம்கள் படித்துக் கொண்டார்கள். (பக்: 263)


அரசியலில் முஸ்லிம் அடிப்படைவாதம்


இலங்கையின் நவீனகால இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எகிப்தின் அடிப் படைவாதியான ஒராபிபாஷாதான் அடித்தளமிட்டார். அதனை தேசிய ரீதியில் சித்திலெப்பை பிரசாரம் செய்தார். 1899ல் கிண்ணியாவில் மத்ரசதுல் சைதிய்யா என்ற மத அடிப்படைவாதத்தை போதிக்கும் பாடசாலை உருவாக்கப்பட்டதுடன் நவீன கால அடிப்படைவாதம் ஆரம்பமாகிறது. (பக்:270)


சிங்கள சமூகத்தில் மேட்டுக் குடிகள் அரசியல் செய்தது போல முஸ்லிம்களுக்கு மத்தியிலும் காரியப்பர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ரீ.பி. ஜாயா போன்ற வர்களும் மேட்டுக்குடிகளாயினர். இவர்கள் அரசியலுக்கு வருவதற்காக ஆங்கிலேயருக்கு சேவகம் செய்தார்கள். உள்நாட்டவர்களை கஷ்டத்தில் வீழ்துவதே இவர்களது ஒரே அரசியல் தகைமையாக இருந்தது. (பக்:272)


பதியுதீன் “ஜிஹாத்’ என்ற சஞ்சிகையை வெளியிட்டதன் மூலம் இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பரவியது.


இறுதியில் இந்த ஜிஹாத் அடிப்படை வாதத்துக்கு ஐ.தே.க. தான் உதவி செய்தது. 1970 தேர்தலில் நாடுபூராகவும் சமதர்மக் கட்சி வென்றபோது பொத்துவில், நிந்தவூர் தொகுதிகளில் ஐ.தே.க.வின் முஸ்லிம் அடிப்படைவாதம் வென்றது. இதிலிருந்து அடிப்படைவாதம் எவ்வளவு பலமானது என்பதைப் புரியலாம். முஸ்லிம் அடிப்படைவாதத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பதியுதீன் மஹ்மூத் படித்த பரம்பரையை கொழும்புக்கு வெளியே அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி ஆகிய பகுதிகளில் உருவாக்கினார். அவ்வாறு உருவாக்கப்படடவர்கள் தான் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார்கள். (பக்:273)


ஐ.தே.க.வின் எம்.எச். மொஹமட், பாக்கிர் மார்க்கார், ஏ.ஸி.எஸ். ஹமீட், அப்துல் மஜீட் போன்ற தலைவர்கள் ஊடாக இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்ந்தது. அவர்கள் பள்ளிகளைக் கட்டினார்கள், திட்டமிட்ட அடிப்படையில் தன்னார்வ நிறுவனங்களை ஏற்படுத்தினார்கள். 1984ல் இஸ்ரேலுடன் ஜே.ஆர். ஜயவர்தனவும் அத்துலத்முதலியும் தொடர்பினை ஏற்படுத்தியபோது புலிகளுடன் தொடர்புபட்டிருந்த அடிப்படைவாதிகளும் பொதுவாக அனைத்து முஸ்லிம்களும் அதனை எதிர்த்தார்கள். (பக்:275)


முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் அடிப்படை வாத கட்சியாகும். ஜே.ஆர். முஸ்லிம் அடிப்படை வாதத்தின் எழுச்சியை அறிந்து அதனை கவனமாக அணுகினார். முஸ்லிம் பெண்களுக்கான ஹிஜாப், ஷரீஆ சட்டம் என்ப வற்றை அனுமதித்தார். இந்தச் சலுகைகளை வழங்கினால் முஸ்லிம்களை வளைக்கலாம் என நினைத்தார், ஆனால், பதிலாக முஸ்லிம் அடிப்படைவாதம் மேலும் பலமடைந்து வளர்ச்சியடைந்தது. (பக்:276)


பிரேமதாஸ யுகம்தான் (19891993) முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு வளமான காலமாகியது. அவர் முஸ்லிம் அடிப்படை வாதத்துடன் இணைந்தார். இஸ்ரவேலை வெளியேற்றினார். பயங்கரவாதத்தை அடக்கும் உபாயங்களை ஈரானிலிருந்து பெற்றார். 1989இல் ஜே.வி.பி. கிளர்ச்சியால் நாடு பலவீனமுற்ற வேளையில் அவரது உதவிக்கு இஸ்லாமிய வங்கி வந்தது. வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை


அரசின் பணத்தையும் பொருட் சந்தையையும்


முஸ்லிம் அடிப்படைவாதம் தனதாக்கிக் கொண்டது. அத்துடன் இந்தியாவை பிரேம தாஸ எதிர்த்ததால் அவருடன் பாகிஸ்தான் நெருங்கி வந்தது. அதன் விளைவாக பாகிஸ்தானிலுள்ள அடிப்படைவாத கலாசாலை களுக்கு இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் அனுப்பப்படுவதற்கு வழிசமைக்கப்பட்டது. (பக்: 277)


1994இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மு.கா. 7 ஆசனங்களைப் பெற்றது. அந்த வெற்றியின் பின்னணியில் தேசிய,சர்வதேச சக்திகள் உள்ளன. நன்றாக மோப்பம் பிடிக்கும் சக்திகொண்ட அஷ்ரப் சந்திரிக்காவுடன் இணைந்தார். அன்றிலிருந்து முஸ்லிம் அடிப்படைவாதத்தின் தேன்நிலவு ஆரம்பமானது. துறைமுகத்தை ஸ்தாபிக்க எந்தவகை யிலும் பொருத்தமற்ற இடமான ஒலுவிலில் துறைமுகம் ஸ்தாபிக்க ஏற்பாடாகியது. அடுத்த இலக்கு ஒரு விமான நிலையம் தான். முஸ்லிம்களுக்கு மட்டுமான பல்கலைக் கழகத்தை தென்கிழக்கில் கட்டினார்கள்.


இது பதியுதீன் ஏற்படுத்திய முஸ்லிம் கல்வி மறுமலர்ச்சியை மேலும் பலப்படுத்தும் முயற்சியாகும். துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகளில் கூட கல்விக் கூடங்களுக்குள் தடைசெய்யப்பட்ட பர்தாவும் முஸ்லிம்களது தொப்பியும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குள் கட்டாயமாக்கப்பட்டது.


பள்ளிகளைப் பராமரிக்க சவூதியிலிருந்து 6.6 பில்லியன் ரூபாய்கள் பெறப்பட்டது. நாடு பூராகவும் 700 அடிப்படைவாத மத்ரஸாக்கள் ஸ்தாபிக்கப்பட்டன. போதைவஸ் துக்களை இறக்குமதி செய்வது, கள்ளச் சாமான்களை விற்பது, பாதாள உலகக் கோஷ்டிகளது செயற்பாடுகள், கறுப்புப் பணத்தை கையாள்வது என்பவற்றை முஸ்லிம் அடிப்படைவாதமே செய்கிறது. இந்த அடிப்படைவாதிகள் தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பலவற்றை நிர்வகிக்கிறார்கள். (பக்:279)


முஸ்லிம்களது பகல் கொள்ளை


வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களது சொத்துக்களை புலிகள் கைப்பற்றிக் கொண் டது போல், தப்பிவந்த அந்த முஸ்லிம்கள் புத்தளத்திலும், கற்பிட்டியிலும் உள்ள சிங்க ளவர்களது சொத்து செல்வங்களை கைப் பற்றிக் கொண்டார்கள். (பக்:278)


அஷ்ரஃப் தனது பேரம் பேசும் பலத்தை பயன்படுத்தி இலங்கையின் மிகப்பெரிய கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமையும் இலங்கையின் உயர்ந்த கட்டடமான இஸ்லாமிய தகவல் நிலையத்தையும் கட்டியிருக் கின்றார். அஷ்ரபுக்கு சவுதி நிதியிலிருந்து கோடிக் கணக்கில் பணம் கிடைத்ததாகவும் இதன் மூலவேலைத்திட்டத்தை சவுதியில் அடிப்படைவாதத்தைப் பயின்ற ஹாபிஸ் நஸீர் அஹ்மத் மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஷ்ரப் அகால மரணமாகாவிட்டால் அவர் உருவாக்கிய நுஆ 2012 இல் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் தனது திட்டத்தை அடைந்திருக்கும். (பக்:280)


முஹம்மத்தின் மரணத்தின் பின்னர் அடுத்த தலைவர் யார் என்ற பிரச்சினை வந்ததுபோல அஷ்ரபின் மரணத்தின் பின்பும் அதே பிரச்சினை வந்தது. பேரியல், ஹகீம், ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் அப்பதவிக்கு போட்டி போட்டார்கள். எதிர்காலத்தில் ஹகீம், அதாவுள்ளாவுக்கிடையிலன்றி பாராளுமன்றமுறைக்கும் ஜிஹாத் ஆயுதப் போராட்டத்துக்குமிடையில் தான் மோதல் நடக்கும். பிரபாகரனுக்கு வடக்கு, கிழக்கு தாரை வார்க்கப்பட்டதன் அபாயகரமான முடிவுகளில் ஒன்றாக உஸாமா பின் லாதினை கிழக்குக்குக் கொண்டு வந்து சேர்ப்பது அமையும்.


அபாயகரமான நிலை


முஸ்லிம்களது மிக விரைவான சனத் தொகைப் பெருக்கம் புதிய கல்வி மாற்றம், தமிழ் பாசிச யுத்தத்தாலும் ஐ.தே.க.வுக்கும் ஐ.ம.சு.கூ.க்கும் இடையிலான மோதலாலும் ஏற்பட்ட பலவீனம், எண்ணெய் பணத்தின் குமுறல் இவை அனைத்தினதும் முடிவு இலங்கையின் முஸ்லிம் அடிப்படைவாதத்தை, வெடிப்பதற்கு தயார்நிலையிலுள்ள எரிமலையைப் போன்றாக்கிவிட்டது. இலங்கை உளவுப் பிரிவின் தகவலின்படி தமக்கிடையில் மோதிக் கொள்ளும் 4 முஸ்லிம் ஆயுதக் குழுக்கள்


(11ஆம் பக்கம் பார்க்க…)


(முஜாஹிதீன், ஒஸாமா, ஜெட், பீம்)) இலங்கையில்; இருப்பதாகவும் அவர்களுக்கு சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதாகவும் அறிய முடிகிறது. ஒலுவில் பிரகடனம் என்பது அர்மில்லாததொன்றல்ல. அது இந்தோனேஸியாவையும் இலங்கையையும் சேர்த்துத் தீயிட்டுக் கொழுத்தி விடும். (பக்:281)


அடிப்படைவாதக் கலாசாலைகள்


இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதமானது மக்தப்கள், மத்ரஸாக்கள், இஸ்லாமிய முன்பள்ளிகள், முஸ்லிம் பாடசாலைகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள், முஸ்லிம் பல்கலைக்கழகங்கள் ஆகிய இடங்களில் போதிக்கப்படுகின்றது. மத்ரஸாக்களைப் பொறுத்தவரையில் மக்கிய்யா, பாரீ, பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா, கிண்ணியா சஹதிய்யா, மாதர அன்மின்னதுல் பாஸியா, மைதுல் அரபுப் பாடசாலை (தர்ஹாநகர்), காஸிமிய்யா, கபூரிய்யா என்பன குறிப்பிடத்தக்கவையாகும். இவை வெளிநாட்டு பணத்தால் வேகமாக நவீனமயப்பட்டு வருகின்றன. அங்கு ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆசிரியர்கள் கூட போதிக்கிறார்கள். 20032010ற்கும் இடையில் 700 மத்ரஸாக்களை நிர்மானிக்க சவுதி வாக்குறுதியளித்துள்ளது. பாடத்திட்டம் முழுக்க முழுக்க இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. நளீம் ஹாஜியாரால் 1973ல் பேருவலையில் ஸ்தாபிக்கப்பட்ட ஜாமியா நளீமிய்யா அடிப்படைவாத கலாசாலை இங்கு மைல்கல்லாகும். வெளிநாடுகளைச் சேர்ந்த அடிப்படைவாத ஆசிரியர்களை சேவைக்கு அமர்த்தி, நவீன தொழினுட்பத்தை போதிக்கும் இடமாக அது மாறியுள்ளது. (பக்: 284,285)


1996ல் 111 அடிப்படைவாத முன்பள்ளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


இலங்கையின் 5 பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய நாகரிகத்துக்கான தனியான துறைகள்கள் உள்ளன. அஷ்ரப் 1995ல் தனியான முஸ்லிம் பல்கலைக்கழத்தை ஆரம்பித்ததுடன் இந்நிலை இன்னும் வேகமடைந்துள்ளது. நாட்டின் ஏனை பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட சபரகமுவ, ரஜரட, ஊவா, வடமேல் பல்கலைக்கழகங்கள் இறுதி மூச்சுவாங்கும் போது இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மடைதிறந்த வெள்ளமாக வெளிநாட்டு உதவிகள் வந்து சேர்வதால் அது சீக்கிரமாக நவீன பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. இந்திய சுதந்திரப் போருக்கு அலிகார் பல்கலைக்கழகம் செய்த பங்களிப்பை விட கிழக்கின் சுய ராஜ்ய உருவாக்கத்திற்கு அதிகமான பங்களிப்பை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் செய்யும் என்பதை 20030129 அன்று தென்கிழக்குப் பல்கலைக்கழக பூமியில் ஒலுவில் பிரகடனம் வெளியிடப்பட்ட நாளில் பேச்சாளர்கள் தெரிவித்திருப்பதாக அறிய முடிகிறது. அந்தவகையில் அது இன்று முஸ்லிம் அடிப்படைவாதத்தின் தொட்டில் என்பது தெளிவாகிறது. (பக்: 310) வேகமாகப் பரவும் முஸ்லிம் சனத்தொகைமுஸ்லிம்களது சனத்தொகை அண்மைக்காலத்தில் அதிவேமாகப் பரவி வருகின்றது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவர்கள் செல்வதாலும் அதிகமாகத் திருமணங்கள் நடைபெறுவதாலும் இந்நிலை உருவாகியுள்ளது. சிங்களவர்களது வளர்ச்சி 1&ஆகும். அதேவேளை முஸ்லிம்களது வளர்ச்சி 2.8 & ஆக இருக்கின்றது. 2090 ம் ஆண்டு முஸ்லிம்கள் இந்நாட்டின் பெரும்பன்மையினராக மாறுவார்கள். சிங்கள சமூகத்தில் இளைஞர்களது விதிசாரம் 16 & ஆகும். அதேவேளை முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்களது விகிதாசாரம் 29 & ஆகும். எனவே, பொதுவாக புரட்சிகளுக்கு இளைஞர்களே காரணமாக அமைகின்றனர் என்ற வகையில், முஸ்லிம் சமூகத்திலும் எதிர்காலத்தில் அடிப்படைவாதிகளது புரட்சி பலமடைவதற்கு இது வழிவகுக்கும். இலங்கையின் மொத்த சனத்தொகையில் பெண்களது தொகை ஆண்களது தொகையை விடவும் 1,77,961மேலதிகமாக இருக்கிறது. இவர்களுள் 1,35,251 பேர் சிங்களப் பெண்களாவர். ஆனால் இந்தப் பெண்களை எதிர்காலத்தில் திருமணம் செய்வது யார்?. இவர்கள் ஒன்றில் முஸ்லிம் அல்லது வெளிநாட்டு ஆண்களையே முடிக்க வேண்டும். கடந்த காலத்தில் பலதார மணத்தின் மூலமே இஸ்லாம் இலங்கையில் பரவியது. (பக்:317)பௌதர்களிடம் சிங்களத்தன்மை பற்றிய உணர்வில்லாமலுமிருப்பதனால் தான் அவர்கள் திட்டமிட்டுச் செயற்பாடாமல் இருக்கிறார்கள். இதனால் தான் சிறுபான்மை தீவிரவாதம் வளர்கிறது. சிங்களத்தன்மையைக் கொலை செய்கிறவர்கள் தான் இந்த சிறுபான்மைத் தீவிரவாதத்தின் வளர்ச்சிக்கு வழி சமைப்பவர்கள் என்பதை மறக்கலாகாது. அடுத்த தசாப்தங்களில் சிங்களவர்கள் தமது சிங்களத் தன்மையிலிருந்து எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே இலங்கையின் தலைவிதி தீர்மானிக்கப்படும். மகாத்மா காந்தி இலங்கையனின் மரணம் எம்மால் தாங்க முடியுமான கவலை. மாறாக இலங்கையின் மரணம் எம்மால் தாங்க முடியாத கவலை. என்று குறிப்பிட்டார். (பக்: 312)இவரது நெகனஹிர சிங்கள உருமய (கிழக்கின் சிங்கள பூர்வீகம்)2002 எனும் நூலிலும் இது போன்ற கருத்துக்கள் உள்ளன.இலங்கை முஸ்லிம்களது எதிர்காலம் பயங்கரமாக அமையும் சாத்தியக்கூறுகள் உள்ளன. என்ற நூலில் எந்த அடிப்படைகளுமற்ற, திரிபுபடுத்தப்பட்ட, வரலாற்று ஆதாரங்களற்ற, மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் மாத்திரமே இருக்கின்றன. எனவே, இந்த நூல் சிங்கள சமூகத்திலுள்ள படித்தர்வர்கள், பல்கலைக்கழக மட்டதத்திலுள்ளவர்களாலும் படிக்கப்பட்டு வருவதால் முஸ்லிம்களைப் பற்றிய நல்லபிப்பிராயம் அவர்களது மனங்களிலிருந்து முற்றாக எடுபட்டு விட்டது. அத்துடன் அது வரலாற்று ஆவணமாகவும் மாறி எதிர்கால சிங்கள மக்களது உள்ளத்தில் நச்சு விதைகள் விதைக்கப்படுவதற்கும் காரணமாக அமையும்.எனவே, இதுபோன்ற நூல்களுக்கு மறுப்பு எழுதப்பட வேண்டும். மற்றும் ஜாதிக ஹெல உருமய அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் விழிப்பார்களா? இந்தத் தகவல்களை முஸ்லிம்களுக்கு மத்தியில் பரப்பும்படி அல்லாஹ்வுக்காக எதிர்பார்க்கிறோம்.. அல்லாஹ் எதிரிகளது சூழ்ச்சிகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பானாக.

முள்ளிவாய்கால்—2009’ க்கும் ; “பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டிவரை’

 முள்ளிவாய்கால்—2009’ க்கும் ; “பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டிவரை’ “க்குமான எந்த அரசியற் போராட்டமானாலும் அவை, மக்களை அழித்தன; அழிக்கும் ! —சிறு , குறிப்பும் , நினைவூட்டலும்!! —ப.வி.ஶ்ரீரங்கன்


இனங்களுக்கிடையிலான பகை முரண்பாடாகப் பொருளாதார வளர்ச்சிகளின் வாயிலான பங்குச் சண்டைகள் வருகின்றன. பங்குகள் பொருளாதாரப் போட்டிகளோடும், அத்தகைய பொருளாதாரத்தால் நிலைபெறும் அரசியல் அதிகாரத்துக்கான போட்டிகள் இனங்களுக்கிடையில் முட்டிமோதும்போது இலங்கையில் இனமுரண்பாடாக இவை எட்டின.


இதன் ,அகரீதியான தாக்கமானது இலங்கை மக்களது மனங்களின் இனப்பகையாகக் காலாகாலம் வளர்ந்திருக்கும்படியாக இலங்கையின் பொருளாதார முரண்பாடுகள் இருத்தி வைக்கப்பட்டன.இதன் அறுவடையாகக் கடந்த 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தைச் சந்தித்த இலங்கை மக்கள் தம்மை அடையாளப்படுத்திய இனஞ்சார் இருப்புணர்வானது அவர்களது பௌதிக அடையாளமாச்சு.


இது,மனித வரலாற்றில் அனைத்துச் சமுதாயங்களதும் வரலாற்றுப் பக்க விளைவாகவே உணரத்தக்க புரிதல்.


வரலாற்று மனித மாதிரிகள் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டன. அவ்வண்ணமே வாழ்வுக் கண்ணோட்டமும் மாறிக்கொண்டன. புதிய வர்த்தக வியூகங்கங்கள் புதிய உறவுகளை,புதிய மாதிரியான உற்பத்தி முறைமைகளையும்,உற்பத்தியுறவுகளையும் உருவாக்கியுள்ளன.இங்கே, எந்தவர்க்கம் எதை நகர்த்துகின்றதென்ற புரிதலும்,ஆளும் வர்க்கம் எதுவென்ற பார்வைக்குள் உணரப்படமுடியாதளவுக்கு ஊக வணிக்கத்தின் நிதி திரட்சியும் அதன் , அனைத்துப் பரிணாமங்களும் உதிர்ந்துவிடக் கூடிய முதலாளிய அமைப்பைத் தொடர்ந்து பலமான வகையிற் காத்துக் கொண்டிருக்கிறது. இங்கே,முன்னைய அடிக்கட்டுமான மேற் கட்டுமானப் புரிதலில் பாரிய வெடிப்பையும் இது ஏற்படுத்தியிருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரியம் சந்தர்ப்பத்தை மரபு மார்க்சிய வாய்ப்பாட்டாளர்கள் இழந்து வருகின்றனர். 


அவர்களால் ,இன்றைய அதிகாரம்-ஆதிக்கம்-ஆளும் வர்க்க நகர்வுகளை மிகத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.தமிழ்த் தேசியம் காலத்துக்குக் காலம் அந்நியச் சக்திகளால் அவர்களது நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஆயுதமாக இயக்கமும்; ஊக்கமும் பெறுகிறது. இது கடந்து முள்ளிவாய்க்கால் வரை, இலங்கைத் தமிழ் மக்கள்மீது செலுத்திய ஆதிக்கம் நான்கு இலட்சம் மக்களை அழித்துவிட்டுத் தன்னை மீள நிலைப்லடுத்த அதே ,அந்தியச் சக்திகளது தூண்டுதலால் மீளவும் ,தமிழ் மக்கள் விரோத அரசியலை மட்டுமல்ல முழு இலங்கைக்கும் விரோதமான அரசியலை முன்னெடுக்கின்றது!


தற்போது நடைபெறும் , “P2P“ அரசியல் 

(பொத்துவிலிலிருந்து பொலிகண்டிவரை) ஆர்ப்பாட்டப் பாத யாத்திரையின்வழி நகரும் அரசியல் இலாபங்கள் யாருக்கானது ? உலகு தழுவிய கொரோன வைரசுக் கொடிய கொள்ளை நோய்க் காலதிற்கூட மக்களின் சுகாதாரத்துள்; ஆரோக்கியத்துள் எந்த அக்கறையுமற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளது பொறுப்பற்ற கட்சிவாத இந்த அரசியலின் நலன்கள் என்ன? ; இதற்குப்பின்னால் யார் , யார் ; எந்தெந்த அந்நிய தேசங்கள் இருக்கின்றன ?


அன்று, பண்டா-செல்வா  ஒப்பந்தத்தை (Bandaranaike–Chelvanayakam Pact) எதிர்த்து , களனியிலிருந்து கண்டிக்குப் பாதயாத்திரை ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை (The march began on October 4, 1957, with Jayawardene and Dudley Senanayake and the head of the procession.—Wikipedia) ஜே.ஆர்.ஜெயவர்தனே செய்தார். 


அதற்குப் பின்னால் மேற்குலகம் இருந்தது. 


இன்றைய இந்தப் “பொத்துவிலிலிருந்து பொலிகண்டிவரைப் பாதயாத்திரை” ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னாலும் அதே சக்திகள் இல்லாமல் இருக்க முடியுமா?


இன்றைய இலங்கையின் புதிய திசைப் போக்குகளை அறிவதில் 19 ஆம் நூற்றாண்டு மார்க்சியப் புரிதலோடு கட்சி கட்டுதல், குலைத்தல்,உருவாக்குதல்,அணித் திரட்சி-சதிகளென ஆயிரஞ் சங்கதிகள் நிகழ்கின்றன. புதிய, புதிய நபர்கள் சாணாக்கியன் என்றும் , சுமந்திரன் என்றும் நமக்குள் தலைவர்களாக எழுகின்றர்கள்!இவர்களின் கோரிக்கைகளுக்குப் பின்னாலுள் இருப்பு அரசியல் எவரது முகத்தைப் பின்னாற் புதைத்து வைத்திருக்கிறது?


இதற்குள் , உலகு தழுவிய அரசுகளது தயவுதாட்சன்யமற்ற ஆதிக்கக் கனவுகள் நமது தேசத்துள் பலவித அறுவடைக்கான அரசியல் நகர்வுகளைக் கட்டிவைத்தியக்குவதும் அதன் வாயிலான அனைத்து மக்கள் விரோதக் கூறுபோடுதல்களும் தொடர்ந்து அறுவடையாகிறது.  இந்தச் சந்தர்ப்பத்துள் இப்போது ,புதிதாக எழுந்த கோசம் ஒன்றைக் குறித்து (பொத்துவிலிலிருந்து பொலிகண்டிவரை—P2P ) விவாதத்துக்கு எடுப்பதும் அதன் திசையூக்கத்தில் கட்சின் தெரிவு என்னவென்பதும் உணரவேண்டிய கட்டாயமாகும்.


80’களில் "தமிழீழ"ப் போராட்டத்தின் நோக்கமும் அதன் போராட்டத் திசையமைவும் தமிழ்மக்களது சுயாதீனச் செயற்பாட்டையும்-வாழ்வு முன்னெடுப்பையும் பலமாக மாற்றியமைத்தது. அதன் பலனாக இனவொடுக்குமுறையென்பது பாரிய யுத்தவாத இராணுவ ஜந்திரத்தின் துணையோடு புதிய நிலைக்கெட்டியபோது அங்கே , புலிகளது இராணுவ ஜந்திரத்தின் துணையோடு போட்டித் தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கத்தின் முரண்பாட்டை இலங்கை சந்திக்கும் நிலைக்குள் இந்த "இனவாத ஒடுக்குமுறையும், இராணுவவாத ஒடுக்குமுறையும்" சந்தித்துக்கொண்டன. 


இதுசார்ந்து, இலங்கை அரசானது பாரிய யுத்த முன்னெடுப்புக்குள் தள்ளப்பட்டதும்,கூலி இராணுவமாகவிருந்த இலங்கை இராணுவம் இலங்கை அரசியல் அமைப்பு முறைகளையே மாற்றியமைக்கும் ஆதிக்கச் சக்தியாகவும், அரசியல் கட்சிகளைக் கண்காணித்து இயக்கும் ஆளும் வர்க்கத்தின் அனைத்து அதிகாரத்தையும் தனக்குள் உள்வாங்கியது. 


அது, பெயரளவில் இராணுவமாகவும் , உள்ளடக்கத்திலொரு புதிய ஆளும் வர்க்கமாகவும் இசைவாக்கம் பெற்றது. 


இலங்கைநின் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் இராணுவத்தையண்டித் தமது இலக்குகளையெட்டியபோது அவை பல்லாயிரம்கோடிச் சொத்துக்களுக்கு உரிமையுடைய கட்சிகளாகவுருவாகின. அரசினது வன்முறைசார் ஜந்திரமான அனைத்துப் பகுதியும் அரசின் போக்குகளைத் தீர்மானிக்கக் கட்சிகள் தமது நிதித் திரட்சியை முதலீடு செய்யும் சட்டவுரிமைகளுக்காக இவர்களோடு முரண்பட்டனவேயொழிய மக்கள்-குடிசார் அமைபாண்மைக்கும்-சுயாதீனச் சமூகத்துக்குமாக இவர்கள் ஜனநாயகத் தன்மையைப் பிரயோகிக்கவேயில்லை.இது, அன்றைய புலிவழியுருவாகிய புதிய தமிழ் ஆளும் வர்க்கத்துக்கும் பொருந்தும்.


இந்த, வர்க்கமானது உலகு தழுவிய அமுக்கக் குழுவாக இலங்கை அரசியலுள் தமது முதலீடுகளுக்கேற்பக் காய்களை நகர்த்துவதும், அதன் பாதுகாப்புக்கான அரசியற் கோரிக்கைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்வழி பிரதிதிதப்படுத்து முனைகின்றன! அதற்காகவே, மக்களை உசுப்பிவிட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழி கீழ்வரும் நோக்கை அடைய முனைகின்றன :


1 ) : இலங்கைப் பாராளுமன்றத்துக்கு வரும் நெருக்கடியைத் தீர்க்கத் திசை திருப்புவது;


2 ): தொழிலாளர் போராட்டங்களை ஓரங்கட்ட; சிங்கள - தமிழ்;முஸ்லீம்; மலையகத் தொழிலாளர்களது இலங்கை தழுவிய இணைவைக் காய் வெட்டவும் ;


3 ): இந்தத் தமிழ் அரசியல்வாதிகள்; கட்திகளின் துணையோடு தமது அந்நிய எசமான்களது நலன்களை இலங்கையில் உறுதிப்படுத்துவது


4 ) : சர்வதேசத்திலுள்ள பணப் புலிகளது நிதி மூலதனமானது சர்வதேசத்தில் நிலைகொண்டதன் பின் அதன் பாதுகாப்புக்கான அரசியலானது இலங்கைமீதான மேற்குலகத்தின் நலன்களைப் பாதுகாப்பிலிருந்தே சாத்தியமாகியுள்ள சிக்கலைத் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் வழி, சுமந்திரனின் வழி சாத்தியமாக்குவதில் > தமிழர்கள்; இலங்கைச் சிறுபான்மை இனங்களின் உரிமை < சார்ந்த நிகழ்ச்சிய ஒழுங்கு தமிழ்த் தேசியக் கோரிக்கையாக நகர்த்தப்படவும் ; 


5 ) : இது சார்ந்து , இனஞ்சார்ந்த ஓட்டுக் கட்சிகளது இருப்புக்கும்; ஆளும் வர்க்கத்தின் நலனுக்குமான உறவாடலுள் இந்த நிகழ்ச்சி நிரலை வைத்து ; நிலவும் தமிழர் சிக்கலை வைத்து , ஆட்சியை நிலைப்படுத்த ,அந்திய ஒப்பந்தங்களை நிறைவேற்ற, சட்டரீதியான முடிவுகளை எட்ட ; மக்கள் கவனத்தைத் திசை திருப்பவும் ,


இந்த நாடகம் அரங்கேறுகிறது!


ஆகவே , தமிழ்த் தரகுக் கட்சிகள் வரலாறு பூராகவுஞ் செய்த லொபி அரசியலை இந்தப் > பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டிவரை ஆர்ப்பாட்டப் பாத யாத்திரையில்< உரைத்துப் பாருங்கள்!


இலங்கை அரசாங்கமோ, தரகுத் தமிழ்க் கட்சிகளின் , தலைவர்களின் மீளவுமான இத்தகைய  அந்நிய நலன்களின் ஆர்ப்பாட்டங்களை முழுமொத்த சிங்கள மக்களையும் பார்க்கவைத்து, அவர்களின் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு ,இலங்கை ஆளும் வர்க்கம் நலனின் பொருட்டு , நாட்டின் வளங்களை ஏலம் விடப் போகிறது!


இதை, கடந்த காலத்தில் இணைத்துப் பார்த்தலும் அவசியம் :


இலங்கையின் இனங்களுக்கிடையிலான பொருளாதார வளர்ச்சி ; முரண்பாடுகள் இறுதியில்"தமிழீழ"ப் போராட்டத்தின்வழி 90 களின் பிற்பகுதியில் புதிய ஆளும்வர்க்கத் திசையமைவைத் தமக்குள் உருவாக்கிக்கொண்டன . இப்போது,இந்தப் போக்கிலிருந்து இரண்டு வகையான குட்டிமுதலாளிய நலன்களைக்கொண்ட முரண்பாடுகளைப் பார்க்கலாம்.


புலிகளது தரப்பிலிருந்து செய்யப்பட்ட போரானது பல இலட்சம் தமிழர்களது உயிரைப்பறித்தும்,அவர்களது உடமைகளைத் தமிழீழத்தின் பெயரால் திருடியும் உலகு தழுவிய வகையில் சர்வதேசரீதியகவொரு மிக நுணுக்கமான சந்தர்ப்பவாதத் தரகு முதலாளிய வர்க்கத்தைப் புலிகள் அமைப்பு; தமிழீழப் போருக்கூடாக உயிர்ப்பலி கொடுத்து ,உருவாக்கியது.புலிகளது மேல்மட்டத் தலைவர்கள் அவர்களது குடும்பத்தவர்களென இந்தப் புதிய தரகு முதலாளிய வர்க்கம் நிலம்-புலமென உருவாகிக் கொழுத்திருந்து தனக்கான நலன்களை அறுவடைசெய்ய யுத்தத்துக்கு அப்பாவிச் சிறார்களைப் பிடித்து அன்று அனுப்பிக்கொண்டிருந்து—இல்லையா?


இந்தப் புலி ஆளும் வர்க்கத்தால் தமிழ் இனத்துக்குள்ளிருந்த மரபுரீதியான சுயாதீனக் குட்டிமுதலாளிய வர்க்க நலன்சார் முன்னெடுப்புகள்,அவர்களது வர்த்தக அபிலாசைகள் "தமிழீழத்தின் பெயரால்" இல்லாதொழிக்கப்பட்டபோது அத்தகைய வர்த்தகக் குடும்பங்கள் தம்மை இலங்கையின் பின்னும்,இராணுவத்தின் பின்னும் தகவமைப்பதில் தொடர்ந்து தோல்வியடைந்திருந்தன. கொழும்புத் தமிழ் வர்த்தகக் குடும்பங்களுக்கும் இதுவே கதி. 


புலியினால் உருவான  சர்வதேசந் தழுவிய புதிய தமிழ் மூலதன வர்க்கமானது இலங்கை இராணுவத்துடன் சமரசஞ்செய்து இவர்களை ஏமாற்றியது.தமிழ் நிலப் பரப்பின் வளங்களைக் குறிப்பாகக் கடல் வளத்தைக்கூடக் கடற் கடற் கண்காணிப்பு வலயம்-கட்டுப்பாடு-பாதுகாப்புவென மட்டுப்படுத்தித் தாமே அவ்வளத்தைச் சுவீகாரித்து இராணுவத்தோடு பங்குபோட்டுக்கொண்டது, 2008’ ஆம் ஆண்டு வரை.


இத்தகைய வரலாற்றில் முள்ளிவாய்க்காலுக்குப்பின் உடைவுகண்ட புதிய தமிழ் ஆளும் வர்க்கங்களது கூட்டுக்கள் தம்மைத் தொடர்ந்தும் புலிவழியில் திசையமைப்பதிலும் "தமிழீழத்தின்" பெயரால் வளங்களைக் கொள்ளையடிப்பதிலும் பின்னடைவைக் கண்டபோது அந்த வர்க்கமானது கட்சியாதிக்கத்துள் புதிய தரகு முதலாளியக் குடும்பமான மகிந்தா குடும்பத்தோடு சமரசஞ்செய்ய கே.பி.யின் பின் அணிவகுத்துத் தேசியத் தலைவர் வாழ்வாதாகவும், கதைபின்னிக் காரியத்தில் இறங்கியது. கே.பி.அதனைத் திறம்பட வழி நடத்தியும் காட்டினார்—அன்று!


புலியின் புதிய தரகு முதலாளிகள் கே.பி.யின் பின்னே அணிவகுத்து இலங்கை அரசைத் தமக்கான நலனுக்குரிய கூட்டாளியாக்கும் முயற்சில் கே.பி. சார் கட்சியின் பின்னே அணிதிருண்டு தோல்வி கண்டதன் எதிர் விளைவால் பாதிப்படைந்தவர்கள் , அந்நிய லொபித் தமிழ் இனஞ்சார் இனவாதக் கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமை தற்போது நம்பகமான கூட்டாளிகளக்கச் சமந்திரனைக் களத்தில் இறக்கியுள்ளனர்!


இவர்களைத் தூக்கி நிறுத்தவும்,நிதியிட்டுத்தமது நலன்களைப் பெறவும் புதிய புலிப்பணக்கார வர்க்கத்துக்கு அவசியமிருப்பதை மேலே சொன்னேன் !


தமிழ்தேசியக் கூட்டமைப்பானது இன்றைய நிலையில் அந்நியச் சக்திகளது லொபிக் குழுவாக இருப்பதுதாம் உண்மை.அந்தக்கட்சி சர்வதேசப் புலிப் பணக்கார நிதிமுதலீட்டுத் தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கத்தின் நலன்களை  இலங்கையிற் பிரதிநிதித்துவம் செய்யமுனையும் இன்றைய சூழலில் ,இக்கட்சி  தமிழ் மக்களை நடாற்றில் தள்ளுகிறது, இத்தகைய “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி “ வரையான பாதயாத்திரை வழி!


இதற்குள் —  மறுபுறம் , பிளவுபட்ட தமிழ் உடமை வர்க்கம் : 


தமிழ்ப் பிரதேசப் பொருளாதாரத்துள் ஏலவே, புலிகளால் பழிவாங்கப்பட்ட தமிழ் மரபுவழிப்பட்ட தரகு முதலாளிகளுக்கு யாழ்ப்பாண இடப்பெயர்வு,மற்றும், வன்னிக்குள் புலிகளது முடக்கமும் அவர்களது மேல் நிலைத் தலைவர்களது புதிய தரகு முதலாளியவுருவாக்கம் புதிய திசையைச் சுட்டிக்கொண்டது.இதன்வழி புலிகளால் பாதிப்படைந்த இந்த மரபுரீதியான தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கமானது இராணுவத்தோடும்,டக்ளஸ் கட்சியோடும் சமரசஞ் செய்வதில் வெற்றி கண்டனர்.டக்ளஸ் தேவாநந்தா தலைமையில் புலிகளால் பழிவாங்கப்பட்ட சிறுவுற்பத்தியாளர்கள் அவர்களது கூட்டுருவான தரகு முதலாளிய வர்க்கமானது புத்துணர்வுபெற்று தன்னைத் தகவமைத்தது.இவர்களது தலைவர் டக்ளஸ் என்பதும் இந்த அணியானது தமிழ்ப் பிரதேசமெங்கும் விரிந்து நிலைபெற்ற இராணுவ ஆதிக்கத்தின் நிர்வாக மற்றும் கட்டுப்பாடுகளோடு சமரசஞ்செய்யும் போக்குக்கு இராணுவ மேல்நிலை அதிகாரிகளது பெருஞ்சொத்தும் ஈடுகொடுத்தது.


இலங்கை இராணுவத்தின் ஆதிக்கமானது தமிழ்ப் பிரதேசமெங்கும் இராணுவ மேல்நிலை அதிகாரிகளது தங்கு தடையற்ற வர்த்தக முன்னெடுப்புக்கும் அதுசார்ந்து புலிகளாற் பழிவாங்கப்பட்ட பாரம்பரிய தமிழ்த் தரகு முதலாளிகளது கூட்டொத்துழைப்புக்குமான சமரசமானது தமிழ்ப் பிரதேசத்தின் அனைத்து வளங்களையும் ஒரு சில தமிழ்-சிங்களக் குடும்பகளது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்திருக்கிறது.


இதைத் தகர்த்து,சுயாதீனமான மூலதன நகர்வு,வர்த்தகம்,சந்தை என்பதெல்லாம் இனிமேற் சாத்தியப்படக்கூடிய சூழலை எதிர்ப்பார்த்திருந்த தமிழ்தேசியக் கூட்டமைப்பானது இந்தச் சர்வதேசப் புலிப் பணக்கார நிதி மூலதனத்தின் இலங்கையை நோக்கிய நகர்வை ; ஆதிக்கத்துக்கான சூழலது தெரிவைப் புரிந்திருக்கிறது.


இராணுவத்துடன் சமரசஞ் செய்துகொண்டு புதிய தரகு முதலாளிகள் அனைத்துப் பொருளாதார முன்னெடுப்பையும் இராணுவத்தின் ஒத்துழைப்போடு கட்டுப்படுத்தும் இந்தச் சூழலில் அவர்களைத் தாஜாப்படுத்தித் தம் பக்கம் இழுப்பதில்தாம்"இராணுவம் தமிழ்ப் பிரதேசத்திலிருந்து வெளியேறத் தேவை இல்லை!" அன்று 2013’ ஆண்டு  கோரிக்கை வைத்ததையும் நினைவூட்டுகிறேன்!; “நல்லாட்சிக்கால” இலங்கைச் சுதந்திர தினத்தில் இரணிலுடன் இணைந்து இலங்கைத் தேசியக் கொடியைத்தூக்கிச் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய சம்பந்தர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இன்று , சுமந்திரன் -சாணாக்கியின் தலைமையில் ஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்திக்குக் கருப்புக் கொடி காட்டுகிறது!


இதைவிடத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வேறு தெரிவில்லை- வழியில்லை.


இந்நிலைக்குள்,


1 : சர்வதேசம் தழுவிய பணப் புலித் தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கம்  சமந்திரன் —சாணாக்கியன் தலமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாயிலாக மகிந்தா குழுமத்தோடும் அவரது கட்சியாதிகத்தோடும் சமரசஞ் செய்து கொள்ள,P2P‘ யைச் சொல்லி மக்களை தடாற்றில் தள்ள,


2 : புலிகளால் பழிவாங்கப்பட்ட பாரம்பரிய தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கமானது தமிழ்ப் பிரதேசமெங்கும் ஆதிக்கஞ் செலுத்தும் இராணுவத் தலைமையோடு சமரசஞ் செய்து,இராணுவ இருப்போடு தமிழ் நிலப்பரப்பிலுள்ள வளங்களைக் கையகப் படுத்திய காலம் இந்தத் தசாப்தத்துள் டக்ளஸ், வடக்கிலும் ; பிள்ளையான் கிழக்கிலும் இரணுவப் பொருளாதாரத்தைத் தகவமைத்து இயக்க , 


இந்தப் புதியவகைப் போக்குகளால் தமிழ்த் தரப்பில் கட்சி வைத்து அரசியல் நடாத்தும் கட்சிகள் தமது இருப்புக்காக அரசியற் கோசங்களைத் தகவமைத்து அவற்றை மக்களின் நலமாகவும்,அரசின் நலமாகவும் வெளிப்படுத்துகின்றன.


>>ஒரு கட்சியை ஆராய்வதற்கு அவர்களது கோசங்களின்-அஜந்தாவின் வழி முயற்சிப்பது கடைந்தெடுத்த முட்டாள்த்தனமாகும்.இக் கட்சிகள் பல்வேறுபட்ட வர்க்க மக்கள் கூட்டத்துள் நிலவும்-ஏற்படும் முரண்பாடுகளை எங்ஙனம் தீர்க்க முனைகின்றன-அத்தகைய சந்தர்ப்பத்துள் எப்படி நடந்துகொள்கின்றனவென்று பார்த்து ஆய்வதே சரியானது.<< என்று, 


உங்களுக்கு உரைப்பேன் நண்பர்களே!


எனவே,இன்றைய புதிய தரகு முதலாளியக் குழுக்களுக்குள் நிலவும் முரண்பாட்டைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்ஙனம் எதிர்கொள்கிறது,அதன் இருப்புக்கான பின்புலம் என்னவென்று நோக்குவதே சரியானது.


இன்றைய தமிழ் ஓட்டுக் கட்சிகளது போராட்டங்களால் இலாபமடையும் அந்நியத் தேசங்கள் ; சர்வேதேசத் தமிழ்த் தரகு முதலாளிகள் இத்தகைய P2P —போராட்டங்களை ஊக்குவித்து இதற்கு நிதியிட்டுச் செய்தே முடிப்பர்.அந்தளவுக்கு அவர்களிடம் ஊடகப்பலமும்,பணப்பலமும் உண்டு. 


யுத்தத்தின் மூலம் வருமானத்தைக்கொண்ட இராணுவக் குடும்பங்கள்,தமிழ்த் தரகு முதலாளிகள் பெருந்தொகையான கருப்புப் பணத்தில் நீந்துகிறார்கள்.இராணுவக் குடும்பங்களிடமிருக்கும் பெருந்தொகையான கருப்புப் பணமானது யாழ்மாவட்டத்தின் காணிகளையும்-கட்டிடங்களையும் ரொக்கற் வேகத்தில் உயர்த்திக்கொண்டன.யாழ்ப்பாண மாவட்டதின் நிலங்களது இன்றைய விலைகளும்,கட்டிடங்களின் விலைகளும் அமெரிக்கக் கட்டுமானத் துறைக்கேற்பட்ட சரிவுக்கு நிகராகச் சரியாது. ஏனெனில், இவை கருப்புப் பணத்தால் கொள்முதல் செய்யப்பட்ட சில குடும்பங்களது தனிப்பட்ட சொத்தச்சு!


இங்கு,இராணுவத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்த விரும்பும் தமிழ்ப் பிரதேசப் புதிய ஆளும் வர்க்கமானது சர்வதேசப் பணப்புலிகளின்  இலங்கைமீதான அரசியல் அமுக்க நலன்களோடு முட்டி மோதுகின்றன . சர்வதேசப் பணப் புலிகளது கையில் “தமிழ்த் தேசம்; உரிமை “ என்ற செப்படி வித்தை கையிலிருக்க , மரபார்ந்த தமிழ் ஆளும் வர்க்கம் இராணுவத்தோடு பின் நிற்கும் டக்ளஸ் , பிள்ளையானை நம்பியபோதும் அவர்களை இந்த அலையில் அடிபாடாதிருந்து காக்க , இந்த P2P  அரசியல் சூதாட்டத்தை அணைப்பதுபோல் வித்தை காட்ட வைக்கின்றனர்! இதுள் , முஸ்லிம் ; மலையகக் கட்சிகளின் ; தலைவர்களின் கதையும் , இஃதே!


—ப.வி.ஸ்ரீரங்கன்

07.01.2021

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar