Skip to main content

ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு

  ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு   புதிய பதவி நிலைகளை   நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க  உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர்  உதவித் தலைவராக  ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ்  கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க   புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க  பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க  வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே  தவிசாளராக  அங்கீகரிக்கப்பட்டுள்ளார்,  ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே  ஐ.தே.க  தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.

முஸ்லிம் உடல்கள் எரிப்பும் அரசின் விடாப்பிடியும்!முஸ்லிம் உடல்கள் எரிப்பும் அரசின் விடாப்பிடியும்!

கடந்த வருடம் மார்சமாதம் நமது நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா இன்று இரண்டாம் கட்டமாக குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இலக்குவைத்து பந்தாடுவது வைரசா அல்லது பௌத்த பேரினவாத பேயின் வைரஸ் எனும் கோரத்தாண்டவமா!

முதலாம் கட்ட வைரஸ் பரவலின் போது மார்தட்டிக்கொண்ட அரசும் அதன் சுகாதார துறையும் இரண்டாம் கட்ட தாக்கம் அடையாளம் கண்ட மினுவான்கொட Brandix அடுத்து அடையாளம் கானப்பட்ட பேலியகொட மீன் சந்தை என இன்று முஸ்லிம்கள் செறிந்துவாழும் பகுதிகளிலும் கோரத்தாண்டவம் ஆடுகிறது.
தொடர்ந்து இன்றைய அரசுக்கு எதிரான போக்குடைய மத்திய கொழும்பு, கொழும்பு வடக்கு, பொரளை, அட்டுலுகமை,அலுத்கமை,கிழக்கு மாகாணம்  என மையம் கொண்டதன் நோக்கம் மர்மமாக இருப்பினும் சில விடயங்களில் எமக்கு பல உண்மைகளையும் கானக்கூடியதாகவும் உள்ளது.

Brandix ஆடைநிறுவனம் மூலமாக பறவியிருந்தால் அது இந்தியாவில் இருந்து வந்ததாகவோ அன்றியும் திட்டமிட்டே அனுப்பபட்டதான சில தகவல்கள் உள்ளன. (வியாபார போட்டி)
அடுத்து நாட்டின் சுகாதாரத்துறை  கூறியது போன்று கிழக்கு அல்லது மேற்கு ஜரோப்பிய கொரோனா வைரஸின் தன்மையை ஒத்திருந்தால் அது அந்த நாடுகளில் கல்வி பயிலும் இலங்கையில் பல்கழைகழகத்துக்கு இடம் கிடைக்காமல் அங்கு பயிலும் இலங்கையின் Vip தரத்திலுள்ளவர்களின் வாரிசுகளால் அவர்களை நாட்டுக்கு திரும்பி வரவழைத்த போது கட்டாய தடுப்பில் வைக்காமல் விடுவித்திருந்தாலும் அவர்களாலும் இவ் இரண்டாம் கட்ட பரவல் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

எப்படியும் அரசின் நிதியின் வங்குரோத்து உட்பட மக்களை திசைதிருப்பி தமது அரசை கொண்டுசெல்லும் நிர்ப்பந்தத்தாலும், நாட்டில் கொரோனா பாதிப்பை அதிகமாகக்காட்டி அதன்மூலமாக வெளிநாட்டு கடனுக்கான வட்டி கொடுப்பனவு எனவும் புதிய கடன்கள் உட்பட இலவச நிதிகளை பெற்றுக் கொள்ளவும் அரசின் திட்டமாகவும் இருக்கலாம் அதன் தாக்கத்தால் பௌத்தர்களை பகைத்துக் கொள்ளாமலும் தமது பௌத்த ஆதரவை தளம்பாமல் வைத்துக்கொள்வதற்கு கொரோனா தொற்றை பயண்படுத்துகிறதா எனும் கேள்வியும் பல மட்டங்களில் இன்று பேசும் பொருளாகியுள்ளது.

உதாரணமாக, மினுவான்கொடையில் தொடங்கிய இன்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும்பகுதிகளை மையம் கொள்ள கொரோனாவுக்கு ஆலோசணை வழங்கி ஏவியவர்கள் யார்!

கொரோனா உயிரிழப்பு 186 ஐ தொட்டும் அதில் 110 க்கும் மேல் முஸ்லிம்களுடையவை அத்துடன் மரணிக்கும் மாற்றுமதத்தவர்களின் உடல்கள் பலவுக்கு PCR மெஷின் negative எனவும், வீட்டில் வலுக்கிவிழுந்து காயத்துடன் அரச வைத்திய சாலைக்கு போனபல முஸ்லிம்களை வைத்தியசாலையில் பௌத்த PCR கொரோனா எனும் துவேசப் பேய் தொற்றிக்கொள்ளுகிறது. அதில் பல பேர் பல வருடங்களாகவே வீட்டைவிட்டு வெளியே செல்லாதவர்கள் அத்துடன் குடும்பத்தில் எவருக்குமே தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பதும் ஆச்சரியமே! அத்துடன் கொரோனா டெஸ்ட் positive என அழைத்துச் செல்லப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வெறும் மல்லித் தண்ணீரும் உப்பில்லாத உணவும் உண்டு கூடிப்பாடி கூத்தடித்து வீடுவரும் போது குணமாகி வருகின்றனர். ஆனால் மற்றைய நாடுகளில் உடல் சோர்வுற்ற நடைபினமாக காணப்படுவதையும் நாளாந்தம் செய்திகளில் கானுகின்றோம் இங்கு எல்லாம் மாயாஜாலமாகவே காணப்படுகிறது!

எனவே, கொரோனா தொற்றாளர்களின் என்னிக்கைக்காகவும் அதிக மரண என்னிக்கைக்காகவும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் ஈணரக்கம் அற்று பந்தாடப்படுகிறதா எனத் தோன்றுவதில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. 

எனவே, தலைமைத்துவம் இல்லாத ஒட்டுமொத்த சமூகமும் விழிப்புடன் செயலாற்றுமாறும் எமக்கெதிரான சூழ்ச்சிகளில் இருந்து விடுபட சகல துறை சார்ந்தவர்களும் அவர்கள் துறை மூலமாக எம் உரிமையைப் பெற்றிட காத்திட நாம் உறுதி பூனுவோம்!

ஒற்றுமையுடன் விவேகமாகவும் வேகமாகவும் செயல்படவேண்டியதை மீண்டும் வலியுறுத்தி விடைபெறுகின்றேன்.

என்றும் சமூக சிந்தனையுடன்,
குவைதிர்கான்

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச