கிழக்கு மாகாணத்தான்
நன்றி கெட்டவனுகள் ..!
-------------------------------------------
முகா - உயர்பீடத்தில் அமளி
முகா - உயர்பீடம் நேற்று கூடியது.
90 பேர் கொண்ட உயர்பீடத்தில் - பதவிநிலை அடிப்படையில் உள்ளோர் அழைக்கப்பட்டிருந்தனர். ( கொரோனா காரணமாக) அதிலும் 21 பேரே கலந்து கொண்டிருந்தனர்.
20 இற்கு ஆதரவு வழங்கிய எம்பீக்களிடம் - இதன்போது விளக்கம் கோரப்பட்டது. ஒவ்வொரு எம்பீக்களும் தத்தமது விளக்கங்களை வழங்கி விட்டு - தலைவரிடம் கூறிவிட்டுத்தான் ஆதரவாக வாக்களித்தோம் என்றனர்.
இதனையடுத்து - முகா தலைவரின் மச்சான் நயீமுல்லா , அப்துல் ஹை மற்றும் ஷபீக் ரஜாப்தீன் ஆகியோர் - 4 எம்பீக்களையும் கட்சியை விட்டு இன்றே வெளியேற்ற வேண்டும் - கட்சிப் பதவிகளை பறிக்க வேண்டும் என்று வாதாடினர்.
இதனை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த எம்பீக்களுக்கும் - அவர்களுக்குமிடையில் சிறு வாய்த்தர்க்கம் இடம்பெற்றது.
இங்கு சும்மா வீர வசனம் பேச வேலையில்லை. கள நிலைமைகளை அறிந்து பேச வேண்டும் என்று எம்பீக்கள் கூறியபோது - சபையில் அமைதி நிலவியது. தலைவர் - ரவூப் ஹக்கீம் , எதுவுமே பேசாது அமைதியாக இருந்தார்.
இந்தவொரு கட்டத்தில் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் -
'கிழக்கு மாகாண மக்கள் நன்றி கெட்டவர்கள். சுனாமி காலத்தில் கபன் சீலை அனுப்பினோம். ஆனால் - கொரோனாவால் முடக்கப்பட்டிருக்கும் கொழும்பு மக்களுக்கு எந்தவொரு நிவாரண உதவியையும் அந்தக் கிழக்கான் அனுப்பவில்லை" என்று கூறி - கடும் சொற் பிரயோகங்களை கிழக்கு மக்களை நோக்கி பாவித்தார். இதன்போதும் , எம்பீக்கள் - அவர்மீது - உரத்து சத்தமிட்டு , எமது மக்களை அன்றும் இழிவாகப் பேசினீர்கள் ; இப்போதும் பேசுகிறீர்கள்.இது நல்லதல்ல என்றனர்.
மருதமுனைக்கு - முகா தலைவர் சென்றது , அதன்பின் - அங்கு பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் விடயம் குறித்தும் அலசப்பட்டது.
இறுதியில் :-
பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக், ஹாபீஸ் நசீர் அஹமட் ஆகியோர் - 20 இற்கு ஆதரவளித்த விடயத்தில் முக்கியமான முடிவை மேற்கொள்வதற்கு, உரிய காரணங்கள் எழுத்து மூலம் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் தலைவருக்கும், செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
அதன் பின்னர், பிரஸ்தாப பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் மீதும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கட்சி முடிவெடுக்கும் என்றும் முடிவு எட்டப்பட்டது.
( ஏ.எச்.எம்.பூமுதீன் )
Post a Comment