ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
சுகாதார கல்முனை மாவட்டத்தில் 700க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் சொல்கின்றனர். சுகாதார கல்முனை மாவட்டம் என்பது நீலாவணை முதல் பொத்துவில் வரையாகும். ஆனால் கல்முனை மாவட்டத்தில் 700 பேர் என்பதைக்காட்டி வெறும் கல்முனையை அல்லது கல்முனை மாநகரை மட்டும் லொக்டவுன் செய்யப்போவதாக கதைகள் அடிபடுகின்றன. இத்தனைக்கும் கல்முனை மாநகர எல்லைக்குள் நூற்றுக்கு குறைவான தொற்றாளர்கள் உள்ளதாகவே தகவல்கள் சொல்கின்றன. ஆகவே அப்படித்தான் லொக் டவுன் செய்ய வேண்டுமாயின் முழு சுகாதார கல்முனை மாவட்டத்தையும் லொக் டவுன் செய்யுங்கள். அப்போது கல்முனை என்றொரு சுகாதார மாவட்டமாவது இருக்கிறது என்பதை நாடும் உலகும் அறியட்டும். அதை தனி தேர்தல் மாவட்டமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற எமது கட்சியின் கோரிக்கையை இலகுவாக்கும். - உலமா கட்சி