தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு கவலை இருந்தது

 


#தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு கவலை இருந்தது...நாங்கள் போராடிக்கொண்டிருந்தபோது முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளும் அரசாங்கங்களோடு சேர்ந்து  தரமான அமைச்சு பதவிகளை பெற்று அவர்களுடைய சமூகத்துக்கு அபிவிருத்திகளை அள்ளிக் கொட்டுகின்றார்கள் என்ற கவலைதான் அது...(உண்மையில் அப்படி நடந்ததா என்பது கேள்விக்குறிதான், அவர்களின் வங்கி கணக்கு உயர்ந்தது என்பது மட்டுமே உண்மை.) 

இந்த விடயத்தை சம்பந்தன் ஐயா அவர்களும் ஒரு ரீவி பேட்டி நிகழ்ச்சியின்போது கோடிட்டு காட்டியிருந்தார்.


யுத்தம் முடிவுக்கு வந்ததன் காரணமாக சிங்கள அரசாங்கங்களோடு மேலும் விரிசலை சந்திக்கும் நிலைதான் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் முஸ்லிம் அரசியல் தலைவர்களையும்  ஏதோவொருவகையில் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தங்களுடை பாதையிலே இவர்களையும் சேர்த்து பயணிக்க முயற்சிசெய்து வெற்றியும் கண்டார்கள். இதன் மூலம் முஸ்லிம் அரசியல்வாதிகளும் அவர்கள் விரும்பும் பக்கமே பயணிக்கவும் துவங்கினார்கள். இதற்கு சுமேந்திரன் ஐயா அவர்களின் வழிகாட்டல்களும் மிக கச்சிதமாகவே அமைந்துவந்தன.


ஆனால் தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்ப்பு அரசியலில் சிங்கள மக்கள் கோபமடைவது கிடையாது, ஏனென்றால் அவர்கள்தான் யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் அதனால் அவர்கள் எதிர்ப்பு அரசியல்செய்வதில் நியாயமிருக்கின்றது என்று அவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள் என்பதே உண்மையாகும். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளும் அதேபோன்ற எதிர்ப்பு அரசியலை செய்கின்றபோதுதான் அது சிங்கள மக்கள் மத்தியில் வேறுமாதிரியான உணர்வலைகளை ஏற்படுத்துகின்றது என்பதை நமது பச்சோந்தி அரசியல்வாதிகள் கவணிக்க தவறிவிட்டார்கள். அதன் காரணமாக சோனி தொப்பிபிரட்டி என்ற கெட்ட பெயரையும் சம்பாதிக்குமளவுக்கு நிலைமை பழுதாகி கிடக்கின்றது எனலாம்.


இந்த விடயங்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கு உள்ளூர ஒரு சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறவேண்டும். எங்களைப்போன்றே முஸ்லிம் அரசியல்வாதிகளும் பெரும்பாலான சிங்கள மக்கள் மத்தியில் எதிரிகளாக பார்க்கப்படுகின்றார்கள். அதன் மூலம் முஸ்லிம் அரசியல்வாதிகளும் கடந்தகாலங்களைப்போன்று சொகுசாக செயல்பட முடியாது என்பதாகும்.


இதன் மூலம் பாதிக்கப்பட்டது யார் என்பதுதான் கேள்வியே...புரிஞ்சா சரிதான்...!


~#முனைமருதவன்♥-

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்