Skip to main content

Posts

Showing posts from November, 2020

பாதாளக் குழுக்கள் உள்ளிட்ட தவறான பாதைகளில் பயணிப்போரை இல்லாதொழிப்பதே எமது பிரதான இலக்காகும்

  பாதாளக் குழுக்கள் உள்ளிட்ட தவறான பாதைகளில் பயணிப்போரை  இல்லாதொழிப்பதே எமது பிரதான இலக்காகும் - கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சர் சரத் வீரசேகர திட்டவட்டம் ( ஐ. ஏ. காதிர் கான் )    இந்த நாட்டிலுள்ள மக்களுக்கு எவ்விதமான அச்சமும் இல்லாது வாழக்கூடிய ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை  ஏற்படுத்திக் கொடுப்பேன். மக்கள் அமைதியாகவும்,  நிம்மதியாகவும், சந்தோஷமாகவும்  வாழவேண்டும். இதுதான், என்னுடையதும் அரசாங்கத்தினதும் உண்மையான நோக்கமாகும்.     இதன் பின்னணியில், நான் இன்று மிகவும் முக்கியம்  வாய்ந்த அமைச்சொன்றைப் பொறுப்பேற்றுள்ளேன். இதன்மூலம், எனக்கு வழங்கப்பட்டுள்ள சகல கடமைகளையும், மிகப்பொறுப்போடு நின்று மக்களுக்காக முன்னெடுத்துச் செல்வேன் என, புதிய மக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமனம் பெற்றுள்ள அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார்.     புதிய மக்கள் பாதுகாப்பு கெபினட்  அமைச்சராக, ஜனாதிபதி முன்னிலையில் (26) சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட  அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர, (30) திங்கட்கிழமை முற்பகல், பத்தரமுல்லையிலுள்ள மக்கள் பாதுகாப்பு அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதன்போது கருத்து

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக, இலங்கை வாழ் சகல மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வேன்

  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக, இலங்கை வாழ் சகல மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வேன் - புதிதாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர் சரத் வீரசேகர නව අමාත්‍ය සරත් වීරසේකර මහතා ආගමික නායකයින්ගේ ආශීර්වාදය ලබාගත්තේය   (අයි.ඒ කාදිර් ඛාන්)    නව මහජන ආරක්ෂක අමාත්‍ය ලෙස ආචාර්ය සරත් වීරසේකර මහතා, අද දින (26) පෙරවරුවේ ජනාධිපති ලේකම් කාර්යාලයේ ජනාධිපති ගෝඪාභය රාජපක්ෂ මැතිතුමාගේ ඉදිරියේ දී දිවුරුම් දීමෙන් අනතුරුව, පස්වරුවේ ගංගාරාමය ඇතුළු විහාරස්ථාන ආගමික නායකයින් බැහැ දෙක  ආශීර්වාදය ලබාගත් අවස්ථාව. (අයි.ඒ. කාදිර් ඛාන්) ( ஐ. ஏ. காதிர் கான் )     இலங்கை வாழ் மக்களைப் பாதுகாப்பதே, இன்றைய காலகட்டத்தின் கட்டாயத் தேவை. அந்த வகையில், எனக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுப் பதவியை,  பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நன்மை கருதி மிகப்பொறுப்புடன் வழி நடாத்திச் செல்வேன். அத்துடன், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வேன் என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார்.    ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் முன்னிலையில், இன்று (26) வியாழக்கிழமை முற்பகல

எமது சுதேச வைத்திய முறைமை கொரோனா ஒழிப்பில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலே வெற்றி கண்டுள்ளது

  எமது சுதேச வைத்திய முறைமை கொரோனா ஒழிப்பில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலே வெற்றி கண்டுள்ளது -  ஆயுர்வேத டாக்டர் நக்பர் தெரிவிப்பு எமது சுதேச வைத்திய முறைமைகள் கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளில் வெளிநாடுகளில் வெற்றி கண்டு இருப்பது தெரிய வந்து உள்ளது என்று நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே. எல். எம். நக்பர் தெரிவித்தார். கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், லக்ஸ்டோ மீடியா ஊடக அமைப்பின் தலைவருமான சமூக சேவையாளர் அஹமட் லெப்பை அன்ஸாரின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது வொலிவோரியன் சுனாமி குடியேற்ற கிராமத்தில் உள்ள எம். எஸ். காரியப்பர் பாடசாலையில் கொரோனா விழிப்பூட்டல் நிகழ்வு வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. பாடசாலை அதிபர் ஏ. எல். ஏ. நாபித் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பேராளர்களாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்ஸவின் இணைப்பாளர்களான தனுஸ பரணமான மற்றும் அமினுடீன், உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜித் மௌலவி, கிராம சேவையாளர் நிஸ்ரில், ஓய்வு நிலை அதிபர் எம். எல். ஏ. எம். கையூம், லக்ஸ்டோ மீடியா ஊடக அமைப்

புதிய அரசியலமைப்பு முன்மொழிவுகள்;

  புதிய அரசியலமைப்பு முன்மொழிவுகள்;  சமூகங்களின் அந்தஸ்தை அர்த்தப்படுத்துவது யார்?  -சுஐப் எம். காசிம்- ராஜபக்ஷக்கள் தலைமையிலான அரசாங்கம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ள கையோடு, வரவு செலவுத் திட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் குறைகளைத் தொட்டுக் காட்டி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தயாராகிறது.  இதன் மற்றொரு வாக்குறுதிதான் புதிய அரசியலமைப்பு. இது கொண்டு வரப்படும் என்று கூறித்தான், ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரு வெற்றியீட்டியது. சிறுபான்மைச் சமூகங்களிலுள்ள அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகளின் அரசியல் கோரிக்கைகளுக்குப் பலமளிக்காத வகையில்தான், புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்பதைத் தூக்கிப் பிடித்ததால், தென்னிலங்கையில் கிடைத்த வெற்றியை ராஜபக்ஷக்கள் மறக்கப் போவதில்லை. எனவே, இதையும் இந்த அரசாங்கம் சாதிக்கவே செய்யும்.  பாராளுமன்றத்தில் உள்ள பலத்தால், எதையும் செய்வதற்குத் தயாராகவுள்ள இந்த அரசு, யாரைத் திருப்திப்படுத்தப் பார்க்கிறது. "பெரும்பான்மை, சிறுபான்மை என்று

தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு கவலை இருந்தது

  #தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு கவலை இருந்தது...நாங்கள் போராடிக்கொண்டிருந்தபோது முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளும் அரசாங்கங்களோடு சேர்ந்து  தரமான அமைச்சு பதவிகளை பெற்று அவர்களுடைய சமூகத்துக்கு அபிவிருத்திகளை அள்ளிக் கொட்டுகின்றார்கள் என்ற கவலைதான் அது...(உண்மையில் அப்படி நடந்ததா என்பது கேள்விக்குறிதான், அவர்களின் வங்கி கணக்கு உயர்ந்தது என்பது மட்டுமே உண்மை.)  இந்த விடயத்தை சம்பந்தன் ஐயா அவர்களும் ஒரு ரீவி பேட்டி நிகழ்ச்சியின்போது கோடிட்டு காட்டியிருந்தார். யுத்தம் முடிவுக்கு வந்ததன் காரணமாக சிங்கள அரசாங்கங்களோடு மேலும் விரிசலை சந்திக்கும் நிலைதான் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் முஸ்லிம் அரசியல் தலைவர்களையும்  ஏதோவொருவகையில் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தங்களுடை பாதையிலே இவர்களையும் சேர்த்து பயணிக்க முயற்சிசெய்து வெற்றியும் கண்டார்கள். இதன் மூலம் முஸ்லிம் அரசியல்வாதிகளும் அவர்கள் விரும்பும் பக்கமே பயணிக்கவும் துவங்கினார்கள். இதற்கு சுமேந்திரன் ஐயா அவர்களின் வழிகாட்டல்களும் மிக கச்சிதமாகவே அமைந்துவந்தன. ஆனால் தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்ப்பு அரசியலில் சிங்

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு –

 BREAKING NEWS தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு – பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது அரசு ! NOVEMBER 17, 2020    பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முன்வைத்தபோது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு அடுத்த ஜனவரி முதல் மேற்கொள்ளப்படுமென்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். இதுவரை அறிவிக்கப்பட்ட முன்மொழிவுகள்.. * 25 பில்லியனிற்கும் அதிகமான மாதாந்த வருமானத்தை கொண்டவர்களுக்கு தற்போதைய 8 வீத வட் வரி தொடரும் * வரிகள் தொடர்பான மக்களின் குறைபாடுகளை விசாரணை செய்வதற்கு புதிய மேல்முறையீட்டு நீதிமன்றம் * இலங்கையின் வரிவருமானத்திற்கு 50 வீதத்திற்கும் மேல் பங்களிப்பு செய்யும் சிகரெட்,தொலைத்தொடர்பு மோட்டார் வாகனங்கள் போன்றவற்றிற்கு விசேட பொருட்கள் சேவைகள் வரி * வெளிநாடுகளில் வாழ்பவர்கள் இலங்கையில் ஆடம்பர தொடர்மாடிகளை கொள்வனவு செய்ய அனுமதி * நாடு முழுவதும் ஐந்து தொழில்நுட்ப பூங்காக்கள் நிறுவப்பட உள்ளன. ரூ. 3,000 மில்லியன் உதவித்தொகை திட்டம் ஆரம்பிக்கப்படும். இந்த திட்டத்தில் பங்கேற்பதன்

சூறிச்சில் நடைபெற்ற "புளொட்" சுவிஸ் தோழர் கலாமோகன் அஞ்சலி நிகழ்வு..

  அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும், யாழ் திருநெல்வேலியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மோகன் அல்லது விஞ்ஞானி அல்லது வணங்காமுடி என அழைக்கப்படும் தோழர்.செல்லத்துரை கலாமோகன்  அவர்கள் யாழ்ப்பாணத்தில் காலமானார் என்பது நீங்கள் அறிந்ததே. கழகத்தின் (புளொட்) மாணவர் அமைப்பில் தளத்தில் செயல்பட்டவரும், கழகத்தின் சுவிஸ்கிளைத் தோழர்களுடன் தன்னை இணைத்துக் கொண்ட காலம் முதல் இலங்கை செல்லும் வரை கழக சுவிஸ் கிளையில் செயல்பட்டவருமான தோழர் கலாமோகனுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளை சார்பில் அஞ்சலிக் கூட்டம் இன்றையதினம் 15.11.2020 ஞாயிற்றுக்கிழமை மதியம் இரண்டு மணியளவில் சூரிச்சில் பல்மேரா மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆரம்பத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ் கிளை பொறுப்பாளர் தோழர் ஆனந்தன் அஞ்சலிச் சுடரை ஏற்றிவைக்க, தோழர் கலாமோகனின் நெருங்கிய நண்பரும், தோழருமான தோழர் தயா ஈகைச்சுடரை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தோழர் கலாமோகனின் மற்றுமோர் நண்பரான திரு.செல்வா அவர்களினால் இறைவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இருநிமிட மௌனஞ்சலியைத்

வஹாபி, பராஷி கலகங்கள்

  நூல் அறிமுகம் (பாகம் 11) ஆய்வாளர் யோகிந்தர் சிக்கந்த் எழுதிய இறைப்பற்றாளர்களின் அரண்(Bastions of the Believers) என்ற நூலின் இரண்டாவது அத்தியாயம் இந்தியாவில் மதரஸாக்கள்- வரலாற்றுப் பரிணாம வளர்ச்சி என்பதாகும். அதன் உபதலைப்பான உலமாக்களின் செயல்பாட்டு எழுச்சி (Rise of Ulama Activism) என்பதில் முக்கியமான சில செய்திகளை அவர் குறிப்பிடுகிறார். முகலாயப் பேரரசின் அதிகாரம் பலமிழந்து கொண்டிருந்தது. அதையொட்டி, மாறிக்கொண்டிருந்த அரசியல் சூழலில், சுல்தான்களின் ஆதரவு பெற்று அரசவையில் இருந்த, உலமாக்களின் இடமும் பலவீனமாகிக் கொண்டிருந்தது. சுல்தான்கள் இஸ்லாத்தின் பாதுகாவலராய், ஒரு பிரதிநிதியாய் நின்றிருந்த இடத்தைச் ‘சாதாரண முஸ்லிம்கள்‘ இட்டு நிரப்பவேண்டிய அரசியல் சூழல் உருவாகியிருந்தது.. ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தின் பாதுகாவலனாக ஆகவேண்டிய நிலை. முஸ்லிம் குடும்பத்தில் பிறந்திருந்தால் மட்டும் போதாது அல்லது முஸ்லிம் பெயரை மட்டும் சுமந்து கொண்டிருந்தால் போதாது. இறை நம்பிக்கை என்ற அம்சமானது, ஒவ்வொரு முஸ்லிமின் சுய ஓர்மையில் பதியவேண்டும் என்ற நிலை அழுத்தம் பெற்றது. அதன்பொருள், இஸ்லாமற்ற அம்சங்கள் ஓரங்கட்டப்

முஸ்லிம்களின் உடல்களை புதைக்கும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் சார்பான விளக்கம் வெளியிடப்பட வேண்டுமென ஞானசார தேரர்

  கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை புதைக்கும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் சார்பான விளக்கம் வெளியிடப்பட வேண்டுமென பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இன்று நாட்டுக்குள் அதிக பேசுபொருளாக கொரோனா விவகாரம் மாற்றமடைந்துள்ளது. இந்த நிலையில், இந்த வைரஸினால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை எரிப்பதா - புதைப்பதா எனும் வாதமும் இடம்பெற்று வருகிறது. அத்தோடு, இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நாம் கடந்த காலங்களில் பல முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்தோம். எனினும், கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, இதனை அந்த அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை. எம்மீது தான் குற்றஞ்சாட்டினார்கள். முஸ்லிம் வாக்குகளை சிதறடிக்க நாம் முயற்சிப்பதாகக் கூறினார்கள். இன்று அண்ணன் செய்த தவறையே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் செய்துள்

இளம் சமாதான ஊடகவியலாளர்களின்2019/20 மீளிணைவு வெற்றிகரமான முறையில் நிறைவு

சில்மியா யூசுப் இளம் சமாதான ஊடகவியலாளர் இளம் சமாதான ஊடகவியலாளர்களின் மீளிணைவானது அண்மையில் நடைபெற்ற மீடியாகோர்ப்ஸ் புலமைப்பரிசில் திட்டத்தில் பங்குபற்றிய நான்கு குழுக்களின் பங்குபற்றலுடன் வெற்றிகரமான முறையில் நடைபெற்றது. குறித்த பயிற்சிகள் முடிவுற்று ஒரு வருடத்தின் பின் சுமார் 90 இளம் ஊடகவியலாளர்களுடன் (47 ஆண்கள், 43 பெண்கள், சிங்களம் 44, தமிழ் 34, முஸ்லீம் 12) என  கொழும்பு Global Tower ஹோட்டலில்  நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இம் மீளிணைவானது IREX (சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பரிவர்த்தனை மையம்) நிறுவன உயர் தலைமைப்பீட உறுப்பினர் திருமதி Jean Mackenzie மற்றும் SDJF (இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம்) நிறுவனத்தின் திட்ட பணிப்பாளர் முகமட் அசாட் ஆகியோரின் பங்குபற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது.  இந் நிகழ்வில்  உரையாட்டிய திருமதி Jean Mackenzie இப் புலமைப்பரிசில் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்த அனைத்து இளம் ஊடகவியலாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில், நீங்கள் தொடங்கியவை இன்றுடன் முடிவடையாது, சமூகத்தை ஒருநிலைப்படுத்தி முன்னேற்ற பாதைக்கு இட்டுச்செல்லும் கதைகள

ராஜ‌ப‌க்ஷாக்க‌ள் இன‌வாதிக‌ள் அல்ல‌. - அலி ச‌ப்ரி ர‌ஹீம்

  கொவிட் தொற்றால் மரணித்த முஸ்லிம் உடலை தகனம் செய்யாமல் இருக்க விரைவில் அரசுடன் பேச்சு வார்த்தை ஊடாக தீர்மானம் எடுக்கப்படும். -புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்.- கொவிட்19 இரண்டாம் அலை தற்போது பாரிய அளவு இலங்கையையும் தாக்கம் அடைய செய்துள்ளது. இதனால் கொவிட் தொற்று மரணமும் அதிகரித்து  வரும் சூழ் நிலையும் நாம் நாளுக்கு நாள் அறிந்து கொண்டு  இருக்கின்றோம். எனவே கொரோனா தாக்கத்தினால் மரணமடைந்த உடல்களை தகனம் செய்வது குறித்து  இது தொடர்பாக முஸ்லிம்களாகிய நாங்கள் குறிப்பாக 20ம் திருத்தத்திற்கு ஆதரவளித்த ஆறு சிறுபான்மை உறுப்பினர்கள் மேலும் இருக்கின்ற  இன்னும் சில உறுப்பினர்கள் இணைந்து அரசாங்கத்துடன் கதைத்து சிறந்த முறையில் உடல்களை தகனம் செய்யாமல் புதைப்பதற்கு  ஒரு வேளைதிட்டத்தை நாம் முன்னெடுக்க தயாராக இருக்கின்றோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி நேர்காணலின் போது தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கூறுகையில்,   சிலர் செய்யும் செயற்பாடே இதற்கு காரணமாகும் ஏனெனில்  வீதி ஒழுங்கு போக்குவரத்து சட்டங்களின் ஒழுங்குமுறைகள் வழங்கினாலும்  அதனை சரியான முறையில் கடைப்பிடிப்பதில்லை. குறிப்பாக நாட