உண்மையில் 20வது திருத்த யாப்பு பாராளுமன்றத்துக்கு வந்த போது அரசுக்கு நேரடி ஆதரவாக 145 மட்டுமே இருந்தது.
அரசில் மொத்தம் இருப்பது 150
அதில் 20ஐ எதிர்ப்பதாக மைத்திரியும் இன்னொரு சுதந்திர கட்சி உறுப்பினரும் விஜயதாச ராஜபக்ஷவும் கூறினர்.
150- 3= 147.
அதனால் 20 தோற்கும் நிலை உறுதியாக தெரிந்தது.
இதற்கிடையில் வாசுதேவவும், விமலும் கொஞ்சம் மிரட்டுவது போல் பேசினர். இவர்கள் எதிர்த்து வாக்களித்தால் என்ன செய்வது என்ற அச்சம் அரசுக்கு இருந்தது.
அவ்வாறு நடந்தால் 145 என்றால் சட்டம் படு தோல்வி. இதனால் எதிர்க்கட்சியிலிருந்தும் உறுப்பினர் பெற வேண்டும் என்ற நிலை அரசுக்கு வந்தது.
இந்த நிலையில் அரச தரப்பு ஹரீசிடம் பேசியது. அவர் சாதகமாக பதில் தந்தார்.
அதே போல் டயானாவும், அரவிந்த குமாரும் அரசை ஆதரிப்பதாக உறுதியாக சொல்லவில்லை. ஆதரிக்கலாம், எதிர்க்கலாம் என்ற நிலை இருந்தது.
ஆனால் அரசை ஆதரிப்பது என்பதில் மு. கா குழு உறுதியாக இருந்தது.
அந்தவகையில் மு. கா, ம.கா உறுப்பினர்கள் 6 பேர் வாக்களித்து 151 என்ற எண்ணிக்கையில் 20 வெற்றி பெற்றது.
கடைசி நேரத்தில் மைத்திரி தவிர மற்றவர்களும், எதிர்க்கட்சி இருவரும் ஆதரித்தனர். 156 ஆகியது.
சில வேளை டயானாவும், அரவிந்தகுமாரும் வராமல் விட்டிருந்த நிலையில் மு.காவும் ம. காவும் ஆதரவளிக்காத நிலை ஏற்பட்டிருந்து விமலும், சு. கட்சி உறுப்பினரும் எதிர்த்திருந்தால் 20 தோல்வியுற்றிருக்கும்.
அரசுக்குள்ளும் எந்தப்புற்றில் எந்த பாம்பு இருக்கும் என எவருக்கும் சொல்ல முடியாது.
இதன் காரணமாக ஹரீசின் வாக்குறுதியை நம்பி அரசு நம்பிக்கையுடன் இருந்தது.
அதனால் ஹரீஸ் தலைமையிலான உறுப்பினர்கள் ஆதரித்ததால்தான் நம்பிக்கையுடன் 20 வெற்றி பெற்றது என்பதே உண்மை.
- முபாறக் அப்துல் மஜீத்
தலைவர், உலமா கட்சி.
செயலாளர் நாயகம்
ஸ்ரீ லங்கா ஐக்கிய காங்கிரஸ்
Post a Comment