Skip to main content

Posts

Showing posts from October, 2020

ஸஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக அறியப்படும் 12 பேருக்கு

ஸஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக அறியப்படும் 12 பேருக்கு நவம்பர் 2 வரை விளக்கமறியல்
சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும் சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக தகவல் வழங்கிய நபருக்கு இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுப்பதாக கல்முனை நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட வழக்கு விசாரணை தேவை ஏற்படின் அழைப்பு விடுக்கப்படும் என கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு நேற்று (19) கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்கண்டவாறு உத்தரவு வழங்கப்பட்டது.
இதன் போது கடந்த தவணையில் அச்சுறுத்தல் தனக்கு விடுக்கப்பட்டதாக தெரிவித்து வாக்குமூலம் வழங்கிய நபர் ஆஜராகவில்லை. அவர் சார்பாக சட்டத்தரணி ஆஜராகி இருந்தார். இந்நிலையில் விசாரணை நடத்திய நீதிவான் எதிர்வரும் தவணைகளில் வாக்குமூலம் வழங்கிய நபர் ஆஜராக தேவையில்லை எனவும் தேவை ஏற்படின் அழைப்பாணை வழங்கப்படும் என குறிப்பிட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை குறித்த வழக்கினை ஒத்தி வைத்தார்.
மேலும் சாய்ந்தமருது தற்கொலை தாக்குத…

28 தமிழ் எம்.பிக்களில் 20 பேர் '20' இற்கு எதிராக போர்க்கொடி! 8 பேர் மட்டுமே ஆதரவு!!

R. Sanath28  தமிழ் எம்.பிக்களில் 20 பேர் '20' இற்கு எதிராக போர்க்கொடி! 8 பேர் மட்டுமே ஆதரவு!!'19' ஐ ஆதரித்த இ.தொ.கா, '20' இற்கும் நேசக்கரம்!!!
9ஆவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 28  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 பேர் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராகவும், 8 பேர் ஆதரவாகவும் வாக்களிக்கவுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி,  தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும்,  ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் எம்.பி., வடிவேல் சுரேஷ் எதிராக வாக்களிக்கவுள்ளனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர். சுதந்திரக்கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினரான அங்கஜன், மொட்டு கட்சியில் உள்ள வியாழேந்திரன், தேசியப்பட்டியல் எம்.பி., சுரேன் ராகவன் ஆகியோரும் 20 இற்கு சார்பாக வாக்களிக்கவுள்ளனர்.
9 ஆவது பாராளுமன்றத்தில் பொதுத்தேர்தலில் மக்களின் அங்கீகாரத்துடன் 25 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு த…

“மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே” – தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!

மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே” – தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!ஊடகப்பிரிவு-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் நடவடிக்கை, வெறுமனே அரசியல் பழிவாங்கல் நோக்குடையது எனவும், 52 நாள் அரசாங்கத்துக்கு உதவாத காரணத்தினால் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கையின் தொடர்ச்சியே இது என்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியதாவது,“கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் மன்னார் வாக்காளர்களை, தமது சொந்த இடமான மன்னாரில் வாக்களிக்க பஸ் வசதிகளை செய்து கொடுத்த விவகாரம் தொடர்பிலேயே, அவரை தற்போது கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அரச உயர்மட்டத்தின் அனுமதியைப் பெற்றே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், குறிப்பிட்ட வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கான பஸ் வண்டி வசதிகளை மேற்கொண்டிருந்தார். எ…

Amazon College Signed MOU with EDHAT(UK) in Association with VTA

Amazon College Signed MOU with EDHAT(UK) in Association with VTA
Amazon College is a well known reputed private Campus located in Bambalapitiya in Sri Lanka has signed an agreement with Edhat (UK) in Association with Vocational Training Authority (VTA) for many sector trainings under the E-Plus Exams Project.Edhat (UK) has signed a MOU with the Ministry of Skills Development, Vocational Education, Research & Innovations to promote many sector trainings for the youth in IT and other industries in Sri Lanka under the E-Plus Exams Project. The students can study the course at any approved E Plus training Center and they can sit for the exam at the Vocational Training Centers, Island wide. The students will be getting a Nationally & Globally Recognized Certificate from this project.The MOU was signed by the Edhat (UK) Country Director Mr. V. Janagan and the Director of Amazon College Mr. Ilham Marikar on 11th September 2020.The Benefits for the Students :
a)       They can study at …

India’s leading brand for compliance announced its entry to Sri Lanka

India’s leading brand for compliance announced its entry to Sri Lanka with the introduction of its global E-Governance and Compliance Platform with a leading Sri Lankan Enterprise Renewal and Change Specialist company on September 30.Aparajitha Corporate Services Private Limited,India’sleading brand for compliance said on September 30 it is entering Sri Lanka in association with Colombo headquartered 3W Consulting –an Enterprise Renewal and Change Specialist – to position its Global E-Governance and Compliance Platform ‘Compfie’ in Sri Lanka’s compliance market.  Aparajitha’s entry marks the first major development for the strategic country partnership between Aparajitha and 3W.  In an online media conference on September 30 to announce the entry, Nagaraj Krishnan, Managing Director, Aparajitha Corporate Service Private Limited said they chose to synergise with Sri Lanka’s 3W due to many factors. “Uniformity of laws in both countries, proximity, cultural fit, opportunity to explore As…

நிரபராதி என்பதாலேயே சகோதரர் ரியாஜ் விடுவிக்கப்பட்டார்"

நிரபராதி என்பதாலேயே சகோதரர் ரியாஜ் விடுவிக்கப்பட்டார்" - வவுனியாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
ஊடகப்பிரிவு-

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வர்த்தகர் இன்ஷாப் இப்ராஹீம், தனது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தார் என்ற காரணத்துக்காகவே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது விசாரணைகளின் பின்னர், நிரபராதியாக இருந்தமையினாலேயே விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரவித்தார்.

வவுனியாவில் இன்று காலை (01) ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

"ஒரு சம்பவத்தில் ஒருவர் குற்றவாளியாக இருந்தால்தான் சிறையிலே அடைப்பது வழமை. அதற்கு நேர்மாறாக குற்றவாளி என்று நிரூபிப்பதற்கு முன்னரேயே எனது சகோதரரை கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்தனர்.

'இரு தினங்களில் விடுவிக்கப்படுவார்' என்று அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழே அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். சுமார் ஐந்தரை ம…