மாடறுப்பு தடை இவ்வாறுதான் அமுலாகும்..----------------------------------------------

சட்டம் இன்னும் அமுலாகவில்லை.


( ஏ.எச்.எம். பூமுதீன் )


இலங்கையில் இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை தடை செய்யும் பிரதமரின் யோசனைக்கு முதலில் ஆளும் கட்சி எம்பீக்களும் பின்னர் அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது.


அமைச்சரவை - அனுமதி வழங்கினால் , மாடறுக்க முடியாது ; சட்டம் அமுலாகிவிட்டது என்பதல்ல அர்த்தம். இது தொடர்பில் - பலருக்கு சந்தேகம் அல்லது தெளிவின்மை இருப்பதை அவதானிக்க முடிகிறது..


மாடறுப்பு தடைச் சட்டம் இன்னும் அமுலாக வில்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்வோம்.


மாடறுப்பு தடைச் சட்ட மூலம் - இனிவரும் நாட்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். நீதி அமைச்சர் என்ற வகையில் அலி சப்ரி - குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிப்பார். 


பின்னர் , சட்ட மூலம் தொடர்பில் விவாதம் இடம்பெறும். இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு - சட்ட மூலம் வெற்றி பெற்றால் மாடறுப்பு தடை அமுலுக்கு வரும். தோல்வியடைந்தால் தொடர்ந்து மாடுகளை அறுக்கலாம்.


பாராளுமன்றத்தில் தற்போது அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதால் நிச்சயம் சட்ட மூலம் வெற்றியே அடையும். இந்த சட்ட மூலத்தை நிறைவேற்ற சாதாரண பலம் போதுமானது. அதாவது -  113 எம்பீக்கள் ஆதரவளித்தால் போதும்.  அரசியலமைப்பு திருத்தத்திற்கு தேவையான மூன்றில் இரண்டு இதற்கு தேவைப்படாது.


145 ஆசனங்களை கொண்டுள்ள பொதுஜன பெரமுன என்ற இன்றைய அரசுக்கு அதாவுல்லா - டக்ளஸ் ( 2 ஆசனம் ) மற்றும் பிள்ளையான் ஆகியோரின் ஆதரவுடன் 149 என்ற எண்ணிக்கையில் எம்பீக்கள் ஆதரவு உள்ளதால் மாடறுப்பு தடை அமுலுக்கு வருவது நிச்சயம்.


இதற்கிடையில் - இந்த மாடறுப்பு தடை யோசனைக்கு எதிராக யாரேனும் நீதிமன்றத்தை நாடினால் ஓரிரு நாட்கள் பின்வாங்கப்படுமே ஒழிய - மற்றும் படி சட்டம் நிறைவேறியே ஆகும். 


எப்படி என்றாலும் - மாடறுப்பு தடை சட்டம் அமுலாக இன்னும் 3 அல்லது 4 அல்லது 5 மாதங்களாவது செல்லும்.


இதற்கிடையில் - பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் பசு வதை தடை சட்டம்  - இறைச்சிக்காக பசுக்களை அறுப்பது தடை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்ற கேள்வியும் மறுபக்கம் எழுந்துள்ளது.


பசுக்களை அறுப்பதில்லைதானே . பசு அறுப்பதற்குத்தான் தடை என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு பதில் - பாராளுமன்றத்தில் குறித்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டு - விவாதம் இடம்பெற்றதன் பின்னர்தான் கிடைக்கும்..


பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் - அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனை இதோ........


பசு வதையை 

தடை செய்தல் !

--------------------------

அமைச்சரவை தீர்மானம் ..


விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு பாரியதாகும்.


பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என்பதும், இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையிலான அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் உள்ளூர் பசும் பால் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு போதுமான பசுக்கள் இல்லாமையால் இந்த தொழிற்துறையின் வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


பசு வதை தொடர்பில் தற்பொழுது நாட்டிற்குள் நடைமுறையில் உள்ள 1958 ஆம் ஆண்டு இலக்கம் 29 இன் கீழான கால்நடை சட்டம், 1893 ஆம் ஆண்டு இலக்கம் 9 இன் கீழான அல்லது கொலை கட்டளைச்சட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட (Joint Act)  ஏனைய சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் திருத்தங்;களை மேற்கொள்வதற்கு முடியாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.


• பசு இறைச்சியை பயன்படுத்தும் போது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்தல் மற்றும் நிவாரண விலைக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.


• விவசாய பணிகளுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாத வயதான நிலைமைக்கு உள்ளாகும் பசுக்கள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.


• இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு உட்பட்டதாக உடனடியாக நடைமுறைபடுத்தும் வகையில் நாட்டில் பசு வதையை தடை செய்தல்


- அரசாங்க தகவல் திணைக்களம் -

     28. 09. 2020

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்