ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
---------------------------------------------- சட்டம் இன்னும் அமுலாகவில்லை. ( ஏ.எச்.எம். பூமுதீன் ) இலங்கையில் இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை தடை செய்யும் பிரதமரின் யோசனைக்கு முதலில் ஆளும் கட்சி எம்பீக்களும் பின்னர் அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை - அனுமதி வழங்கினால் , மாடறுக்க முடியாது ; சட்டம் அமுலாகிவிட்டது என்பதல்ல அர்த்தம். இது தொடர்பில் - பலருக்கு சந்தேகம் அல்லது தெளிவின்மை இருப்பதை அவதானிக்க முடிகிறது.. மாடறுப்பு தடைச் சட்டம் இன்னும் அமுலாக வில்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்வோம். மாடறுப்பு தடைச் சட்ட மூலம் - இனிவரும் நாட்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். நீதி அமைச்சர் என்ற வகையில் அலி சப்ரி - குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிப்பார். பின்னர் , சட்ட மூலம் தொடர்பில் விவாதம் இடம்பெறும். இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு - சட்ட மூலம் வெற்றி பெற்றால் மாடறுப்பு தடை அமுலுக்கு வரும். தோல்வியடைந்தால் தொடர்ந்து மாடுகளை அறுக்கலாம். பாராளுமன்றத்தில் தற்போது அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதால் நிச்சயம் சட்ட மூலம் வெற்றியே அடையும். இந்த சட்ட மூலத்