மட்டுப்படுத்தப்பட்ட முறையில் விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்

 இலங்கை
சில நாடுகளுக்கு தொடர்ச்சியாக விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.இத்தாலியின் மிலான், இங்கிலாந்தின் லண்டன், ஜப்பானின் டோக்கியோ, மாலைத்தீவின் மலே, ஜேர்மனியின் பிரான்ங்பர்ட், பிரான்ஸின் பரிஸ் மற்றும் அவுஸ்ரேலியாவின் சிட்னி ஆகிய நகரங்களுக்கே இவ்வாறு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


குறித்த பகுதிகளுக்கு பயணிக்க விரும்புபவர்கள் காலி, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அலுவலகத்தின் ஊடாக டிக்கெட்டுகளை பதிவு செய்துகொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு 1979 எனும் துரித இலக்கம் அல்லது இணையத்தளம் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு நாடுகளினதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்