BREAKING NEWS

முன்னாள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து 2020 பொதுத்தேர்­தலில் தோல்­வியைத் தழு­வி­ய­வர்கள்

 

2020 பாராளுமன்றத்தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்


எஸ்.என்.எம்.சுஹைல்


ஒன்­ப­தா­வது பாரா­ளு­மன்றத்தேர்­தலில் மக்கள் தீர்ப்பளித்து இரண்டு வாரங்கள் கடந்­து ­விட்­டன. வெற்றி தோல்­விகள் சகஜம், என்­றாலும், தோல்­விக்­கான கார­ணங்கள் கண்­ட­றி­யப்­பட்டு அடுத்த தடவை தவ­று­களைத் திருத்­திக்­கொண்டு பாரா­ளு­மன்றம் செல்லத்தயா­ராக வேண்டும். அத்­தோடு, புதிய முகங்கள் பாரா­ளு­மன்­றத்­துக்குச் செல்­லும் ­போது, யாரா­வது தோற்­றுப்­போ­க ­வேண்­டிய நிலை­மையும் ஏற்­ப­டு­கின்­றது. அது ­த­விர, பிரிந்து கேட்­ட­மை­யி­னாலும் பலர் தோல்­வியைச் சந்­தித்திருக்­கின்­றனர்.


முன்னாள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து 2020 பொதுத்தேர்­தலில் தோல்­வியைத் தழு­வி­ய­வர்கள்

­தொ­டர்­பான பார்வை இது.


ஏ.எச்.எம்.பௌஸி


1959 ஆம் ஆண்டு அர­சி­யலில் பிர­வே­சித்த மூத்த அர­சி­யல்­வா­தியே ஏ.எச்.எம்.பௌஸி. மாளி­கா­வத்தை வட்­டா­ரத்தில் தொடர்ந்தும் 1960, 1962 மற்றும் 1965 ஆம் ஆண்­டு­க­ளிலும் போட்­டி­யிட்டார். 1968 ஆம் ஆண்டு கொழும்பு மாந­கரின் பிரதி மேய­ரானார். 1973 ஆம் ஆண்டு கொழும்பு மாந­கர சபையின் மேய­ரானார். ஐக்­கிய தேசியக் கட்சியூடா­கவே இவரின் பிர­தி­நி­தித்­துவ அர­சியல் பயணம் ஆரம்­ப­மா­னது. எனினும், 70 களின் இறுதிப்பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சி­யுடன் இணைந்­து ­கொண்டார்.


ஸ்ரீமாவோ பண்­டார நாயக்­க­வுடன் நெருக்­க­மான அர­சியல் தொடர்­பு­டைய இவர், 1993 ஆம் ஆண்டு மேல்­ மாகாண சபைத்தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி­ பெற்றார். பின்னர் 1994 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்தலில் போட்­டி­யிட்டு வென்றார். 2000, 2001, 2004, 2010 ஆகிய தேர்­தல்­க­ளிலும் போட்­டி­யிட்டு சுதந்­திரக் கட்சி சார்பில் தொடர்ந்து வெற்­றி­ பெற்ற முஸ்லிம் பிர­தி­நி­தி­யாக இவர் திகழ்ந்தார். எனினும், 2015 ஆம் ஆண்டு இவ­ருக்கு தேர்­தலில் போட்­டி­யிட சந்­தர்ப்பளிக்­காது, தேசியப்பட்­டி­யலில் உள்­ளீர்க்­கப்­பட்டார்.


சுதந்­திரக்கட்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் தொடர்ந்தும் அமைச்சுப்பத­விகள் வகித்த சிரேஷ்ட அரசியல்­வா­தி­யான ஏ.எச்.எம்.பௌஸி அக்­கட்­சியில் போட்­டி­யிட்டு 1 இலட்­சத்­துக்கும் அதி­க­மான விருப்பு வாக்­கு­களைப் பெற்­ற­வ­ரா­கவும் திகழ்ந்தார்.


எனினும், 2018 ஆம் ஆண்டு அர­சியல் சூழ்ச்சி முன்­னெ­டுக்­கப்­பட்டு நல்­லாட்சி அர­சாங்கம் ஜன­நா­ய­கத்­துக்கு முர­ணாக அப்­போ­தைய ஜனா­தி­ப­தி­யினால் பதவி கவிழ்க்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, அதனை எதிர்த்து சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேறி ஐக்­கிய தேசியக்கட்­சி­யுடன் இணைந்தார். இவரின் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை பறிப்­ப­தற்கும் கடந்த அர­சாங்­கத்தில் தீவிர முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனினும், அது முறி­ய­டிக்­கப்­பட்­ட­தென்றே கூற வேண்டும். இம்­முறை தேர்­தலில் அவர் ஐக்­கிய மக்கள் சக்தி சார்பில் போட்­டி­யிட்டு சொற்ப வாக்­கு­களால் தோல்வி கண்டார். ஐ.ம.ச. க்கு இன்னும் 3 ஆயிரம் வாக்­குகள் கிடைத்­தி­ருப்பின்.  கொழும்பு மாவட்­டத்­தி­லி­ருந்து 7 ஆவது அதி­க­மான விருப்பு வாக்கைப்பெற்ற பௌஸி பாரா­ளு­மன்ற நுழைவு வாய்ப்பை மீண்டும் பெற்­றி­ருப்பார்.


அலி ஸாஹிர் மௌலானா


சுயா­தீனக்குழு மூல­மாக ஏறாவூர் பட்­டின சபைத்தேர்­தலில் போட்­டி­யிட்டு வென்று அர­சி­யலில் தடம்­ப­தித்­த­வர் தான் அலி­சாஹிர் மௌலானா. 1989 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசியக்கட்சியூடாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு வென்று முதன் முத­லாக பாரா­ளு­மன்றம் நுழைந்தார். 1994, 2000, 2001 ஆம் ஆண்டு தேர்தல்களிலும் ஐ.தே.க. சார்பில் மட்­டக்­க­ளப்பில் போட்­டி­யிட்டு வென்றார். 2004 ஆம் ஆண்டு தேர்­தலில் அவர் தோல்­வி­ய­டைந்தார்.


யுத்த வெற்­றியின் ஆரம்பப்புள்­ளி­யான விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்­தி­லி­ருந்து கரு­ணாவைப் பிரித்த விடயத்தின் முக்­கிய புள்­ளி­யாக இவரே காணப்­ப­டு­கின்றார். குறித்த காலப்­ப­கு­தியில் அப்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் ஆலோ­ச­க­ராகச் செயற்­பட்ட இவர், யுத்த வெற்­றிக்கு பங்­க­ளித்த முக்­கிய நப­ராவார். 2011 ஆம் ஆண்டு நகர சபைத்தேர்­தலில் வென்று நகர பிதா­வாகச் செயற்­பட்­ட­துடன், 2012 மாகாண சபைத் தேர்தலில் போட்­டி­யிட்டார். 2015 பொதுத்தேர்­தலில் மு.கா. சார்பில் போட்­டி­யிட்டு வெற்­றி ­பெற்று மு.கா.விற்கு பாரா­ளு­மன்­றத்தில் கட்சித்தலைமை அந்­தஸ்தையும் பெற்­றுக்­கொ­டுத்தார். கடந்த அர­சாங்­கத்தில் இராஜாங்க அமைச்­ச­ராகச் செயற்­பட்ட அவர், இம்­முறை தேர்­தலில் அவர் தோல்­வி­ய­டைந்தார்.


எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ்


காத்­தான்­கு­டியைச்சேர்ந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் இம்­முறை ஐக்­கிய சமா­தானக் கூட்­ட­மைப்பில் வண்ணத்திப்பூச்சி சின்­னத்தில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் போட்­டி­யிட்­டி­ருந்தார்.


1988 ஆம் ஆண்டு மாகாண சபைத்தேர்­தலில் வெற்­றி ­பெற்று முஸ்லிம் காங்­கிரஸ் மூல­மாக பிர­தி­நி­தித்­துவ அர­சி­யலை மேற்­கொண்ட அவர், 1989, 1994 ஆம் ஆண்­டு­களில் மு.கா. ஊடாக பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட்டு வென்றார். பின்னர் சுதந்­திரக்கட்­சியில் இணைந்த அவர், 2001 ஆம் ஆண்டு தேர்­தலில் மீண்டும் வென்றார். 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்­தலில் தோல்­வயை தழு­விய அவர், 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்­தலில் வென்று மாகாண அமைச்­ச­ரானார். 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்­தலில் அ.இ.ம.கா. சார்பில் வெற்­றிலைச் சின்­னத்தில் போட்­டி­யிட்டு வென்ற அவர், 2015 இல் மீண்டும் வெற்­றிலை சின்­னத்தில் போட்­டி­யிட்டார். அந்தத் தேர்­தலில் தோல்வியடைந்­தாலும், தேசியப்பட்­டி­யலில் மீண்டும் பாராளுமன்­றத்­திற்குத் தெரி­வாகி இரா­ஜாங்க அமைச்சு மற்றும் அமைச்சுப்பத­வி­களை வகித்தார். 2019 ஜனவ­ரியில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்த அவர், கிழக்கு மாகாண ஆளு­ன­ராக பதவி பெற்றார். இவ்­வாறு கடந்த காலங்­களில் கூடு­த­லான உயர்­ப­த­வி­களை வகித்த ஹிஸ்­புல்லாஹ் இம்முறை தேர்­தலில் தோல்­வி­ய­டைந்தார்.


பஷீர் சேகு­தாவூத்


1989 இல் ஈரோஸ் ஊடாக தனது பிர­தி­நிதித்­துவ அர­சியல் பய­ணத்தை ஆரம்­பித்த முன்னாள் போரா­ளி­யான பஷீர் சேகு­தாவூத், ஏறா­வூரைச்சேர்ந்­தவர். 1994 இல் மு.கா.வில் இணைந்த அவர் 2001 ஆம் ஆண்டு தேசியப்பட்டியலூடாக பாரா­ளு­மன்­றத்­திற்குத் தெரி­வு ­செய்­யப்­பட்டார். 2003 இல் மு.கா.வின் தவி­சா­ள­ரான அவர், 2004 இல் மீண்டும் தேசி­யப்­பட்­டியல் உறுப்­பி­ன­ராகத் தெரி­வானார். 2008 இல் கிழக்கு மாகாண சபைத்தேர்­தலில் போட்­டி­யிட்டு வென்ற அவர், 2010 இல் மு.கா. சார்பில் ஐ.தே.மு.வின் யானைச் சின்­னத்தில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு வெற்­றி ­பெற்றார். மு.கா. மஹிந்த அர­சாங்­கத்­துடன் இணைந்­து­கொண்­டதன் பின்னர் அவர் பிர­தி­ய­மைச்­ச­ரானார், பின்னர் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்டார். 2015 பொதுத்தேர்­தலில் அவர் தேசியப்பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்­டாலும், அவ­ருக்கு எம்.பி. ஆகும் சந்­தர்ப்பம் மு.கா.வினால் வழங்­கப்­ப­ட­வில்லை.


ஐக்­கிய சமா­தானக்கூட்­ட­மைப்பின் தவி­சா­ள­ரான அவர், இம்­முறை மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் வண்ணத்துப்பூச்சி சின்­னத்தில் போட்­டி­யிட்டு தோல்­வி­ய­டைந்தார்.


கே.ஏ.பாயிஸ்


முஸ்லிம் காங்­கிரஸூடாக அர­சியல் பிர­வேசம் மேற்­கொண்­டவர் கே.ஏ.பாயிஸ். புத்­தளம் நகர சபைத் தேர்தலில் போட்­டி­யிட்டு வெற்­றி ­பெற்றார். நகர பிதா­வா­கவும் பதவி வகித்தார். இந்­நி­லையில், 2001 ஆம் ஆண்டு பொதுத்தேர்­தலில் ஐ.தே.மு. வின் யானைச் சின்­னத்தில் மு.கா. சார்பில் போட்­டி­யிட்ட பாயிஸ் தோல்வி­ய­டைந்தார். 2004 இலும் மீண்டும் தோல்­வியைச் சந்­தித்­த­துடன், அவ­ருக்கு மு.கா. தேசியப்பட்­டியல் ஆச­னத்தை வழங்­கி­யது. குறிப்­பிட்ட தேசியப்பட்­டியல் எம்.பி. பத­வியைப் பெற்­றுக்­கொண்டு அவர் மஹிந்த அர­சாங்­கத்­துடன் 2007 ஆம் ஆண்டு இணைந்து பிர­தி­ய­மைச்சுப் பத­வி­யையும் பெற்­றுக்­கொண்டார். அத்துடன், 2010 இல் ஐ.ம.சு.மு.வில் போட்­டி­யிட்டு தோல்­வி­ய­டைந்தார். பின்னர் மீண்டும் புத்­தளம் நக­ர ­சபைத் தேர்­தலில் ஐ.ம.சு.மு. சார்பில் போட்­டி­யிட்டு வென்று நகர பிதா­வானார். இந்­நி­லையில், 2015 ஆம் ஆண்டு புத்தளம் மாவட்­டத்­திற்­கான முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை உறுதி செய்­து­கொள்­வ­தற்­காக அவர் சுயேட்சைக் குழுவில் கள­மி­றங்கி போட்­டி­யிட்ட போதிலும், அவரால் பிர­தி­நி­தித்­து­வத்தைப் பெற்­றுக்­கொள்ள முடியவில்லை. இம்­முறை 2020 இலும் பாயிஸ் முஸ்லிம் தேசியக்கூட்­ட­மைப்பில் போட்­டி­யிட்டு விருப்பு வாக்குப்பட்­டி­யலில் இரண்­டா­மி­டத்­தையே பெற்றார். இதனால் அவர் மீண்டும் பாரா­ளு­மன்ற வாய்ப்பை இழந்தார்.


அப்­துல்லாஹ் மஹ்ரூப்


எம்.எச்.ஈ. மஹ்­ரூ­பிற்குப்பிறகு திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் ஐ.தே.க. சார்பில் வெற்­றி ­பெற்­றவர் அப்துல்லாஹ் மஹ்ரூப். 2000, 2001 ஆம் ஆண்டு தேர்­த­ல்களில் ஐ.தே.க.வில் போட்­டி­யிட்டு வெற்­றி­ பெற்­றாலும்,  2004 இல் தோல்வி கண்டார். 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி ­பெற்ற மஹ்ரூப் மாகாண சபை உறுப்­பி­ன­ரானார். எனினும், 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்­தலில் ஐ.தே.க. மு.கா.வுடன் கூட்­டணி சேர்ந்­ததால் தேர்­தலில் போட்­டி­யிட மறுத்­து ­விட்டார். இத­னா­லேயே, இம்ரான் தேர்­தலில் கள­மிறக்­கப்­பட்டார். பின்னர் மீண்டும் ஐ.தே.க.வுடன் இணைந்து பய­ணித்த மஹ்ரூப் 2012 ஆம் ஆண்டு மாகாண சபைத்தேர்­தலில் போட்­டி­யிட்­டார். எனினும் அவரால் வெற்­றி ­பெற முடி­ய­வில்லை.


2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்­தலில் ஐக்­கிய தேசியக்கட்­சியின் யானைச் சின்­னத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்பில் போட்­டி­யிட்டு மாவட்­டத்தில் அதி­கூ­டிய வாக்­கு­க­ளுடன் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­கினார். பிர­தி­ய­மைச்­ச­ராக ஐ.தே.க. அர­சாங்­கத்தில் பதவி வகித்த அப்­துல்லாஹ் மஹ்ரூப் இம்­முறை தேர்­தலில் தோல்­வியை சந்­தித்தார்.


அமீர் அலி


2004 ஆம் ஆண்டு மு.கா. சார்பில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு வெற்­றி ­பெற்று தனது பாராளுமன்ற அர­சியல் பய­ணத்தை ஆரம்­பித்­தவர் அமீர் அலி. குறு­கிய காலத்­திற்குள் கட்சி தாவிய அவர்,  மஹிந்த அர­சாங்­கத்தில் அமைச்­ச­ரவை அந்­தஸ்தறற அனர்த்த முகா­மைத்­துவம், மீள்­கு­டி­யேற்ற அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டார். 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்­தலில் தோல்­வி­யுற்ற அவர் 2012 மாகாண சபைத்தேர்­தலில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்பில் போட்­டி­யிட்டு வென்றார். எனினும், 2014 இன் கடைசிப்பகு­தியில் ஐ.ம.சு.கூ.வின் தேசியப்பட்­டியில் (மர்ஹூம் ஏ.எச்.எம்.அஸ்வர் பதவி விலக) பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மீண்டும் பாரா­ளு­மன்­றத்­திற்கு நிய­மிக்­கப்­பட்ட அவர், பொது எதி­ர­ணி­யுடன் இணைந்து மைத்­தி­ரி­பால சிறிசே­ன­வுக்கு ஆத­ரவை வழங்­கினார். 2015 பொதுத்தேர்­தலில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் நல்­லாட்­சிக்­கான ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் யானைச் சின்­னத்தில் அ.இ.ம.கா. சார்பில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் போட்டி­யிட்டு நேர­டி­யாக தெரி­வானார். இம்­முறை ஐக்­கிய மக்கள் சக்­தியின் தொலை­பேசி சின்­னத்தில் அ.இ.ம.கா. சார்பில் போட்­டி­யிட்­டாலும் அவர் தோல்வி கண்டார்.


எம்.ஐ.எம்.மன்சூர்


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் நீண்­ட ­கால உறுப்­பி­ன­ரான எம்.ஐ.எம். மன்சூர் சம்­மாந்­துறை பிர­தேச சபை உறுப்­பி­ன­ராக அர­சியல் பய­ணத்தை ஆரம்­பித்தார். பின்னர் சிறி­து­ காலம் பிர­தேச சபைத் தவி­சா­ள­ராக செயற்­பட்டார். 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்­றி ­பெற்ற அவர், 2012 ஆம் ஆண்டு மாகாண சபைத்தேர்­த­லிலும் அம்­பாறை மாவட்­டத்தில் கூடு­த­லான வாக்­கு­க­ளுடன் வெற்­றி­பெற்று மாகாண சுகா­தார அமைச்­ச­ரா­கவும் பதவி வகித்தார்.


இந்­நி­லையில், 2015 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத்தேர்­தலில் நல்­லாட்­சிக்­கான ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் யானை சின்­னத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் போட்­டி­யிட்டு வெற்­றி ­பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.


இம்­முறை பொதுத்தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சக்­தியின் தொலை­பேசி சின்­னத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் போட்­டி­யிட்டு இரண்­டா­யிரம் வாக்கு வித்­தி­யா­சத்தில் தோல்­வியை சந்­தித்தார்.


எம்.எஸ்.எம்.அஸ்லம்


மேல்­ மா­காண சபை உறுப்­பி­ன­ராக இரண்டு தட­வைகள் பதவி வகித்­த­வர் தான் மொஹமட் சலீம் மொஹமட் அஸ்லம். இவர் பேரு­வ­ளையைச்சேர்ந்த முஸ்லிம் காங்­கிரஸ் முக்­கி­யஸ்­த­ராவார். களுத்­துறை மாவட்­டத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இவர், 2010 ஆம் ஆண்டு தேர்­த­லின்­ போது ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் யானை சின்­னத்தில் போட்­டி­யிட்­ட­ போதும், வெற்­றி ­பெ­ற­வில்லை, எனினும், அவ­ருக்கு மு.கா. தலைமை தேசி­யப்­பட்­டி­யலை வழங்கி பாரா­ளு­மன்­றத்­திற்கு உள்­ளீர்த்­தது.


அவர் 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்­த­லிலும் ந.ஐ.தே.மு.வில் மு.கா. சார்பில் போட்­டி­யிட்டு தோல்வியடைந்தார். இம்­முறை பொதுத்தேர்தல் ஐக்­கிய மக்கள் சக்­தியின் தொலை­பேசி சின்­னத்தில் மு.கா. சார்­பாக போட்­டி­யிட்­ட ­போ­திலும், கணி­ச­மான விருப்பு வாக்கை பெற்­றுக்­கொள்­ளா­மை­யினால் அவ­ருக்கு பாரா­ளு­மன்ற பிர­வேசம் கிடைக்­க­வில்லை.


ஹுனைஸ் பாரூக்


மன்னார், முச­லியைச்சேர்ந்த ஹுனைஸ் பாரூக் இடம்­பெ­யர்ந்த வட­மா­காண முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்தவ­ராவார். சட்­டத்­த­ர­ணி­யான ஹுனைஸ் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பணிபு­ரிந்­த­வ­ராவார்.


2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்­தலில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் வெற்­றிலைச்சின்­னத்தில் போட்­டி­யிட்டு முதன் முறை­யாக பாரா­ளு­மன்றம் நுழைந்தார். 2014 இல் கட்சித்தலை­மை­யுடன் முரண்­பட்ட அவர், சில காலம் சுயா­தீ­ன­மாகச் செயற்­பட்டார். அத்­துடன், மஹிந்த அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேறி ஐக்­கிய மக்கள் சக்­தி­யுடன் இணைந்த முத­லா­வது பாரா­ளு­மன்ற உறுப்பினரா­கவும் இவரே திகழ்ந்தார்.


எனினும், 2015 பொதுத்தேர்­த­லின் ­போது ஐக்­கிய தேசியக்கட்­சி­யுடன் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கூட்டணி அமைத்­த­தனால் அந்தக் கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேறி ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து தேர்­தலில் போட்­டி­யிட்டார். எனினும், அக்­கட்­சிக்கு வன்­னியில் ஒரு ஆசனம் கிடைத்தது. ஆனாலும், அவரால் பாரா­ளு­மன்றம் பிர­வே­சிப்பதற்கான விருப்பு வாக்குகளை பெற முடியவில்லை.


இந்­நி­லையில், அவர் பின்னர் முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் இணைந்­து ­கொண்டார். அக்­கட்சி சார்பில் இம்­முறை பொதுத்தேர்­த­லின் ­போது வன்னி மாவட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சக்­தியின் தொலை­பேசி சின்­னத்தில் போட்டியிட்டு இரண்­டா­வது அதிக விருப்பு வாக்­கு­களைப் பெற்றார். எனினும், அவ­ருக்கு பாரா­ளு­மன்றம் பிரவே­சிக்கும் சந்­தர்ப்பம் இம்­மு­றையும் கிட்­ட­வில்லை.


எஸ்.எம்.எம்.இஸ்­மாயில்


சம்­மாந்­து­றையைச்சேர்ந்த எஸ்.எம்.எம்.இஸ்­மாயில் இரண்டு தட­வைகள் தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் உப­வேந்­த­ராக நிய­மிக்­கப்­பட்­ட­வ­ராவார். 2013 களுக்குப் பின்னர் அர­சி­யலில் ஈடு­பட்ட அவர், 2015 ஆம் ஆண்டு அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்பில் அதன் மயில் சின்­னத்தில் முதன் முறை­யாக பொதுத்தேர்­தலில் போட்­டி­யிட்டார். சம்­மந்­து­றையில் பெரும் ஆத­ரவு கிடைத்த நிலையில், கட்சி சொற்ப வாக்­கு­களால் பிரதிநிதித்­து­வத்தை இழந்­தது. எனினும், கட்­சிக்கு கிடைத்த தேசியப்பட்­டியலூடாக இரண்­டா­வது தவணைக் காலப்­ப­கு­திக்­காக 2 வரு­டங்கள் அவர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக அ.இ.ம.கா.வினால் நிய­மிக்­கப்­பட்டார்.


2018 ஆம் ஆண்டு அர­சியல் மாற்றம் இடம்­பெற்ற போது இவர் மஹிந்த தரப்­புடன் இணைந்து பிர­தி­ய­மைச்சு பத­வியை பெற முயற்­சித்­த­தாக குற்­றச்­சாட்­டுகள் இருக்­கின்ற நிலையில், பாரா­ளு­மன்றம் கலைப்ப­தற்கு சில தினங்­க­ளுக்கு முன்னர் இவர் அ.இ.ம.கா. விலி­ருந்து விலகி மஹிந்த தரப்­புடன் நெருங்கிச் செயற்­ப­ட­லானார். இஸ்­மாயில் பொது­ஜன முன்­ன­ணி­யுடன் இணையக்கூடும் என எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில், அவர் அதாவுல்லாஹ் தலை­மை­யி­லான தேசிய காங்­கி­ரசில் இணைந்­து­ கொண்டார். எனினும், அம்பாறையில் தே.கா. – ஸ்ரீல.பொ.ஜ.மு. கூட்டணி அமைப்பதில் சிக்கல் நிலையேற்பட்டது. இதனால் தே.கா.வின் குதிரை சின்னத்தில் போட்டியிட்டு அவர் இம்முறையும் தோல்வியடைந்தார்.


ஏ.எல்.எம்.நஸீர்


பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ராக அம்­பாறை மாவட்­டத்தில் பல பகு­தி­க­ளிலும் கட­மை­யாற்­றி­யவர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம்.நஸீர். இவர் 2011 ஆம் ஆண்டு உள்­ளூ­ராட்சி சபைத்தேர்­த­லின்­போது முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் போட்­டி­யிட்டு அட்­டா­ளைச்­சேனை பிர­தேச சபைத் தவி­சா­ள­ரானார். குறுகிய காலம் தவி­சா­ள­ராக சேவை­யாற்­றிய இவர், 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்­தலில் மு.கா. சார்பில் போட்­டி­யிட்டு வெற்­றி ­பெற்று மாகாண சபை உறுப்­பி­ன­ரானார். 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்­த­லின் ­போது அவர் மு.கா.வின் தேசியப்பட்­டி­யலில் உள்­ளீர்க்­கப்­பட்­டி­ருந்தார். குறித்த பொதுத்தேர்­தலில் மாகாண அமைச்­ச­ராக இருந்த சம்­மாந்­துறை மன்சூர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராகத் தெரி­வு ­செய்யப்பட்டதை­ய­டுத்து, அவர் வகித்த மாகாண சுகா­தார அமைச்சு பொறுப்பு நஸீருக்கு வழங்­கப்­பட்­டது.


ஏற்­கனவே, அட்­டா­ளைச்­சே­னைக்கு வழங்­கிய உறு­தி­மொ­ழிக்­க­மைய 2017 இன் இறு­தியில் தற்­கா­லிக தேசியப்பட்­டியல் உறுப்­பினர் சல்மான் பதவி விலகி, அந்த வெற்­றி­டத்­திற்கு ஏ.எல்.எம்.நஸீர் நியமிக்கப்பட்டார்.


இந்­நி­லையில், அவர் இம்­முறை பொதுத்தேர்­த­லின் ­போது ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் மு.கா. சார்பில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.


Vidivelli

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar