முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
திருகோணமலை கோணேஸ்வர கோயிலுக்கும் பௌத்த மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த இடத்தில் பௌத்த ஆலயம் இருந்தது என்ற தேரரின் கருத்து சரியான ஆதாரமற்றதாகும்.
இலங்கைக்கு சிங்கள மக்களின் தலைவன் விஜயன் வந்தது சுமார் 2800 வருடங்களுக்கு முன்பாகும். அதற்குப்பின் அதாவது இற்றைக்கு 2500 வருடத்துக்கு முன்புதான் இலங்கைக்கு பௌத்த மதம் வந்தது.
பௌத்த மதம் வருமுன்பே இங்கு மனிதர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் யாருமே பௌத்தர்களாக இருக்கவில்லை. அதே போல் விஜயன் வருவதற்குமுன்பும் இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்தனர்.
இங்கு வாழ்ந்த குவேணி விஜயனையும் அவனது 700 தோழர்களையும் சண்டையிட்டு கைது செய்தாள் என்றால் குவேனியுடன் பெரும் படை இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது.
இந்தக்குவேனி யார்? அவள் பௌத்தமதத்தை சார்ந்தவள் அல்ல. காரணம் அவள் இறந்து 200 வருடத்தின் பின்தான் பௌத்தம் இலங்கைக்கு வந்தது. அப்படியானால் அவள் யார்?
எம்மை பொறுத்தவரை முதல் மனிதன் ஆதம் இலங்கையில் கால் வைத்தது முதல் இங்கு வாழ்ந்த ஆதி வாசிகளில் ஒருத்தியே குவேனி. ஆதி வாசி என்ற பெயரே ஆதம் வாரிசு என்பதன் திரிபாகும். ஆதம் பௌத்தராக, இந்துவாக, கிறிஸ்தவராக இருக்கவில்லை. அவர் முஸ்லிமாக இருந்ததாக முஸ்லிம் வரலாற்று நூல்கள் சொல்கின்றன.
அந்த ஆதமின் வாரிசில் வந்தவனே இராவணன். இராவணன் பற்றிய கதைகளில் பல பொய்யான புணைவுகளும் உண்டு. பொதுவாக ஒரு மனிதனின் சரித்திரத்தை பல புணைவுகள் கொண்டு சொல்வது அந்நாட்களில் வழமை.
ஆனாலும் இராவணன் என்ற முஸ்லிம் மன்னன் வாழ்ந்திருக்கலாம் என்பதை ஒரேயடியாக மறுக்க முடியாது. ராவணன் அல்லது ராவண் என்ற பெயர் கூட தமிழோ, சிங்களமோ இல்லை. அதே பெயரில் அதாவது பிராவுண் எகிப்தில் வாழ்ந்த மன்னர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் பலர் முஸ்லிம்கள். இடையில் வந்த சிலர் இறைவனை மறுத்து தாமே இறைவன் என்றதால் மோசா என்ற இறை தூதரை இறைவன் அனுப்பி அவனை திருத்த முயற்சி எடுக்கப்பட்டது. அதில் அவன் தண்டிக்கப்பட்டான்.
இவ்வறான ஒரு வரலாறே ராமன் என்ற ரஹ்மான், சீதா என்ற செய்யிதா, அனுமான் என்ற நூமான், ராஇனன் என்ற ராவண் என்பவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் கதை என்பது எனது அபிப்பிராயம். எனது இக்கருத்தை நான் 15 வருடங்களாக சொல்லி வருகிறேன். அதனை தர்க்க ரீதியாக யாராலும் மறுக்க முடியவில்லை. மாறாக நக்கலடிப்பதை மட்டுமே காண்கிறோம். உண்மைகள் முதலில் நக்கலடிக்கப்படும் என்பது உலக வரலாறு.
இந்த வகையில் இலங்கைக்கு பௌத்த மதம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கையில் 2600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோணேஸ்வரர் கோயிலில் எப்படி பௌத்த் ஆலயம் இருந்திருக்கும்? இது பிழையான கருத்தாகும்.
ராவண் என்பவன் சம்பந்தப்பட்ட, இறுதிக்காலத்தில் அவன் வாழ்ந்த திருகோணமலையில் உள்ள கோணேஸ்வர கோயிலில் ராவணன் வெட்டும் உள்ளது. கண்ணியாவில் உள்ள 40 அடி சமாதி என்பது இரு முஸ்லிம் நல்லடியார்களின் சமாதிகள் என ஆயிரம் ஆண்டுகளாக முஸ்லிம்கள் அதை பராமரித்து வந்துள்ளனர்.
அதுகடந்த 30 வருட கால யுத்தத்தில் சேதமாக்கப்பட்டது. அவை இராவணனின்தும் அவன் தாயினதும் சமாதிகள் என இந்திய சீக்கிய ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
40 அடி மனிதன் எனும் போது அந்த மனிதனின் வரலாறு என்பது நாற்பதினாயிரம் வருடத்துக்கு முற்பட்டதாகும்.
முதல் மனிதனும் முதல் முஸ்லிமுமான ஆதம் 60 அடி உயரத்தில் படைக்கப்பட்டார் என முஹம்மது நபி (சல்) சொல்லியுள்ளதோடு அதன் பின் மனிதனின் உயரம் படிப்படியாக குறைந்ததாகவும் சொல்லியுள்ளனர்.
ஆகவே இதுவெல்லாம் ஆய்வுக்குரிய விடயமாக இருக்கும் போது கோணேஸ்வர கோயிலில் பௌத்த ஆலயம் இருந்தது என்ற கருத்தை சில தேரர்கள் முன் வைப்பது இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிப்பதாகும். இன்றைய காலத்தில் கோணேஸ்வர கோயில் இந்துக்களின் கோயிலாகவே சமீப வரலாறு கருதுவதால் நாட்டின் இன ஐக்கியம் கருதி அதனை அவ்வாறே இந்துக்களுக்கு விட்டு விடும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.
- முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சித்தலைவர்.
10.7.2020
Comments
Post a comment