Skip to main content

இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!!

  முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!!  இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது..  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை


அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை,  அடிப்படைவாதிகள் ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டு ஒருபோதும் அரசாங்கம் அமைக்கப்படவும் மாட்டாது
- பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ்

( ஐ. ஏ. காதிர் கான் )

   அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாக, சில கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களில் மும்முரமாக  ஈடுபட்டு வருவதாக நான் அறிகிறேன். அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், அரசாங்கம் ஒருபோதும் இனவாதமாகச் செயற்படவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை  என, கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.
அடிப்படைவாதிகள் மற்றும்  ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டு ஒருபோதும் அரசாங்கம் அமைக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தையும் மக்களுக்கு வழங்குகின்றோம். இவ்வாறான நிலை ஏற்படாது என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
   கண்டி, எலமல்தெனிய, பொதுஜன பெரமுன பிரதான காரியாலயத்தில் நடைபெற்ற  செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின்போதே, அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
   அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
   எதிர்வரும்  பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெறுவது நூறு வீதம் உறுதியாகியுள்ளது. இதில் எவ்வித சந்தேகங்களும் கிடையாது. இம்முறை மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றி பெறச் செய்வதே எமது இலக்கு. இந்த அமோக வெற்றியில்  முஸ்லிம்களும் பங்குதாரர்களாக ஆக வேண்டும்.
   இந்த நாட்டில் வீடு, மின்சாரம், குடிநீர் பிரச்சினைகள் நிறையவே உண்டு. இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய சக்தி, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு மாத்திரமே உள்ளது. இந்நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதில் அவர் திறமைசாலியாக விளங்குகிறார். இந்த தைரியம் அவரிடம் உண்டு. அத்துடன், ஜனாதிபதியும் பிரதமரும் இந்நாட்டின் அபிவிருத்தியில் பங்காளிகளாகச் செயற்படுவார்கள் என்பதிலும் எவ்வித ஐயமுமில்லை.
   எனவே, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிப்பவர்களைக் கொண்ட அரசாங்கம் ஒன்றை அமைப்பதன் மூலமே, அவரின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லலாம். அதற்காக, எமக்கு நிலையான அரசாங்கம் ஒன்று தேவை. இந்நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொண்டால்தான், ஜனாதிபதியின் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லலாம். இதற்கு முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைவரினது ஆதரவும் அவசியம் என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Comments

Popular posts from this blog

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க  தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற  முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின்  மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017    300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத