Posts

Showing posts from July, 2020

இம்முறை பெரும்பாலும் க‌ல்முனையை தேசிய‌ காங்கிர‌சே வெல்லும் நிலை உள்ள‌து.

Image
அம்பாறை மாவட்டத்தினை வெற்றிகொள்ளவேண்டும் என்று பிரச்சாரம் செய்கின்ற நாங்கள் கல்முனை தொகுதியை பற்றியும் அலசவேண்டி உள்ளது. 1988 மாகாணசபை தேர்தல் தொடக்கம் 2018 இன் உள்ளூராட்சிமன்ற தேர்தல் வரைக்குமான அனைத்து தேர்தல்களிலும் கல்முனை தொகுதியில் அமோக வெற்றி பெற்று கல்முனை தனது கோட்டை என்பதனை முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்கொண்டே வருகின்றது. அதுபோல் இந்த தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் எங்களது பிரார்த்தனையாகும். அதனால் 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல், உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஆகியவற்றுடன் ஒப்பீடு செய்து ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது.  2015 பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்டு சாய்ந்தமருதின் பதிமூவாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் அடங்கலாக முஸ்லிம் காங்கிரஸ் 24,992 வாக்குகளை பெற்றதுடன், தமிழ் அரசு கட்சி 10,847 வாக்குகளையும், மக்கள் காங்கிரஸ் 8,549 வாக்குகளையும் பெற்றது. இதில் வெற்றிபெற்ற முஸ்லிம் காங்கிரசுக்கும் இரண்டாம் இடத்துக்கு வந்த தமிழ் அரசு கட்சிக்கும் இடைப்பட்ட வாக்குகளின் வித்தியாசம் 14,145 ஆகும்.  2018 உள்ளூராட்

ஈஸ்ட‌ர் தாக்குத‌லின் பின்ன‌ணியில் இந்திய‌ அர‌சா?

Image
இந்திய புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கிய சாரா? ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹஷீமிற்கு நெருங்கிய ஒருவர் இந்திய புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கியுள்ளதாக, தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வௌிக்கொணரப்பட்டுள்ளது. அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவர் நேற்று முன்தினம் (22) ஆணைக்குழு முன்பாக சாட்சி வழங்கும் போதே இந்த விடயம் வௌியானது. தற்போது இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி எனப்படும் சாரா என்ற பெண் மூலமாகவே இந்திய புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டிருக்கலாம் என அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படும் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு முன்னிலையில் நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது. சாய்ந்தமருதில் வீடொன்றில் குண்டொன்றை வெடிக்க வைத்து உயிரிழந்த முஹம்மத் ஹஸ்துன் என்பவரின் மனைவியாகவே சாரா கருதப்படுகிறார்.

Sri Lankan SMEs have issued a siren call to their Indian counterparts

Image
Sri Lankan SMEs have issued a siren call to their Indian counterparts for sustainable cross-border Joint Ventures on July 9. The invitation, issued via the online global leadership platform ‘Indo Sri Lanka International Trade, Investment, Technology Transfer Cooperation’ on July 9 conducted by no less than the Confederation of Indian Micro, Small and Medium Enterprises, called Indian SME investors to partner in six frontline segments in Sri Lankan on Joint Venture- metal, food processing, coconuts, tea and rubber and plastic. “We are thinking of bringing in new technology and machinery from India to revive Sri Lanka’s sick industries. Metal industries, food processing, coconut, plastic and rubber and value addition for tea are high potential sectors for partnership for Indian investors. Members of Confederation of Indian Micro, Small and Medium Enterprises (CIMSME) can join us in this. We at COSMI can form affiliations with SIMSME to support our SMEs. We can also facilitate

மனோ கணேசன் இம்முறை தடைகளைத் தாண்டிவிடுவாரா?!

Image
“...மனோ கணேசன் தன் முன்னாலுள்ள தடைகளை இம்முறை தாண்டிக் குதித்துவிடுவாரா? கொழும்பு ஒரு தமிழரையாவது பாராளுமன்றத்துக்கு அனுப்புமா?” என்றொரு கேள்வி அண்மையில் என்னுடைய கொழும்பு நண்பர் ஒருவரால் எழுப்பப்பட்டது. 120,000க்கும் அதிகமான தமிழ் வாக்குகளைக் கொண்ட கொழும்புத் தேர்தல் மாவட்டத்தில் இருந்து தமிழ் மக்கள் சரியாகத் திட்டமிட்டு வாக்களித்தால் குறைந்தது இரண்டு உறுப்பினர்களையாவது பாராளுமன்றத்துக்கு அனுப்ப முடியும். 2004 பொதுத் தேர்தலை அதற்கு உதாரணமாகவும் கொள்ளலாம். அந்தத் தேர்தலில் மனோ கணேசனும், மறைந்த தியாகராஜா மகேஸ்வரனும் தமிழ் வாக்குகளினால் வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றிருந்தார்கள். நிலைமை அப்படியிருக்க, இம்முறை ஒரு பாராளுமன்ற உறுப்பினரையாவது வெற்றிகொள்ள முடியுமா? என்கிற சந்தேகம் தோன்றியிருப்பது மிகப்பெரிய அவலமாகும். கொழும்பில் தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு விழுந்து வருகின்ற தமிழ் வாக்குகள், இம்முறை ஒரு குழப்பமான விகிதத்தில் ரணில்- சஜித் இடையே பிரிவடையும் சந்தர்ப்பம் இருக்கின்றது. ரணிலின் யானைச் சின்னத்தில் கடந்த காலங்களில் போட்டியிட்ட மனோ கணேசன், இம்முறை சஜித்தின் தொலைபேசிய

திருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.

Image
திருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை. அந்த‌ இட‌த்தில் பௌத்த‌ ஆல‌ய‌ம் இருந்த‌து என்ற‌ தேர‌ரின் க‌ருத்து ச‌ரியான‌ ஆதார‌ம‌ற்ற‌தாகும். இல‌ங்கைக்கு சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் த‌லைவ‌ன் விஜ‌ய‌ன் வ‌ந்த‌து சுமார் 2800 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பாகும். அத‌ற்குப்பின் அதாவ‌து இற்றைக்கு 2500 வ‌ருட‌த்துக்கு முன்புதான் இல‌ங்கைக்கு பௌத்த‌ ம‌த‌ம் வ‌ந்த‌து. பௌத்த‌ ம‌த‌ம் வ‌ருமுன்பே இங்கு ம‌னித‌ர்க‌ள் வாழ்ந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் யாருமே பௌத்த‌ர்களாக‌ இருக்க‌வில்லை. அதே போல் விஜ‌ய‌ன் வ‌ருவ‌த‌ற்குமுன்பும் இல‌ங்கையில் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் வாழ்ந்த‌ன‌ர். இங்கு வாழ்ந்த‌ குவேணி விஜ‌ய‌னையும் அவ‌ன‌து 700 தோழ‌ர்க‌ளையும் ச‌ண்டையிட்டு கைது செய்தாள் என்றால் குவேனியுட‌ன் பெரும் ப‌டை இருந்திருக்க‌ வேண்டும் என்ப‌து தெரிகிற‌து. இந்த‌க்குவேனி யார்? அவ‌ள் பௌத்த‌ம‌த‌த்தை சார்ந்த‌வ‌ள் அல்ல‌. கார‌ண‌ம் அவ‌ள் இற‌ந்து 200 வ‌ருட‌த்தின் பின்தான் பௌத்த‌ம் இல‌ங்கைக்கு வ‌ந்த‌து. அப்ப‌டியானால் அவ‌ள் யார்? எம்மை பொறுத்த‌வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் இல‌ங்கையில் கால் வைத்த‌து முத‌ல்

முஸ்லிம் சம்மேளனத்தினால் துறைசார்ந்த புத்தி ஜீவிகளுடனான விஷேட கலந்துரையாடல்.

Image
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  முஸ்லிம் சம்மேளனத்தினால் துறைசார்ந்த புத்தி ஜீவிகளுடனான விஷேட கலந்துரையாடல். எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் சம்மேளத்தினால் துறைசார்ந்த புத்தி ஜீவிகளுடனான விஷேட கலந்துரையாடல் நேற்று ஜூலை  09 ம் திகதி இரவு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர்  A.L M .உவைஸ் ஹாஜியாரின் தலைமையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  முஸ்லிம் சம்மேளனத்தின் உறுப்பினரான நவாஸ் முஸ்தபா தலைமையில்  மருதானையில் அமைந்துள்ள உவைஸ் ஹாஜியார் அவர்களின் காரியாலயத்தில் மிக சிறப்பாக நடை பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி  சட்டத்தரணியும், பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய தலைவருமான அலி சப்ரி அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரித்த  போது,   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வந்தால் முஸ்லிம்களுக்கு பல அபாயம்கள் ஏற்படும் என்று பலர் கூறினார்கள் ஆனால் அவர் ஆட்சிக்கு வந்து  இன்று 8 மாதம் முடிவடைந்தும் அவரால் எந்த அபாயமும்  ஏற்படவில்லை. நலவுதான் நடந்திருக்கிறது.  அவர் நாட்டைக் காப்பாற்றுகின்றார்

திருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை

Image
திருகோண‌ம‌லை கோணேஸ்வ‌ர‌ கோயிலுக்கும் பௌத்த‌ ம‌த‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை. அந்த‌ இட‌த்தில் பௌத்த‌ ஆல‌ய‌ம் இருந்த‌து என்ற‌ தேர‌ரின் க‌ருத்து ச‌ரியான‌ ஆதார‌ம‌ற்ற‌தாகும். இல‌ங்கைக்கு சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் த‌லைவ‌ன் விஜ‌ய‌ன் வ‌ந்த‌து சுமார் 2800 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பாகும். அத‌ற்குப்பின் அதாவ‌து இற்றைக்கு 2500 வ‌ருட‌த்துக்கு முன்புதான் இல‌ங்கைக்கு பௌத்த‌ ம‌த‌ம் வ‌ந்த‌து. பௌத்த‌ ம‌த‌ம் வ‌ருமுன்பே இங்கு ம‌னித‌ர்க‌ள் வாழ்ந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் யாருமே பௌத்த‌ர்களாக‌ இருக்க‌வில்லை. அதே போல் விஜ‌ய‌ன் வ‌ருவ‌த‌ற்குமுன்பும் இல‌ங்கையில் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் வாழ்ந்த‌ன‌ர். இங்கு வாழ்ந்த‌ குவேணி விஜ‌ய‌னையும் அவ‌ன‌து 700 தோழ‌ர்க‌ளையும் ச‌ண்டையிட்டு கைது செய்தாள் என்றால் குவேனியுட‌ன் பெரும் ப‌டை இருந்திருக்க‌ வேண்டும் என்ப‌து தெரிகிற‌து. இந்த‌க்குவேனி யார்? அவ‌ள் பௌத்த‌ம‌த‌த்தை சார்ந்த‌வ‌ள் அல்ல‌. கார‌ண‌ம் அவ‌ள் இற‌ந்து 200 வ‌ருட‌த்தின் பின்தான் பௌத்த‌ம் இல‌ங்கைக்கு வ‌ந்த‌து. அப்ப‌டியானால் அவ‌ள் யார்? எம்மை பொறுத்த‌வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் இல‌ங்கையில் கால் வைத்த‌து முத‌ல்

මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි,

Image
මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ මුස්ලිම් ප්‍රජාවගේ ඡන්දය බිඳ දැමීමයි, අපේක්ෂක ෆාරිස් මහතාට ඡන්දය ලබා‌ දෙන මෙන් අමුණුගම ඉල්ලා සිටි (අයි.ඒ. කාදිර් ඛාන් )    ලංකාවේ ප්‍රබලම පක්ෂයක් ඡන්ද විමසීමට පැමිණෙන විට, රටේ ඇතැම් ස්වාධීන කණ්ඩායම් ඡන්ද විමසීමට යනවාදැයි, හිටපු ප්‍රවාහන රාජ්‍ය අමාත්‍ය, මහනුවර දිස්ත්‍රික් ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ අපේක්ෂක හා යෞවන පෙරමුණේ සභාපති දිලුම් අමුණුගම මහතා ප්‍රශ්න කළේය. ‍ ඔහු මේ බව කියා සිටියේ, මල්වානහින්න  ප්‍රදේශයේ පැවති මැතිවරණ ප්‍රචාරක රැලියක් අමතමිනි. ඔහු තවදුරටත් එහි දී මෙසේ ද අදහස් පල කළේය. රජයත් සමග ස්වාධීන කණ්ඩායම් කිසිදු සම්බන්ධතාවයක් නොපවත්වන අතර , එම ස්වාධීන කණ්ඩායම්වල අරමුණ වන්නේ පවත්නා රජයේ ඡන්ද පදනම බිද දැමීමය.      විශේෂයෙන් මුස්ලිම් ස්වාධීන කණ්ඩායම්, රජය සමඟ කිසිඳු සම්බන්ධයක් නොමැත. මෙය කුමන්ත්‍රණයක් වන බවත් හෙතෙම වැඩිදුරටත් පැවසුවේය. මෙරටේ ඉතා ප්‍රබල දේශපාලන පක්ෂයක් මැතිවරණය සඳහා තරඟ වදින අතර, මැතිවරණවලදී ස්වාධීන කණ්ඩායම් යටපත් කර ඡන්දය සුනුවිසුනු කිරීමට සැලසුම් සකස් වෙමින්  පවතී. එහෙත්, මේ සියල්ලෙන්ම තීරණය වන්නේ එළඹෙන 5 වන දින

பாராளுமன்றம் சென்றாலும் ஏழைகளை மறக்க மாட்டேன் - வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ்

Image
ஏழ்மையில் பிறந்த எனக்கு ஏழைகளின் வலி புரிகிறது, பாராளுமன்றம் சென்றாலும் ஏழைகளை மறக்க மாட்டேன் - வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவிப்பு  ( ஐ.ஏ. காதிர் கான் )               நான் ஏழ்மையில் பிறந்து எளிமையில் வளர்ந்தவன். தற்பொழுது நான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் கூட, ஏழைகளின் வலியை உணர்ந்தவன். எனது வாழ்வில் இதனை ஒரு போதும் மறக்கவே முடியாது. இதனால்தான், பல கிராமங்களில் உள்ள அடிமட்ட மக்கள் மத்தியில் இருக்கும் வலி எனக்கு தற்பொழுதும் புரிகிறது. அந்த வலி புரிந்த படியினால் தான், நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே கடந்த காலங்களில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருந்தேன். நான் பாராளுமன்றத்திற்குத் தெரிவானால் அதன் பின்பும், ஏழைகளுக்கான அப்பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வேன் என, பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் கண்டி மாவட்ட வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.    கண்டி, எலமல்தெனிய, பொதுஜன பெரமுன பிரதான தேர்தல் பிரசார அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.    அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,   இன்று முஸ்லிம் மக்களின் பிரதி நிதி

அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை

Image
அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாகக்கூறும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை,  அடிப்படைவாதிகள் ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டு ஒருபோதும் அரசாங்கம் அமைக்கப்படவும் மாட்டாது - பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் ( ஐ. ஏ. காதிர் கான் )    அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாக, சில கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களில் மும்முரமாக  ஈடுபட்டு வருவதாக நான் அறிகிறேன். அரசாங்கம் இனவாதத்துடன் செயற்படுவதாக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும், அரசாங்கம் ஒருபோதும் இனவாதமாகச் செயற்படவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை  என, கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார். அடிப்படைவாதிகள் மற்றும்  ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டு ஒருபோதும் அரசாங்கம் அமைக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தையும் மக்களுக்கு வழங்குகின்றோம். இவ்வாறான நிலை ஏற்படாது என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.    கண்டி, எலமல்தெனிய, பொதுஜன பெரமுன பிரதான காரியாலயத்தில் நடைபெற்ற  செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின்போதே, அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்