உள்ளூராட்சி ஆணையாளருக்கு முகவரி அற்ற கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது


பாறுக் ஷிஹான்

ஒரு சில உறுப்பினர்கள் மேற்கொண்ட முகவரி அற்ற கடிதத்தினால் கடந்த மாத கூட்டம் செல்லுபடி அற்றதாக மாற்றப்படுமானால் இந்த நடவடிக்கைகளை  தொடர்ந்து கொண்டு செல்வார்களானால் எமது சபை நடவடிக்கைகள் முன்னகர்த்த முடியாமல் போகும் என நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் ரியாஸ் ஆதம் தனது கருத்தினை முன்வைத்தார்.

நிந்தவூர் பிரதேச சபையின்   மாதாந்த கூட்ட அமர்வு  வியாழக்கிழமை (25) பிரதேச சபையின் பதில் தவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வை தலைமையில் 11 மணியளவில்  இடம்பெற்றது.

இதன்போது சென்ற மாத கூட்டறிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் என உள்ளூராட்சி ஆணையாளருக்கு முகவரி அற்ற கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது . இதனை தொடர்நது சென்ற மாத கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களையும் ரத்து செய்யக்கோரி உள்ளூராட்சி திணைக்களத்தினால் நிந்தவூர் பிரதேச  சபைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒரு சில உறுப்பினர்கள் மேற்கொண்ட முகவரி அற்ற கடிதத்தினால் கடந்த மாத கூட்டம் செல்லுபடி அற்றதாக மாற்றப்படுமானால் இந்த நடவடிக்கைகளை  தொடர்ந்து கொண்டு செல்வார்களானால் எமது சபை நடவடிக்கைகள் முன்னகர்த்த முடியாமல் போகும் என நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் ரியாஸ் ஆதம் தனது கருத்தினை முன்வைத்தார்.

ஒரு சிலர் சேர்ந்து நடைபெற்ற கூட்டத்தொடரை  கடிதங்களை அனுப்பி ரத்து செய்ய முடியுமானால் பிரதேச சபைக்குரிய  அதிகாரம் என்ன என கேள்வி எழுப்பினார். இதனை பரீட்சார்த்த முயற்சியாக கொண்டு இனி வரும் காலங்களில் தொடர்ந்து மேற்கொள்ள வாய்ப்புள்ளது ஆகையால் கடந்த மாத கூட்டறிக்கையை ரத்து செய்யும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

சபையின் நடைமுறைக்கு மாறாக பதில் தவிசாளர் நடந்து கொண்டத்ற்கமைவாகவும் , கடந்த மாத கூட்டறிக்கை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என குறிப்பிடுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறிலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எம்.எம்.அன்ஷார் குறிப்பிட்டதை தொடர்ந்து பதில் தவிசாளருக்கும் உறுப்பினர் எம்.எம்.எம்.அன்ஷாருக்குமிடையே காரசாரமான விவாதம் இடம்பெற்றது.

உள்ளூராட்சி திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் கூட்டத்தொடரை ரத்து செய்ய முடியாது .இதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது . இன்றைய கோரத்தின் பிரகாரம் 7 உறுப்பினர் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் 4 ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வாக்களித்திருநதனர் . இதனை கடந்த மாத கூட்டறிக்கை ரத்து செய்ய முடியாது என கடிதம் மூலம் உள்ளூராட்சி திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என அங்கு தெரிவிக்கப்பட்டது.
 

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காரணத்தால் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் . தாஹிர் சொந்த விடுமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்