BREAKING NEWS

உள்ளூராட்சி ஆணையாளருக்கு முகவரி அற்ற கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது


பாறுக் ஷிஹான்

ஒரு சில உறுப்பினர்கள் மேற்கொண்ட முகவரி அற்ற கடிதத்தினால் கடந்த மாத கூட்டம் செல்லுபடி அற்றதாக மாற்றப்படுமானால் இந்த நடவடிக்கைகளை  தொடர்ந்து கொண்டு செல்வார்களானால் எமது சபை நடவடிக்கைகள் முன்னகர்த்த முடியாமல் போகும் என நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் ரியாஸ் ஆதம் தனது கருத்தினை முன்வைத்தார்.

நிந்தவூர் பிரதேச சபையின்   மாதாந்த கூட்ட அமர்வு  வியாழக்கிழமை (25) பிரதேச சபையின் பதில் தவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வை தலைமையில் 11 மணியளவில்  இடம்பெற்றது.

இதன்போது சென்ற மாத கூட்டறிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் என உள்ளூராட்சி ஆணையாளருக்கு முகவரி அற்ற கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது . இதனை தொடர்நது சென்ற மாத கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களையும் ரத்து செய்யக்கோரி உள்ளூராட்சி திணைக்களத்தினால் நிந்தவூர் பிரதேச  சபைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒரு சில உறுப்பினர்கள் மேற்கொண்ட முகவரி அற்ற கடிதத்தினால் கடந்த மாத கூட்டம் செல்லுபடி அற்றதாக மாற்றப்படுமானால் இந்த நடவடிக்கைகளை  தொடர்ந்து கொண்டு செல்வார்களானால் எமது சபை நடவடிக்கைகள் முன்னகர்த்த முடியாமல் போகும் என நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் ரியாஸ் ஆதம் தனது கருத்தினை முன்வைத்தார்.

ஒரு சிலர் சேர்ந்து நடைபெற்ற கூட்டத்தொடரை  கடிதங்களை அனுப்பி ரத்து செய்ய முடியுமானால் பிரதேச சபைக்குரிய  அதிகாரம் என்ன என கேள்வி எழுப்பினார். இதனை பரீட்சார்த்த முயற்சியாக கொண்டு இனி வரும் காலங்களில் தொடர்ந்து மேற்கொள்ள வாய்ப்புள்ளது ஆகையால் கடந்த மாத கூட்டறிக்கையை ரத்து செய்யும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

சபையின் நடைமுறைக்கு மாறாக பதில் தவிசாளர் நடந்து கொண்டத்ற்கமைவாகவும் , கடந்த மாத கூட்டறிக்கை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என குறிப்பிடுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறிலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எம்.எம்.அன்ஷார் குறிப்பிட்டதை தொடர்ந்து பதில் தவிசாளருக்கும் உறுப்பினர் எம்.எம்.எம்.அன்ஷாருக்குமிடையே காரசாரமான விவாதம் இடம்பெற்றது.

உள்ளூராட்சி திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் கூட்டத்தொடரை ரத்து செய்ய முடியாது .இதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது . இன்றைய கோரத்தின் பிரகாரம் 7 உறுப்பினர் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் 4 ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வாக்களித்திருநதனர் . இதனை கடந்த மாத கூட்டறிக்கை ரத்து செய்ய முடியாது என கடிதம் மூலம் உள்ளூராட்சி திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என அங்கு தெரிவிக்கப்பட்டது.
 

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காரணத்தால் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் . தாஹிர் சொந்த விடுமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

බීසීසී රාජ්‍ය සමාගම ලබා ඇති කීර්ති නාමය තවත් ශතවර්ෂ ගණනාවක් රඳවා ගත හැකි සංවර්ධන සැලැස්මක් සකසා අවසන්”


“බීසීසී රාජ්‍ය සමාගම ලබා ඇති කීර්ති නාමය තවත් ශතවර්ෂ ගණනාවක් රඳවා ගත හැකි සංවර්ධන සැලැස්මක් සකසා අවසන්”
- කර්මාන්ත හා සැපයුම් කළමනාකරණ අමාත්‍ය විමල් වීරවංශ

‘සෞභාග්‍යයේ දැක්ම’ වැඩපිළිවෙළ යටතේ ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමන් විසින් කර්මාන්ත හා සැපයුම් කළමනාකරණ අමාත්‍යාංශය වෙත පවරා ඇති, සුපිරිසිදු පොල්තෙල් හා සබන් ආදිය නිෂ්පාදනය තුළින් බි්‍රතාන්‍ය අධිරාජ්‍යවාදීන්ගේ යුගයේ සිට ශත වර්ෂ දෙකක පමණ කාලයක් ඉමහත් කීර්ති නාමයක් දිනාගෙන ඇති බීසීසී සමාගමට එම කීර්ති නාමය තවත් ශතවර්ෂ ගණනාවක් රඳවා ගත හැකි උපායමාර්ගික සංවර්ධන සැලැස්මක් සකසා ඇති බවත් වැවිලි කර්මාන්ත, මහවැලි ඇතුළු අමාත්‍යාංශ කිහිපයක් හා එක්ව නුදුරේදීම ඊට අදාළ ඒකාබද්ධ අමාත්‍ය මණ්ඩල පත්‍රිකාව ඉදිරිපත් කිරීමට නියමිත බවත් කර්මාන්ත හා සැපයුම් කළමනාකරණ අමාත්‍ය විමල් වීරවංශ මහතා පවසයි.

කොළඹ 12, මීරානියා මාවතේ පිහිටි බීසීසී සමාගම් පරිශ්‍රයේ නිරීක්ෂණ චාරිකාවකට එක් වීමෙන් පසුව මාධ්‍ය වෙත අදහස් දක්වමින් ඒ මහතා මෙසේ පැවසීය.

එහි දී වැඩිදුරටත් අදහස් දැක්වූ වීරවංශ ඇමතිවරයා මෙසේ ද සඳහන් කළේය.

“බී.සී.සී ආයතනය බි්‍රතාන්‍ය අධිරාජ්‍යවාදී යුගයේ මෙරට ආරම්භ කරන ලද්දක්. එයට සියවස් දෙකක පමණ ඉතිහාසක් තිබෙන බවත් යම් යම් කාලවල දී එහි නිෂ්පාදන රට තුළ ප්‍රචලිතව තිබූ බවත් දැකගත හැකියි. දේශීය කර්මාන්තවලට නව පණක් දීමේ අතිගරු ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මැතිඳුන්ගේ ‘සෞභාග්‍යයේ දැක්ම’ වැඩසටහන යටතේ ඉතිහාසයේ ප්‍රථම වතාවට මෙම ආයතනය කර්මාන්ත අමාත්‍යාංශ විෂය පථයට ඇතුළත් කර තිබෙනවා. ඒ අනුව දැන් මෙම ආයතනය අප අමාත්‍යාංශය යටතේ නියාමනය වන්නක්. ගෙවී ගිය කෙටි කාලය තුළ අපට හැකි වුණා එය වඩාත් වර්ධනීය තලයකට ගෙන ඒමට.

2017, 2018, 2019 වර්ෂවලට වඩා 2020 පළමු කාර්තුව තුළ ලාභය රුපියල් මිලියන 12 සිට 30 දක්වා වැඩි වී තිබෙනවා. මෙහි මූලිකවම නිෂ්පාදනය වන පොල්තෙල් නිෂ්පාදනය සැලකුවහොත් නිෂ්පාදන ධාරිතාව පෙර වසරවලට සාපේක්ෂව මෙටි්‍රක් ටොන් 15 සිට 44 දක්වා ඉහළ දැමීමට හැකි වුණා. ඒ අනුව ආයතනයේ නිෂ්පාදන ප්‍රගතිය ඉහළ ගොස් තිබෙනවා. ආදායම, ලාභය ඉහළ ගොස් වියදම ද 25%කින් අඩු වී තිබෙනවා.

‘නව සංවර්ධන සැලැස්මක්’

මෙහි දී නව සභාපතිතුමන් ඇතුළු අධ්‍යක්ෂ මණ්ඩලයටත් සාමාන්‍යාධිකාරී ඇතුළු සීමිත සේවක පිරිසටත් අපගේ ස්තූතිය පුද කළ යුතුයි. කොරෝනා වසංගතය ව්‍යාප්තව ගිය මාසවල දී පවා මෙම සේවක පිරිස ආයතනයට ලැබී තිබූ ඇණවුම් සම්පූර්ණ කර දීමට කටයුතු කර තිබුණු බවත් මෙහි දී කෘතවේදීව සිහිපත් කළ යුතුයි. මේ ආයතනය ඉතිහාසයේ දී ලබා තිබූ කීර්ති නාමය වඩාත් ඉහළ නංවමින් අනාගතයේ දී කටයුතු කිරීම සඳහා සභාපතිතුමන් ඇතුළු අධ්‍යක්ෂ මණ්ඩලය විසින් නව උපායමාර්ගික සංවර්ධන සැලැස්මක් සකස් කර තිබුණා. එය ද මෙහි දී මා වෙත ඉදිරිපත් කරනු ලැබුවා.

‘නව පොල්තෙල් නිෂ්පාදනාගාරයක්’

බීසීසී පොල්තෙල් නිෂ්පාදනය ඉහළ නැංවීමට අවශ්‍ය අමුද්‍රව්‍ය වන පොල් පහසුවෙන් ලබා ගෙන එමගින් නිෂ්පාදන කටයුතු වේගවත් කිරීමට ඒකාබද්ධ වැඩසටහනක් යෝජනා වී තිබෙනවා. ඒ යටතේ හලාවත වැවිලි සමාගම, කුරුණෑගල වැවිලි සමාගම හා මහවැලි බී කලාපයේ පිහිටා ඇති පොල් වගා බිම්වලින් පොල් ලබා ගැනීමට අපේක්ෂිතයි. ඒ අනුව පොල්තෙල් නිෂ්පාදනාගාරය ද හලාවත ඉහත මහා පරිමාණ පොල්වතු ආශ්‍රිතව අලුතෙන් ඉදිකිරීමට යෝජිතයි. ඉහත කී පොල් වගා බිම් වැවිලි කර්මාන්ත අමාත්‍යාංශය, කෘෂිකර්ම හා මහවැලි සංවර්ධන අමාත්‍යාංශය යටතේ පවතින නිසා මෙම උපායමාර්ගික සැලැස්ම ක්‍රියාත්මක කිරීමේ දී ඒකාබද්ධ අමාත්‍ය මණ්ඩල සංදේශයක් ඉදිරිපත් කළ යුතුව තිබෙනවා. ඒ සඳහා අදාළ විෂය භාර අමාත්‍යවරුන් සමඟ සාකච්ඡා කිරීමට බලාපොරොත්තු වෙනවා.

වාණිජමය මධ්‍යස්ථානයක්

එසේම එම උපායමාර්ගික සංවර්ධන සැලැස්මට, අද අපගේ නිරීක්ෂණයට ලක් වූ මෙම පැරණි ගොඩනැගිලි සහිත වත්මන් පොල්තෙල් නිෂ්පාදනාගාරය සහිත අක්කර 06 පමණ ඉඩම සංවර්ධනය කොට, නවීන පහසුකම්වලින් සහිත මහල් හතක වාණිජමය මධ්‍යස්ථානයක් ඉදිකිරීම ද ඇතුළත්. ඒ සඳහා මෙම ඉඩමෙන් කොටසක් අධිකරණ සංකීර්ණයක් සඳහා පවරා ගැනීම නිසා ලැබෙන වන්දි මුදල ද ඉහත කී නව පොල්තෙල් නිෂ්පාදනාගාරය ඉදිකිරීමත් සමඟ ලැබෙන ලාභාංශය ද යොදා ගැනීමට නියමිතයි. මෙම උපායමාර්ගික සැලැස්ම වසර සිය ගණනක බීසීසී කීර්ති නාමය අනාගතයේ දී තවත් වසර සිය ගණනක් රඳා පවත්වා ගැනීමට ඉවහල් වන බව මට විශ්වාසයි.”

මෙම නිරීක්ෂණ චාරිකාවට බීසීසී ආයතනයේ සභාපති චමින්ද වෙලේගම, අධ්‍යක්ෂ මණ්ඩල සාමාජිකයෝ වන අජිත් ජයවර්ධන, මනුජ කරුණාරත්න, සුපුන් කාරියවසම් යන මහත්වරු ද එක්ව සිටියහ. 

අනුරුද්ධ බණ්ඩාර රණවාරණ,
මාධ්‍ය ලේකම්,
කර්මාන්ත හා සැපයුම් කළමනාකරණ අමාත්‍යාංශය.
2020.06.22

பொத்தவில் மண்மலையில் எல்லை மீறுவதனை அனுமதிக்க முடியாது – வேட்பாளர் MAM.தாஹீர் தெரிவிப்பு


**************************************************************

பொத்துவில் மண்மலைப் பிரதேசத்தில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள  தொல்லியல் செயலணியினர் எல்லை மீறி நில அளவையில் ஈடுபடுவது நிறுத்தப்பட  வேண்டும். அத்தோடு, குடியிருப்பாளர்களை பலாத்காரமாக அங்குள்ள  விகாராதிபதிகள் வெளியேற்ற எடுக்கும்  முயற்சிகளை தவிர்த்துக் கொள்ள  வேண்டும். தொல்லியல் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு முஸ்லிம்கள் பூரண  ஒத்துழைப்பை வழங்குவார்கள். அதே வேளை, தொல்லியல் பிரதேசம் என்ற பேரில்  முஸ்லிம்களின் காணிகளை பறிப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறு  நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  சார்பில் திகாமடுல்ல தேர்தல் (அம்பாரை) மாவட்டத்தில் இலக்கம் ஐந்தில்  போட்டியிடும் வேட்பாளருமாகிய எம்.ஏ.எம்.தாஹீர் தமது அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் பிரதேசங்களை  பாதுகாப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணி தமது பணியை  ஆரம்பித்துள்ளது. அச்செயலணி கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில்  பொத்துவில் மண்மலை பிரதேசத்தில் உள்ள தொல்லியல் பிரதேசங்களை நில அளவை  செய்யும் வேலைத் திட்டத்தை மேற்கொண்டது. இதன் போது நில அளவை பொது மக்களின்;  குடியிருப்பு பிரதேசங்களையும் உள்ளடக்கியவாறு அரசவர்த்தமானி  அறிவித்தலுக்கு மாற்றமாக மேற்கொள்ளப்படுவதாக பொத்துவில் பிரதேச மக்கள்  கடந்த வியாழக் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த எல்லை மீறலைக்  கண்டித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி அவர் தெரிவித்துள்ளார். 

அந்த  அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பொத்துவில் பிரதேச மக்களின்  காணிகள் காலத்திற்கு காலம் தொல்லியல் பிரதேசம் என்றும், வன இலாகாவுக்குரிய  காணி என்றும் பல பெயர்களில் பறிக்கப்பட்டுள்ளன. பொத்துவில் பிரதேச மக்கள்  வருடா வருடம் காணிகளை இழந்து கொண்டு வரும் துர்ப்பாக்கிய நிலையில் இருந்து  கொண்டிருக்கின்றார்கள். கடந்த காலங்களில் பொத்துவில் பிரதேச முஸ்லிம்களின்  வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்கள் அமைச்சர்களாக இருந்த போதிலும் அவர்களின்  காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை.

தற்போது  ஜனாதிபதியினால் கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் பிரதேசங்களை பாதுகாப்பதற்காக  செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இச்செயலணி தமது பணியை பொத்துவில்  பிரதேசத்தில் ஆரம்பித்துள்ளது. இங்கு மண்மலை பிரதேசத்தில் நில அளவையில்  ஈடுபட்டுள்ள செயலணியினர் எல்லை மீறி செயற்பட்டுக் கொண்டதாக பொத்துவில்  பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

1965ஆம் ஆண்டு அரசாங்கத்தினால்  வெளியிடப்பட்டுள்ள அரசவர்த்தமானி அறிவித்தலில் பொத்துவில் மண்மலை  பிரதேசத்தில் 30 ஏக்கர் 03ரூட் 02 பேர்ச்சஸ் காணி தொல்லியல்  பிரதேசத்திற்குரியதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் பொத்துவில்  முதுகு மஹா விகாரையின் விகாராதிபதிகள் 1956ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள  அரசவர்த்தமானியின் பிரகாரம் 72 ஏக்கர் காணி தொல்லியல் பிரதேசமாக இருப்பதாக  அதிகாரிகளை கட்டாயப்படுத்தி அதனை அளவீடு செய்யுமாறு  வலியுறுத்தியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து நில அளவையில் ஈடுபட்டவர்கள் 72  ஏக்கர் காணியை அளவீடு செய்துள்ளனர்.

இதன்போது பொது மக்களின்  குடியிருப்பு பிரதேசங்களும் உள்ளடங்கியுள்ளன. நில அளவீடு செய்து  கொள்ளப்பட்டுள்ள 72 ஏக்கர் நிலப் பிரதேசத்திற்குள் வரும்  குடியிருப்பாளர்களை வீடுகளை விட்டு வெளியேறுமாறு தெரிவித்ததோடு, காணிகளில்  உள்ள மரக் கன்றுகளையும் பிடுங்கி வீசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

தொல்லியல்  பிரதேசங்களை பாதுகாப்பதற்கு முஸ்லிம்கள் ஒரு போதும் தடையாக  இருக்கமாட்டார்கள். கடந்த காலங்களில் முதுகு மஹாவிகாரையை பொத்துவில் பிரதேச  முஸ்லிம் மக்கள்தான் பாதுகாத்து வந்துள்ளார்கள். ஆதலால், பொது மக்களின்  குடியிருப்புக்களை தொல்லியல் என்ற பேரில் அபகரித்துக் கொள்ள எடுக்கும்  முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுக்க  வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

பொது மக்களின் குடியிருப்புக்களையும்  தொல்லியல் பிரதேசம் என்று விகாராதிபதியின் வற்புறுத்தலுக்கு ஏற்ப அளவீடு  செய்துள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது. தற்போது அங்குள்ள  குடியிருப்பாளர்கள் அச்சமடைந்துள்ளார்கள். தாங்கள் பரம்பரையாக வாழ்ந்து  வரும் வீடு வாசல்களை இழந்து நடுவீதிக்கு வந்திடுமோ என்று  அச்சமடைந்துள்ளார்கள். ஆதலால், ஜனாதிபதி இவ்விவகாரத்தில் 1965ஆம் ஆண்டின்  அரச வர்த்தமானியை பின்பற்றுமாறு செயலணியினரை பணிக்குமாறும் கேட்டுக்  கொள்கின்றேன்.

#ஊடகப்_பிரிவு

தென்னிலங்கையை சூடாக்கும் தேர்தல்கால விளம்பரம் -


சிறுபான்மை புத்திஜீவிகள் கவலை!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனைதேர்தல்கால விளம்பரமாக கடும்போக்கு சக்திகள் பாவித்து வருவதுகடும் கவலையளிப்பதாக புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கை கடும்போக்கர்களை உசுப்பேற்றி ஆட்சிஅதிகாரத்தை தக்கவைக்கும் புதிய போக்குகள்சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசியலுக்காக சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான வன்மங்களை வளர்த்துவரும் விசித்திர போக்குகள்பல்லினத்தவர் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் சிறுபான்மை சமூகங்களை அச்சத்திற்குள்ளாக்குவதுகறைபடிந்த எமது நாட்டின் பழைய வரலாறுகளைப் புதுப்பிக்க முயலும் அரசியல் உபாயங்களாக உள்ளதாகவும் சிறுபான்மை சமூகத்தின் புத்திஜீவிகள் கவலை வௌியிட்டுள்ளனர்.

தேர்தல் வாடைகள் களைகட்டும் இந்த காலகட்டத்தில்இவ்வாறான அபாய நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி சிறுபான்மை சமூகங்களின் குறிப்பாகமுஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் சிவில் அமைப்புக்கள்அரசியல் தலைமைகள்மத ஸ்தாபனங்கள் அவசரமாகச் சிந்திக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அடிப்படையில்லாத குற்றச்சாட்டுக்களை அள்ளிவைத்துமுஸ்லிம் அடிப்படைவாதம் வளர்வதாகக் காட்டும் இவர்களின் யுக்திகள் தென்னிலங்கையின் வாக்கு வேட்டைகளுக்கு இலகுவாக இருந்தாலும்இங்கு வாழும் சிறுபான்மையினரை தேசப்பற்றிலிருந்து அந்நியப்படுத்திவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக முன்வைக்கும் இவர்கள்இதுவரைக்கும் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. வில்பத்து வழக்கொன்று தொடர்பில் விசாரணை செய்த நீதிபதியொருவர்தீர்ப்பு வழங்குவதற்கு முன்னரேஇறுதி நேரத்தில் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

விஷேடமாக இனவாதப் பாய்ச்சலில் முதலிடம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச கூடஇவ்விடயத்தில் தடுமாறுவதாகவே தெரிகிறது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அமைச்சின் கீழிருந்த நிறுவனங்களில், 22 நிறுவனங்கள் தற்போது அமைச்சர் விமல் வீரவன்சவின் அமைச்சுக்குக் கீழ் உள்ளன. இந்நிலையில்இதுவரை இதில் எந்தவொரு நிறுவனங்களிலாவது ஊழல் இடம்பெற்றுள்ளதாகஇவர்களால் நிரூபிக்க முடியாதுள்ளது. இவ்வாறு நிரூபிக்க முயலும் இவர்களது எத்தனங்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

டொக்டர் ஷாபியின் விடயங்கள் உள்ளிட்ட பலதும்கடும்போக்கர்களைத் திருப்திப்படுத்தும் இஸ்லாமிய அடிப்படைவாத கற்பனைப் பாத்திரங்களாகவே உள்ளன. குருநாகல் மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் பரீட் அவர்களையும்முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைத்து கற்பனை செய்யப்பட்ட காரணங்களே அவரை அழுத்தத்துக்குள்ளாக்கிபதவி விலகச் செய்தது. இவ்வாறான கற்பனை பாத்திர முயற்சிகளை முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் தலையில் திணித்துவிடும் பெரிய திட்டங்களை காடுபோக்கர்கள் அரங்கேற்றுகின்றனர்.

எனவேஇந்நிலைமைகளைப் புரிந்துசமூகத் தலைமையைக் காப்பாற்ற முனைவதுதான் கடும்போக்கர்களுக்கு ஜனநாயக ரீதியாக சிறுபான்மை சமூகம் வழங்கும் பதிலடி என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இல்ஹாம்-

பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” -


மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்!

ஊடகப்பிரிவு -

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரத்னஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஹூலின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இவ்வாறு செயற்படுவது, ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்குகின்றதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேராசிரியர் ஹூல் நேர்மையாகப் பணிபுரிபவர். அவரது நேர்மைத்தன்மையும் சுயாதீனச் செயற்பாடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாக்கப்பட்டிருக்கின்றன. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு தேவையற்ற அழுத்தங்களையும், நிர்ப்பந்தங்களையும் பிரயோகிப்பது ஆரோக்கியமானதல்ல. எனினும், இவ்வாறான அழுத்தங்களுக்கு அவர் இதுவரையில் அடிபணியாமல், நேர்மையாக தமது கருத்துக்களை முன்வைப்பது வரவேற்கத்தக்கது.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான ஹூல் மீது, வீணான அபாண்டங்களையும் பொய்யான, சோடிக்கப்பட்ட அவதூறுகளையும் பரப்பி வருவது, ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்புடையதல்ல.

இதேவேளை, வெளிநாட்டிலிருந்து வந்த அவரது மகள், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளதாக, சுகாதாரப் பணிப்பாளரும் இராணுவத் தளபதியும் சான்றிதழ் வழங்கியுள்ள நிலையிலும், அவரது தந்தையான ஹூலை 21 நாட்கள் தனிமைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டனர்.

அதுமாத்திரமின்றி, “பேராசியர் ஹூல் பக்கச்சார்பாக செயற்படுகின்றார்” என்றும் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், அவரை இலக்குவைத்து, தனிப்பட்ட ரீதியில் அழுத்தங்களை மேற்கொள்வது கைவிடப்பட வேண்டும்.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவரை, சுதந்திரமாக இயங்க இடமளிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar