Skip to main content

இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!!

  முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!!  இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது..  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்

முஸ்லிம் கட்சிகள் மஹிந்தவின் அழைப்பை புறக்கணிப்பது சிறந்ததல்ல..." கல் விளையாடும் போதும் வெல்ல விளையாட வேண்டும் " என்றதொரு முதுமொழியுண்டு. நாம் என்ன செய்தாலும் எமது காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கொரோனா சம்பந்தமான ஒரு கலந்துரையாடலுக்கு அனைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துள்ளார்கள். இவ் அழைப்பை மு.கா, அ.இ.ம.கா ஆகிய முஸ்லிம் கட்சிகள் இரண்டும் புறக்கணிக்கும் என்றே நம்பப்படுகிறது. அமைச்சர் ஹக்கீம் ஊருக்கு முதலே தனது கட்சி கலந்து கொள்ளாதென அறிவித்துள்ளார். முஸ்லிம் கட்சிகளின் இந்த தீர்மானம் இன்றைய நிலையில் சமூகத்துக்கு பொருத்தமானதாக ஒரு தீர்மானமாக இருக்காது.

இவ் அழைப்பை விடுத்துள்ள மஹிந்த இந் நாட்டின் பிரதமர். அவர் ஒரு இலங்கை பிரஜையை, ஒரு பிரச்சினையின் தீர்வை நோக்கிய கலந்துரையாடலுக்கு அழைத்தால், அப் பிரஜை அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவருக்குள்ள கடமை. அந்த வகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரது அழைப்பை ஏற்பதே பொருத்தமானது. தற்போது கலைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவிர்ந்து வேறு சில மக்கள் பிரநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதனை ஒரு பரந்துபட்ட மக்கள் பிரதிநிதிகளினூடான சந்திப்பாக கருதியாவது பிரதமர் மஹிந்த அழைப்பு விடுத்த அனைவரும் குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதே பொருத்தமானது.

இவ்வரசு முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை கடைப்பிடிப்பது மறுக்க முடியாதது. இதனை எவ்வாறு குறைக்கலாம் என்ற கோணத்திலேயே எமது முஸ்லிம் கட்சிகளின் நகர்வுகள் அமையப்பெறுதல் வேண்டும். இவ்வாறான அழைப்பை புறக்கணிக்கும் போது இவ்வரசின் முஸ்லிம்களுக்கெதிரான போக்கு இன்னும் கடுமையாக வாய்ப்புள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கும் இவ்வரசுக்கும் இடையிலான முரண்பாடு இன்னுமின்னும் அதிகரிக்கும். இதனால் பாதிக்கப்படப் போவது முஸ்லிம் சமூகமே! இந்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் கட்சிகள் இவ்வரசுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்குமிடையிலான உறவை வளர்க்கும் சந்தர்ப்பமாக பயன்படுத்தலாமல்லவா? இதுவல்லவா எமக்கு தேவை? இதில் கலந்துகொள்வதால் என்ன நஸ்டம் எம் சமூகத்துக்கு வந்துவிடப் போகிறது? எங்களது கட்சி பங்குகொள்ளாதென முந்திக்கொண்டு அறிக்கை விடும் போது, இந்த சந்தர்ப்பத்திலும் புதினம் காட்டுகிறார்களேயென சிங்கள மக்களின் கோபமும் எம் மீது திரும்ப வாய்ப்புள்ளது.

கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடலை எரிக்கும் பிரச்சினை எழுந்த போது, முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று அன்று பிரதமர் மஹிந்த முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்திருந்தார். குறித்த விடயத்தால் நன்மை ஏற்பட்டதோ, இல்லையோ, அவர், அவருடைய நாகரீகத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் எமது பிரதிநிதிகளை அழைக்கும் போது புறக்கணிப்பது நாகரீகமல்ல. இது பிரதமர் மஹிந்தவை அகௌரவப்படுத்துவதாக அமைந்துவிடும். இங்கு சென்றும் கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது பற்றி பேசலாமல்லவா?

குறித்த நிகழ்வில் த.தே.கூ கலந்துகொள்ளும் என அதன் பங்காளிக் கட்சியொன்று கூறியுள்ளது. அக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக தெரியவில்லை. அவர்களுக்கு குறித்த கலந்துரையாடலுக்கு செல்ல முடியுமென்றால், ஏன் எமது கட்சிகளுக்கு செல்ல முடியாது. சஜித் கூட்டணியில் எமது கட்சிகளும் பங்காளிகளாக இருப்பதில் தவறில்லை. அடிமையாக இருக்க கூடாது. அண்மையில் நாம் எதிர் நோக்கிய எந்த பிரச்சினைக்கும் சஜித் வாய் கூட திறக்க இல்லை. அவர் பிரச்சினையை அதிகரிக்காமல் இருந்து எமக்கு ஆதரவு வழங்கியதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. எமது பிரச்சினையை எம்மவர்களே முன்னின்று தீர்க்க முயன்றார்கள். எமது பிரச்சினை நாம் தீர்த்துக்கொள்ள வேண்டுமாக இருந்தால் சஜித் கூட்டணிக்கு அப்பால் வேறு சில நகர்வுகளும் எமக்கு அவசியம். அவ்வாறான ஒன்றாகவே இவ் அழைப்பையும் நோக்க வேண்டும்.

பாராளுமன்றமே கூட்டப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையிலேயே பிரதமர் மஹிந்தவின் அழைப்பை புறக்கணிப்பதாக அறிய முடிகிறது. இதில் கலந்துகொண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அழுத்தத்தை வழங்கலாமே! இது ஒரு தேசிய பிரச்சினை. இதனை பெரும்பான்மையினர் பார்த்துக்கொள்வர். என்னைப் பொறுத்த வரையில் எமது முஸ்லிம் கட்சிகள் சற்று அடக்கி வாசிப்பதே உகந்தது. நாமின்னும் எதிரிகளையும், வெறுப்புக்களையும் சம்பாதிப்பது எம் சமூகத்துக்கு உகந்ததல்ல.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Comments

Popular posts from this blog

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க  தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற  முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின்  மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017    300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத