Skip to main content

இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!!

  முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!!  இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது..  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்

இரசாகாக்காவின் வளவில் நடந்த முதலாவது கூட்டத்தை வை.எல்.எஸ்.எழுதாது புதைத்து விட்டார்.


அவரவர் அளந்த சுண்டால் அவரவருக்கு அளப்பான் அல்லாஹ்.
++++++++++++++++++++++
சகோதரர் வை.எல்.எஸ். ஹமீட் அவர்கள் 19.May 2020ம் திகதி அவரது Ylshameed எனும் முகநூலில் "தடங்கள் 4" எனும் தலைப்பில் சில தடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். அது 1988ம்
 ஆண்டு மாகாணசபை தேர்தலில் எனது தோல்வியின்பின் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் அவரது எழுத்தே சரிகாணவைத்துள்ளது. "அல்ஹம்துலில்லாஹ்."

அத்தோடு 1986,10.14ம் திகதி பி.ப.4.00 மணிக்கு என்னால் இக்பால் கழகத்தின் உதவியுடன் செய்லான்  விதியின் இரசாகாக்காவின் வளவில் நடந்த முதலாவது கூட்டத்தை வை.எல்.எஸ்.எழுதாது புதைத்து விட்டார். அந்த கூட்டத்தை போபோட்டி ஆதம்பாவா தலைமை ஏற்று நடத்தினார். அந்த கூட்டத்தில் 264 கேள்விகளுக்கு தலைவர் அஷ்ரப் பதிலளித்தார். இக்கூட்டத்தில் வை.எல்.எஸ்.என்ற நாமத்தை நாம் காணவில்லை.

அதேநாள் காலையில் சாயிபு வீதியில்  கால்த்தீன் காக்காவின் வீட்டில் தலைவாருடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்தேன். சறூக் காரியப்பரும் தலைவருடன் வந்திருந்தார். அதில் கால்தீன் காக்கா,  வை.பி.ஏ.ஜப்பார்(பச்ச ஓடாவிட சபீர், தற்போதைய வெளிநாட்டு இராஜதந்திரி எச்.ஏ.அஸீஸ், ஹபீப் முஹம்மது ஆசிரியர், போடியார்ர மஜீட் ஆகியோருடன் இன்னும் சிலர் கலந்து கொண்டோம். அதிலும் வை.எல்.எஸ். இல்லை.

1987ம் ஆண்டு திராசு சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சுயேட்சையாக களமிறங்குகின்றது. அதில் ஹிலீமிகாக்கா, கரீம் காக்கா, பாசில், நான் உட்பட வேட்பாளராக நின்று புலிகளின் மறண தண்டனைக் கடிதத்தை கையில் வைத்துக்கொண்டு  கட்சியை மக்களிடம் எடுத்துச்செல்கின்றோம். அதிலும் வை.எல்.எஸ். களத்திலில்லை. அந்த தேர்தலுக்கு கட்டுப்பணமாக எனது மச்சான் மர்ஹூம் பீ.ஏ.றசாக் அவர்களிடமிருந்து ரூபா.4500/- றை பெற்று நானும்.சறூக் சேறும்,நிஜாமுதீனுமாக
அம்பாரை கச்சேரிக்கு சென்று கட்டுப்பணம் செலுத்தினோம். இலங்கை இந்திய ஒப்பந்தம் காரணமாக அத்தேர்தல் இல்லாமலானது.

நிந்தவூரில் பஸீல் ஏ மஜீட் அவர்களது இல்லத்தில் SLMC யின் கிழக்கு மாகாண கட்சி முக்கியத்தவர்களது கூட்டாம் தலைவர் அஷ்ரபின் தலைமையில் நடந்தது. அது வடகிழக்கு மாகாண சபை தேர்தலில் களமிறங்குவாதா இல்லையா என்று தீர்வுகாணும் கூட்டம். இலங்கை  இந்திய ஒப்பந்தம் முஸ்லிம்களின் அடிமைச்சாசணம் என்பதால் தேர்தல் கேட்பதில்லை எனதீர்மானிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் இரவு ஒண்ணரை மணிக்குத்தான் தலைவர் கோள் எடுத்து நாளை முஸ்லிம் காங்கிரஸ் வடகிழக்கு மாகாணசபை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதாக சொல்கிறார். அதற்குள் இந்திய தூதுவர் டிக்சித்தை தலைவரும்.சேகு இஸ்ஸத்தீனும் சந்தித்து விட்டார்கள். அதில் நடாந்தவைகளை ஆக்கம் கூடிவிடும் என்பதால் தவிர்க்கின்றேன்.

இரவோடு இரவாக கொழும்பிலே நின்றவர்களையும் கற்பனைப் பெயர்களையும் கொண்டு வேட்புமனுவை நிரப்பி அதை காலையில் தாக்கல் செய்துவிட்டார்கள். அதன்பின்ர் வேட்பாளர்கள் யார்யார் என தீர்மானிக்கப்பட்டு அவர்களுக்கான இலக்கங்கள் வழங்கப்பட்டது. நிஜாமுத்தீன் கொழும்பில் நின்று வேட்புமனுவில் ஒப்பமிட்டதால் அம்பாரை மாவட்ட முதன்மை வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். இத்தேர்தலில் தெரிவு வாக்குமுறை அறிமுகமாக்கப்பட்டு  இலக்கங்கள் வழங்கப்பட்டு  தேர்தல் வேலை நடை பெற்றது.

இனி கல்முனைக்கும் எனக்குமான சதி அரங்கேறுகின்றது. அதாவது, வை.எல்.எஸ்.சும், A.M.A.லத்தீபும் இணைபிரியாத நண்பர்கள். அக்காலகட்டத்தில் லத்தீபின் மருமகளுக்கு நிஜாமுத்தீனின் தம்பி நசுறுத்தீனை கல்யாணம் பேசியிருந்தார்கள். அந்த உறவினால் வை.எல்.எஸ்.சும் லத்தீபும் கல்முனை எனும் சொந்த ஊரையும், கல்முனையின்
ஒரேயொரு வேட்பாளனான என்னையும் மறந்து நிஜாமுத்தீனுக்காக சகல சூட்சிகளையும் செய்து இயக்கிய புர்க்கானுடன் சேர்ந்து வை.எல்.எஸ்.சும் லத்தீபும் இயங்கினார்கள்.

அதுமட்டுமல்ல அவர் எழுதிய அந்த பதிவில்கூட அவர் நடாத்திய ஏழு கூட்டங்களில் வேட்பாளனான நான் கலந்து கொண்டேனா என்றோ அல்லது நானும் ஒரு வேட்பாளன் என்றோ உன்மை எழுத மனமில்லாதது வை.எல்.எஸ்.சின் உன்மைகளை மறைத்து தன்னை முதன்மை படுத்தும் வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், 1986ல் தொடங்கி  கட்சியில் முக்கிய நிகழ்வுகள் நடந்த 1987ம் ஆண்டைய சம்பவங்களை மூடிமறைத்து 1988க்குள் பாய்ந்து அவர் கல்முனைக்கும் எனக்கும் செய்த சதியை பறைசாற்றியுள்ளார். 32 வருடங்களின் பின் அல்லா எனது சந்தேகத்தை நிஜமாக்கியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த உண்மைகள் அன்று கட்சிக்காக தங்களை அர்ப்பணித்த சறூக்காரியப்பர், நிசார் லோயர், சாய்ந்தமருது ஜப்பார், வபா பாறூக், டாக்டர் எஸ்.எல்.றியாஸ், எம்.எஸ்.எம்.சத்தார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அஸீஸ், ஹபீப் முகமது, வை.பி.ஏ.ஜப்பார், எச்.ஏ.அஸீஸ், போடியார்ர மஜீது, கல்முனை மோடஸ் ஹாறூன், பள்ளிக்காக்கா, சுல்த்தான் காக்கா, மருதமுனை ஹம்தூன்.ஏ.ஆர்.ஏ.சத்தார் ஆகியோருக்கு வெள்ளிடை மலை.

வை.எல்.எஸ்.சின் போக்கை அறிந்த அல்லாஹ் அவரளந்த சுண்டால் சென்ற பொதுத்தேர்தலில் அவருக்களந்தான்.

காலம் கதை சொல்லும்

ஹாஜி நஸீர்

Comments

Popular posts from this blog

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க  தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற  முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின்  மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017    300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத