முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது, உயிரிழந்த எமது உறவுகளை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்காலில் இன்று இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் தமது உறவுகளை இழந்த மக்கள் கண்ணீர் மல்க மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
படையினரின் கெடுபிடிகளை கடந்து அதிகாரத்துக்கு உட்பட்டு நாட்டில் உள்ள தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அவர் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.
இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ள விடாமல் தடுத்த இராணுவம் மற்றும் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு மேல்மட்டம் கொண்டு சென்று உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதன்காரணமாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உரிய நேரத்துக்கு செல்ல வேண்டிய விடயங்களை பற்றி தெளிவு படுத்திய நிலையில், தனது ஆதரவாளர்களுடன் சென்ற நான்கு வாகனங்களில் முன்னாள் பிரதி அமைச்சர் சென்ற வாகனத்தை மாத்திரமே அனுமதித்திருந்தனர்.
உண்மையில் எமது மக்களின் இந்த உரிமையைக் கூட போராடி பெறவேண்டி ஏற்பட்டமை குறித்து முன்னாள் பிரதி அமைச்சர் கவலை வெளியிட்டிருந்தார்.
Comments
Post a comment