Skip to main content

இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!!

  முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!!  இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது..  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெறவும் - ஜனாதிபதிக்கு அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் பாராளுமன்றத் தேர்தலை நடத்தும் தினம் தொடர்பான விடயத்தில் அரசியலமைப்பு ரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுதல் சிறந்ததாகும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது. 

ஜனாதிபதி செயலாளர் பேராசிரியர் பி.பீ.ஜயசுந்தவிற்கு இம்மாதம் முதலாம் திகதி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொவிட்-19 தொற்று பரவல் பற்றி ஆராய்ந்த போதும் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தல் தொடர்பில் விசேட நிபுணர்களின் நிலைப்பாட்டுக்கு அமையவும் ஏப்ரல் மாதத்திற்குள் வைரஸ் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது என்பது தெளிவாகிறது. 

இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலை மே மாத இறுதிப்பகுதியில் நடத்துவதற்கான வாய்ப்பில்லை என்பதோடு பாராளுமன்றம் கலைக்கப்பட்ட தினமான மார்ச் மாதம் 3 ஆம் திகதியிலிருந்து மூன்று மாத்திற்குள் தேர்தலை நடத்த முடியாது என்று இம்மாதம் முதலாம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக ஏற்படும் சிக்கலுக்கு தீர்வினைக் காணும் முகமாக உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விரைவில் முன்னெடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொள்கிறது. இது தொடர்பில் காலம் தாழ்த்தாமல் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். 

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமால் புஞ்சிஹேவா தெளிவுபடுத்துகையில், கொவிட்-19 பரவலின் காரணமாக இம்மாதம் 25 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கபட்டிருந்த பாராளுமன்றத் தேர்தல் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான தினம் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 

எனினும் மே மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்த முடியும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார். அதற்கமைய மீண்டும் புதிய பாராளுமன்றம் கூடும் தினம் பற்றி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்படும். அந்த தினமானது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதங்கள் நிறைவடைவதற்கு முன்னரான ஒரு தினமாக இருக்க வேண்டும். 

அதற்கமைய இவ்வருடம் ஜூன் முதலாம் திகதியளவில் புதிய பாராளுமன்றம் கூட வேண்டும். அவ்வாறு ஜூன் மாதம் முதலாம் திகதி பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டுமாயின் மே மாத இறுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறெனில் பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இம் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட வேண்டும். 

எனினும் நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் இம்மாதம் 20 ஆம் திகதியின் பின்னர் தேர்தலுக்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான சூழல் இல்லை. ஆனால் ஜூன் மாதம் முதலாம் திகதி புதிய பாராளுமன்ற அமர்வு இடம்பெறாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையில் சிக்கல் ஏற்படும். 

எனவேதான் இந்த சிக்கலைத் தீர்த்துக் கொள்வதற்காக உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுதல் சிறந்ததாகும் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டுகிறது என்றார்.

Comments

Popular posts from this blog

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்

*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க  தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற  முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின்  மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017    300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத