Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

காத்தான்குடி தள வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றிய விடயம் அரசியல் பழிவாங்களாகும்


காத்தான்குடி தள வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றிய விடயம் அரசியல் பழிவாங்களாகும்- முன்னாள் கிழக்கு ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்.

(எம்.பஹ்த் ஜுனைட்)

காத்தான்குடி தள வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்ற வேண்டிய எந்த அடிப்படை தேவையோ,அவசியமோ  அரசாங்கத்திற்கு கிடையாது. நான் அதிகாரத்தில் இருந்திருந்தால் எந்தவொரு சூழலிலும் அதிகாரிகள் காத்தான்குடி தள வைத்தியசாலை விடயத்தில் சிபாரிசு கூட செய்திருக்கமாட்டார்கள். என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கும் போது.
காத்தான்குடி தள வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டமைக்கு எமக்கு உடன்பாடு இல்லை எம்மால் அனுமதிக்கவும் முடியாது. கிழக்கு மாகாணத்தில் எத்தனையோ வசதிகள் கொண்ட வைத்தியசாலைகள் இருக்கும் போது காத்தான்குடி தள வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றியது எமது மக்களுக்கு இழக்கப்பட்ட அரசியல் பழிவாங்களாகும்.

நான் அதிகாரத்தில் இருந்திருந்தால் அதிகாரிகள் காத்தான்குடி தள வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக சிபாரிசு கூட செய்திருக்கமாட்டார்கள். கடந்த வருடம் ஏப்ரல் -21 இல் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பின்னர் நான் வகித்த ஆளுநர் பதவியை அநியாயமாக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த தீவிரவாதிகள், பெளத்த தீவிரவாதிகள்,சில் பெளத்த மத குருமார்கள் ஒன்று சேர்ந்து அப்போது இருந்த ஜனாதிபதியின் சூழ்ச்சியால் பறிக்கப்பட்டது. இதன் பின்னர் அரசியல் அதிகாரம் இல்லாத சமூகத்தை இன்னும் இன்னல்களுக்கு உள்ளாக்குவது பழிவாங்கும் செயற்பாடாகவே கருதுகிறேன்.

காத்தான்குடி குறைந்த நிலப்பரப்பில் அதிகமான மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். எந்த அளவிற்கு என்றால் காத்தான்குடி தள வைத்தியசாலையின் கழிவுகளை எரியூட்டும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கும் மக்களது வாழிவிடத்திற்கும் இடையிலான தூரம் வெறுமென 22 அடிகள் மாத்திரமே.

இவ்வாறான நிலையில் சுகாதார பணிப்பாளரது ஆரம்ப எழுத்து மூலமான அறிக்கையில் கொரோனா பரிசோதனை நிலையமாக ஐந்து வைத்தியசாலைகள் குறிப்பிடப்பட்டிருந்தது அதிலும் ஐந்தாவது இடத்தில்தான் காத்தான்குடி தள வைத்தியசாலை குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சுமார் 350 கி.கீ தூரத்தில் உள்ள பண்டாரநாயக்க மாவத்தையில் இருந்தும்  410 கி.மீ தூரத்தில் உள்ள பேருவளையில் இருந்தும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அழைத்து வரப்பட்டு காத்தான்குடி தள வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.410 கி.மீ தூரத்தில் உள்ள பேருவளையில் இருந்து தொற்றுக்குள்ளானவர்களை சுமார் 12 மணித்தியாலங்கள் பயணித்து அழைத்து வரும் வழியில் இடையில் பல மிகப்பெரிய, பெரும் வசதிகள் கொண்ட வைத்தியசாலைகள் இருந்தும் அதனையும் தாண்டி காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு கொண்டுவருவது திட்டமிட்ட பழிவாங்கும் செயற்பாடாகவே நான் கருதுகிறேன்.

இந்த காத்தான்குடி தள வைத்தியசாலை அரசாங்கம் கட்டிய வைத்தியசாலை அல்ல இந்த வைத்தியசாலை அப்போது இருந்த நோர்வே நாட்டின் தூதுவர் ஜோன்விஸ்பக் அவர்களுக்கும் எனக்கும் இடையிலான நல்லுறவின் காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் 09 மில்லியன் டாலர்கள் நிதியில் நோர்வே அரசாங்கத்தின் உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டது. வைத்தியசாலைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் காத்தான்குடி மக்களின் பங்களிப்புடன் பெறப்பட்டதுடன் ICU,ETU போன்ற பிரிவுகள் சவூதி அரேபியாவை சேர்ந்த சகோதர்களின் 13 கோடி ரூபாய் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்தினால் அவ்வப்போது அம்பியூலன்ஸ் வாகனம் போன்ற உதவிகளே வழங்கப்பட்டது.

இவ்வாறு காத்தான்குடி  மக்களினால் அமைக்கப்பட்ட வைத்தியசாலையில் திடீரென அத்துமீறி இரானுவத்தின் மூலம் கையகப்படுத்தி கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவது மிகப்பெரும் அத்துமீறலாகும்.
கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் கூறுவது போன்று கிழக்கு மாகாணத்திற்கு கொரோனா சிகிச்சைக்காக தனியாக ஒரு வைத்தியசாலை தேவை என்றால் காத்தான்குடி தள வைத்தியசாலையைவிட பெரும் வசதிகள் கொண்ட வைத்தியசாலைகள் பல இருக்கின்றன அவைகளை எடுத்து இருக்கலாம்.  பல வசதிகளுடன் கட்டப்பட்டு மூடப்பட்ட வைத்தியசாலைகளும் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற குறிப்பாக அமெரிக்காவின் நிதியுதவியுடன் பல வசதிகளுடன் கரடியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது அப்பகுதியில் மக்களின் வாழ்வதாரம் எதுவும் இல்லை இந்த வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக தேர்ந்தெடுத்து அதற்கு தேவையான உபகரணங்களை ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து பெறப்பட்டு கரடியனாறு வைத்தியசாலையை கிழக்கு மாகாணத்திற்கான கொரோனா சிகிச்சை வைத்தியசாலையாக அமைத்திருக்கலாம்..

அரசியல் அதிகாரம் எதுவும் இல்லாத நிலையில் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் இக்காரியத்தை மேற்கொண்டவர்ளை இறைவனிடம் பொறுப்பாக்கிவிட்டு தற்போது காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு  அழைத்து வரப்பட்டுள்ள நோயாளர்கள் எமது சகோதரர்கள் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடுகளுக்கு மகிழ்ச்சியாக திரும்ப வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திப்போம். கடந்த காலங்களில் பல்வேறு பழிவாங்களுக்கும்,துரோகங்களுக்கும் முகம் கொண்டு அதனை முறியடித்த வெற்றி கண்ட காத்தான்குடி மண் இந்த துரோகத்தையும் இறைவனின் உதவியுடன் முறியடித்து வெற்றிபெறுவோம். என முன்னாள் கிழக்குமாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.