பண்டாரவளையில் இருந்து கொண்டுவந்த மரக்கறிகளை பலாங்கொடையில் விற்றார்கள் என்று குற்றச்சாட்டி அவற்றின் மீது மண்ணெண்ணெய் விசிறிய பலாங்கொடை மேயர் சாமிக்க தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.
பலாங்கொடை நகரில் இப்போதுள்ள நிலைமையில் வீதியோரத்தில் பொருட்களை விற்க கூடாதென எச்சரிக்கை விடுத்தும் அதனை மீறியதால் இவ்வாறு செயற்படவேண்டி வந்ததாக மேயர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுகுறித்து விவசாயி ஒருவர் தெரிவித்ததாவது ,
“நாங்கள் பண்டாரவளையில் இருந்து மரக்கறி ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தோம். அங்கு செல்ல முடியாத நிலைமை இருப்பதாக பலாங்கொடை நகருக்கு அருகே வரும்போது எமக்கு தெரியவந்தது. அதனால் நாம் எமது மரக்கறிகளை பலாங்கொடை நகரில் அதனை விற்க முற்பட்டோம். அப்போதே மேயர் இந்த செயற்பாட்டில் ஈடுபட்டார். விவசாயிகளை இப்படியா கவனிப்பது? இப்படியொரு மோசமான மேயரை நாங்கள் எங்கும் கேள்விப்பட்டதில்லை..” -என்றனர்.
இதேவேளை குறிப்பிட்ட மேயருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
Post a Comment