Posts

Showing posts from April, 2020

காத்தான்குடி தள வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றிய விடயம் அரசியல் பழிவாங்களாகும்

Image
காத்தான்குடி தள வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றிய விடயம் அரசியல் பழிவாங்களாகும்- முன்னாள் கிழக்கு ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ். (எம்.பஹ்த் ஜுனைட்) காத்தான்குடி தள வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்ற வேண்டிய எந்த அடிப்படை தேவையோ,அவசியமோ  அரசாங்கத்திற்கு கிடையாது. நான் அதிகாரத்தில் இருந்திருந்தால் எந்தவொரு சூழலிலும் அதிகாரிகள் காத்தான்குடி தள வைத்தியசாலை விடயத்தில் சிபாரிசு கூட செய்திருக்கமாட்டார்கள். என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கும் போது. காத்தான்குடி தள வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டமைக்கு எமக்கு உடன்பாடு இல்லை எம்மால் அனுமதிக்கவும் முடியாது. கிழக்கு மாகாணத்தில் எத்தனையோ வசதிகள் கொண்ட வைத்தியசாலைகள் இருக்கும் போது காத்தான்குடி தள வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றியது எமது மக்களுக்கு இழக்கப்பட்ட அரசியல் பழிவாங்களாகும். நான் அதிகாரத்தில் இருந்திருந்தால் அதிகாரிகள் காத்தான்குடி தள வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக சிபாரிசு கூட செய்திருக்கமாட்டார்கள். க

காபிர்களை கண்ட இடத்தில் கொல்லுங்க‌ள்

Image
“காபிர்களை கண்ட இடத்தில் கொல்லுங்க‌ள் ”என்று குர்ஆனை விமர்சிக்கும் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு நோர்வே நாட்டில் குர்ஆனை ஆய்வு செய்து அதில் phd பட்டம் எடுத்த சகோதரி வாசுகியின் விளக்கம் வணக்கம் (திருக்குரானில் காஃபிர்களை வெட்டுங்கள்) (முஹம்மது நபி) 6ம் நூற்றாண்டில் 22.4.571ம் ஆண்டு மக்கா நகரில் பிறந்த முஹம்மது நபி அவர்கள் 8.6.632ம் மதினா நகரில் மரணம் அடைந்து விட்டார்கள். (62ஆண்டுகள் வாழ்ந்தார்கள்) (திருக்குரான்) இறைவனால் ஜிப்ரில் (வானவர்) மூலம் முஹம்மது நபி அவர்களுக்கு சொல்லப்பட்டது திருக்குரான் என்ற வேதம். 23 ஆண்டுகள் இறைவனால் சொல்லப்பட்ட இந்த வேதத்தை முதன் முதலில் கலிபா உஸ்மான் அவர்களின் காலத்தில்  ஜெர்மனி நாட்டில் ஹர்பாக் தலைநகரத்தில் எழுத்து வடிவில் அச்சிட பட்டு அதன் ஒரிஜினல் காப்பியை தாஷ்கண்ட் நாட்டிலும், துருக்கி நாட்டில் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில் இன்று வரை பாது காக்கப்பட்டு வருகிறார்கள். இந்த உலக திருமறை திருக்குரானில் 114அத்தியாயங்களும் 30பாகங்களும் 6236வாக்கியங்களும் (6666) 321267எழுத்துக்களும் கொண்டு உள்ளது. இந்த வேதத்தில் Phd பட்டம் பெற்றவள் நார்வே

கொரோனாவுடன் பொலனறுவையில் அடையாளம் காணப்பட்ட கடற்படைச் சிப்பாய் !

Image
பொலனறுவை பகுதியில் இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர் வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றிய சிப்பாய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெலிசர கடற்படை முகாமில் மின்சார தொழில்நுட்ப பிரிவில் கடமையாற்றும் 32 வயதான சிப்பாய் ஒருவருக்கே இந்த தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டனன் கமான்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார். குறித்த சிப்பாய் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி தான் கடமையாற்றிய முகாமிலிருந்து விடுமுறைக்காக பொலன்னறுவை – புலஸ்திகம பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில், அவருக்கு சுனயீனம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஏப்ரல் 20ஆம் திகதி அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார். குறித்த சிப்பாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இன்றைய தினம் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில், குறித்த சிப்பாய் கடமையாற்றிய வெலிசர முகாமிற்குள் தற்போது விசேட சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினா

சிங்க‌ள‌ இன‌வாத‌ம் ம‌ஹிந்த‌ கால‌த்துக்கும் முன்பே உருவாகி விட்ட‌து.

Image
மொட்டைத் தலைக்கும் முழக்காலுக்கும் முடிச்சா? (Virakesari 19.04.2020 ) சஹாப்தீன் - 2010 ஆண்டில் இருந்து முஸ்லிம் சமூகத்தை சீண்டி வீண் வம்புக்கு இழுக்கும் நடவடிக்கைகளின் மூலமாகவே இலங்கையில் உச்சளவில் இனத்துவ அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த அரசியலுக்கும், இனவாத செயற்பாடுகளுக்கும் முஸ்லிம்களில் ஒரு சாராரும் துணையாகவே இருந்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் அவலத்தின் மேல் நின்று கொண்டு பேரினவாத அரசியல் தலைவர்களை திருப்திப்படுத்திக் கொள்வதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் உடல்கள் மத விழும்மியங்கள் போன்றவைகள் நிராகரிக்கப்பட்டு தகனம் செய்யப்படுகின்றன. இதனால், முஸ்லிம்கள் பெரும் கவலை அடைந்துள்ளார்கள். முஸ்லிம்கள் மரணித்தால் அவர்களின் உடல்கள் மண்ணில் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்பது இஸ்லாமிய வழிமுறையாகும். கொரோனாவினால் மரணித்த முஸ்லிம்களின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு தாருங்கள் என்று முஸ்லிம்கள் கோரிய போதிலும், அதனை அரசாங்கம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. உடலை தகனம் செய்வதே சிறந்ததென்று வைத்தியர்க

தேர்தல் ஒத்திவைப்பும் எழுந்துள்ள சட்டப்பிரச்சினைகளும்

================================= வை எல் எஸ் ஹமீட் தேர்தல் ஜூன் 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் ஜூன் 2ம் திகதி அல்லது அதற்குமுன் புதிய பாராளுமன்றம் அரசியலமைப்புப்படி கூடியாகவேண்டும். அவ்வாறாயின் குறைந்தபட்சம் மே 28இல் தேர்தல் நடாத்தப்படவேண்டும். அவ்வாறு நடாத்துவதற்கு ஏப்ரல் 20ம் திகதியிலிருந்தாவது தாங்கள் தேர்தல் வேலைகளை ஆரம்பிக்கவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அது சாத்தியப்படுமா? எனவே, இது தொடர்பாக உயர்நீதிமன்ற பொருள்கோடலைப் பெறுமாறு கோரியிருந்தது. அதற்குப்பதிலளித்த ஜனாதிபதியின் செயலாளர் மே 28இல் தேர்தல் நடாத்தமுடியாது; என தற்போது ஆணைக்குழுவால் கூறமுடியாது. எனவே, உயர்நீதிமன்றத்தை நாடவேண்டிய அவசியமில்லை, எனத் தெரிவித்திருந்தார். மறுபுறம் சட்டத்தைத் திருத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் விடுத்தகோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் சட்டப்பிரச்சினைகளுக்கு மத்தியில் தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுக்கவேண்டிய முழுப்பொறுப்பும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இருந்தது.

மதுபான நிலையங்களில் மதுப்பிரியர்கள் அட்டகாசம்

Image
பாறுக் ஷிஹான் மதுபான நிலையங்களில் சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸார்   ஈடுபட்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மதுபான நிலையங்கள்  திங்கட்கிழமை(20) இன்று ஆரம்பிக்கப்பட்டன. திங்கட்கிழமை(20) காலை முதல் கல்முனை  சம்மாந்துறை பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களில் அதிக மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காது ஆர்வத்துடன் மது கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.   எனினும் அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த மதுப்பிரியர்களிடம் சமூக இடைவெளியை பேணுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

ரியாத் பதியுதீன் கைது !

Image
BREAKING NEWS  APRIL 14, 2020 முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷார்ட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் புத்தளத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் நடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது

மரக்கறிகளுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய மேயர் –

Image
மரக்கறிகளுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய  மேயர் – விசாரணைகள் ஆரம்பம் ! பண்டாரவளையில் இருந்து கொண்டுவந்த மரக்கறிகளை பலாங்கொடையில் விற்றார்கள் என்று குற்றச்சாட்டி அவற்றின் மீது மண்ணெண்ணெய் விசிறிய பலாங்கொடை மேயர் சாமிக்க தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன. பலாங்கொடை நகரில் இப்போதுள்ள நிலைமையில் வீதியோரத்தில் பொருட்களை விற்க கூடாதென எச்சரிக்கை விடுத்தும் அதனை மீறியதால் இவ்வாறு செயற்படவேண்டி வந்ததாக மேயர் தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து விவசாயி ஒருவர் தெரிவித்ததாவது , “நாங்கள் பண்டாரவளையில் இருந்து மரக்கறி ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தோம். அங்கு செல்ல முடியாத நிலைமை இருப்பதாக பலாங்கொடை நகருக்கு அருகே வரும்போது எமக்கு தெரியவந்தது. அதனால் நாம் எமது மரக்கறிகளை பலாங்கொடை நகரில் அதனை விற்க முற்பட்டோம். அப்போதே மேயர் இந்த செயற்பாட்டில் ஈடுபட்டார். விவசாயிகளை இப்படியா கவனிப்பது? இப்படியொரு மோசமான மேயரை நாங்கள் எங்கும் கேள்விப்பட்டதில்லை..” -என்றனர். இதேவேளை குறிப்பிட்ட மேயருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

COSMI welcomes imports ban saying rare opportunity for lagging SMEs

Image
Sri Lanka’s limiting and banning of imports of non-essential items is a welcome step in the face of the COVID-19 pandemic-and more so for the revival of the country’s agri-SME sector. “Government’s limiting and ban on imports of non-essential items shall help local enterprises looking to get into in the production and processing of these items. We believe this situation presents the country with a rare opportunity to kick-start the revival of several local SME sectors” said  COSMI  Founder President Nawaz Rajabdeen on 4 April.  COSMI’s  Rajabdeen was welcoming Co-Cabinet Spokesman Minister Ramesh Pathirana’s statement of Sri Lanka’s decision to ban or limit all non-essential imports into the country except medicine and fuel. “ SMEs in agri-business, aquaculture, poultry and other livestock are some of the priority sectors that can make use of government’s support if given. Also the strong domestic demand for their produce during this COVID crisis shows low market risk for their su

Postponement of Parliamentary Elections-2020 and the Law

================================= Y L S Hameed The Sri Lanka Parliament was dissolved by the President with effect from 3rd March 2020 under Article 70(5)(a) of the Constitution. The proclamation dissolving Parliament fixed the date for the election to be held on 25th April,2020 and the date for the first meeting of the new Parliament to be 14th May,2020. In view of the outbreak of Covid 19 virus, the Elections Commission announced that the election would not be held as scheduled. However there is no provision in the law to postpone the Election in the whole Country. The only provision available with regard to postponement of Parliamentary Elections is S 24(3) of the Parliamentary Elections Act No 1 of 1981, which reads, “ where due to any emergency or unforeseen circumstances the poll for the election in any electoral district cannot be taken on the day specified in the notice relating to the election......, the Commission may......appoint another day.......” ( emphasis is add

இலங்கை நோர்வூட்டில் 5 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்கள் திருடப்பட்டன !

 ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டுள்ள நேரத்தில் நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா புளியாவத்தை நகரபகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்று இன்று அதிகாலை இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு ஐந்து லட்ச ரூபா பெறுமதியான மதுபான போத்தல்கள் திருடப்பட்டுள்ளன. சாஞ்சிமலை அட்டன் பிரதான வீதியின் புளியாவத்தை நகரமத்தியிலுள்ள மதுபானசாலையே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளதுடன் மதுபானசாலை உரிமையாளரின் முறைப்பாட்டுக்கமைய விசாணையை ஆரம்பித்துள்ள நோர்வூட் பொலிஸார் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யபடவில்லையெனவும் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெறவும் - ஜனாதிபதிக்கு அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

Image
(எம்.மனோசித்ரா) நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் பாராளுமன்றத் தேர்தலை நடத்தும் தினம் தொடர்பான விடயத்தில் அரசியலமைப்பு ரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுதல் சிறந்ததாகும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.  ஜனாதிபதி செயலாளர் பேராசிரியர் பி.பீ.ஜயசுந்தவிற்கு இம்மாதம் முதலாம் திகதி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொவிட்-19 தொற்று பரவல் பற்றி ஆராய்ந்த போதும் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தல் தொடர்பில் விசேட நிபுணர்களின் நிலைப்பாட்டுக்கு அமையவும் ஏப்ரல் மாதத்திற்குள் வைரஸ் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது என்பது தெளிவாகிறது.  இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலை மே மாத இறுதிப்பகுதியில் நடத்துவதற்கான வாய்ப்பில்லை என்பதோடு பாராளுமன்றம் கலைக்கப்பட்ட தினமான மார்ச் மாதம் 3 ஆம் திகதியிலிருந்து மூன்று மாத்திற்குள் தேர்தல

இலங்கையில் உயிரிழந்த 4ஆவது நபர் இரத்மலானையை சேர்ந்தவர்

Image
கொரோன வைரஸ் தொற்றுக் காரணமாக நேற்று (02) உயிரிழந்த 58 வயதான நான்காவது நபர், இரத்மலானையை வசிப்பிடமாக கொண்டவர் என்பதோடு, அவரது இறுதிக்கிரியைகள் இன்று (03) இடம்பெறவுள்ளன.  அண்மையில் தனது மனைவியுடன் இந்தியாவிற்கு சென்றிருந்த 58 வயதான குறித்த நபர், கடந்த 16ஆம் திகதி ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (02) உயிரிழந்துள்ளார்.  அத்தோடு அவரது மனைவி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மருதமுனையில் நிகழ்ந்த மரணம் தொடர்பில் பரப்படும் செய்தியின் உண்மை நிலை என்ன?

Image
(ஜெஸ்மி எம்.மூஸா) அம்பாறை வைத்தியசாலையில் டெங்கினால் மரணித்த மருதமுனையைச் சேர்ந்த தாய்க்கும் சிசுவுக்கும் கொறோனா இருந்ததாகப் பரப்பப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது இது பற்றித் தெரியவருவதாவது, ஏழு மாத கர்ப்பிணியான மருதமுனை- பெரியநீலாவணைப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான புஹார்த்தீன் ஆதிலா பானூ(30) என்பவர் காய்ச்சல் காரணமாக கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டிருக்கிறார் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு மேற்கொள்ளப்பட்ட இரத்தப் பரிசோதனையை அடுத்து நோயாளிக்கு டெங்கு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது மறுநாள் புதன் கிழமை(1) தாயின் உடல் நிலை மாற்றமடைந்தமையினால் அம்பாறை வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். அவ்வாறு மாற்றப்படும் போது காய்ச்சலுடன் இருமலும் இருந்ததாக அஷ்ரஃப் வைத்தியசாலையின் குறிப்பில் அறிவிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது அம்பாறை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு முன்னரே சிசு இறந்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர் அம்பாறை வைத

கொரோனா வைரஸால் மரணித்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டது !

Image
BREAKING NEWS கொரோனா வைரஸால் மரணித்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டது ! கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் உயிரிழந்தவரின் உடல் சற்றுமுன் கொட்டிகாவத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாக அறியமுடிந்தது. முன்னதாக மருதானையை சேர்ந்த அவரின் குடும்ப உறவினர்களுக்கு உடல் காண்பிக்கப்பட்டது. நேற்று இரவு முதல் ஜனாஸாவை பெற்று அடக்கம் செய்ய குடும்பத்தார் தீவிர முயற்சிகளை எடுத்தபோதும் மருத்துவ காரணங்களை காட்டி அதற்கு அரச தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்படவில்லை.