Skip to main content

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்


பாறுக் ஷிஹான்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.. 


அம்பாற மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களை அடையாளப்படுத்தும்  நிகழ்ச்சி புதன்கிழமை(11) மாலை 7 மணியளவில் அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது.

இதன் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்.

அம்பாறை மாவட்ட வேட்பாளர் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று  இடம்பெறும் மத்திய குழுக் கூட்டத்தில் தமிழரசு கட்சியின் பங்காளிக் கட்சிகளான டெலோ இயக்கம்,பளொட் இயக்கம் ஆகியவற்றில் வேட்பாளர் தெரிவு மற்றும் இறுதி தீர்மானம் இன்று  திருமலை மாவட்டத்தில் இடம்பெறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்க படும் எனவும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் அவர்களது பலத்தை ஒற்றுமையாக நின்று தங்களின் இனவிடுதலை தமிழ் மக்கள் விடுதலை தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆள வேண்டுமென்று அரசியல் தீர்வு உட்பட்ட இவ்வாறான அரசியல் முன்னெடுப்புகளை முன்னெடுக்கப்படுவதற்து ஏற்ற தேர்தல் அறிக்கை ஒன்றை நாளை நாங்கள் கூடி தீர்மானிக்க இருக்கின்றோம்.

போர்க் காலத்தில் கூட தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்தி இருக்கின்றனர். நிலங்கள் அபகரிக்கப்பட்டுவது, தேவைகள் நிறைவேற்றப்படுவதில் ஏற்படும் தாமதங்கள் இயலாமைகள் இவற்றையெல்லாம் நாங்கள் மனதில் கொண்டு இது சார்ந்த விடயங்களில் இந்த அம்பாறை மாவட்டத்துககு முன்னுரிமை அளித்து தமிழர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேற்றுவதற்கு நாங்கள் ஒற்றுமையுடன் என்று செயற்படுவோமானால் இரண்டு பிரதிநிதிகள் கூட பெற்றுக் கொள்ளலாம்.

அம்பாறை மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள் அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு தேசியப்பட்டியல் பிரதியை நிச்சயம் தர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருக்கிறார்கள். இந்த கோரிக்கை நாளைய கூட்டத்தில் பேசப்பட்டு பரிசீலிக்கப்படும் வலியுறுத்தியிருந்தார் . 

நாங்கள் ஜனநாயகம் இல்லாத காலத்தில் கூட தேர்தலில் ஈடுபட்டிருக்கின்றோம் இப்பொழுது ஓரளவு ஜனநாயக சூழ்நிலை நிலவி வருகின்ற போதும் இப்போது பல குழுவினர் வெளியே வந்த தேர்தலில் ஈடுபடுகிறார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் புதிதாக பல  கட்சிகள் அவர்கள் புதிய சின்னத்தில்  களமிறங்குகின்றனர் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரிந்த விடயம்.அவர்களது பின்னணி அவர்களுக்குப் பின்னால் அரசாங்கம் உள்ளதா அல்லது போர்க்காலத்தில் அரசுடன் இணைந்து செயற்பட்டவர்கள் ,அரசாங்கத்தின் அரசியல் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு முயற்சிப்பவர்கள் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட கருத்துகளை குழப்பகரமான தெரிவித்து வருகின்ற கருத்துடையவர்கள் பின்னணி என்பது மக்கள் அறிவார்கள் அவர்களை மக்கள் எப்போதும் நிராகரிப்பார்கள்.


தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட அவர்களும் போர்க்காலத்தில் அரசுடன் இணைந்து சேர்ந்தவர்களும் எங்களைப் பற்றி விமர்சிக்க தகுதியற்றவர்கள். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தப்பட்டது எங்களுக்கு மிகுந்த மனவேதனையை தருகின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் அரசுகள் முஸ்லிம் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமை குறித்த விடையத்தை  பயன்படுத்தி நிறைவேற்ற தவறி வருகின்றது என தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத