”நவ லங்கா சுதந்திரக் கட்சி” – குமார் வெல்கம புதிய கட்சி ஆரம்பித்தார் !நவ லங்கா சுதந்திரக் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை இன்று கொழும்பில் ஆரம்பித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம , அழிந்து போகும் நிலையில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளை காப்பாற்றவே இந்த நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்சி பல கூட்டணிகளை கொண்டிருக்குமென்றும் ,பண்டாரநாயக்கவின் கொள்கைகளை நிலைநிறுத்துமெனவும் குறிப்பிட்ட வெல்கம ,எந்தப் பேயுடனாவது இணைந்து நல்லதொரு ஆட்சியை அமைக்க முயற்சிகளை எடுப்பதாக கூறினார்.

” தாமரை மொட்டு கட்சியில் உள்ளவர்கள் குறிப்பாக பிரசன்ன ரணதுங்க , ரொஷான் ரணசிங்க ஆகியோர் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை பகிரங்கமாக விமர்சிக்கின்றனர்.பர்ர்ப்பார் கேட்பார் யாருமில்லை.அந்த நிலைமை மாற வேண்டும் . எமது கட்சியை ஆரம்பித்த ஸ்தாபகர்களின் கொள்கைகளை இந்தக் கட்சியின் ஊடாக முன்னெடுப்போம்..’ என்றும் குறிப்பிட்டார் குமார் வெல்கம

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்