அமைச்சர் விமல் வீரவன்ச வெலிஓயாவில் கைத்தொழில் பேட்டையை திறந்துவைத்தார்.
-ஊடகப்பிரிவு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் சம்பத்னுவார பிரதேச செயலக பிரிவில் உள்ள வெலிஓயாவில் கைத்தொழில் பேட்டையை  சிறு மற்றும் நடுத்தர கைதொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று (02) திறந்து வைத்தார்.

இந்த கைத்தொழில் பேட்டை மூலமாக  இப்பகுதியில் வேலைவாய்ப்பினை எதிர்பார்க்கும் சுமார் 200,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1,020 பேருக்கு வேலை வழங்குவதற்காக நியூ யுனிவர்ஸ் கார்ப்பரேட் ஆடை (பிரைவேட்) லிமிடெட் (New Universe Corporate Clothing) மற்றும் ஸ்டைலிஷ் கேஷுவல் வேர் (பிரைவேட்) லிமிடெட்  (Stylish Casual Ware)   ரூ .272.5 மில்லியன் முதலீடு செய்துள்ளன.

இந்த நிகழ்வில்  நியூ யுனிவர்ஸ் கார்ப்பரேட் ஆடை (தனியார்) லிமிடெட் (New Universe Corporate Clothing) தலைவர் அமி ன்த  விமலசேனா. மற்றும் அமைச்சின் செயலாளர் ஜே..எ ரஞ்சித்.  அமைச்சரின் ஆலோசகர் சுதேஷ் நந்தசிறி, கை தொழில்துறை அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர்  விந்திகா பியரத்ன உட்பட  பல முதலீட்டாளர்களும்  கலந்து கொண்டனர். ..

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்