முன்னாள் முதலமைச்சர் முதலமைச்சர் பதவிக்கு அருகதை அற்றவ


பாறுக் ஷிஹான்

வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி  விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்கு அருகதை அற்றவர் கடந்த அவரது ஆட்சிக்காலத்தில் அர்த்த பூர்வமாக எதையும் செய்யவில்லை அதனால் தான் முதலமைச்சர் பதவிக்கு கையாலாகாதவர்  என தெரிவித்திருந்ததாக கடற்தொழில் நீரியல் வள அமைச்சர் கே.என்  டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

 அம்பாறை மாவட்டம்  கல்முனை அமைந்துள்ள  தனியார் விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை(15)  மாலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில்  மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்


 கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தல் தற்சமயம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அது அந்த மக்களின் கைகளில் தங்கியுள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் சரியானவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் .வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி  விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்கு அருகதை அற்றவர் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன். என குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்