களுவாஞ்சிக்குடியில் கொரோனா??


BREAKING NEWS

கொரோனா தொற்று சந்தேகநபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவிடாது தடுத்த 9 பேர் கைது !

ஒருவருக்கு கொரோன தொற்று நோய் இருக்கலாம் என சந்தேகத்தில் அவரை சோதிப்பதற்காக
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் இருந்து அம்புலன்ஸ் வண்டியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று வெள்ளிக்கிழமை(13) பகல் கொண்டு வந்தபோது அந்த நோயாளியை வைத்தியசாலைக்குள் கொண்டு செல்ல விடாது சிலர் தடுத்ததையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது .இதனையடுத்து 09 பேரை கைது பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதைத் தொடர்ந்து குறித்த நபருக்கு கோரோனா தொற்று நோய் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை பரிசோதிப்பதற்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள கொரோனா தொற்று நோய் பிரிவுக்கு அம்புலனஸ் வண்டியில் அனுப்பிவைக்க ஏற்பாடானது.

இதனை கேள்வியுற்ற பெண்கள் அமைப்பு ஒன்றைச் சேர்ந்த பெண்கள் மற்றும் வைத்தியசாலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றினைந்து போதானா வைத்தியசாலைக்குள் குறித்த அம்புலனஸ் வண்டியை செல்லவிடாது வைத்தியசாலையின் எல்லா வெளிவாசல் கதவுகளையும் பூட்டி தடுத்தனர் .இதனையடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது . பொலிசார் ஆர்பாட்டகாரர்களை விரட்டியடத்து குறித்த நோயாளரை சிரமங்களுக்கு மத்தியில்வைத்தியசாலைக்குள் கொண்டு சென்றனர்

இதனைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டதுடன் அம்புலன்ஸ் வண்டியை கொண்டு செல்லவிடாது தடுத்த 09 பேரை கைது செய்துள்ளனர்

இதேவேளை அந்த பகுதியில் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர் .

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்