BREAKING NEWS

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம்
......................................................................
ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன?

அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம்.

அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது?

அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது?
எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது?

இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது?

அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா?
சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது
இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது?

ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தினால்  பெரும்பான்மையான சிங்கள சகோதரர்களை இனவாதிகளாக சித்தரித்து எமது சமுகத்தை உணர்ச்சிவசப்படுத்தி அரசியல் செய்ததை தவிர அவரின் குரல்களால் எம் முஸ்லிம் சமூகத்திற்கு பெற்றுக் கொடுத்த அல்லது கிடைத்த வெற்றி என்ன? எதைக் கண்டோம் நாம்? இலங்கையில் நிம்மதியாக வாழ்ந்த எம் முஸ்லிம் சமூகத்தை ஒரு இனவாதிகளாக சித்தரிக்க வைத்த பாவியே இந்த ரிசாத் என்பதை நாம் உணரவில்லையா ?

விடிந்தால் பத்திரிகை செய்திகளை, தொலைக்காட்சி செய்திகளை, வானொலி செய்திகளை பார்க்கவே முடியாது அவ்வளவு இனவாதமும் உணர்ச்சி ஊட்டும் செய்தியாளர்கள் மாநாடும் அவ்வப்போது இந்த ரிசாத்தினால் வெளிவரும் இதற்கான காரணம் என்ன? தன்னுடைய சுயநல அரசியலுக்காக ஒட்டுமொத்த எம் முஸ்லிம் சமூகத்தை அடகுவைக்கத் துடிக்கும் இவ்வாறான தலைமையும் அவர்சார்ந்தோரையும் நம்புவது எப்படி?

முஸ்லீம் முஸ்லீம் முஸ்லீம் சத்தியம் சத்தியம் சத்தியம் என்று கத்தி கத்தி அந்த முஸ்லிம்களின் எந்த பிரச்சினைகள் தீர்வானது? எங்களுக்கு சிலு சிலுப்பு தேவையில்லை பலகாரம்தான் வேண்டும் என்பது பற்றி உணர வைக்கும் காலமே இது..!

இதுவரை அரசின் பங்காளியாகவும் அதி உயர்ந்த அமைச்சராகவும் இருந்த ரிசாத்தினால் எமது சமூகத்திற்கு குறிப்பாக வன்னியில் இருந்து வந்து கிழக்கு மக்களுக்கு என்னதான் செய்ய முடிந்தது? எது நடந்தேரியது? எமது சமூகத்திற்குள் கட்சி பேதம் எனும் பிரிவினைகளைத் தூண்டி எமக்குள்ளே பிரச்சினைகளை தூண்டியதை தவிர வேறு என்னதான் நடந்திருக்கிறது?

ஒரே ஒரு கட்சியை முஸ்லிம் காங்கிரஸ் என்றும் மக்கள் காங்கிரஸ் என்றும் வேறு வேறாக காட்டி போராளிகளை உருவாக்கி எமக்குள் குழப்பத்தை உண்டுபண்ணி அவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பதை நாம் அறியவில்லையா?
இப்போது கூட வன்னியில் ரிசாத்தும் ஹக்கீமும் ஒன்றினைந்து தேர்தலில் போட்டியாம் ! அம்பாரையில் இவர்களின் போராளிகளும் ஆதாரவாளர்களும் வேட்பாளர்களும் நாயும் கரிச்சட்டியும் போல், கீரியும் பாம்பும் போல் இருக்கின்றார்கள், இருக்கின்றோம் இவ்வாறு எமக்குள் குழப்பத்தை உண்டாக்கும் இவர்கள்தான் எம் சமூகத்தை காப்பவர்களா ? நாம் சிந்திக்க மறுக்கின்றோம் ஏன்?

அதிலும் இன்று அம்பாரையில் ஓர் இளைய தம்பி வேட்பாளர் வேறு,
 எனது அரசியல் ரவூப் ஹக்கீமுக்கு எதிரான அரசியலாக இருக்கும் என்று வேறு கத்தி திரிகிறார் அம்பாரையில் ஹக்கீமையும் ரிசாத்தையும் ஒன்று இணைய வேண்டாம் என்று வேறு அடம்பிடிக்கின்றார் காரணம் ஹக்கீமை எதிராக காட்டினால் நான் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை அந்த இளைய தம்பிக்கு.

 இளைஞர்களை தூண்டி என்னால் வெற்றிபெற முடியும் என்று  பல யுக்த்திகளை கையாளும் அந்த இளைய தம்பியினால் அந்த இளைஞர்களை சரியாக வழி நடத்த முடியாதுள்ளதை காண முடிகிறது
இன்று எமது பகுதியில் வாழும் சிலர், சில இளைஞர்கள்  முகநூல் வாயிலாக ஒழுக்கமற்ற மற்றும் பிரர் மனதை துன்புறுத்தும் தூசன வார்த்தைகளை பதிவிட்டு பரப்புகின்றனர் இது எமது பகுதி மக்களின் நற்பெயரை கெடுக்க கூடியவாறு அமைகிறது  அதே போல் முகநூல் வாயிலினூடாகவும் ஆங்காங்கேயும் இடம்பெறுகின்ற கருத்தரங்குகளினூடாகவும் பிரதேசவாதங்களை பேசுகின்றனர் இவ்வாறு பேசி வழி நடாத்தும் ஒருவரை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது!
தன்னுடைய அரசியலுக்காக நாங்கள் எவ்வாறு எங்களது பக்கத்தூரவர்களை அயலவர்களை பகைப்பது?  என்ற கேள்வி எங்களுக்குள் எழ ஆரம்பிக்கின்றது.

குறிப்பாக நாம் பார்ப்போமானால் அந்த இளைய தம்பி அதாவது முஸர்ரப் வேட்பாளராக அறிவிக்ப்பட்டு அவர் மூன்று மாதமாக இயங்கி வருவதாக கூறுகிறாராம்  இந்த மூன்று மாதங்களை நாங்களும் அவதானிக்கின்றோம் இவரோடு பொத்துவிலில் இருக்கின்ற படித்தவர்கள், புத்தி ஜீவிகள், செல்வந்தர்கள், வசதி வாய்ந்தோர்கள் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் என்று யாரும் இவருக்கு கூடவோ இவரின் கொள்கைகளுக்கு கூடவோ நின்றதை நாம் காணவில்லை பொதுவாக இன்று இவரினால் நடாத்தப்படுகின்ற சில கருத்தரங்குகளை அவதானிக்க முடிகிறது அந்த ஒவ்வொரு கருத்தரங்குகளிலும் இவருடன் அல்லது இவருக்கு பின்னாடி இவ்வாறானவர்களை காண்பது அரிதாக இருக்கிறது எனவே இவைகளை பார்க்கும் போது இவரின் கொள்கைகளை இச் சமூகம் தூராமாக்கியோ அல்லது இவரை ஏற்றுக் கொள்ளவில்லையோ என்பதையோ சிந்திக்கவும் உணரவும் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இவ்வாறு இருக்கும் இவர்களின் கொள்கைகளுக்குள் நாம் சிக்குண்டு எவ்வாறு எம் சமூகத்தின் வெற்றிக்கு முகம் கொடுப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்..!

இங்கு மற்றுமொரு விடயத்தை ஞாபகமூட்ட கடைமைப்பட்டிருக்கிறேன் சேவை என்பது தேவை என்பது என்ன? அதற்கான தீர்வு அல்லது விடை எவ்வாறு அமையும் எமக்குத்  தெரிந்திருக்கும் வேண்டும்.
வாழ்வாதாரம் என்ற பெயரில் வழங்கப்பட்டு வரும் கேஸ் அடுப்பு,பிளாஸ்டிக் பொருட்கள், தகடு போன்றதினால் யார் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டது?
இந்த சேவைகளைத் தாம் எதிர்பார்க்க வேண்டுமா பிளஸ்டிக் பொருட்கள்,  கேஸ் அடுப்பு, கேஸ் என்பது சாதாரண ஒருவருடைய வீட்டிலும் இருக்கின்றது இதற்கென்று பெரியதோர் சிலவுகள் இல்லை எனவே நாம் இதில் இருந்து விடுபடவேண்டும் , ஒரு வாழ்வாதாரம் பெறுபவர் அதை வைத்து தன்னுடைய குடும்பத்தை சிலவினங்களை அந்த கொடும்பத்தை உயர்த்திச் செல்லக் கூடியளவுக்கு அதனால் பெறும் அளவுக்கு அந்த வாழ்வாதாரம் அமைய வேண்டுமே தவிர எந்த நாளும் வாழ்வாதாரம் பெறுகின்றவர்களாக இருக்கக் கூடாது

அந்த வகையில் ரிசாத்தினாலோ இந்த முஸர்ரப்பினாலோ எந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன?
குறிப்பாக மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்களினால் அன்றுள்ள இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்புக்கு பிறகு தேசியகாங்கிரஸின் தலைவரும் முன்னால் கெப்பினட் அமைச்சருமாகிய அதாவுல்லாஹ்வினாலும் இளைஞர்களுக்கு கிடைக்கப்பெற்ற வேலைவாய்ப்புக்களுக்கு பிறகு தவிசாளர் அப்துல் வாசித் அவர்களினூடாக ரவூப் ஹக்கீமினால் ஓர் பத்துப்பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தது அதற்கு பிறகு யாராளும் எவராளும் போதியளவான வேலை வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை என்பதோடு அந்த வேலை வாய்ப்பு எனும் வார்த்தயே சம்பிதமாயுள்ளதை காண்கின்றோம்.
எனவே இன்று எத்தனை படித்த இளைஞர்கள் வேலைகளற்றுப் போய் காணப்படுகின்றனர் இதனை கருத்திற் கொண்டு சேவைகளாற்றும் ஓர் தலைமையையும் மற்றும் உறுப்பினர்களையும் நாம் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

தன் வாயால் வடை சுடும் அரசியல்வாதிகளுக்கு நாம் ஓய்வு கொடுக்க வேண்டும் அதே போல் அவ்வாறான வடைகளை சுட முற்படும் புதியவர்களுக்கும் நாம் ஒரு பாடம்புகுட்ட வேண்டும்.

ரவூப் ஹக்கீம் யார் அவர் எந்த சமூகத்தை சார்ந்தவர் என்பது புரியாமல் இவருக்கு எதிரான அரசியலாக எனது அரசியல் அமையும் என்று வாய் நிறைய கத்தும் முஸர்ரப் அவரின் அரசியல் வியூகம் எமக்கு எவ்வாறு அமையும் அதில் எமக்கான நன்மை என்னவாக அமையும்?
ஒரு திறந்த அரங்கில் அதவுல்லாஹ்வை அதா அது ஒரு வல்லா அதாவல்லா என்று ஒழுக்கம்மற்ற வார்த்தைகளை கையாண்ட இவரின் வழிநடத்தல் நம் இளைஞர்களுக்கு மத்தியில் எவ்வாறு அமையும் என இவ்வாறான சில விடயங்களை கருத்திற்கொண்டு எம் பிரதேச நலம் கருதி எம் பிரதேச மக்களின் தேவைகள் கருதி
சிறந்த சேவைகளையும் மற்றும் சிறந்த முறையில் எம் சமூகத்தை வழி நடாத்தும் தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும்.
அவ்வாறான வியூகங்களை நாம் வகுக்க வேண்டும்.

-சியாத் அகமட்லெப்பை-

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar