முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
அம்பாரை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இன பேதம் இல்லாமல் சேவை செய்யக்கூடியவர் முன்னாள்
வன ஜீவராசிகள் வள இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க-
வன ஜீவராசிகள் வள இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க-
இணைப்பாளர் எம்.வை.எம்.நிப்ராஸ்
==============================
(எம்.என்.எம்.அப்ராஸ்)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தகரும் முன்னாள் வன ஜீவராசிகள் வள இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவின் கல்முனைக்கான இணைப்பாளர் எம்.வை.எம். நிப்ராஸ் அவர்களினால் மக்கள் சந்திப்பு திங்கள்கிழமை (09) இரவு அவரின் இல்லத்தில் இடம்பெற்றது.
இவ் மக்கள் சந்திப்பில்
முன்னாள் வன ஜீவராசிகள் வள இராஜாங்க அமைச்சரின் செயலாளர் ராஜபக்ஷ ,மற்றும் சுபுன் திசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர் .
இதன் போது பொதுமக்கள் ,
இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்தோலாசிக்கப்பட்டதுடன் இதனை தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் பற்றி ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெடுப்பு செயற்பாடுகள் பற்றி இதில்ஸ் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த முன்னாள் வன ஜீவராசிகள் வள இராஜாங்க அமைச்சர் விமல வீர திசாநாயக்கவின் கல்முனைக்கான
இணைப்பாளர் எம்.வை.எம். நிப்ராஸ்
எமது நாட்டை கட்டியெழுப்ப கூடிய
ஓர் சிறந்த தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளார் .
இவரின் செயற்பாடுகள் யாவும் முன்மாதிரியாக காணப்படுகின்றது.
இது நானும் நீங்களும் கண்ணுடாக காணும் விடயமாகும். மேலும் முன்னாள் வன ஜீவராசிகள் வள இராஜாங்க அமைச்சர் விமல வீர திசாநாயக்க அம்பாரை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இன,மத பேதம் இல்லாமல் சேவை செய்யக்கூடியவராவார். இவர் கடந்த கிழக்கு மாகாண சபையில் கல்வி அமைச்சராக இருந்த போது சகல இன மக்களுக்கும் சமமாக சேவை செய்தவர்.
என்றும் ஏழை மக்களுக்கு உதவி செய்பவர் இவரை நாம் பலப்படுத்த வேண்டும் எதிர்வரும் காலம் பாரளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளது.இவரை நாம் அனைவரும் சேர்ந்து வெற்றி பெற செய்ய வேண்டும்.அப்போது நாம் இவரின் மூலம் ஓர் சிறந்த மக்கள் சேவையை பெற்றுக்கொள்ளமுடியும்
எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் இதில் எவ்வித சந்தேகமும் இல்லை நாங்கள் சரியான பாதையை தெரிவு செய்ய வேண்டும் என்றார்.
Comments
Post a comment