ஈரானில் ஒரே நாளில் 63 பேர் பலி


BREAKING NEWS

தென்கொரியாவை விஞ்சியது இத்தாலி – ஈரானில் ஒரே நாளில் 63 பேர் பலி

கடந்த ஜனவரி 31ம் தேதி தனது முதல் கொரோனா நோயாளியை இத்தாலியை உறுதி செய்தது. அதன் பின், அடுத்த மூன்று வாரங்களில், மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால் அடுத்த, 20 நாட்களில், இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

முதியவர்களுக்கு சிக்கல்

சீனாவுக்கு அடுத்தபடியாக, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இருந்து வந்த தென்கொரியாவை, இத்தாலி பின்னுக்குத் தள்ளியுள்ளது. இதுவரை இத்தாலியில், 631 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். நேற்று மட்டும் கொரோனாவால், அங்கு, 168 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் அதிகப்படியானோர் முதியவர்களாக உள்ளனர். உலகில் அதிகம் முதியவர்களை கொண்ட நாடாக இத்தாலி இருப்பதால், அந்த நாட்டில் கொரோனா உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

14 மாகாணம்… 1.6 கோடி மக்கள்!

இத்தாலி பிரதமர் கியூசெப் கோண்டே தெரிவித்துள்ளதாவது: இத்தாலியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், கேளிக்கை,விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. லோம்பார்டி பிராந்தியமும், வெனிஸ், பர்மா, மொடெனா உள்ளிட்ட, 14 மாகாணங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில், மொத்தம் 1.6 கோடி மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள் காலை 6 முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். ஆனால் வாடிக்கையாளருக்கான இருக்கைகளின் இடைவெளி குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இருக்க வேண்டும். அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கு ஏப்ரல் 3ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. அனைவரும் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும். அல்லது விடுமுறை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வலுக்கும் போராட்டம்

இதன் காரணமாக இத்தாலி முழுவதும் ஒரு மயான அமைதி நிலவுகிறது. ‘கொரோனா அச்சத்தோடு, ஆள் அரவமற்ற மயான அமைதி கூடுதல் மன அழுத்தத்தை அளிக்கிறது. கொரோனா பரவல் தீவிரமடைந்ததற்கு அரசின் மெத்தனமே காரணம்’ என, இத்தாலி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் தனிமைப்படுத்தப்படும் மக்கள், அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரானில் அதிகரிக்கும் பலி

இதனிடையே, ஈரானிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு, ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்