ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
கொரோனா காரணமாக அனைவரும் வீட்டில் தங்கியிருப்பது கடமை. ஆனால் சில முஸ்லிம் மேதாவிகள் இனத்தை இழுத்து முஸ்லிம்களே. வீட்டில் இருங்கள் என சொல்வது மிகப்பெரிய தவறாகும். சிங்கள மக்கள் யாரும் சிங்கள மக்களே வீட்டில் இருங்கள் என்றோ, தமிழ் மக்கள் தமிழ் மக்களே என விழித்து சொல்வதை நான் காணவில்லை. ஆகவே முஸ்லிம்களுக்கு மட்டும் என புத்திமதி சொல்ல வருவது கண்டிக்கத்தக்கதாகும் கொரோனா பிரச்சினை உலகளாவிய பிரச்சினையாகும். இன்று வரை உலகில் இந்நோயால் இறந்தோர் 98 வீதம் முஸ்லிம் அல்லாதவர்கள். இலங்கையில் ஊரடங்கை மீறியதால் கைது செய்யப்பட்டோர் சுமார் எட்டாயிரம் பேர். இவர்களில் முஸ்லிம்கள் எத்தனை பேர் என அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்ததா? முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கூட இது பற்றிய தகவலை பொலிஸ் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு தரவில்லை. இந்த நிலையில் முஸ்லிம்கள் மட்டுமே ஊரடங்கை மீறுவதாக நினைத்துக்கொண்டு அவனவன் முஸ்லிம்களே என சொல்ல வருவதை இனியாவது தவிர்க்க வேண்டும். இவ்வாறு எழுதுவோருக்கும் பேசுவோருக்கும்