Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

அதாவுல்லாவுக்கும் நன்றி கூறக் கட­மைப்­பட்­டுள்ளோம். Sainthamaruthu


சாய்ந்­த­ம­ருதுக்­கென தனி­புதிய நகர சபை­யொன்­றினை தேர்­த­லுக்கு முன்பு நிறு­வு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னம்....!!!

இது­வரை காலம் கல்­முனை மாந­கர சபையின் அதி­கா­ரத்தின் கீழி­ருந்த சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­துக்­கென தனி­யான புதிய நகர சபை­யொன்­றினை நிறு­வு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.‘முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் இது­வ­ரை­காலம் சாய்ந்­த­ம­ருது மக்­களை ஏமாற்றி வந்த காலம் மலை­யே­றி­விட்­டது. எங்­களை நாங்­களே ஆளப்­போ­கிறோம். இது எமது நீண்­ட­காலப் போராட்­டத்தின் வெற்றி, எல்லாப் புகழும் அல்­லாஹ்­வுக்கே’ என்று சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் வை.எம்.ஹனிபா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண மக்கள் பிர­தி­நி­திகள், சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் பிர­தி­நி­திகள், கல்­முனை மாந­கர சபையின் சுயேச்­சைக்­குழு (தோடம்­பழ சின்னம்) உறுப்­பி­னர்கள் மற்றும் அரச அதி­கா­ரி­க­ளுக்கும், பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவுக்­கு­மி­டையில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போதே இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­ட­லின்­போது கல்­முனை வடக்கு உப­பி­ர­தேச செய­லக காரி­யா­ல­யத்தை தர­மு­யர்த்­து­வது தொடர்­பான சிபா­ரி­சு­களை முன்­வைப்­ப­தற்­கென குழு­வொன்­றினை நிய­மிப்­ப­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­திற்கு புதிய நகர சபை­யொன்­றினை குறு­கிய காலத்­துக்குள் தேர்­த­லுக்கு முன்பு நிறு­வித்­த­ரு­வ­தாக பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ உறு­தி­ய­ளித்­த­தா­கவும் சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் வை.எம்.ஹனிபா தெரி­வித்தார். அவர் ‘விடி­வெள்ளி’ க்கு தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

‘சாய்ந்­த­ம­ரு­து­வுக்கு தனி­யான உள்­ளூ­ராட்சி மன்றம் ஒன்­றினை அமைத்துத் தரு­வ­தாக முஸ்லிம் கட்­சி­களும், முஸ்லிம் அமைச்­சர்­களும் தொடர்ச்­சி­யாக வாக்­கு­று­தி­களை வழங்கி வந்­தார்கள். ஆனால் அவர்­க­ளது வாக்­கு­று­திகள் எவையும் செய­லுருப் பெற­வில்லை. சாய்ந்­த­ம­ருது மக்கள் தொடர்ச்­சி­யாக ஏமாற்­றப்­பட்டே வந்­தார்கள். தற்­போ­தைய பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவும், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷவும் தாங்கள் பத­விக்கு வந்தால் எங்­க­ளுக்கு தனி­யான சபை­யொன்­றினை உரு­வாக்கித் தரு­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்­தார்கள். அந்த வாக்­கு­று­திகள் இன்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. எமக்கு தனி­யான நகர சபை­யொன்று உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது.

இதற்­காக நாம் பிர­த­ம­ருக்கும் ஜனா­தி­ப­திக்கும், பஷில் ராஜபக் ஷவுக்கும் இதற்கான முயற்சிகளை முன்னெடுத்த முன்னாள் அமைச்சர்
அதாவுல்லாவுக்கும் நன்றி கூறக் கட­மைப்­பட்­டுள்ளோம்.

இந்த அரசின் மீது முஸ்­லிம்கள் நம்­பிக்கை கொள்ள வேண்டும் என்றார். இந்தச் சந்­திப்பில் பொது நிர்­வாகம், உள்­நாட்­ட­லு­வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் அமைச்சர் ஜனக பண்­டார தென்­னகோன், இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான விம­ல­வீர திசா­நா­யக்க, லசந்த அழ­கி­ய­வன்ன, மஹிந்த சம­ர­சிங்க, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான அங்­கஜன் ராம­நாதன், சிறி­யானி விஜே­விக்­ரம, உள்­ளூ­ராட்சி அமைச்சின் செய­லாளர் எஸ்.ஹெட்டி ஆரச்சி, கிழக்கு மாகாண ஆளுநர் அநு­ராதா யஹம்பத் ஆகியோர் உட்­பட அரச அதி­கா­ரிகள் கலந்து கொண்­டனர்.

இதே­வேளை தெஹி­யத்­த­கண்­டிய பிர­தேச செய­லாளர் பிரிவின் கீழ் தற்­போது 13 ஆக உள்ள கிராம சேவை­யாளர் பிரி­வு­களை 46 ஆக அதி­க­ரிப்­பது தொடர்பில் அமைச்­ச­ரவைப் பத்திரமொன்றினைச் சமர்ப்பிக்கும்படி பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ பொது நிர்வாக அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.

குறிப்பிட்ட கிராம சேவையாளர் பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்து சட்டரீதியாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை 13 கிராமசேவையாளர் பிரிவுகளையும் 46 ஆக கருதி ஒதுக்கீடுகளை வழங்கும்படியும் பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.-

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்