கல்முனை உள்ளூராட்சி நிருவாகம்"நூல் வெளியீடு.(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை மாநகர சபை
முன்னாள் உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய 250 வருட வரலாற்றுப் பதிவுகள் கொண்ட
"கல்முனை உள்ளூராட்சி நிருவாகம்" நூல் வெளியீடு இன்று
 ( 2020.02.22 )சனிக்கிழமை பிற்பகல்
கல்முனை மஹ்ஃமூத் மகளீர் கல்லூரி, சேர் றாசிக் பரீட் மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னாள் பட்டின சபை தலைவர் ஏ.எம். முகைதீன் பாவா முன்னிலையில்,
மரபுரிமை ஆய்வு வட்டம் ஏற்பாட்டில்
மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை வெளிநாட்டுச் சேவை, சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.ஏ. அஸீஸ் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் முன்னாள் செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள்கல்முனை மாநகர சபை பொறியியலாளர் டி.சர்வானந்தா மற்றும் கலை இலக்கியவாதிகள் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மரபுரிமை ஆய்வு வட்டத்தின் ஆலோசகரும் பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் முபீஷால் அபூபக்கர் நூல் பற்றிய உரையும்,
நூலாசிரியரினால் ஏற்புரை
நிகழ்த்தப்பட்டது.


மேலும் கிழக்கு மாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் கடந்த 2019இல் இடம்பெற்ற அரச இலக்கிய விருது விழாவில் சிறந்த சுய புலமைத்துவ ஆய்வுசார் படைப்பு இலக்கியம் எனும் தொகுப்பில் நூலாசிரியர் ஏ.எம் .
பறக்கத்துல்லாஹ் எழுதிய "ஏ.ஆர். மன்சூர் வாழ்வும் பணிகளும் " நூல் தெரிவு செய்யப்பட்டதுடன்.

இவர் நவமணி பத்திரிகையில் கிராமங்களின் வரலாற்று விடயங்களை பற்றிய அறிமுக கட்டுரை எழுதி வந்தமை குறிப்பிட்டத்தக்கது

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்