இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து – அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய. நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக
சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது .
1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர்.
அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும்.
கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் சாய்ந்தமருது மட்டுமே ஜனாதிபதியின் வெற்றியின் பங்காளர்களாக இருந்தனர்.
சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை அறிந்த தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, அரசியல் சக்திகளின் தடைகளை தகர்த்தெறிந்து சாய்ந்தமருது நகர சபையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Comments
Post a comment