Skip to main content

அம்பலமான முகங்கள்

 Virakesari 25.07.2021 ***************************** எம்.எஸ்.தீன் - முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது சுயநலத்திற்காக எந்தப் பிசாசுடனும் உறவுகளை வைத்துக் கொள்வதற்கும், சேவகம் செய்வதற்கும் இடம், ஏவல், மரியாதை என்ற எதனையும் கவனத்திற் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாகவே அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணை விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் முடிவுகள் அமைந்துள்ளன. அமைச்சர் உதய கம்மன்விலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத பிரேரணையானது முழுக்க அரசியல் நோக்கத்தைக் கொண்டது. எரிபொருளின் விலையை அதிகரித்தமையை பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அந்த பழியை உதய கம்மன்விலவின் தலைமையில் சுமர்த்திவிட்டு, நல்லபிள்ளை போல் மக்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டார்கள்.  இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும், பொதுஜன பெரமுனவினதும் உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு காண்பிப்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்

தேசிய காங்கிரசிடம் உதவி கேட்கும் முஸ்லிம் பெருங்கட்சிகள்.

தனி அபிலாஷைகள் சமூக வேட்கைகளுக்கு வேட்டா?

சுஐப் எம்.காசிம்

சமூகத்தை வழிநடத்தும் பொறுப்புக்களை சிவில் அமைப்புக்கள் பாரமெடுக்கும் தேவைகள் அதிகமாக உணரப்படுகின்ற காலம்தான் இது. இந்தப் பொறுப்புக்கள் அபிவிருத்தி, கல்வி, மதம், சமூக சேவைகள் உள்ளிட்ட அரசியலிலும் இருப்பது அவசியம். இச்சிவில் அமைப்புக்களின் வகிபாகம் ஏனைய துறைகளில் தாக்கம் செலுத்தினாலும் அரசியலிலும் சாதிக்கின்றதா? எனத் தெரியவில்லை. முஸ்லிம் தலைவர்களை ஒன்றுபடுத்தல், முஸ்லிம் கட்சிகள் பிளவுபடாதிருக்க உழைத்தல், சமூகம் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் மற்றும்  நெருக்கடிகளுக்கு அரசியல்ரீதியான பாதுகாப்பைப் பரிந்துரைத்தல் போன்ற விடயங்களில் சிவில் அமைப்புக்களே அரசியல் தலைமைகளை வழிநடத்த வேண்டியுள்ளது. இதற்கான தகுதி, தகைமைகள் இந்த அமைப்புக்களிடம் உள்ளனவா? என்பதே இன்றுள்ள கேள்வி. இல்லாதிருந்தால் எதற்காக என்பதையும், இருக்குமானால் எப்படி என்பதையும் ஆராய்ந்தே, சிவில் அமைப்புக்களின் சமூக வகிபாகங்களை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.

பொதுவாக அரசியல்சார்பு சிந்தனைகளிலிருந்து விடுபட்டுச் செயற்படும் சிவில் அமைப்புக்களால் மாத்திரமே அரசியல் தலைமைகளை வழிநடத்த முடிகின்றது. இந்த அமைப்புக்கள் அரசியல் அழுத்தங்களுக்கு உட்படுகின்றனவா? அல்லது ஏதாவது ஆதாயங்களுக்காகஅரசியல் தலைமைகளை நாடுகின்றனவா? பொதுமக்கள் தௌிவடைய வேண்டிய விடயமும் இதுதான்.

சிவில் அமைப்புக்களின் சுதந்திரச் செயற்பாடுகள் ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தலைமைகள், தலைவர்களை கட்டுப்படுத்தி வந்திருந்ததையும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டியுள்ளது. பின்னர், சமூகத்தின் ஏக அங்கீகாரமாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடையாளப்படுத்தப்பட்ட 1986 முதல் 2000 வரையான காலப்பகுதிகளில்தான் சிவில் அமைப்புக்களின் செயற்பாடுகளில் சலசலப்புக்கள் ஏற்படத்தொடங்கின. இச்சலசலப்புக்களின் எதிரொலிகள் இன்றுவரைக்கும் முஸ்லிம் தலைமைகளையும்முஸ்லிம் சிவில் அமைப்புக்களையும் "ஓடும் புளியம்பழமும் போலவே" வைத்துள்ளன. இதனால் அரசியல் தலைமைகள்தான் அபிப்பிராய பேதங்களால் பிளவுபட நேரிடுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் திராணிகள் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. பக்கம் சார்ந்ததும் பாரம்பரியங்களுக்கும் பழகிப்போன இவ்வமைப்புக்களின் செயற்பாடுகளால் வந்த விளைவுகள்தான் இவை.

ஒரு சில சம்பவங்களுக்காக குறித்த ஒரு தலைமையை மட்டும் முஸ்லிம் சமூகத்தின் நிரந்தர எதிரிகளாகக் கற்பனை செய்யும், காட்ட முனையும் முஸ்லிம் கட்சிகளை, இந்த சிவில் அமைப்புக்கள் வழி நடத்துவதுபோகஇவர்களும் சேர்ந்து ஒருபக்க நிலைப்பாடுகளை எடுப்பதுதான் நிலைமைகளைக் குழப்பியுள்ளன. இதற்க்கு மேலாக சிலவேளைகளில் சமூகத்தால் வழிநடத்தப்பட்ட தலைமைகள் வெற்றிபெற்றால் பாராட்டப்படுவதும் தோல்வியுற்றால் தூற்றப்படுவதும் நமது சமூகத்தின் சாபக்கேடே!

இன்னும் பாரம்பரிய கட்சிகள், தலைமைகளை மீறி முகங்களையும்முகவரிகளையும் பிரபல்யப்படுத்த சிலர் முனைவதுராஜபக்‌ஷக்களின் முஸ்லிம் விசுவாசத் தலைமைகளை அதிருப்தியடையச் செய்திருக்கும். இந்த அதிருப்தியை விடவும் பாரிய அதிர்ச்சிகள் இதற்குப் பின்னர் காத்திருப்பதுதான் இன்றுள்ள பெருங்கவலை.

எனவே, இரு தேசிய அணிகளிலுமுள்ள முஸ்லிம் தனித்துவ தலைமைகள், இந்த தனியார் அபிலாஷைகள் குறித்து விழிப்படைய வேண்டியுள்ளது. இதிலும் விஷேடமாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள ஒரேயொரு முஸ்லிம் தலைமையான தேசிய காங்கிரஸ் இவ்விடயத்தில் கச்சிதமாகச் செயற்பட வேண்டும். இதுவே ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏதாவது ஆதாயங்களைப் பெற்றுத்தரும். இல்லாவிட்டால் தனிநபர்களின் தலையெடுப்புக்களில்  சமூக அபிலாஷைகள் புறந்தள்ளப்படுவதை தடுக்க முடியாமலே போகும்.

சமூகமொன்றின் பிரச்சினைகளை  தனிநபர் முன்வைப்பதை விடதனித்துவ தலைமைகள் அழுத்தம் கொடுப்பதே எதையாவது சாதிக்காவிட்டாலும் பெற்றுக்கொள்ளவாவது முடிகின்றது.

புலிகளின் வீழ்ச்சி, பெரும்பான்மையினரின் விழிப்பு மற்றும் தனித்துவ கட்சிகளின் பிளவுகளால் சாதனை அரசியல் விடைபெற்றுவிட்டது என்பதே எனது நிலைப்பாடு. எனவே எஞ்சியுள்ள, எதிர்வரவுள்ள தேவைகள், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும்தீர்வுகளைப் பெறுவதற்கும் தனிநபர்களன்றி தனித்துவ தலைமைகளே அவசியமாகவுள்ளது. இவ்விடயங்களில் தலையிட்டு, தௌிவுபடுத்துமளவிற்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் இல்லாதுள்ளமையே இன்றுள்ள கவலை.

எனவே, பக்கஞ்சாராத பாரபட்சங்களில்லாத சிவில் அமைப்புக்கள், முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமன்றி தமிழ் சமூகத்துக்கும் தேவையாக உள்ளது. ஒருவகையில், சகோதர தமிழ் சமூகத்தில் இவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் உள்ளமை மகிழ்ச்சி தருகின்றது. யாழ், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இதிலெடுத்துள்ள அர்ப்பணிப்புகள் காலச்சுழற்சியின் பரிணாம வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. புலிகள், புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாடுகள் மௌனித்த கையோடுபல்கலைக்கழக மாணவர்களின் சிந்தனைகளில் இந்தப் பொறுப்புக்கள் புகுந்துகொண்டதை பாராட்டித்தான் ஆக வேண்டும்.

இன்று பிளவடையச் சாத்தியமாகவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பை இணைத்து வைப்பதற்கான பல்கலைக்கழக சகோதர தமிழ் மாணவர்களின் அர்ப்பணிப்புதுடிதுடிப்புக்களைப் போன்று, ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் செயற்படுவதுதான்அதன் ஸ்தாபகரான மர்ஹூம் அஷ்ரஃபுக்கு செய்யும் கைங்கர்யமாக இருக்கும். ஏற்கனவே இருந்த முஸ்லிம் சிவில் அமைப்புக்களுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டுள்ள நிலையில்தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் தனவந்தர்கள்கல்விமான்கள் இன்றைய களங்களை கையிலெடுப்பதே வரலாற்றுப் பொறுப்புக்களாகவும் இருக்கும்.

மத்திய கிழக்கிலுள்ள அமைப்புக்கள், மு.கா ,ம.கா, தே.கா தலைமைகளுடன் வைத்துள்ள தனித்தனித் தொடர்புகள், பொதுக்கூட்டாக விரிந்து, வீரியமடைந்து இத்தலைமைகளை ஒன்றுசேர்க்க புறப்படவேண்டியுள்ளது. இந்தப் புறப்பாடுகள்எதிர்வரவுள்ள பொதுத்தேர்தலில் பெரும்பயனைத் தருமென நம்பக் கடினமாக இருந்தாலும், இருதரப்புக்களிலும் களமிறக்கப்படும் “தனியார் அபிலாஷைகளையாவது  மட்டுப்படுத்த உதவும் என்றாவது எதிர்பார்க்க முடியுமே!

சமூகத்தின் இந்த நம்பிக்கைகளை வென்றெடுக்க முதலில் களமிறங்குவது யார்கல்விச் சமூகமாபுலம்பெயர் சமூகமாஅல்லது புதிதாகத் தோன்றவுள்ள சிவில் சமூகமாஇவ்வாறு முதலில் இறங்குவோருக்கு "காலத்தை வென்றவன் நீ,, காவியமானவன் நீ" என்ற பாடல் பொருத்தமாக இருக்கும்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய