BREAKING NEWS

அரசியல் காய்நகர்த்தல்கள்; தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுதல் அவசியம்கிழக்கு முன்னாள் முதல்வர் ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவிப்பு

“மார்ச் மாதம் முதலாம் திகதிக்குப் பின்னரே பாராளுமன்றத்தை கலைக்கும் நிலை யுள்ளபோதும் அதற்கு முன்னர் அதனை கலைப்பதற்கான முஸ்தீபுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மற்றொரு அங்கமாகவே முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தை சிதைக்கும் வகையில் ஆங்காங்கே மக்களுடன் இதுவரை எது வித சம்பந்தமுமில்லாத புதிய முகங்களை இறங்கிவிடப்பட்டு அவர்களை வேட்பா ளர்களாக்கும் நடைமுறைகளும் அதிகரித்து வருகின்றன. இதுவிடயத்தில் முஸ்லிம் சமூகம் மிகவும் விழிப்புடன் செயற்படவேண்டியது அவசியமானது என்பதை அறிவு றுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் ஸ்ரீல.முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமாருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார்.
அன்மையில் ஏறாவூரிலுள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்ற அமைப்பாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்தபோது கூறியதாவது:-
சிறுபான்மை சமூகங்களுக்கு விகிதாசார முறைமையினால் கிடைக்ககூடிய பாராளு மன்ற பிரதிநிதித்துவமே மிகப்பெரும் அரணாக இருந்து வருகின்றது. இதனைச் சீர் குலைப்பதற்கும் திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பிரித்தாளும் நடைமுறைகள் பல்வேறு பரப்புகளி லும் உச்சம் பெற்று வருகின்றன இதனை கண்முடி நாம் பார்த்து கொண்டிருக்க முடியாது. 
தற்போதைய அரசு பிரித்தாளும் தந்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு தமக்கான முஸ்லிம் தலைமைகளை உருவாக்குவோம் என்கின்ற ஆணவச் செயற்பாட்டில் இற ங்கியிருப்பதையும் அதற்கான காய்நகர்த்தல்களை மேற்கொண்டிருப்பதையும் நாம் அறியமுடிகின்றது. 
இத்ததைய முயற்சிகள் உண்மையில் வெற்றி இலக்கை அடிப்படையாகக் கொண்ட வையல்ல. இவை முஸ்லிம்களின் வாக்குகளைச் சிதறடிக்கும்நோக்கம் கொண்டவை என்பதை நாம் தௌ;ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு எமக்குள்ள தனித்துவமான சக்தியைப் பலப் படுத்துவதன் மூலமாக நாம் எமதுஉரிமைகளை பாதுகாத்துக்கொள்ள திடசங்கற்பம் கொள்ளவேண்டும். இதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டி யது நம் அனைவரதும் மிகப்பெரிய பெறுப்பாகும்.
இதேவேளை இவ்வாண்டு நடைபெற்ற க.பொ.த பரீட்சைகளில் பெறுபேறுகளின் அடிப்படையில் மாகாண மட்டத்தில் கடைசியான 9ஆவது இடத்தில் இருந்த கிழக்கு மாகாணம் 4ஆவது நிலைக்கு உயர்ந்துள்ளமை பாராட்டுக்கும் வாழ்த் துக்கும் உரிய அம்சமாகும். இதற்காக உழைத்த அனைத்து கல்வி சமூகத்தின ரையும் நான் பாராட்டுகிறேன் - என்றார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar