BREAKING NEWS

நாங்கள் அரசியல் செய்வது எங்கள் பக்க்ட் நிரப்ப அல்ல


நாங்கள் அரசியல் செய்வது எங்கள் பக்க்ட் நிரப்ப அல்ல இலங்கையில் உள்ள சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் மிகவும்
ஒற்றுமையாக வாழ வழி வகுப்பது எமது நோக்கமாகும்.-ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ. எம்.அலிசப்றி

=========

(எம்.என்.எம்.அப்ராஸ்)

புதிய அரசின் வகிபாகமும்,பல் இன மக்கள் வாழும் இலங்கையில் முஸ்லீம்களின் எதிர்காலமும் எனும் தொனிப்பொருளில் மாபெரும்
பொதுக்கூட்டம் பிரபல வர்த்தகரும் தொழிலதிபரும் ஏ.அமீர் அனுசரணையில்
கல்முனை தொகுதி முன்னாள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும்,
முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான.ஏ.எம்.றியாஸ்
தலைமையில் கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் முன்றலில்
வெள்ளிக்கிழமை(31 )பிற்பகல்
இடம்பெற்றது

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக
ஜனாதிபதி சட்டத்தரணியும் சட்டவல்லுனருமான.
எம்.யூ. எம்.அலிசப்றி கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்


மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் கட்சியை ஆரம்பித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த காலப்பகுதியில் ஒரு முக்கியமான காலப் பகுதியாகும். அந்தகாலப்பகுதியில் முஸ்லிம்கள் சிங்கள மக்கள் தமிழ் மக்கள் என பிரிந்து வாழ்ந்து பல்வேறுபட்ட பிரச்சினைகள் கொடூர யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலம் இந்த காலத்திலே முஸ்லிம்களுக்கு என்று தனியாக குரல் கொடுப்பதற்கு யாரும் இருக்கவில்லை இந்த நிலையில்தான் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார் .


ஆனால் அவர் முஸ்லிம் மக்களையும் ஒரு போதும் அஷ்ரப்
காட்டிக்கொடுக்கவில்லை என்பதை இந்த கல்முனை மண்ணில் கூறிகொள்ள விரும்புகிறேன்.


உண்மையிலேயே அன்று என்னிடம்
அஷ்ரப் கூறினார் ஆரம்பத்தில் இந்த முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி
அன்று தேவையாக காணப்பட்டது
ஆனால் 2000 ஆண்டின் பின்
இப்போது எனக்கு அவசியம் அற்றதாக உள்ளப்படியால் நுஆ என்கின்ற கட்சியை ஆரம்பித்தார். வட கிழக்கிற்கு வெளியே உள்ள மக்கள் பற்றி அவர் சிந்தித்தார் இதனால் அவரிடம் சுயநலம் காணப்படவில்லை.


தேசிய ரீதியில் எமது குரலை பெரும்பான்மையினர் உடன் சேர்ந்து சிறப்பாக எமது உரிமைகளை கொண்டு செல்ல வேண்டும் என்பதே அவரது இறுதிக்கால விருப்பமாக இருந்தது. ஆனால் இன்று பல குறுகளாக கட்சிகள் உருவாக்கியது.சிங்கள மக்களின் நகரம் கண்டி என்பது போல, தமிழர்களின் நகரம் யாழ்ப்பாணம் போல கிறிஸ்தவர்களின் நகரம் நீர்கொழும்பு என்பது போல முஸ்லிம்களின் நகரம் கல்முனை
முக்கியத்துவமானது.


நாங்கள் அரசியல் செய்வது எங்கள் பக்க்ட் நிரப்ப அல்ல இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் சிங்களவர்களும் தமிழர்களும் மிகவும் ஒற்றுமையாக வாழ வழி வகுப்பது எமது நோக்கமாகும்.


நாம் சந்தோஷமாவாழ வேண்டும் என்றால் பெரும்பான்மையுடன் சேர்ந்துகொள்ள வேண்டும்
இன மத பேதமற்ற தேசிய கட்சியின் மூலம் ஒன்று பட வேண்டும் அப்போது தான்சிங்களவர்கள் ,தமிழர்கள்,முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ முடியும்.


இன்று முஸ்லிம் தலைவர்கள் தங்கள் நலன் பற்றியே அக்கறை கொள்கின்றனர் .அவர்களுக்கும் சமுகத்தை பற்றிய அக்கறை இல்லை
சுய நலமாய் உள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
அவர்கள் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியாது என கூறி சிலர் பயமுறுத்தினார்கள் .

ஆனால் உண்மையிலேயே அவ்வாறான நிலைமை இல்லை என்பதை நீங்கள்
கடந்த 3 மாதகாலமாய் கோடடபய ராஜபக்ஷ சிறந்த முறையில் ஆட்சியை முன்னேடுத்து வருகிறார் என்பதை நீங்கள் காணக்கூடியதாய் உள்ளது. நான் அவர் அவரோடு பழகியவன் அவருடன் நீண்ட காலம் பயணித்த பழகியவன் என்ற அடிப்படையில் எனக்கு நன்றாக தெரியும். 

அன்று மலேசியாவை மகாதிர்
முகம்மது ,சிங்கப்பூரை
லீ குவான் யூ ,தென் 
கொரியாவை ஜெனரல் பார்க் போன்ற தலைவர்கள் எவ்வாறு தனது நாட்டை சிறந்த முறையில் கட்டியேழுபினார்களோ அதே போன்ற தலைவர் தான் கோடடாபய ராஜபக்ஷ என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாடு முன்னேற வேண்டுமென்றால் சிறந்த தலைவர் வேண்டும் .


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருக்கும் வரைக்கும் எவ்விதமான பிரச்சினைகளையும் வருவதற்கு இடமளிக்க மாட்டார். அவர் சகல மக்களுக்கும் ஜனாதிபதியாவர்
நாங்கள் இனவாத கட்சிகளின் கோரப் பிடிக்குள் அகப்பட்டு விடாமல் பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து எமது அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்றார்


இந் நிகழ்வில் அதிதிகளாக
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தவிசாளர்
எம்.உவைஸ் முஹம்மட்,
தேசிய லொத்தர் சபையின் தலைவர்,
லலித் பியூம் பெரேரா , உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி  மற்றும்
பொதுஜன பெரமுன கட்சி முக்கியஸ்தகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar