Skip to main content

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றது போன்று பொதுத்தேர்தலில் எளிதில் வெற்றிகொள்ள முடியாது’ - கலாநிதி அனீஸ்!!!




ஊடகப்பிரிவு

இனவாதத்தை கக்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றது போன்று, பொதுத்தேர்தலிலும் அதனை பாவித்து எளிதாக தமது எண்ணங்களை நிறைவேற்ற முடியாது என கலாநிதி அனீஸ் தெரிவித்தார்.

மன்னார், கொண்டச்சி கிராமத்தில் நேற்று (02) இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

அவர் தனது உரையின் போது,

“ஜனாதிபதி தேர்தல் என்பது வேறு, பொதுத்தேர்தல் என்பது வேறு. ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகள், முழுக்கமுழுக்க இனவாதத்தையும் மதவாதத்தையும் அடிப்படையகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டதனால்தான் வெற்றிகண்டார்கள். ஆனால், பாராளுமன்ற தேர்தலானது இனவாத அடிப்படையில் செயற்பட முடியாத தேர்தல் ஆகும். ஏனெனில், ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு கட்சிகளில் களத்தில் நிற்பார்கள். கட்சிகளுக்கிடையே போட்டிகள் இருப்பது போன்று, ஒரே கட்சிக்குள்ளே வேட்பாளர்கள் மத்தியிலே விருப்புவாக்குப் போட்டிகளும் இருக்கின்றன. எனவே, இனவாதத்தை விதைத்து மக்களை உசுப்பேற்றி பாராளுமன்ற தேர்தலில் இலகுவாக வெல்ல முடியும் என்பது கடினமே!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பொறுத்தவரை, அதன் தலைமை கடந்தகாலங்களில் மேற்கொண்ட அனைத்து தீர்மானங்களும் சமூகத்தை முன்னிலைப்படுத்தியும் சமூக நன்மையை கருத்திற்கொண்டும் மேற்கொள்ளப்பட்டன. கட்சியின் தலைமையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், பல தேர்தல்களில் திருப்பங்களாக அமைந்துள்ளன. பெரும்பான்மை கட்சிகள் மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைமையின் முடிவுக்காக காத்திருந்த பல்வேறு சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. எனினும், கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் இடைக்காலத்திலும் இனவாத சக்திகளின் செயற்பாட்டினால் தற்காலிகமாக நமக்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் அந்த சக்திகள், தமது உசுப்பேற்றலை தொடர்ந்தும் கொண்டுபோக முடியாது. காலசூழ்நிலைகளுக்கேற்ப இது மாற்றமடையும்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில், எந்தவொரு பெரும்பான்மைக் கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களுடன் ஆட்சியமைக்க முடியாது. நினைத்த மாத்திரத்தில் வெற்றிபெற முடியாது. ஆட்சியமைக்க முயலும் கட்சிகளுக்கு சிறுபான்மை கட்சிகளினதும் சிறிய கட்சிகளினதும் உதவி நிச்சயமாக தேவைப்படும். அந்தத் தேவை ஏற்படும் பட்சத்தில் அவர்கள் முதலில் திரும்பிப் பார்ப்பது, இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையாகத்தான் இருக்கும்.

‘அடுத்த பத்து வருடங்களுக்கு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், எதிர்க்கட்சியிலேயே இருக்க வேண்டி நேரிடும்’ என சிலர் கூறுகின்றனர். எந்தக் கட்சி பெரும்பான்மையை பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கு,  நமது உதவி தேவைப்பட்டே ஆகும். சிலவேளை சாதாரண பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்கும்  நிலை ஏற்பட்டாலும் தற்போதைய அரசுக்கு மிகப்பெரிய தேவைப்பாடு இருக்கின்றது. தற்போது இருக்கின்ற யாப்பிலே திருத்தங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதனால், அறுதிப் பெரும்பான்மையான 150 ஆசனங்கள் வேண்டும். இந்தக்கட்டத்தில் கூட நமது உதவி அவர்களுக்கு தேவைப்படும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்