பல்கலைக்கழக ஊடக பிரிவு-
தென்கிழக்கு பல்கலைக்கழக பால் நிலை, சம நிலை சமத்துவ நியைத்தினால் கலை, கலாசார பீடம், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப்பீடங்களினதும் சிரேஷ்ட மாணவர்களுக்கான 'பால் நிலை, சம நிலை சமத்துவம்' என்ற தலைப்பில் பாலியல், பாலியல் ரீதியான பால் நிலை வன்முறைகள் தொடர்பான செயலமர்வு அண்மையில் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக பால் நிலை, சம நிலை சமத்துவ நியைத்தினால் அதன் பணிப்பாளரும், சிரேஸ்ட பிரதி நூலகருமான திருமதி எம்.எம். மஸ்றூபா தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில்; பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் கலை, கலாசார பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூக்கர், தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட், நூலகர் எம்.எம்.றிபாய்டீன், அரசியல் துறைத் தலைவரும், பல்கலைக்கழக ஊடகப் பிரிவு பணிப்பாளருமான கலாநிதி எம்.எம்.பாஸீல், பேராசிரியர்களான எம்.ஐ.எம்.கலில், எம்.ஏ.எம்.றமீஸ் அப்துல்லாஹ் உட்பட விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment